youtube

2 September 2016

கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கச் சொல்வது ஏன்?

கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கச் சொல்வது ஏன்?

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!
 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று. சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண் இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர். உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு. கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

1. வினாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

8. ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

15. ஸ்ரீநிவாசர் காயத்ரி

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

16. ஸ்ரீ கருட காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

 17. நந்தீஸ்வரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

20. ஸ்ரீ காளி காயத்ரி

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

22. காலபைரவர் காயத்ரி

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

23. சூரிய காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

24. சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

25. அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

26. புத காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

27. குரு காயத்ரி

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

28. சுக்ர காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

29. சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

30. ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

31. கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

33. வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ

34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

35. குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயா
பெண்களுக்கு பலம் தரும் சதகுப்பை உணவுகள்

கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, சதகுப்பை கீரை.

இதை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு.

இந்த கீரையின் விதைதான், சதகுப்பை.

இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.

சதகுப்பை வயிற்று உப்புசத்தை நீக்கும்.

ஜீரணத்தை மேம்படுத்தும்.

உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

சிறுநீரை அதிகரிக்கும்.

மாதவிடாய் கால சிக்கலை நீக்கும்.

உடலுக்கு வெப்பத்தை அளித்து, உற்சாகம் கொடுக்கும்.

பசியை அதிகரிக்கும்.

குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக் கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும்.

பிரச வித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும்.

ஜீரணமும் சீராகும்.

சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது.

இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம்.

இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.

மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும்.

இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும்.

அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும்.

கருப்பையும் பலமடையும்.

சதகுப்பை, ஆளிவிதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை அரைத்து மூட்டு வீக்கங்களுக்கு பற்றிடலாம்.

சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள்.

நலம் பெறலாம்.

பிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

வலி நீங்கும்.

ஜீரணம் மேம்படும்.

சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.

அரை தேக்கரண்டி சதகுப்பை பொடியுடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.

கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும்.

பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும்.

இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும்.

இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும்.

இதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும்.

ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.

மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது

31 August 2016

நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.

அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.

இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.

அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.

அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.

அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.

பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.

நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.

மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.

அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.

இந்தஉலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே.
"ஒவ்வொருவருக்கும்ஒருஎதிரியை
கடவுள் படைத்துள்ளார்"
சிவ தீட்சை பெறும் மாபாரதக் கண்ணன்:

ஸ்ரீகிருஷ்ணரின் திருத்துணைவியர் அனைவருக்கும் புத்திரப் பேறு கிட்டுகிறது (ஜாம்பவதி நீங்கலாக). இதைக் காரணமாகக் கொண்டு உபமன்யு முனிவரைச் சிறப்பிக்கத் திருவுள்ளம் பற்றுகிறார் கண்ணன். பிறை சூடும் பரமனிடம் புத்திரப் பேற்றினை வரமாகப் பெற்று வருகிறேன் என்று கூறியருளிச் செல்கிறார்.

இமய மலைச் சாரலில் ஓரிடத்தில் சிவ பூஜையை நியமத்துடன் புரிந்து வருகிறார். பணி புரியும் காவலர் வனம் முழுவதிலும் உள்ள பூக்களைக் கொய்து கண்ணனிடம் சேர்ப்பித்து வருகின்றனர். மற்றொரு புறம் அதே வனத்தில் தவம் புரிந்து வரும் உபமன்யு முனிவருக்கு பூஜிக்கப் பூக்கள் கிடைக்காது போகிறது.

தம் சிஷ்யர்களிடம் இது குறித்து வினவும் உபமன்யு முனிவர் அனைத்துப் பூக்களும் கண்ணனின் சிவ பூஜைக்கு காவலரால் பறித்துச் செல்லப் படுவதை அறிகிறார். புன்சிரிப்புடன் சிஷ்யர்களிடம் கண்ணன் பூஜித்த பூக்களைத் தம் பூஜைக்குக் கொண்டு வருமாறு பணிக்கிறார். சிஷ்யர்களும் கண்ணனிடம் சென்று இது பற்றி விண்ணப்பிக்கின்றனர்.

கண்ணன் முனிவரின் சிஷ்யர்களிடம் 'சிவ பூஜையில் ஒரு முறை பயன் படுத்திய பூக்கள் நிர்மால்யத் தன்மை பெறுகிறது. அம்மலர்களால் மீண்டும் பூஜிப்பது முறை அல்லவே?' என்று அறியாதது போல வினவுகிறார். அவர்களோ 'நாங்கள் எம் குருவின் ஆணையை ஏற்றே வந்தோம்' என்று புகல, கண்ணன் தாமே முனிவரிடம் கேட்டுக் கொள்வதகாக் கூறி அவர்களுடன் செல்கிறார்.

உபமன்யு முனிவரின் தரிசனம் பெற்றுப் பணிகிறார் ஸ்ரீகிருஷ்ணர்; தாம் முன்னர் எழுப்பிய அதே கேள்வியை இப்புவியிலுள்ளோர் நலம் பெரும் நோக்குடன் மீண்டும் முனிவரிடம் விண்ணப்பிக்கிறார். முனிவரும் கண்ணா 'சிவ தீட்சை பெறாதவர் சமர்ப்பிக்கும் மலர்களானது இறைவன் திருவடியில் சேர்வதில்லை; ஆகையால் தாம் பூஜித்தவை நிர்மால்யமாகாது' என விளக்கமளிக்கிறார்.

கண்ணனும் 'அவ்வாறெனில் தவத்தின் சிகரமென விளங்கும் தாமே எமக்கு குருவாக இருந்து சிவ தீட்சை தந்தருள வேண்டும்' என்று பணிகிறார். உபமன்யு முனிவரும் கண்ணனுக்கு முறையாக பாசுபத தீட்சை செய்வித்தருள்கிறார். பின்னர் நியமப் படி 11 மாதம் சிவபூஜையும் ஜபதபங்களும் புரியும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு பரமன் பரமேஸ்வரியுடன் திருக்காட்சியளிக்கிறார்.

பின் ஜாம்பவதியும் சாம்பன் முதலான புதல்வர்களைப் பெற்று மகிழ்ந்தார் என்பது சரிதம். இனி நிகழ்வுடன் சில நுட்பங்களையும் காண்போம். இறை அவதாரங்கள் இப்புவியின் நலனுக்காக நிகழ்பவை; அவதாரங்கள் புரிந்தருளும் ஒவ்வொரு செயலும் ஆன்மாக்களுக்கு நல் அறத்தைப் புகட்டவே என்ற புரிதலுடன் இந்நிகழ்வினை அணுகுதல் வேண்டும்.

மாபாரதக் கண்ணன் இவ்வற்புத நிகழ்வின் மூலம் சிவ தீட்சையின் அவசியத்தை (தாமே நடத்திக் காட்டி) இப்புவிக்கு உணர்த்தி அருளியுள்ளான். தீட்சை என்பது ஆன்ம பயணத்துக்கான அனுமதிச் சீட்டு. இறைவனின் திருவடிகளில் ஆன்மாக்கள் நிலைப் பெற தீட்சை மிக அவசியமாகிறது.

மகாபாரதம் (அனுசாசன பர்வம்); சிவ புராணம்; லிங்க புராணம்; சிவமகா புராணம் ஆகியவை கண்ணன் சிவதீட்சை பெற்ற அற்புத நிகழ்வினையும், தீட்சையின் அவசியத்தையும் பதிவு செய்கின்றன (சிவாய நம)

29 August 2016

புதியவீட்டில்என்னஹோமம்செய்யவேண்டும்...?

நான்மிகவும்கடினமாகஉழைத்துஒருவீடுகட்டிவருகிறேன்இன்னும்இரண்டுமாதத்தில்வீட்டுவேலைகள்நல்லபடியாகமுடிந்துவிடும்அதன்பிறகுபுதியவீட்டில்குடிபோகும்முன்புஎன்னென்னஹோமங்கள்செய்யவேண்டும்?

யாகம்மற்றும்ஹோமங்கள்செய்வதைசிலர்கேலிசெய்கிறார்கள்நெருப்பைவளர்த்துநெய்யைஊற்றிஅதில்சிலபொருட்களைமந்திரங்கள்சொல்லிஎரியவிடுவதற்குஎன்னபயன்இருந்துவிடபோகிறது. காசும்நேரமும்தான்செலவேதவிரவேறுஎந்தபயனும்இல்லைஎன்றுஅவர்கள்சொல்கிறார்கள்.

பொதுவாகநாம்பலநேரங்களில்வெளிதோற்றங்களைவைத்தேஅனைத்துவிஷயங்களையும்உண்மைகளைதேடுகிறோம்அதுசரியானஅணுகுமுறைஅல்லஉண்மைஎன்பதுவெளித்தோற்றத்தில்மட்டும்தான்இருக்கும்என்றுசொல்லிவிடமுடியாதுபலாபழத்தின்வெளிபாகத்தைமட்டும்கணக்குபோட்டால்உள்ளேஇருக்கும்சுவையானசுழைகள்கிடைக்காமலேபோய்விடும்.

எனவேஉண்மைஎன்பதுவெளியில்மட்டுமல்லஉள்ளேயும்இருக்கிறது. அதாவதுகண்ணுக்குதெரிந்தும்தெரியாதசூட்சமவடிவிலும்உண்மைகள்உண்டுயாகத்தில்உள்ளஉண்மைகள்அப்படிப்பட்டதேநெருப்புமட்டும்தான்கீழிருந்துமேல்நோக்கிசெல்லும்இயற்க்கைசக்தியாகும். அதில்பூமியில்உள்ளஅதிர்வுகளைஎடுத்துகொண்டுபிரபஞ்சத்தில்சேர்க்கும்சக்திஇருக்கிறதுஎன்றுவேதங்கள்சொல்கின்றனஅயனவெளியில்பலவிதஅதிர்வுகள்சதாசஞ்சாரம்செய்தவண்ணம்உள்ளது. மூலிகைபொருட்களைஆகுதிகலாககொண்டுசொல்லப்படும்மந்திரஅதிர்வுகளைஅக்னிபிரபஞ்சஅதிர்வுகளோடுசேர்க்கின்றனஇதன்மூலம்யாகம்மற்றும்ஹோமம்செய்யும்கர்த்தாபலநன்மையைஅடைகிறான்அந்தநன்மைஎன்பதுகண்ணுக்குதெரிந்தும்இருக்கலாம்தெரியாமலும்இருக்கலாம்.

வீடுஎன்பதுமனிதர்கள்வாழும்ஒருகூடாரம்மட்டுமல்லவாஸ்துபடிகட்டப்படும்இல்லங்கள்அயனவெளியில்உள்ளநல்லஅதிர்வுகளைதனக்குள்ஈர்க்கும்சக்திவாய்ந்தகேந்திரங்களாகவும்இருக்கிறது. எனவேஇல்லங்களில்நல்லஎண்ணங்களும்சந்தோசங்களும்நிறையவேண்டுமென்றால்அவற்றில்தொடர்ந்துசத்கர்மாக்கள்செய்யப்படவேண்டும். வைதீகமுறைப்படிசத்கர்மாக்கள்என்றால்அவற்றில்ஹோமங்களும்அடங்கும்

மனிதன்வாழ்வதற்குபுதிதாகஒருவீட்டைஉருவாக்கிஅதில்குடியேறும்போதுபிரணவவடிவானஅதிர்வுகள்நிறையும்படிமுதலில்செய்யவேண்டும். அதற்குஉகந்தஹோமம்கணபதிஹோமமாகும்இல்லத்தலைவனுடையநேரங்காலங்களைசரிபடுத்திஅவனைவீட்டில்செளக்கியமாகவாழசெய்வதுநவக்ரகஹோமமாகும். அதேபோலகட்டுமானத்தில்உள்ளகுறைபாடுகளையும்தோஷங்களையும்நீக்கவல்லதுவாஸ்துஹோமமாகும். ஒருபுதியவீட்டில்குடிபோகும்முன்னால்இத்தகையஹோமங்களைசெய்வதுவைதீகநெறிப்படிமிகவும்சிறந்ததாகும்.

28 August 2016

*அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம்*

*அல்லிப்பூ* செல்வம்  பெருகும்      
*பூவரசம்பூ*  உடல் நலம் பெருகும்
*வாடமல்லி* மரணபயம் நீங்கும்
*மல்லிகை*  குடும்ப அமைதி
*செம்பருத்தி*  ஆன்ம பலம்
*காசாம்பூ*  நன்மைகள்
*அரளிப்பூ*   கடன்கள் நீங்கும்
*அலரிப்பூ*  இன்பமான வாழ்க்கை
*செம்பருத்தி* ஆன்ம பலம்
*ஆவாரம் பூ* நினைவாற்றல்  பெருகும்
*கொடிரோஜா*  குடும்ப ஒற்றுமை
*ரோஜா பூ* நினைத்தது  நடக்கும்
*மருக்கொழுந்து* குலதெய்வம் அருள்
*சம்பங்கி* இடமாற்றம்  கிடைக்கும்
*செம்பருத்தி பூ* நோயற்ற வாழ்வு
*நந்தியாவட்டை* குழந்தை குறை நீங்கும்
*சங்குப்பூ (வெள்ளை)* சிவப்பூஜைக்கு  சிறந்தது
*சங்குப்பூ (நீலம்)*  விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
*மனோரஞ்சிதம்* குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
*தாமரைப்பூ* செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
*நாகலிங்கப்பூ*  லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
*முல்லை பூ*   தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும்
*பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ)* முன்னேற்றம் பெருகும்
*தங்க அரளி (மஞ்சள் பூ)* குருவின் அருள் , பெண்களுக்கு  மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் ,   கிரக பீடை நீங்கும்
*பவள மல்லி*  இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர் களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகள்  காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.

கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.

*பூசைக்கு சிறப்பான பூக்கள்*
திருமாலுக்கு            --  பவளமல்லி , மரிக்கொழுந்து  துளசி
சிவன்                           --  வில்வம்  செவ்வரளி
முருகன்                     --  முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு            -- வெள்ளை நிறப்பூக்கள்
ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.

*ஆகாதபூக்கள்*
விநாயகருக்கு         -- துளசி  
சிவனுக்கு                  -- தாழம்பூ
அம்பாளுக்கு            -- அருகம்புல்
பெருமாளிற்கு        -- அருகம்புல்
பைரவர்                      -- நந்தியாவட்டை ,
சூரியனுக்கு              -- வில்வம்
ஆகியவை பூஜைக்கு ஆகாதவை
சிவ சிவ அடியார்களுக்கு சிவ
காலை வணக்கம்
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.
 
சூரியன் ஸ்லோகம்:

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் சந்திரன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால்,  சந்திர கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.

சந்திரன் ஸ்லோகம்:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி.
இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார்.

சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள்.

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப

நன்மைகளையும், தீமைகளையும் தருவார்.

ஒரு ராசியில்  21/2   ஆண்டுகள் இருப்பார்.

அதாவது சனீஸ்வர பகவான்

ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு

இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

இவர், சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்.

தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.

சிறந்த சிவ பக்தன்.

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்

தந்தை - சூரிய பகவான்

தாயார் - உஷா, சாயாதேவி

மனைவிகள் - நீலாதேவி,சேஸ்டா தேவி

புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி

நண்பர்கள் - புதன், சுக்கிரன்

சின்னம் - தராசு

மொழி - அந்நிய பாஷை

ஆசனம் - வில்வ வடிவம்

உணவு- எள்ளு சாதம்

வர்ணம்-    கருப்பு.

தானியம் --- எள்

வாகனம்---  காகம்.

அதி தேவதை -யமன்

சமித்து-வன்னி

திசை - மேற்கு

ரத்தினம்- நீலமணி

சுவை - கசப்பு

பிணி - வாதம் ,நரம்பு நோய்,

கிழமை- சனிக்கிழமை

பூஜிக்கும் தேவதை- துர்க்கா, சாஸ்தா

உலோகம்- இரும்பு

வீடு- மகரம், கும்பம்

உச்ச வீடு- துலாம்

நீ ச்ச வீடு- மேஷம்

நட்பு வீடுகள்- ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு , மீனம்

சம வீடு - விருச்சிகம்

பகை வீடுகள் - கடகம், சிம்மம்

பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்

நண்பர்கள்- புதன், சுக்கிரன் , ராகு, கேது

தலம்- திருநள்ளாறு

பரிகாரத் தலங்கள்- திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு

சனி பகவான் 12 ராசியை சுற்றிவர

 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்

கோட்சார ரீதியாக ,ஒவ்வொரு கிரகங்களின்

நிலையை ஆராயும் போது

ஒரு கிரகத்தில் அதிக நாட்கள் தங்குவது சனிபகவனே.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும்.

சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு

ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார்.

சோதனைக் காலங்களில்
ஈஸ்வரன்