youtube

24 June 2016

மூன்று வித பஞ்சாட்சரம்

மூன்று  வித பஞ்சாட்சரம்

                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவயஎன்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து ஓம் நமசிவயஎன்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம நீரைக் குறிக்கிறது,
                                 சி நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ காற்றைக் குறிக்கிறது,
                                 ய ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நமஎன்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து ஓம் சிவய நமஎன்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து பிந்துஎனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...

                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்

             சிவ சிவ என்னச் சிவ கதி தானே

ஸ்ரீ அரவிந்த யட்சணி மஹா மந்திரம்

ஸ்ரீ அரவிந்த யட்சணி மஹா மந்திரம்

                            

கீழ் கண்ட மந்திரத்தை 1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபம் செய்ய தேவி தரிசனம் உண்டாகும்

மூல மந்திரம்
                             "ஓம் நமோ பகவதி ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஐம் ஓம் ஹ்ரீம் அரவிந்த யஷணி த்ரைலோக்ய மோகினி மம வசம் குரு குரு சுவாக "

நிவேதனம்
                        பழம், தேங்காய் ,சுண்டல்,வடை,தேன், வெற்றிலை பாக்கு, மல்லிகை மலர்

பலன்:

            திரி காலமும் சொல்லும், அஞ்சனம் ரசாயனம்  மூலிகை  பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும், துஷ்ட கிரக தோஷங்களுக்கு விபூதி கொடுத்தால் அவை நீங்கி சுகம் உண்டாகும்.

23 June 2016

போகர் பச்சோந்திவித்தை

போகர் பச்சோந்திவித்தை
ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்து, ஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி, ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து , ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்தி, ஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்து, நடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால், ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும். 
           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம், அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும், பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபி, கருமி,சண்டாளன் , இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்

குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்

. குப்பைமேனி வேர் ஆக்ருஷ்ணம்
தோற்றுமடா மேனியொன்று தனித்து நின்றால்
    சுத்தி செய்து பால் பொங்கல் இட்டுப்பின்னும்
மாற்றமுடன் கலைக்கொம்பால் கெல்லிக்கொண்டு
    மந்திரந்தான் துட்டமிருக ஆகர்ஷணி
ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகாவென்று
    சொல்லியே வாங்கிதன் வாயிற்போட
ஆற்றமுடன் மிருகங்கள் தன்னை நோக்கி
    அழைத்துடனே மிருக ஆக்ருஷ்ணமுமமே.
                                                                                            -கருவூரார்

பொருள்:
                     குப்பைமேனி செடி தனியாக முளைத்திருந்தால் அந்த இடத்தில் சுத்தம் செய்து பால்,பொங்கல் வைத்து மான் கொம்பால் கொத்தி

"துட்ட மிருக ஆகர்ஷணி ஏற்றமுயர் விசுவாமித்திர சுவாகா "     என்று மந்திரம் சொல்லி வேரை பிடுங்கி  வாயில் அதக்கிக்கொண்டு மிருகங்களை அழைக்க அவை வரும் .

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை வேர் வசியம்
மதமத்தை (பொன்னூமத்தை வேர்)

வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான்
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும்
                                                                                                      -கருவூரார்

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் 

புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை

 புலிப்பாணி சித்தர் நெருப்பு வித்தை
 மானப்பா மணத்தக்காளி சாறுகூட
 மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
  வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு
  தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல்
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால்
  இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே...
                                                                               -புலிப்பாணி சித்தர்

பொருள்:
                       மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும், கை கால்கள் சுடாது... நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்....

புலிப்பாணி வெற்றிலையில் மை

                   - புலிப்பாணி  வெற்றிலையில் மை
"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும், அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும், முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..

"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கி, அந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியது, சூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி. 

பிறையதிக சித்து

பிறையதிக சித்து
பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
 திருவான பதிநோக்கித் திலகம் போடே


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
 வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
                                                                           - அகத்தியர் 64 சித்துகள்

பொருள்:

                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ சித்த வித்யா யட்சணி தேவி மஹா மந்திரம்



ஸ்லோகம்: 

                          ஸ்ந்த்யா கால சூரியனைப் போன்றவளும் திக்குகளை பிரகாசிக்கும் ஒளி உடையவளும் சிவந்த ஆடை அணிந்தவளும் நவரத்ன கிரீடம் சூடி வரதம் எனும் முத்திரையுடன் கூடிய ஸ்ரீ சித்த வித்யா யஷணி தேவியை வணங்குகிறேன்.

மூல மந்திரம்:                               "ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் நமோ பகவதி பகவதி யஷ குல ப்ரமுகி சித்த வித்யா யஷணியை மமவசம் குருகுரு ஸ்வாஹா...."
நிவேதனம் :                              பால், பழம்,தேன், கற்கண்டு, சுண்டல், வடை இவைகளை நிவேதனமாக கொண்டு மல்லிகை மலரால் பூஜை செய்து மூல மந்திரத்தை1008 உரு வீதம் 27 நாட்கள் ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும் ...
பயன்கள் :                      பலவித தேவைகளை அடுத்த நல்லவர்கள் மூலமாக நடத்திவைக்கும். முக்காலமும் சொல்லும், மற்றும் வசியம், மோகனம் சித்தியாகும்

சக்தி சாரணை

சக்தி சாரணை

 பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று 
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான் 
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி 
மாற்றி மகா சக்தி கமல வல்லி 
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி  
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே 
                                                                           -கருவூரார் 
பொருள்:
                  சக்தி சாரணையை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது]

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி மஹா மந்திரம்

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி மஹா மந்திரம்

த்யானம்  
                  இளஞ்சுரியனை போன்று பிரகாசிப்பவளும் சந்திரனைக் கிரீடத்திலணிந்தவளும் உயர்ந்த நகில்களையுடைய வளும் பூத்த முகமுடையவளும் வர முத்திரை,பாசம்,அங்குசம்,அபய முத்திரை ஆகியவற்றை  கரங்களில் தரிப்பவளும் ஆகிய புவனேஸ்வரி தாயை த்யானம் செய்கிறேன் .




மூல மந்திரம் :
                                   "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி புவனேஸ்வரி ஸ்ரீம் ஹ்ரீம் ஹம் நம ஸ்வாகா"  

பூஜை முறைகள் :
                                   பால்சாதம் ,தேன்,கற்கண்டு,வாசனை திரவியம் ,மல்லிகை மலர் போன்றவை வைத்து 21 நாள் 1008 முறை ஜெபிக்க தேவி தரிசனம் கிடைக்கும்....

இதன் பயன் :
                           முக்காலமும் உணரலாம் வசியம்,மோகனம்,சித்தியாகும். எப்பேற்பட்ட நோய்களுக்கும் விபூதி போட குணமாகும் 

அகத்தியர் பரிபூரணம் மாக வசிய வீபூதி

  -அகத்தியர் பரிபூரணம்  மாக

வசிய வீபூதி 

கிருபையுள்ள புலத்தியனேவ  சியமென்று 
 கெணிதமுடன் சொல்லுகிறே நன்றாய் கேளு 
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று 
 சுகமாக வெந்த அஸ்த்திநீயே டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி 
 ஆதிசத்தி தன்னுடைய வேருங்கூட்டி க் 
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
 கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே 

 புலத்தியனே வசியமுறை ஒன்றை கூறுகிறேன் கேட்பாயாக. சிவனின் பூமியாகிய சுடுகாட்டிற்க்கு சென்று நன்கு வெந்த அஸ்தியை எடுத்துகொள் அத்துடன் விஷ்ணு கிரந்தியின் வேரினை கூட்டி தாய்பால் விட்டரைத்து உருண்டை செய்து வைக்க வேண்டும்..

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
 செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு 
மெய்யடா சொல்லிகிறே நீறிப் போகும் 
 வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி 
வையடா சவ்வாதுடனேபு  னுகு சேர்த்து 
 மார்க்கமுடன் அங்கெனவெ லட்ச மோதி 
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி 
 மார்கமுடன் அரசாரிடன்சென்று பாரே 

இவ்வாறு செய்த உருண்டையை நன்கு உலரவைத்து நன்கு எருவடுக்கி புடத்தை போட வேண்டும் புடம் போட்டு வெந்த நீற்றை எடுத்து சவ்வாது ,புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக "அங் " என்று ஒரு லட்சம் உரு ஓதி அரசரிடம் சென்று பார் ......

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம் 
 சிவசிவா செகமோகம் ஸ்ரீவ சியமாகும் 
அண்டர் பிரானருள் பெருகிவசிய முண்டாம் 
 அப்பனே ஓம் கிலியு றீயு மென்று 
பண்டுபோலி லட்சமுரு வெற்றிப் பின்னர் 
 பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால் 
தொண்டரென்றே சத்ருக்கள்வ ணங்கு வார்கள் 
 துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ  சிய மாமே ...
                                                                               -அகத்தியர் பரிபூரணம் 

அவ்வாறு சென்றவுடன் ராஜவசியமாகும். அதுமட்டுமல்லாது செக வசியமும் பெண் வசியமும் உண்டாகும். சிவன் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். 
முறையாக அமர்ந்து "ஓம் கிலிறீ" என்று லட்சம் உரு கொடுத்து விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள். துஷ்ட மிருகமெல்லாம் வசியமாகும் ...