அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில்,
கட்டனார்பட்டி
பெறுநர்
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்
திருக்கோவில் கட்டுமான திருப்பணிக்கு நன்கொடை வழங்குவது – தொடர்பாக.
வணக்கம்.எங்களது கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கட்டனார்பட்டி கிராமத்தில் எழுந்தருளி
வேண்டுவோருக்கு வேண்டிய வரமும், கேட்போருக்கு செல்வம் பலகோடியும் தரும் அருள்மிகு ஸ்ரீ
காளியம்மன் திருக்கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் தற்பொழுது
அதனை புதுப்பிக்கவும், கோபுரம் எழுப்பவும் மண் சிலையை மாற்றி கற்சிலை
அமைக்கவும்,கோவிலை விரிவாக்கவும் அவசியமாகிறது. கோவில் புதியதாக கட்டும் பணிக்கு
தோராயமாக சுமார் 14,00,000/- தேவைப்படும் என புரோகிதர்கள் மற்றும் பொறியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
எங்களது கிராம மக்கள் பட்டாசு ஆலையிலும், தீப்பட்டி தொழிற்சாலையிலும் தினக்கூலியாக வேலை
செய்து வருகின்றனர். கட்டுமான திருப்பணிக்கு ஆகும் மிகப்பெரிய தொகையை நாங்கள் முழுவதுமாக வசூலிக்க
முடியவில்லை.பொதுமக்கள் நலன் கருதியும், ஊரின் நலனுக்காகவும், கோவில் கோபுர
மற்றும் கட்டுமான திருப்பணிக்காகவும் தங்களின் உதவியை நாடி வந்துள்ளோம். எனவே
மக்களின் நலன் கருதி இந்த அருட்பணி சிறக்க தங்களால் இயன்ற அளவு பணஉதவி மற்றும்
பொருள் உதவியை வாரி வாரி வழங்கி கோவிலை சிறப்பாக கட்டி முடிக்க உதவிபுரியுமாறு
பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.
அருட்கொடை தருக! அம்மன் அருள் பெறுக!!
. மிக்க நன்றி இப்படிக்கு
கோவில் திருப்பணிக் குழுவினர்,
கிராம பொதுமக்கள், கட்டனார்பட்டி.