குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 10
எனவே அந்த இரு விரலும் விலக்கியே வைத்து ஜபமணியை பயன்படுத்தவும். 108 வரை மந்திரம் சொல்ல வேண்டுமானால் மேரு என்னும்
அதன் உச்சியை முதலாக கொண்டு உட்பக்கமாக மந்திரம் ஜெபித்து கொண்டே வந்தால் 108 கணக்குடன் மீண்டும் அதன் உச்சி வந்து விடும்.
பின்பு தொடர்ந்து மேருவை கடந்து அப்படியே மீதம் எண்ணக்கூடாது. பெரியவர்கள் மகாமேரு
போன்றது உச்சி அதனை கடக்க கூடாது என்பார்கள். எனவே மீதம் எண்ணிக்கைக்கு மாலையை
திருப்பி கொள்ள வேண்டும். பின்பக்கம் மாலையின் மணிகளை தள்ளக் கூடாது. ஏன் மாலையை
திருப்ப வேண்டும். எல்லாம் ஒன்று தானே என நீங்கள் நினைக்கலாம். ஜபமாலையில்
மேருவுக்கு அடுத்த மணி எப்பொழுதும் இரண்டாவதாக எண்ணிகையில் வரும் கடைசி மணி
எப்பொழுதும் கடைசியாகவே இருக்கும். இது ஒரே பக்கமாக என்னும் பொது சக்தி குறையும்
ஏன சித்தர்கள் கூறுகிறார்கள். திருப்பி திருப்பி பயன்படுத்தும் போது முதல்
கடைசியும் கடைசி முதலும் மாறி மாறி வரும். அவ்வாறு அமையும் போது ஜப மணிகள் முழு
சக்தியும் குறையாமல் இருக்கும் என குருமார்கள் கண்டுணர்ந்து கூறியுள்ளார்கள். எனவே
எல்லாவற்றிற்கும் இவாறு பயன்படுத்துங்கள். ஜபமாலையை தரையில் வைக்க கூடாது. ஜப
மாலையை பயன்படுத்தும் பொது இன்னொருவர் பார்க்க கூடாது. எனவே காவி துண்டை கையில்
மூடி என்னலாம். யாரும் இல்லாத தனி அறையாக இருந்தால் மறைவு தேவை இல்லை. பொதுவாக
வெளியிடங்கள் சென்று ஜபம் செய்யும் போது இந்த மறைவு தேவைப்படும். கரமாலையை
பயன்படுத்தினாலும் வெளி நபர்கள் காண கூடாது. கரமாலை என்பது கைவிரல் அங்குலஸ்திகளை
எண்ணிக்கைக்கு பயபடுத்துவர் அதற்கு கர மாலை என்று பெயர். கைவிரல்களையும்
ஜெபத்திற்கு என்னும் பொது காவி துண்டை கொண்டு மறைத்தே எண்ணிகையை தொடர வேண்டும்.
எல்லாவற்றிலும் ஒரு ரகசியத்தை கடைபிடித்தால் தான் ஈடுபாடும், அக்கறையும் ஒரு
நிலைப்பாடும் அதிகரிக்கும் இதுவும் தேவ ரகசியமே.
இவ்வாறாக அன்னை மகா சரஸ்வதியின் மந்திரம் கூற வேண்டும். கீழே உள்ள மந்திரத்தை
தான் முறை ஜப மாலை உதவி உடன் முதன் முதலாக கூற வேண்டும். எந்த மந்திரமும்
மனதிற்குள்ளேயே கூறவும். இனி மந்திரங்களை காண்க.
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி சித்திற்பவதுமே ஸதா
(108முறை கூற வேண்டியது)
|
சக்தி உச்சிஷ்ட கணேச பூஜை
வயதை கடந்தவர்கள் மற்றும் ஏற்கனவே ஆன்மிக பூஜை
கண்டவர்கள், தொழில் முறை ஜோதிடர்கள். ஆலய பனி செய்பர்கள் இந்த பயிற்சியை முதலிலேயே
கடைபிடிக்கலாம் பலன் உண்டும் தினத்திலேயே ஜன வசியம் வாகு பலம் உண்டாகும், அதே
நேரத்தில் மனப் பக்குவம் இல்லாதவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து துவங்குவது தான்
நல்லது, ஒரு முழு பூஜை என்பது ஆரம்பத்தில் இருந்து செய்வது தான் சிறந்தது,
முயற்சித்து ஆரம்பத்தில் இருந்து துவங்குங்கள். முழு வெற்றி கிட்டும், அவசர
குணத்திற்கு இங்கு இடம் தராதீர்கள் பூஜை செய்வது இறைவனுக்காக அவர் திருப்தி பட
வேண்டும் எனவே அவரை மதித்து முழுமையாய் கடைபிடியுங்கள், நீங்கள் விரும்பியதை
கொடுக்க போவது அவர் தான் எனவே அவரை மனபூர்வமாக பற்றிகொல்லுங்கள், ஏன் இதை
கூறுகிறேன் என்றால் பலரும் பயிற்சியின் நாட்களை என்னுகிரர்களே தவிர பக்தியின்
தீவிரத்தை அதிகரிப்பதில்லை., இது பெரும் பிழையாகும், நாட்கள் நகர நகர பலருக்கும்
ஆர்வம் குறைகிறது இது தவறு. நாட்கள் கடக்க கடக்க பக்தி மிகுதிபட்டுகொண்டே போக
வேண்டும். இதுவே நாம் பரிபூரண மனதோடு பூஜிக்கிறோம் என்பதின் வெளிபாடகும். ஆர்வம்
குறைய எது காரணமோ அதை கண்டு போக்க வேண்டும். மன சளிப்புக்கு இடம் கொடுக்க கூடாது.
மனம் சோம்பலை நாடினால் அதை விரட்டி விட வேண்டும். தெய்வ சோதனைகள் நிறைய உண்டு அது
இதுவாகவும் இருக்கலாம். இறைவன் சோதனையில் அவர் தோற்று நாம் வெற்றி பெறவே
விரும்புவார் இதை உணர்ந்து நாம் இறை சோதனையில் வெற்றி பெற முயற்ச்சிக்க வேண்டும்.
செய்யாது கர்மாதான் பலன் கழிக்கும். பிறகு தெய்வம் பேசவில்ல என வருத்தப்பட்டு
புண்ணியமில்லை. எனவே இந்த பயிற்சியை நாம் ஏன் செய்கிறோம், இதை கொண்டு என்ன அடைய
திட்டமிட்டிருக்கிறோம் என்பதை தினம் இறைவனிடம் பிராத்தனை கவனம் செய்தால் ஆர்வம்
குறையாது, இறைவனின் அளவறியா வலிமையை உணர்ந்து அவர் ஸ்தானத்தை உணர்ந்தால் ஆர்வம்
அதிகமாகும், நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் இறைவன் சித்தமென நினைத்தால் பக்தி
பெருகும். மூல பரம் பொருளே உலகின் வசியம், மூல பரம் பொருளே உலகின் வெற்றி, மூல
பரம் பொருளே உலகின் உயிர் கரு, மூல பரம் பொருளே உலகின் அணைத்து தெய்வங்களின் முதல்
இயக்கம் இவைகளை மட்டுமாவது பரிபூரணமாக உணர்ந்து பாருங்கள் பக்தி தன்னால் பெருகும்.
உணர்ந்த மாத்திரத்திலேயே அருளும் பொங்கும்.
நீங்கள் வெற்றி பெறுவதே இறைவனின் நோக்கம் எனவே
வெற்றிக்கு பாடுபடுங்கள் பலன் உங்களுக்கு தான் என்பதை எண்ணி பாருங்கள். இந்த உலக
சலனம் நம்மை திசை திருப்ப பார்க்கும் வெற்றி பெரும் வரை வீண் எண்ணங்களுக்கு இடம்
கொடுக்க வேண்டாம். கவனம்.