youtube

1 February 2016

கர்மாவை சுமக்கும் வாகனங்கள்

கர்மாவை சுமக்கும் வாகனங்கள்  

                                                         
                 
நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? புண்ணியங்களையா ..?பாவங்களையாம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்...!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.

தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ....................5  தலைமுறைக்கு
.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ..........................................6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்

No comments: