youtube

18 August 2012

புலிப்பாணி ஜால வித்தைகள். போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்... "பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே" - புலிப்பாணி ஜாலம் 325 - ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான..... "பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே" கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான..... "உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே" உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான..... "எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி" எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்... புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான..... "பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே" நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு அது தெரிய வரும். அந்த வகையில், சில அபூர்வ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் - உங்களுக்கு அளப்பரிய ஆற்றல் கிடைக்க வாய்ப்புள்ளது.நம்பிக்கையுடன் , நீங்கள் செய்து வாருங்கள். செய்து வரும் காலத்திலேயே உங்களை சுற்றி நடக்கும் , மாற்றங்களை உணர முடியும். மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு.கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும்.சங்கொலி துர் ஆவிகளை விரட்டும்.சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால், குழந்தைகளுக்குக் கூட சங்கில் பால் ஊற்றிப்புகட்டுவர். மனித மண்டை ஒட்டுப்பூஜையும்,சங்குப்பூஜையும் ஒன்றுதான்.மண்டைஓடு காளிக்குரியது.இது சத்ரு சம்ஹாரம் செய்யும். சங்கு லட்சுமிக்குரியது.சங்கு பூஜை செய்து வந்தால்,தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) ஆகும். சங்கு காயத்ரி மூலம் பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும்,தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கினைப் பயன்படுத்தாத நேரத்தில்,வெள்ளிப்பாத்திரத்தில்,சுத்தமான நீரில் மூழ்க வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கும்போது அதை எடுத்து, தூய துணியினால் நன்கு துடைத்துவிட்டு, அதற்கு சாம்பிராணி புகைக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் முற்காலத்தில் துறவிகள் கர்ண எட்சிணி மற்றும் கர்ண பைரவர் மந்திரங்களை ஜபித்துள்ளனர்.அது துறவிகளின் உடற்கூறைப்பொறுத்து வலது காதிலோ அல்லது இடது காதிலோ முக்காலமும் உரைக்கும். மனதால் கேள்வி கேட்க,கேட்க, பதில் சொல்லிக்கொண்டே இருக்கும். வடநாட்டில் சப்தாகர்ஷிணி என்னும் பெண் தேவதை மந்திரம்சொல்லி அருள்வாக்கு,ஜோதிடம்,கைரேகை,பிரசன்னம் என பல தொழில் செய்கின்றனர். சப்தாகர்ஷிணிக்கு ரூபம் கிடையாது.மந்திரம் மட்டும் உண்டு. அடிக்கடி பால் சாதம் ,வாழைப்பழம் சாப்பிட்டு வர சித்தியாகும். காதில் கனகபுஷ்பராகம் கடுக்கண் அணிவது ஒரு பிளஸ்பாய்ண்ட், பழைய வித்வத்கள் அனைவரும் கடுக்கண் அணிவர் இதற்குத்தான். நமது உடலை மந்திர உடலாக மாற்றிட வேண்டும்.மனம் விருப்பு வெறுப்பின்றி இருந்தால்தான் செய்திகளை தூய மனதில் எளிதில் பெறலாம். ஒரு லட்சம் தடவை சப்தாகர்ஷிணி மந்திரம் ஜபிக்க வேண்டும்.பின்,உங்களின் கைக்கு அடக்கமான வெண்மையான சங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் குரு அம்சம் எனில் வலதுகாதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,நீங்கள் சுக்கிர அம்சம் எனில் இடது காதில் சங்கை வைத்து சப்தாகர்ஷிணி மந்திரம் தினமும் 108 முறையும்,அந்த ஒரு லட்சத்துக்கு மேல் ஜபித்து வர வேண்டும்.சங்கின் கீழ்ப்பகுதியி காதின் கீழ் மடலில் பொருத்தப்பிடித்துக் கொள்ள வேண்டும்.சங்கில் நல்லதேவதை தான் பேசும். சப்தாகர்ஷிணி மந்திரம்: ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய சப்தாகர்ஷணி ஆகர்ஷய ஆகர்ஷய வா வா ஸ்வாஹா இந்தப் பயிற்சியை 21 வயது நிரம்பியவர்கள் தான் செய்ய வேண்டும்.எந்த மதத்தைச் சேர்ந்தவரும் செய்யலாம். பெண்கள் மாதஓய்வு நாட்களில் 5 நாட்கள் நிறுத்தவும். அனைவரும் அசைவம்,மது நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும். இந்தப்பயிற்சிக்கு தனி அறை அவசியம்.இயலாவிட்டால்,அந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் மது,மாமிசம்,முட்டை தொடக்கூடாது.இது கட்டாயம்!!! எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன என சித்தவைத்தியர்கள் கூறுகின்றனர்.எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.இதன் பூவை வைத்து விநாயகருக்கும்,சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம்.விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும்.இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள்.வேர்ப்பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள்.அதனால்,அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது.தரமான விநாயகர் பிள்ளையார் பட்டியிலும்,சூரியனார் கோவிலிலும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். அங்கு போக முடியாதவர்கள்,உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு,அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும்.ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில்,அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி,நிழலில் காய வைக்கவும்.இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு,நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம்.இனி,அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்;தூப தீப நைவேத்தியம் செய்யலாம்;ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தன ஆகர்ஷணம் உண்டாகும்.(ஆமாம்,பண வரவு பல மடங்காக அதிகரிக்கும்) சொர்ண கணபதி மந்திரம் அருகிலுள்ள சிவாச்சாரியாரிடம் அணுகி, அடிபணிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும்,அவரது சீடர் புளியங்குடி சிவமாரியப்பனுக்கும் அநேக நன்றிகள்!!! Read more: http://www.livingextra.com/2011/08/blog-post.html#ixzz23tKRlYoX

16 August 2012

வசியம். தேவவசியம்'' நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் மிருகவசியம் வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் லோகவசியம் கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். லோகவசியம் பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்
மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன எண்று பார்போம் உதாரனத்திர்கு நீங்கள் செல் போனில் பேசுகிறீர்கள் எண்று வையுங்கள் அந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று பல செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன. அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது. அதே போலத்தான். நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட வழிபாடு அவசியமாகிறது. ஓம் சர்வ சர நமச்சிவய நம" இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர். நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும். நமது தலைக்குமேலே சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது. அங்கு நமது தினசரி ஜபம் சில நாட்களில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும். ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது: கொலை, கொள்ளை, ,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது. இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்: ஓம் ஆம் ஹ்வும் சவ்ம் இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
சகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட்டு மிருகத்தை கட்டு ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு சத்ருவை கட்டு எதிரியை கட்டு எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க் ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம இடுகையிட்டது ஸ்ரீ சக்தி நேரம் 10:38:00 pm கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர் செவ்வாய், 26 ஜூன், 2012 ஹோமங்களின் பயங்கள் உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் எமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன. ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன. இங்கே, பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றித்தரும் 21 வகையான ஹோமங்கள் தரப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட உங்கள் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ள இந்த ஹோமங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1. ஸ்ரீ தரணி ஹோமம் தரணியந்திரம் ஸ்ரீ தரணி யந்திரம் பூமியைப் பற்றியது. இந்த ஹோமமும், யந்திர பூஜையும் பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கு இன்றியமையாதது. ஸ்ரீ தரணிஹோமம் செய்து, பின் தரணி யந்திரத்தை வைத்து முருகப் பெருமான் படத்துடன் வைத்துப் பூஜைசெய்து வரவேண்டும். 2. ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் மற்றும் நீலா சரஸ்வதி யந்திரம் இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக் கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்த பின்னர், யந்திரத்தை வீணையுள்ள வித்யாவதி சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்ய கல்வியும் சிறப்புறும். 3. ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் ஹரித்வி கணேசா மஹா யந்திரம் இந்த ஹோமத்தையும், யந்திர பூஜையும் செய்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டுவதுடன் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் உதவும். 4. ஸ்ரீ கருட பஞ்சக்ஷ ஹோமம் மற்றும் மஹா யந்திரம் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், ஞாபக மறதி, குழம்பிய மனநிலை, சர்ப்ப சம்பந்தப்பட்ட பீடைகள் இராகு தோஷங்கள் நீங்குவதற்கு இந்த ஹோமம் உறுதுணை புரியும். 5. ஸ்ரீ தக்ஷண காளி மஹா யந்திரம் மற்றும் ஹோமம் எதிரிகளை வெல்லவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை தண்டித்து தன்னை வணங்குபவருக்கு தக்க அபயமளித்து காத்து ரக்ஷிக்கச் செய்யும் உபாசகனுக்கு தரிசனம் தந்து காக்கும் தெய்வம் தக்ஷிண காளியைத் திருப்திப்படுத்தும் ஹோமம். 6. ஸ்ரீமத் மஹா ஆஞ்சனேய யந்திரம் மற்றும் ஹோமம் சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து நிவாரணம் அளிக்கும். இராமபிரான் சீதையுடன் கூடிய பட்டாபிஷேக படத்துக்கு சந்தன குங்குமம், செவ்வந்திப்பூச் சார்த்தி, இன்னும் சில கிரியைகள் செய்திட ஸ்ரீ ஆஞ்சனேயா அனுக்கிரகம் கிடைக்கும். 7. மஹிஷ மர்தினி ஹோமம் மற்றும் மஹா யந்திரம் வசியம், ஆரோக்கியம், சத்ரு ஜெயம், சாந்தி புஷ்டி, தானியவளம், சத்ரு நாசம், பூதாதிகளின் நாசம் இவற்றை அளிக்கவல்லது. 8. ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம் பிள்ளைப் பேறு, சத்ரு நாசம், ஜகத்திலுள்ள உயிர்களின் வசியம், எப்பொழுதும் எதற்கும் அஞ்சாத திடமும், உடல் வலிவும் பெற இந்த ஹோமம் மற்றும் யந்திரம் உதவும். 9. பாசுபதாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம் இதன் சாதனை ஹோமமும், யந்திரமும் கூடும்பொழுது எந்தப் பகையையும் விலகி ஒடவைக்கும். துன்பங்கள் அனைத்தையும் போக்கும். பகை எண்ணங் கொண்டவர்களை நட்புக்கொள்ள வைக்க வல்லது. 10. வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் மற்றும் யந்திரம் வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும். ரத்தினங்கள், ஆபரணங்களின் சேர்க்கையைக் கூட்டுவிக்கும். 11. ஸ்ரீ காயத்ரீ ஹோமமும் மஹா யந்திரமும் மந்திரங்களின் மூலசக்தி ஸ்ரீ காயத்ரீ தேவியே. எந்த மந்திர உச்சாடனத்திற்கும் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பின்னரே உரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சர்வ காரிய சித்திகளுக்கும் துணை நிற்கக் கூடியவை இந்த ஹோமமும் யந்திரமும். 12. ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமமும் யந்திரமும் ஆறு முக்கோணங்களைத் தன்னுள்ளடக்கிய யந்திரத்தை உடையவள் வராஹி. வேண்டி வணங்குபவருக்கு வேண்டும் வரங்களைத் தருபவள். வேறு எந்த சக்தி எதிர்த்தாலும் தன்னைப் பூஜிப்பவருக்கு தங்குதடையின்றி வரம் தருபவள். அவளுக்கு உரியது இந்த ஹோமம். 13. பூர்ணா தேவி ஹோமமும் யந்திரமும் எதிலும் நிறைவான செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தருபவள் பூர்ணா மாதா. மனக் குறைபட்ட உள்ளங்களில் நிறைவை உண்டாக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமமும் யந்திரமும். 14. தன்வந்திரி ஹோமமும் யந்திரமும் அனைத்து வியாதிகளையும் போக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது. நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்பட்டவர்களை நலம் பெற்று நடமாட வைக்கும். அமுத கலசத்தைக் காட்டும் சர்வரோக நிவாரணம் தருவது. 15. ஸ்ரீ குபேர ஹோமமும் மஹா யந்திரமும் அபரிமிதமான செல்வச் சேர்க்கையைத் தரும். வறுமையைப் போக்குவது. கடன்களைத் தீர்த்து மனதிற்கு நிம்மதியைத் தருவது. கை நிறைய செல்வத்தை நாள் தோறும் வழங்கி வருவது இந்த குபேர யந்திரமும் ஹோமமும். 16. ஸ்ரீ சக்தி ஹோமமும் மஹா யந்திரமும் ஐஸ்வர்யம், பவிக்ரமம், சர்வஜன வசியம் அனைத்தும் அருள வல்லது இந்த ஹோமம். 17. ஸ்ரீ வடுக பைரவ மஹா யந்திரமும் ஹோமமும் அனைத்து பயங்களிலிருந்தும் காக்க வல்லது இந்த ஹோமம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் தெரிவது. பூஜிப்பவரைக் காக்கும் வல்லமை கொண்டது. பேய் பிசாசு தொல்லை நீக்கிடும். பில்லி சூனியத்தையும், மாந்திரீகங்களையும் தவிடு பொடி ஆக்குவது. 18. ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமமும் யந்திரமும் தம்பதிகளின் கருத்தொருமித்த காமாக்கியங்களுக்கு வல்லமையைத் தருவது. ஸ்பரிச உணர்வில் காந்த சக்தியை வர்ஷிப்பதுடன் மனதில் நிறைவையும் தருவது இந்த ஹோமத்தின் மகிமை. 19. மகாலட்சுமி ஹோமமும் யந்திரமும் லக்ஷ்மி நாராயணன் பூஜையுடன் கூடியது. இது சர்வ ஐஸ்வர்யமும் அருள்வது. லட்சுமியின் எட்டு குணபேதங்களை அஷ்டலக்ஷ்மியாகச் சித்தரிக்கிறது. அஷ்டலக்ஷ்மியின் அனைத்துச் சக்திகளையும் அருளவல்லது. 20. அஸ்வாரூட யந்திரமும் ஹோமமும் கனவில் வந்து பலன் சொல்வது. வெளிநாடு செல்லத் தடை ஏற்பட்டால் அதை நீக்குவது, வெளிநாடு, கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க அருள்வது. வேலை விஷயமாகப் (இண்டர்வியூவ்) போகும்பொழுது ஏற்படும் பயத்தைப் போக்க வல்லது. 21. பாலமுருக ஹோமமும் யந்திரமும் சத்ரு சம்ஹார ஹோமத்தின் பலனத் தருவது இந்த ஹோமம். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது.
லோக வசியம் லோக வசியம் மூலிகை பெயர்: மூக்கிரட்டை.{சிகப்பு சாரனை} மூலிகை படம் பூஷ நட்சத்திரம் வரும் நாள் பிரம்ம முகூர்த்தத்தில் காலை நேரம் 3.30 இல் இருந்து 5.30 நேரத்திர்குள் மஞ்சள் நூல் காப்பு கட்டி மூலிகை சாப நிவர்தி செய்து உயிர் கொடுத்து வேர் பிடுங்கி வலது கையில் கட்டிகொள்ள வசிகரசக்தி கிடய்க்கும் 1}மந்திரம் மூலிகை சாப நிவர்தி உயிர் கொடுக்கும் மந்திரம் ஓம் மூலி ஓங்கார மூலி சர்வ மூலி சர்வ சாபம் நசி மசி உன் உயிர் உன் உடலில் நிர்க்க சுவாஹா" {13} உரு 2}மந்திரம் ஓம் நமோ சர்வலோக வசீகராயா குரு குரு