youtube

24 January 2016

திருச்செந்தூர் புராணம் கூறுவது :

திருச்செந்தூர் புராணம் கூறுவது :

ஷட்ரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத் ஷட்சாரம் ஷண்மதம் ஷட் வேதாங்கம் ஷண்முகம் பஜே

( இதன் பொருள் மிக ஆழமானது )

1) ஷட்ரிம் : காமம்; குரோதம்; லோபம்; மோகம்; மதம்; மாத்சர்யம் எனும் ஆறு குணங்களை களைபவன்

2) ஷட்விகாரம் : உண்டாக்குதல்; இருத்தல்;  வளர்த்தல்; மாற்றமடைதல்; குறைத்தல்; அழித்தல் எனும் ஆறு செயல்கள் அற்றவன்

3) ஷட்கோசம் : அன்னமய கோசம்; ப்ராணமய கோசம்; மனோன்மய கோசம்; விஞ்ஞானமய கோசம்; ஆனந்தமய கோசம்; அதிதமய கோசம் எனும் ஆறு நிலைகளில் இருப்பவன்

4) ஷட்ரஸம் : இனிப்பு; புளிப்பு; உவர்ப்பு; உறைப்பு; துவர்ப்பு; கார்ப்பு எனும் ஆறு சுவைகளாக இருப்பவன்

5) ஷட்சாரம் : சாங்க்யம்; வைசேஷிகம்; ந்யாயம்; யோகம்; மீமாம்ஸம்; வேதாங்கம் எனும் ஆறு சாஸ்திரங்கள் ஆனவன்

6) ஷண்மதம் : சைவம் ( சிவ வழிபாடு ) ; வைணவம் ( விஷ்ணு வழிபாடு ) ; சாக்தம் ( சக்தி வழிபாடு ) ;  சௌரம் ( சூர்ய வழிபாடு ) ; காணாபத்யம் ( கணபதி வழிபாடு ) ; கௌமாரம் ( முருகன் வழிபாடு ) என ஆறு சமயங்கள் ஆகிறான்

7) ஷட் வேதாங்கமங்கள் : சிட்சா; கல்பம்; வ்யாகர்ணம்; ந்ருத்தம்; ஜ்யோதிஷம்; ஸந்தம் எனும் ஆறு வேதாங்கமங்கள் ஆகிறான்

சுனாமி காத்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமிக்கு ஹரோஹரா ஹரோஹரா ஹரோஹரா

No comments: