குண்டலினியும் ..... சாதகனும்
குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.
குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.
நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.
யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.
குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.
இனி வரும் பதிவுகளில் குண்டலினியை எழுப்பிடும் வழி வகைகளைப் பார்ப்

<<
)
ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.