youtube

10 May 2016

எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.அவைகள் என்ன என்று பார்க்கலாமா ?

காகத்திற்கு உணவு அளித்தல் .இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம்.

பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல்.

பசுவிற்கு அகத்தி கீரை,பச்சரிசி ,வெல்லம் கொடுத்தல்.


எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட  வேண்டும்.எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம்.

மீன்களுக்கு பொரி அளித்தல்.மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார்.
மலை மேல் உள்ள கோவில்களில் குரங்குகள் நிறைய இருக்கும் .அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் சிறந்த பலனை கொடுக்கும்.

ஊனமுற்றவர்களுக்கு உணவு ,உடை அளிக்க வேண்டும்.

அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் .

அன்ன தானம் ,நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது  போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் ,தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும் ,நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர் .

உங்களுக்கு எவையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்க .நம்ம கையாலே பிறருக்கு உணவு அளிப்பது மிக சிறந்தது .அதுவும் பறவைகள்,எறும்புகள் போன்றவை வாய் பேச முடியாத ஜீவராசிகள் .அவர்களுக்கு செய்யும் சேவையே நாம் கடவுளுக்கு செய்யும் சேவையாகும் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..


வளமான வாழ்வை தரும் தீபம்

நம் இந்து சமயத்தில் ,எல்லோர் வீட்டு பூஜையறைகளிலும் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது .தீபம் எப்படி இருளை விரட்டி ஒளியை நமக்கு தருகிறதோ அதுபோலத்தான் நம் மனதிலுள்ள தீய எண்ணங்களை விரட்டி நல்ல எண்ணங்களை தருகிறது .

நாம் ஒளியின்  மூலமாக இறைவனை காண்கிறோம் .அந்த ஒளிச்சுடர் தீபம் ஏற்றுவதால் கிடைக்கிறது.ஊருக்கு முன் விளக்கு ஏற்றின் உயர்ந்த குடியாகும் என்பது  பழமொழி .அதாவது விடியற்காலை சூரியன் உதயமாகும் முன் பெண்கள் எழுந்து குளித்து ,வாசல் தெளித்து கோலம் போட்டு ,பிரம்ம  முர்த்த வேளையான 4.30 முதல் 6 மணி வரை நம் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்.அந்த அதிகாலையில் தீபம் ஏற்றுவதால்  நாம் செய்யும் அனைத்து காரியங்களும்   நன்றாக அமையும் .ஆதலால் தான் குழந்தைகளை அந்த நேரத்தில் எழுந்து, படிக்க  சொல்கிறோம் .

இந்த அவசர உலகத்தில் அதுக்கு எல்லாம் நேரம் எங்கே  இருக்கிறது? என இதைப் படிக்கும் தோழிகளுக்கு எண்ணங்கள்  ஓடிக் கொண்டிருக்கும் .அதற்கும் ஒரு வழி  இருக்கிறது .மாலையில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,கை ,கால்களை கழுவி விட்டு ,பூஜையறைக்கு சென்று  உங்கள் கையால் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டால் நமக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் .நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியை தேடி தரும்.

மாலை சூரியன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6 வரை அல்லது கருங்கல் நேரமான 6.30 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது .4.30 --6.00 மணி பிரதோஷ காலமாகும்.சிவனுக்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளிக்க செய்யும் யாகத்திற்கு இணையான பலனை தரக்கூடியது. பூஜையறையில்  இரு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

தீபம் ஏற்றும் எண்ணெய்

தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம் .

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன்?

நெய் தீபம்  ஏற்றினால் சுகமும் ,சந்தோஷம் வரும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் , எல்லா பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணெய்  தீபம் ஏற்றினால் ,புகழ் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் ,நெய்,இலுப்பை எண்ணெய் இவை முன்றும் கலந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் .

நெய் ,விளக்கெண்ணெய் ,வேப்பெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,தேங்காயெண்ணெய் போன்ற 5 வகை எண்ணெயில் தீபம் ஏற்றி,அம்மனை வழிபட்டால் தேவியின்  அருள் கிடைக்கும்.

கடலை எண்ணெய் ,பாமாயில் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தக் கூடாது .

எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்?

கிழக்கு திசை   ----- துன்பம்  அகலும்,கிரகங்களின்  சோதனைகள் விலகும் .

மேற்கு திசை  -------கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும்.

வடக்கு திசை-----செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு திசை -----ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும்.

தீபங்களை ஏற்ற எந்த திரியை பண்படுத்த வேண்டும்?

தாமரை தண்டு திரி -----முன் வினை கர்ம பாவங்கள் நீங்கும்.

பஞ்சு திரி -----தெய்வ குற்றம் ,பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,வம்சாவளிப் பிரச்சினை போகும் .

நல்ல பலனை பஞ்சுத்திரி கொடுக்கும் .

சிவப்பு வர்ண துணி  திரி ----திருமண தடை நீங்கும்.குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் வர்ண துணி திரி ------வெற்றி கிடைக்கும் .தேவியின் பூரண அருள் கிடைக்கும் .தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும் ,செய்வினை நீங்கவும் இந்த திரியால் விளக்கு ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி ----குடும்ப அமைதி ,குழந்தை பேறு உண்டாகும் .முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும் .

வெள்ளெருக்கு திரி ----துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும்.

தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால்,நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .அதுவும் முக்கியமாக அதிகாலையில் அம்பாளை வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் குறைவில்லாத செல்வத்தையும்,அருளையும் கொடுப்பாள் .

நம் குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக திகழ்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

இங்கனம்:- JSK ஆன்மீகம் அறிவுரை இந்துமதம்