youtube

30 August 2012

குல தெய்வம்

மீபத்தில் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்து இருந்தார். அவருக்கு எல்லா முயற்சிகளும் தடை பட்டுக் கொண்டு இருந்தது. "எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெற முடியவில்லையே சார். எனக்கு என்ன பிரச்சினை என்று கொஞ்சம் கூறுங்கள்" என்றார். அவருக்கு ஐந்துக்கு உரிய கிரகம் வெகுவாக பாதிக்கப் பட்டு இருக்க , நீங்கள் 9 மாதம் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உங்கள் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள் , அபிசேகம் செய்து வாருங்கள். கண்டிப்பாக நிலைமை மாறும் என்று கூறினேன். அதன் பிறகு அவரிடம் பேசிய போது, அவர்கள் குல தெய்வம் எது என்றே தெரியாத அளவுக்கு அவர்கள் குடும்பம் இருந்தது. அவர்கள் ஊர் சென்று , அங்கு இருந்த வயதான பாட்டி ஒருவரிடம் விசாரித்து , பின்பு அவர்கள் குடும்ப வழியில் இன்னும் ஒருவரிடம் விசாரித்து , பின்பு முறையான வழிபாடு செய்து வர , இப்போது நிலைமை அமோக முன்னேற்றம். ஒருவேளை உங்கள் குல தெய்வம் எதுவென்றே தெரியாத பட்சத்தில் , நீங்கள் அண்ணாமலையாரிடம் சென்று சரண் அடைவது நல்லது. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNGI3TR0Q9zETPpGPbc8X6gMRahl3yP3J8PegLsEDO7M2tN_G4QZpDlu9YvVkvj0OacMy4_81Pihl9K5MYO3F4wQ-BxRzkjykPZwb1bCsIPxjrXe4rEWLAHf1nNf9bgGhSXM-uRtFQ16c/s1600/DSC04167.JPG மேலும் குல தெய்வம் என்பது , உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால்,ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்).நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும். மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும். ஒருவருக்குக்குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திர காளி அம்மன் என வைத்துக்கொள்வோம்.அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால்,அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால்,இந்த நிலை.எனவே,தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.

No comments: