youtube
1 September 2012
காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்
ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது.
ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்
இதன் பொருள் என்ன?
எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக.''
வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்கவேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்குங்கள். மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிக்கப் பழகுங்கள். முடியாவிட்டால், பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெறும். ஞாபகசக்தி அபரிமிதமாக உண்டாகும். உங்களுக்குப் பிடித்தமான எந்த தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண்தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment