youtube

31 December 2015

அமெரிக்காவில் திருவண்ணாமலை

அமெரிக்காவில் திருவண்ணாமலை

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன. தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பை காட்டி திருத்தினார். பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம். இவர் தனக்கு வந்த புற்று நோயை குனப்படுத்த இவர் தனது தபோ வலிமையை பயன்படுத்த வில்லை. எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.

இந்த துறவியின் உத்தரவை தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல் தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள். அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை. இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கபோவதும் இல்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை. மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்த துறவி இருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.

இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும். தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல் வாதி இவரை அண்ணா ந்து பார்த்து கேலி செய்தார். அந்த அரசியல் வாதி ஒண்டரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனி கதை.

நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னை பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள். அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

ரமண மஹ ரிஷிக்கு எதனால் புற்று நோய் வந்தது என்பதை பற்றி ஓஷோ ரஜனீஷ் என்ன சொல்கிறார் என்றால்.
ஒரு ஞானிக்கு ஏற்படும் துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது உடலுக்கே ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்கு முன் துலங்கிய கர்ம பலன்களின் தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின் இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன். நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால் அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன் விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ இந்தப் பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன் அல்லவா ? அந்தக் கனவுக் கனிகள் பழுத்து உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம பலங்களின் தொடர்ச்சி என்கிறார் ஓஷோ.

பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தை பற்றியும் ரமணருக்கு தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார். இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்று கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர். திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர். ரமணர் சில நொடிகள் கண் மூடி பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார்.

திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது. தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano. திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை முதற்கொண்டு அந்த அமெரிக்க தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான் அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தமிழ் நாட்டை தாண்டாத இவருக்கு கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது.

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள். மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா. இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு வர காரணம் அது தான். புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னிய

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

கிருஷ்ணர்: செல்லும் வழியைக் கொண்டு முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி கொள்ளச் செய்வதற்காக, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் எண்ணற்ற முறையற்ற செயல்களைச் செய்துள்ள...ார். அவருடைய பொய்களும், புரட்டுகளும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெறச் சாதகமாக இருந்தாலும், அந்த போராட்டத்தில் பாண்டவர்கள் இழந்தது மிகவும் அதிகமாகும். போருக்குப் பின்னர், ஆஸ்தினாபுரம் விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் இடமாக மாறி விட்டது.

பீஷ்மர்: சுயநலமற்றவர், ஆனால் தொலைநோக்கு பார்வை இல்லை அஸ்தினாபுரத்து இராஜகுடும்பத்தின் மூத்த பெரியவர் மற்றும் வீரமிக்க போர்வீரரான பீஷ்மருக்கு தன்னுடைய மக்களையும், அரசையும் காப்பாற்ற சில வாய்ப்புகள் கிடைத்தன. பீஷ்மருடைய சிற்றன்னை பலமுறை அரசைப் பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் திருமணம் செய்து கொள்ளுமாறும் மன்றாடிக் கேட்டும் பாராமுகமாய் இருந்து தன்னுடைய பிரம்மச்சரியத்தை அவர் கைவிடவில்லை. சுய-நேர்மை மிக்கவராக இல்லாத காரணத்தால், இவராலும் கூட போரைத் தவிர்க்க இயலவில்லை.

அர்ஜுனர்: ஒரு பெண்ணின் கோபத்தை விட மோசமானது எதுவும் இல்லை தேவலோக நாட்டிய கன்னியான ஊர்வசியின் முன்னேற்றத்தை அலட்சியம் செய்தார் அர்ஜுனர். இதன் காரணமாக ஒரு வருட காலத்திற்கு அர்ஜுனர் தனது ஆண்மையை இழந்து விடுவார் என்று அவள் சபித்தாள். வீரமிக்க அர்ஜுனர் ஒரு ஆண்டு காலத்திற்கு அலியாக காலம் தள்ளினார். எனவே, பெண்களை யாரும் இழிவுபடுத்த வேண்டாம்.

திரௌபதி: வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாமே இருப்பதில்லை தன்னுடைய முற்பிறப்பில் செய்த தவத்தின் பலனாக, தனக்கு வீரமிக்க, நேர்மையானவனாக, உடல் உறுதியானவனாக, மிகவும் கற்றறிந்தவனாக மற்றும் உலகிலேயே மிகவும் அழகானவனாக இருப்பவனே தன்னுடைய கணவனாக வர வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டாள். அவள் கேட்டது கிடைத்தது, ஆனால் 5 வேறு வேறு கணவர்களிடம் இருந்து. ஒரே மனிதனிடம் இந்த 5 குணங்களும் இருக்காது மற்றும் நீங்கள் விரும்பியதெல்லாமே உங்களுக்கு கிடைத்திடுவதில்லை என்பது தான் இந்தக் கதையின் நீதியாகும்.

அபிமன்யு: அரை அறிவு ஆபத்தானது அர்ஜுனரின் மகனான அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே புக மட்டுமே வழி தெரியும், ஆனால் அதை விட்டு எப்படி வெளியே வர முடியும் என்று தெரியாது. எனினும், இந்த கடுமையான போர் வடிவத்திற்குள் புகுந்து செல்ல முயற்சி செய்ததன் பலனான தன்னுடைய உயிரையே விட்டு விட்டார் அபிமன்யு. இதன் காரணமாகத் தான் அரை அறிவு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். நீங்கள் எதைக் கற்றாலும் முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள் என்பது நீதி!

குந்தி : செய்யும் முன் கவனியுங்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் அர்ஜுனர் வெற்றி பெற்ற பின்னர், அவளை குந்தியிடம் அழைத்து வந்த போது, குந்தி தேவி சமைத்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் வெற்றி பெற்ற பரிசு என்ன என்பதை கவனிக்காமல், அவன் வென்ற பரிசை, சகோதரர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவள் கூறி விட்டாள். எனவே, நீங்கள் சொல்லும் வார்த்தையின் விளைவுகள் என்ன என்று அறியாமல், எந்தவொரு வார்த்தையையும் விட்டு விடாதீர்கள்.

திருதராஷ்டிரர் : கண்மூடித்தனமான அன்பு ஆபத்தானது அஸ்தினாபுரத்தின் பார்வையற்ற அரசரான திருதராஷ்டிரரும் கூட ஒரு தவறை செய்திருக்கிறார். அவர் தன்னுடைய பிள்ளைகளை மிகவும் நேசித்ததால், யாரையும் கண்டிக்கவில்லை. ஓவ்வொரு தந்தை மற்றும் தாய்க்கும் தேவையான பாடமாக இது உள்ளது. உங்களுடைய குழந்தைகள் முழுமையாக கெட்டுப் போகும் முன்னர், அவர்களை சரியான நிலைக்கு கொண்டு வாருங்கள். கண்மூடித்தனமான அன்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது.

இந்தியாவின் மாபெரும் காவியமான மகாபாரதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாக இவை உள்ளன.

ஹரிவராசனம் விஸ்வமோகனம் - பொருள் - தமிழ் விளக்கத்துடன்

>> ஹரிவராசனம் விஸ்வமோகனம் - பொருள் - தமிழ் விளக்கத்துடன் <<
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும் தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படு
பவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

30 December 2015

"சிவாயநம

"சிவாயநம"

ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.
சிவாயநம என்பதை
"சிவயநம'
என்றே உச்சரிக்க வேண்டும்.
சி- சிவம்;
வ- திருவருள்,
ய-ஆன்மா,
ந-திரோதமலம்,
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.....

ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

(பொறுமை)

உங்களுக்கு விரோதி நீங்களேதான்.   அது உங்களுக்கே தெரியாது.   நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கக் கற்றுக் கொள்வதில்லை.    உங்களுக்கு இறைவனுக்கு நேரம் ஒதுக்கத் தெரியவில்லை.    நீங்கள் பொறுமையற்று இருக்கிறீர்கள்.  மேலும் சுவர்கத்தை உடனடியாக அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.  புத்தகங்களைப் படிப்பதாலோ, அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அல்லது தர்ம காரியங்களைச் செய்வதாலோ அதை நீங்கள் அடைய முடியாது.    ஆழ்ந்த தியானத்தில் உங்களுடைய நேரத்தை அவனுக்குக் கொடுப்பதன்                 மூலம் தான் அதை அடைய முடியும்.

-- ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

29 December 2015

பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்

பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள் தினம்தோறும் ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான
சொற்களின் மூலம் அறிவுறுத்த எண்ணினார் பகவான் கிருஷ்ணர்.
"உனக்கு என்ன ஆகி விட்டது இப்பொழுது? இந்த எண்ணம் தவறான நேரத்தில் உனக்கு எப்படி வந்தது?
அனைவரும் நீ போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடி விட்டாயென சொல்லுவர். அதனால் உனக்கு பேரிழுக்கு ஏற்படும்.
2. இவ் வார்த்தைகள் அர்ஜுனனை போரிட தயார் படுத்தவில்லை.
ஆதலால் இந்த உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பை அர்ஜுனனுக்கு
விளக்க ஆரம்பித்தார் பகவான் கிருஷ்ணர்.
3. நமது உண்மையான இயல்பு ஆன்மாவே - உடல் அல்ல. இந்த
உடல் தற்காலிகமானது அழியக்கூடியது
ஆனால் ஆன்மா நிரந்தரமானது,
அழிக்கமுடியாதது. ஆதலால் இவ்வுடலில் இறப்பிற்கு துக்கப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் நமது ஆன்மா இறப்பதில்லை.
4. இது ஞான யோகத்தின் கண்ணோட்டம். கர்ம யோகத்தின் பார்வையிலும் நாம் நமது கடமையை
செய்ய வேண்டும். ஒரு வீரனின் கடமை போர் செய்வது. நியாயமான
மக்களை காப்பது. எவன் ஒருவன் தனது கடமையை செவ்வனே செய்து அதன் பலனை பரிபூரணமாக எனக்கு
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு அதனால் எந்த பாவமோ பந்தமோ
ஏற்படுவதில்லை.
5. சமநோக்குடன் இப்போரில் பங்கேற்கும் கடமையை செய். உன்னத
நிலையை அவ்வாறே அடைவாய்.
சீரான மனநிலை உடையவர்கள் வழியும் அதுவே.
6. இந்த சீரான மனநிலை உடையவர்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று தெரிந்து கொள்ள அர்ஜூனன் ஆவல் கொண்டான்
7. பகவான் கிருஷ்ணர் அத்தகைய
மனிதரிடம் நான்கு குணங்களை சுட்டிக்காட்டினார். முதன்மையானது
- அவர் தன் மனதின் ஆசைகளை துறந்து, எந்நேரமும் தன் ஆத்மாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
8. இரண்டாவதாக அவர் கோபம், தாபம், பயம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு சுகத்திலும் துக்கத்திலும்
சமமாக வாழ்கிறார்.. , தன் உணர்வுகளை
அதைத் தூண்டும் பொருள்களில் இருந்து காத்துக்கொள்ள , ஆபத்தின்
அறிகுறி தெரியும் போதே சுதாரிக்கும்
ஆமையைப் போல பின் வாங்கிக்கொள்கிறார்.

28 December 2015

நாழிக்கிணறு.

நாழிக்கிணறு..!

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்...!

26 December 2015

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு
முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்க்கையை  சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணச் செல்வதென்றால் எளிதான காரியமா? பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு  என்பது நமது உடல். தேங்காயில் நார் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர்  மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல்  தேங்காயின்  வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்கப்படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை  மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை  சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

 எத்தனை முறை சபரிமலை சென்றோம் என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு வருடம் சபரிமலை சென்று நாம் எந்த அளவிற்கு, நமது வாழக்கையை செம்மை படுத்தி உள்ளோம் என்பதே முக்கியம். எல்லோரும் செல்கின்றனர் நாமும் செல்வோம் என்று செல்வதில் எந்த பயனும் இல்லை . சபரிமலை செல்வது ஒரு யாகம். மற்ற கோவில்களுக்கு செல்வது போல் செல்லக் கூடாது  நாம் எப்படி ஒழுக்கத்துடன் அய்யனை தரிசனம் செய்ய நம்மை ஆயத்தபடுத்தி உள்ளோம் என்பதே மிகவும் முக்கியம். எத்தனை முறை சந்நிதியில் அய்யனை தரிசனம் செய்தோம் என்பது முக்கியம் அல்ல அய்யன் நம்மை ஒருமுறை பார்த்தானா என்பது தான் முக்கியம்.

தற்காலத்தில் சபரிமலை செல்வது ஒரு உல்லாச பயணமாகி விட்டது. அப்படி செல்லாமல், அசைக்க முடியாத மனம் ஒருநிலை படுத்திய தூய பக்தியுடன் சபரிமலை செல்வோம் வாழ்வில் பல நன்மைகளை அவன் அருளாலே அடைவோம்.

சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா.
மாந்திரீக  ரகசிய பரிகாரங்கள்



1.விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .

2.வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில
நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

3.தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

4.கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.

5.அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன்
 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.

8. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..

9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை +தேனு+ என்பார்கள்.
{இரண்டாவது கன்று} பிரசவித்ததும் அதற்கு
கோ'' + என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,

* அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்...

10. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

11. வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ....

12. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்...

13. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.

14.வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது,.

24 December 2015

வேப்பமரத்தடி விநாயகர்

வேப்பமரத்தடி
விநாயகர்
வணக்கம் நண்பர்களே!

வேப்ப மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பஞ்ச தீப என்னை எனப்படும் ஐந்து வித எண்ணை கொண்டு (தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய், பசு நெய்,
இலுப்பெண்ணை, விளக்கெண்ணை)  தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்  மனதிற்கு ஏற்ற வரன் அமையும். ஏற்றுமது, இறக்குமதி வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கு அடிமையாய் செயல்படும் நிலை அகலும். குடும்பத்தில் மைத்துனி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் தீரும்.

பாகற்காய் கலந்த உணவை தானம் செய்தல் உத்தம பலன்களைப் பெற்றுத் தரும். கிழக்கு நோக்கிய வேப்பமரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

நன்றி நண்பர்களே!

23 December 2015

, ஸ்ரீதத்தாத்ரேயரை



   ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று! கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறது புராணம்!

  படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இதை வலியுறுத்த வந்த அவதாரமே ஸ்ரீதத்தாத்ரேய வடிவம்!

 மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

  இந்த நாளில், ஸ்ரீதத்தாத்ரேயரை மனதார வேண்டுவோம். சகல தோஷங்களும் விலகி, நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாய் வாழ்வோம்!


சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்
:  இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம்.

வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்துவிடும்
 மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
 மகிழ்வுகள் வந்து விடும்
 சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
 சிந்தையில் ஏற்றவனே
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
 வாரியே வழங்கிடுவான்
 தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
 தானென வந்திடுவான்
 காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
 காவலாய் வந்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
 முடித்திட அருளிடுவான்
 உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
 உயர்வுறச் செய்திடுவான்
 முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
 முடியினில் சூடிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
 நான்முகன் நானென்பான்
 தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
 தேவைகள் நிறைத்திடுவான்
 வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
 வாழ்த்திட வாழ்த்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
 பூரணன் நான் என்பான்
 நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
 நாணினில் பூட்டிடுவான்
 காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
 யாவையும் போக்கிடுவான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
 பொன் குடம் ஏந்திடுவான்
 கழல்களில் தண்டை கைகளில் மணியணி
 கனகனாய் இருந்திடுவான்
 நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
 நின்மலன் நானென்பான்
 தனக்கிலை யீடு யாருமே
 என்பான் தனமழை பெய்திடுவான்

 சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
 சத்தொடு சித்தானான்
 புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
 புண்ணியம் செய்யென்றான்
 பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
 பசும்பொன் இதுவென்றான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான்

 ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
 வந்தருள் செய்திடுவாய்
 ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
 ஜெயங்களைத் தந்திடுவாய்
 ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
 செல்வங்கள் தந்திடுவாய்
 தனக்கிலை யீடு யாருமே என்பான்
 தனமழை பெய்திடுவான் :-

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

தொழில் செழிக்க குபேர ராஜவஸ்ய மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.

2. ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.

3. ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா.


பிரளயம், கால சக்கரம், யுகங்கள், 14 உலகங்கள்

பிரளயம், கால சக்கரம், யுகங்கள், 14 உலகங்கள்:
1. யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

2. கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவைப் போல் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000).

3. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம். இதன் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).

4. 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். மன்வந்திரத்தின் அதிகாரியை 'மனு' என்று புராணங்கள் குறிக்கிறது.

5. 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்' . இது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது. இதுவே பிரம்மாவின் ஒரு பகல் பொழுது.

6. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம். முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் பிரளயம் வரும். பிரயளத்தில் 14 உலகங்களில் மூன்று (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

7. இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்கு படைப்பு இல்லை. அச்சமயத்தில் ஆன்மாக்கள் உருவமற்று, செயலற்று மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும்.

8. பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கும். இக்கால அளவின் படி, பிரமனின் ஒரு நாள், மாதமாகி, மாதம் வருடமாகி, அவ்வருடங்கள் நூறு கடந்தால் பிரமனின் ஆயுள் முடிவுறும். தற்பொழுது இருக்கும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்து விட்டது.

9. தற்பொழுது நடப்பது 'சுவேத வராக கல்பம்'. இதன் 14 மன்வந்திரங்களில் இப்பொழுது நடைபெறுவது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரம். இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில் நாம் இருப்பது 28 ஆம் சதுர்யுகத்தில்.

10. தற்பொழுது நடைபெறும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது. இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

பிரமனின் கால அளவின் படி நூறு ஆண்டுகள் கழிந்ததும் உருவாகும் பிரளயம் 'மகா பிரளயம்' என்று அழைக்கப் பெறும். இப்பிரளயத்தில் உலகங்களும் முழுவதுமாய் அழியும். இதன் பிறகு பல கோடி ஆண்டுகளுக்கு பின்னரே அடுத்த பிரமனின் சிருஷ்டியும், படைப்பையும் இறைவன் துவக்கி வைப்பான்.

பிரமனின் இரவுப் பொழுது ஒரு கல்ப காலம் (ஆயிரம் சதூர்யுகங்கள்) முக்தி பெறாத ஆன்மாக்கள் செயலற்று மாயையில் அமிழ்ந்து இருக்கும். இக்காலம் 'கேவல திசை' என்று அழைக்கப் பெறும். ஏனினில் ஆன்மாக்கள் முக்திக்கான எவ்வித பிரயத்தனமும் மேற்கொள்ள இயலாத நிலையில், காலமானது வியர்த்தமே கழியும்.

நாம் இருக்கும் அண்டத்தில் மொத்தம் 14 உலகங்கள் உள்ளன. பூமிக்கு மேலே 6 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் உள்ளன. 'புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே' என்று அபிராமி அந்தாதியில் குறிக்கிறார் அபிராமி பட்டர்!!!


பூமிக்கு மேலே உள்ள 6 உலகங்கள்:
சத்தியலோகம் (பிரம்மா)
தபோலோகம் (தேவதைகள்)
ஜனோலோகம் (பித்ருக்கள்)
மகர்லோகம் (முனிவர்கள்)
சுவர்லோகம் (இந்திரன், தேவர்கள்):
புவர்லோகம் (கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்):


பூமிக்கு அடியில் உள்ள 7 உலகங்கள்:
அதல லோகம்:
விதல லோகம் (அரக்கர்கள்):
சுதல லோகம் (மகாபலி):
தலாதல லோகம்:
மகாதல லோகம் (அசுரர்கள்):
ரசாதல லோகம்:
பாதாள லோகம் (வாசுகி முதலான பாம்புகள்):

'அதல பாதாளத்தில் வீழ்வது' என்னும் வார்த்தைப் பிரயோகம் 'அதல லோகம்' முதல் 'பாதாள லோகம்' வரையிலான உலகங்களின் பெயரால் பழக்கத்துக்கு வந்தது.

ஸ்ரீமகாவிஷ்ணு கல்பத்தின் தொடக்கத்தில் வராக அவதாரம் எடுத்தருளி, பாதாள லோகத்தில் நீரில் அமிழ்ந்து இருந்த பூமியை எடுத்து, மீண்டும் அதன் ஸ்தானத்தில் வைத்தருளினார். இதனால் இக்கல்பம் 'சுவேத வராக கல்பம்' என்று அழைக்கப் பெறுகிறது!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்.

எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.

இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.

பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.

கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.

ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.

கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.

இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.

142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.

பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.

காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான்.

அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.

இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.

ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.

திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.

அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்,

கிளி கோபுரம் (81 அடி உயரம்);

தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),

தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),

மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),

வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.

இதை காந்த மலை என்பர்.

காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).

கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.

இப்பாதையில் 20 ஆசிரமங்களும்,

360 தீர்த்தங் களும்,

பல சந்நிதிகளும்,

அஷ்ட லிங்கங்களும் உள்ளன.

26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.

மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.

அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன.

இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.

ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி.

இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.

அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது.

அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.

காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.

அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.

அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்

முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்,

மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.

திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.

மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.

இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.

இதனால் குழந்தைப்பேறு கிட்டும்;

கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம்,

தென் கிழக்கே அக்னிலிங்கம்,

தெற்கே எமலிங்கம்,

தென்மேற்கே நிருதிலிங்கம்,

மேற்கே வருணலிங்கம்,

வடமேற்கே வாயுலிங்கம்,

வடக்கே குபேரலிங்கம்,

வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.

இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,

அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.

திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில்

இடைக்காட்டு சித்தர்,

அருணகிரிநாதர்,

ஈசான்ய ஞானதேசிகர்,

குரு நமச்சிவாயர்,

குகை நமச்சிவாயர்,

ரமணமகரிஷி,

தெய்வசிகாமணி தேசிகர்,

விருப்பாட்சிமுனிவர்,

சேஷாத்ரி சுவாமிகள்,

இசக்கிசாமியார்,

விசிறி சாமியார்,

அம்மணியம்மன்,

கணபதி சாஸ்திரி,

சடைசாமிகள்,

தண்டபாணி சுவாமி,

கண்ணாடி சாமியார்,

சடைச்சி அம்மாள்,

பத்ராசல சுவாமி,

சைவ எல்லப்பநாவலர்,

பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்!

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்),

சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),

பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.

திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால்,

சிவனின் அருளுடன்,

மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

இதன் அடிப்பாகத்தில்

பிரம்மா,

தண்டு பாகத்தில்

மகாவிஷ்ணு,

நெய், எண்ணெய்

நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

எத்தனை எத்தனையோ அரசர்கள்,

கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,

கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,

இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்,

இடையூறுகளையும் ஏழரை சனி,

அஷ்டமச்சனி

போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,

வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

22 December 2015

பெரியவா சரணம்

பெரியவா சரணம்

வெள்ளிக் கிண்ணம் எங்கே?"

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள். “இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு! “பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்! பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம் “பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்! சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,“எங்கே வெள்ளிக்கிண்ணம்?” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம் எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார். பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்

உலகமெலாம் அடிபணியும் ஜெய ஜெய குரு சங்கரா

ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர்

ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர் 

        நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும்.    இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே..  சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும்.  அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.  பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது.  இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன.  இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.  உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள்  கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும்  தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர்,  கரிசாலை குடிநீர்,  நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர்,  சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

ஆவாரம்பூ குடிநீர்

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு.  ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.  இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.  மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில்  ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து  வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.  இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும்.  இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர்.  இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து  அனைவரும்  அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.  இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும்.  தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்

“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான  இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது.  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.  இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம்.  அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

 ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும்.  வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும்.  இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும்.  அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.  குடல்புண்களை ஆற்றும்.  மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்

ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

17 December 2015

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)

2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)

3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)

4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)

5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)

6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)

7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)

14. கங்கா தீர்த்தம்,

15. யமுனை தீர்த்தம்,

16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)

18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)

19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)

20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)

21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)

22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை

போகர் பஞ்ச கல்பம்

போகர் பஞ்ச கல்பம்
 பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

1) நெல்லிப்பொடி
2) வெண்மிளகு
3) கடுக்காய்ப்பொடி
4) கஸ்தூரிமஞ்சள்
5) வேப்பன்வித்து
இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி  பெறும்.
பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.
 பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

1) நெல்லிப்பொடி
2) வெண்மிளகு
3) கடுக்காய்ப்பொடி
4) கஸ்தூரிமஞ்சள்
5) வேப்பன்வித்து
இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி  பெறும்.
பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.

16 December 2015

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா

வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

15 December 2015

குரு மரண படுக்கையில்

குரு மரண படுக்கையில் இருந்தார்..
அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”
கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”
அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.
நாட்கள் சென்றன...
தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..
குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.
சிஷயன் ஞானம் அடைந்தான்..
நாட்கள் சென்றன...
சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.
மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..
அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...
நாட்கள் சென்றன...
தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..
“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”
சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..
அதில் எழுதி இருந்த வாசகம்...
‪#‎இன்னொரு_முறை_முயற்சி_செய்‬
-----------------------------------------------------------
சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..
குரு என்பவர் உபதேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.
சில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :-

விநாயகப்பெருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகும்.

சிவன் சன்னதியில் பிரதட்சிணம் செய்யும்போது நந்திதேவரையும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்து சிவனுக்கும் நந்திக்கும் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.

* பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும், அதை கறந்து வெளிப்படுத்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவில்களுககுச் சென்று இறைவனை வழிபடுவதால், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

* சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.

* காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந் ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.

*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூடாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
................

தீபாராதனை காட்டுவது ஏன.........

நம் வீட்டில் ,கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.

மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.

எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது

.

கடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்?

விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.

ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,

அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,

மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.

சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,

தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,

கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.

கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.

ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,

அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,

மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.

சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,

தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,

கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.

கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

3 December 2015

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்

இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள்  நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்

ருத்திரசண்டி சக்கரம் மந்திரம்

ருத்திரசண்டி சக்கரம்  மந்திரம்
இந்த சக்கரம் பலவகையான நன்மைகளைக் கொடுக்கும். இதை பூஜை செய்து வந்தால் வேலை கிடைகாமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தயோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். செல்வம் குவியும்
அரிஓம் யங் ரங் வங்  சுங்  கால சண்டி கபால சண்டி
அரி ஓம்ரங் வங் சங்யங் வீர சண்டி விவேக சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் சூர சண்டி ருத்திர சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் வங் எனைக் காப்பாய் சுவாகா

இந்த மகா மந்திரத்தை தினம் கூறி வந்தால் சகல நன்மைகள் பெருகும்.

30 November 2015

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை
பேய் மிரட்டி இலைத்துள்
தலைச் சுருளிக் கொடிதூள்

ஆகிய இரு தூள்களையும் சம அளவாக எடுத்துச் சம்பிராணித் தூளுடன் கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையைக் கரி நெருப்பில் போட புகை எழுப்பும். இவ்வாறு புகை போட பேய் பிசாசு வகைகள் அணைத்து ஒடும்

வசிய மகா விபூதி மந்திரம்

வசிய மகா விபூதி மந்திரம்
ஓம் பகவதி கெளரி ,பஞ்சாசாத்தி,லோகவசி கரி,
மகாமோகினி,ஐயும்,கிலியும்,அரசனா,கலியாணி,
நாராயணிதேவி வீரலட்சுமி, என் வாக்கிலேயும்,
என் மனத்திலேயும் மோகித்துநிற்க, சிவா
இந்த மந்திரத்தை தேங்காய்-பழம் –பூ இவைகளை  வைத்து சாம்பிராணி சூடம் தீபாராதனை செய்து , மேற்கு நோக்கியிருந்து 1008 உரு ஜெபிக்கவும்,

பின்பு இலையில் விபூதி பரப்பி தான் நாடப் போகிற பேரை அந்த வீபூதி மீதிதெழுதி, சாம்பிராணி தூபம் போட்டு 108 உருதரம் இந்தத்  மந்திரத்தை சொல்லி வீபூதி எடுத்து பூசிக்கொண்டு போனால்  தான் சென்ற காரியம் உடனே சித்தியாகும்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் மந்திரம் யந்திரம்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன்
மந்திரம் யந்திரம்
திருமணம்மாகி வெகு நாட்கள் குழந்தை  இல்லாத ஆணும் பெண்ணும் இங்கு யந்திர  பூஜை முறைகள் கடைபிடித்தால் நவீத கிருஷ்ணன் அருளால் குருவாயூரப்பன் அருளால் மகப்பேறு கிடைகும்.
இந்த யந்திரத்தை பூஜை வைத்து ஒவ்வெரு கிழமையும் பால்,பாயசம் தயாரித்து அவல் பொரி,கடலை, நெய் விளக்கு கேற்றி கிழக்கு முகமாக அமர்த்து.
ஓம் நமோ நாராயண நமஹா
ஓம் நவநீதகிருஷ்ணன்  நமஹா
ஓம் நமோ குருவாயூரப்பனே நமஹா

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும், இதே போல் 10 வியாழக்கிழமை விரதம் இருந்து . பூஜை முடித்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைகும்