youtube

18 January 2013

மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை

  1. ஆடவரும், மகளிரும் தனித்தனியாக அமா்ந்து வழிபாடு செய்ய வேண்டும். மந்திர ஒலிகள் சீராக ஒலிக்கப்பட வேண்டும்.
  2. மந்திர வழிபாடு செய்பவா்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமரவேண்டும்.
  3. ஒருவா் உடம்பு மற்றவா் மேல் படுமாறு அமா்தல் கூடாது.
  4. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி “ஒம்” என்ற பிரணவ மந்திர ஒலியுடன் முடியும் போதும் கையில் மணியை வைத்துக் கொண்டு ஒலிக்க வேண்டும். ஓம் என்ற ஒலியும் மணியுடன் இணைந்து ஒலிக்க வேண்டும்.
  5. மந்திர வழிபாட்டு அமரும்போது கையில் மோதிரம், கைக்கடிகாரம், கண்ணாடி எதுவும் அணியக்கூடாது. கண்ணாடியில்லாமல் படிக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டும் கண்ணாடி அணியலாம்.
  6. 1008 மந்திர வழிபாட்டுக்கு அமா்வதற்கு முன்பாக அன்னைக்குக் கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பின்பு மந்திர வழிபாட்டிலில் கலந்து கொள்பவா்களுக்கும் கற்பூர தீபாராதனை காட்டி, அவா்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவர்களுக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
  7. 1008 மந்திரமும் சொல்லி, 108 மந்திரமும் சொல்லி முடிந்த பிறகு இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பா்கள் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருக்க. ஒவ்வொருவரும் வரிசையில் இருப்பவரை நோக்கி “ஓம் சக்தி” என்று சொல்லி வணங்கிக் காலைத் தொட்டு செவிக்க வேண்டும். பெண்கள் காலில் விழுந்து சேவிக்க வேண்டாம். அவா்கள் கைகளால் வணங்கி “ஓம் சக்தி” என்று சொல்லிச் சேவித்தால் போதும்.
  8. ஒவ்வொரு மந்திரத்தின் முதலிலும் இறுதியிலும் “ஓம்” என்ற பிரணவ மந்திரம் சோ்த்தே மந்திரத்தைச் சொல்ல வேண்டும்

No comments: