ராவண தர்ப விநாசன லிங்கம் (லிங்காஷ்டகம் 2)
தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்
இந்தப் பகுதி வரை 8 அக்டோபர் 2006 அன்று லிங்காஷ்டகம் பதிவில் இடப்பட்டது. மேல் விளக்கங்களாக கீழே உள்ள பகுதி இன்று எழுதப்பட்டது.
***
ப்ரவர என்றால் மூத்தவர், முதன்மையானவர், தலைவர், சிறந்தவர் என்று ஒருவரைக் குறிக்கும் பல பொருளும் சில இடங்களில் பரம்பரை என்ற பொருளும் இருக்கின்றன. இங்கே இந்த பொருட்களில் (அர்த்தங்களில்) எதனை எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே. தேவர்களிலும் ரிஷிகளிலும் முதன்மையானவர்கள், மூத்தவர்கள், தலைவர்கள், சிறந்தவர்களால் வணங்கப்படும், தொழப்படும், அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே. தேவர்கள், ரிஷிகள் பரம்பரையினரால் அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே.
No comments:
Post a Comment