ஓம் துர்கா வாராஹீ
மஹா வாராஹீ வழிபாடு- தமிழ்
ஸ்ரீலலிதா பராபட்டாரிகாவுக்கு சேனா நாயிகைகள் நால்வர். அவர்கள் ஸம்பத்கரீ. அச்வா ரூடா, மந்த்ரிண்யம்பா தண்டநாதா என்பவராவார்.
1. ஸம்பத்கரீ -ஸ்ரீ லலிதா தேவியின் அங்குசம் என்ற ஆயுதத்தினின்றும் ஆவிர்பவித்தவள். யானைப்படைக்குத் தலைவி.
2. அச்வாரூடா-பாசத்தினின்றும் உதித்தவள். குதிரைப்படைக்கு லலிதா தேவியினால் தலைவியாக நியமிக்கப்பட்டவள்.
3. மந்த்ரிண்யம்பா-ஸ்ரீ லலிதா தேவியின் அமைச்சர், தலைவி லலிதைக்கு உறுதுணையாய் நிற்பவள்.
4. தண்டநாதா-சக்திஸேனை அனைத்துக்கும் தலைவி, சேனாநாயிகா. இவளைத்தான் வாராஹீ எனக்கூறுகின்றோம். இவளுடைய ரதத்திற்கு கிரிசக்கரம் என்று பெயர். கிரிசக்ர ரதாரூட தண்டனாதா புரஸ்க்ரூதா என லலிதா ஸஹஸ்ர நாமம் கூறும். இவள் வாஹனமாகிய சிம்மத்திற்கு வஜ்ரகோஷம் என்று பெயர். இது மூன்று யோசனை தூரம் உயரம் கொண்டது.
இந்த தண்டநாதாவுக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேச்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹ போத்ரினீ, சிவா, வார்த்தாளீ, மஹாஸேனா, ஆஞ்ஞா சக்ரேச்வரீ, அரிக்ன என்பனவாகும். இவளது இந்த நாமாக்களையும் சொல்லுபவர் சங்கடம், துக்கம் இவற்றை என்றும் அனுபவிக்கமாட்டார்.
இவள் பண்டாசுரனுடைய வலது கையினின்றும் தோன்றிய விசுக்ரன் என்பவனைக்கொன்று உலகிற்கு உதவினாள். இவள் லலிதாதேவியின் வாஸபூமியான ஸ்ரீநகரத்தில் 16வது பிராகரத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இந்த 16வது பிரகாரம் மரகதமயமானது. மஹா பத்மாடவீதியில் இருந்து கொண்டு இவள் லலிதா பரமேஸ்வரிக்கு அருந்தொண்டாற்றுவாள்.
இவள் நூறு ஸ்தம்பங்கள் கொண்ட மண்டபத்தில் பொன் தாமரையில் வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போல் மேனியள், செந்நிற ஆடை அணிந்து சர்வ ஆபரணங்களையும் அணிந்து அழகுடன் தோன்றுவாள்.
இவள் 8 கைகளிலும் சங்கம், சக்கரம், அபயம், வரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் என்ற ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பாள்-சந்திரகலையை சூட்டிக்கொண்டு வராஹ முகத்துடன் காட்சியளிப்பாள்.
இவளுக்கு உன்மத்த பைரவீ, ஸ்வப்னேசீ, திரஸ்க்ருதி, கிரிபதா, தேவீ என்பவர்கள் பரிவாரங்களாவர்.
இந்த வாராஹீ தன்னை உபாசிப்பவர்களுக்கு சத்ருபாதையைப் போக்குவாள். இவள் மாத்ருகா கணத்தில் ஒருவளாய் கணக்கிடப்பட்டிருக்கின்றாள். மாதாக்கள் ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, இந்த்ராணி, சாமுண்டா என்பவர்கள். மஹா லக்ஷ்மியையும் சேர்த்து எட்டு எனக் கணக்கிடுவர். இவர்கள் அனைவரும் <உலகம் மங்களம் பெற பாடுபடுவர்.
இந்த வாராஹீ மாதா தாருகாஸுரன் சண்டையில் காளிக்கு உதவியாகவும், சும்பாஸுரன் சண்டையில் சண்டிகாதேவிக்கு உதவியாகவும், பண்டாஸுர வதத்தில் லலிதா தேவிக்கு உதவியாகவும் இருந்து பல தொண்டுகள் புரிந்திருக்கின்றாள். இவள் ப்ரேதா-ஸனத்தில் அமர்ந்திருப்பாள். யஞ்ஞவராஹமூர்த்தியின் உருவத்துடன் இருப்பாள். இவளுடைய த்யானங்கள் மந்த்ர சாஸ்தரங்களில் பலவாறாகக் கூறப்பெற்றிருக்கின்றன.
ஸ்ரீ வாராஹி 108 போற்றி
ஓம் வாராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி ஓம் ஜெகஜோதி போற்றி ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி ஓம் பனை நீக்கியே போற்றி ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி ஓம் தேஜஸ் வினி போற்றி ஓம் காம நாசீனி போற்றி ஓம் யகா தேவி போற்றி ஓம் மோட்ச தேவி போற்றி ஓம் நானழிப்பாய் போற்றி ஓம் ஞானவாரினி போற்றி ஓம் தேனானாய் போற்றி ஓம் திகட்டா திருப்பாய் போற்றி ஓம் தேவ கானமே போற்றி ஓம் கோலாகலமே போற்றி ஓம் குதிரை வாகனீ போற்றி ஓம் பன்றி முகத்தாய் போற்றி ஓம் ஆதி வாராஹி போற்றி ஓம் அனாத இரட்சகி போற்றி ஓம் ஆதாரமாவாய் போற்றி ஓம் அகாரழித்தாய் போற்றி ஓம் தேவிக்குதவினாய் போற்றி ஓம் தேவர்க்கும் தேவி போற்றி ஓம் ஜுவாலாமுகி போற்றி ஓம் மாணிக்கவீணோ போற்றி ஓம் மரகதமணியே போற்றி ஓம் மாதங்கி போற்றி ஓம் சியாமளி போற்றி ஓம் வாக்வாராஹி போற்றி ஓம் ஞானக்கேணீ போற்றி ஓம் புஷ்ப பாணீ போற்றி ஓம் பஞ்சமியே போற்றி ஓம் தண்டினியே போற்றி ஓம் சிவாயளி போற்றி ஓம் சிவந்தரூபி போற்றி ஓம் மதனோற்சவமே போற்றி ஓம் ஆத்ம வித்யே போற்றி ஓம் சமயேஸ்ரபி போற்றி ஓம் சங்கீதவாணி போற்றி ஓம் குவளை நிறமே போற்றி ஓம் உலக்கை தரித்தாய் போற்றி ஓம் சர்வ ஜனனீ போற்றி ஓம் மிளாட்பு போற்றி ஓம் காமாட்சி போற்றி ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி ஓம் முக்கால ஞானி போற்றி ஓம் சர்வ குணாதி போற்றி ஓம் ஆத்ம வயமே போற்றி ஓம் ஆனந்தானந்தமே போற்றி ஓம் நேயமே போற்றி ஓம் வேத ஞானமே போற்றி ஓம் அகந்தையழிப்பாய் போற்றி ஓம் அறிவளிப்பாய் போற்றி ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி ஓம் கலையுள்ளமே போற்றி ஓம் ஆன்ம ஞானமே போற்றி ஓம் சாட்சியே போற்றி ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி ஓம் மரணமழிப்பாய் போற்றி ஓம் ஹிருதய வாகீனி போற்றி ஓம் ஹிமாசல தேவி போற்றி ஓம் நாத நாமக்கிரியே போற்றி ஓம் உருகும் கோடியே போற்றி ஓம் உலுக்கும் மோகினி போற்றி ஓம் உயிரின் உயிரே போற்றி ஓம் உறவினூற்றே போற்றி ஓம் உலகமானாய் போற்றி ஓம் வித்யாதேவி போற்றி ஓம் சித்த வாகினீ போற்றி ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி ஓம் இலயமாவாய் போற்றி ஓம் கல்யாணி போற்றி ஓம் பரஞ்சோதி போற்றி ஓம் பரப்பிரஹ்மி போற்றி ஓம் பிரகாச ஜோதி போற்றி ஓம் யுவன காந்தீ போற்றி ஓம் மௌன தவமே போற்றி ஓம் மேதினி நடத்துவாய் போற்றி ஓம் நவரத்ன மாளிகா போற்றி ஓம் துக்க நாசினீ போற்றி ஓம் குண்டலினீ போற்றி ஓம் குவலய மேனி போற்றி ஓம் வீணைஒலி யே போற்றி ஓம் வெற்றி முகமே போற்றி ஓம் சூதினையழிப்பாய் போற்றி ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி ஓம் அண்ட பேரண்டமே போற்றி ஓம் சகல மறிவாய் போற்றி ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி ஓம் வாராஹி பதமே போற்றி |
No comments:
Post a Comment