youtube

14 December 2016

ஆன்மா, உடல் இரண்டின்* *விசித்திர விளையாட்டு*

*ஆன்மா, உடல் இரண்டின்*
         *விசித்திர விளையாட்டு*

ஆன்மா ஆன்ம உலகத்திலிருந்து இறங்கி பூமியில் ஓர் உடலை எடுத்தால் அதன் பெயர்...

*பிறப்பு*

ஆன்மா ஓர் உடலை விட்டு விட்டு மீண்டும் இன்னொரு உடலை தேர்ந்தெடுத்தால் அதன் பெயர்...

*மறுபிறப்பு*

ஆன்மா தான் வசிக்கும் உடல் நோய் காரணமாக வாழும் தகுதியை இழந்து அதை விட்டு பயத்துடன் பிரிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அதன் பெயர்...

*மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் எதிர்பாரதவிதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக உடலை இழந்தால் அதன் பெயர்...

*அகால மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் தன் உடலை தானே அழித்து அதனின்று வெளியேறினால் அதன் பெயர்...

*தற்கொலை*

ஆன்மா தான் இருக்கும் உடலில் இருந்தபடியே ஆன்ம உலகிற்கு செல்வதற்காக  தன்னை தான் ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கிக்கொள்வதின் பெயர்...

*ஜீவசமாதி*

ஆன்மா தனக்கு கிடைத்த உடலை பயன்படுத்தாமல், எந்த செயலையும் செய்யாமல்  மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டி அடம்பிடிப்பது...

*சந்நியாசம்*

ஆன்மா தனக்கு கிடைத்த உடல் மீது எந்த ஒரு அபிமானமும் இல்லாமல் அதாவது காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம்  ஆகிய அவகுணங்களை பிரயோகம் செய்யாமல் அனைத்து காரிய கடமைகளை அனைவரின் நன்மை பொருட்டு செய்தால் அதன் பெயர்...

*வைராக்கியம்*

ஆன்மா தான் வசித்த உடலை விடும் போது அடுத்து எந்த உடலை எடுக்கப்போகிறோம் என்பதை அறிந்து மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல் அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால் அதன் பெயர்...

*ஜீவன்முக்தி*

---------------------------------------------------------

பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும்.

சத்தியயுகம், திரேதாயுகத்தில் *ஜீவன்முக்தி*.

துவாபர யுகத்தில் *ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்*.

கலியுகத்தில் *மரணம், அகால மரணம், தற்கொலை*.

சங்கம யுகத்தில் *வைராக்கியம்*.

*இதுவே ஞானம், பத்தி மற்றும் வைராக்கிய சுழற்சி*

No comments: