youtube

28 January 2014

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால்

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறது. கௌரவம் கெடும்படி ஏதாவது செய்ய வைக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு. கண் பார்வையில் குறை தரும். தேவை இல்லாமல் விரையம் செய்கிறது. கோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வந்து, மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள். லக்கினத்திற்கு 3-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். அதிக அலைச்சலை கொடுக்கும். பயணம் அதிகம் உண்டு. தற்பெருமை பேச வைக்கும். மகாதைரியம் தரும். லக்கினத்திற்கு 4-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவை. வீடு-மனை நிதானமாக அமையும். கல்வி தடை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று சம்மந்தப்பட்ட தொல்லை கொடுக்கும். தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும். லக்கினத்திற்கு 5-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு நிதானமாக காலங்கடந்து கொடுக்கும். மனஉலைச்சல் உண்டாகும். நித்திரையை கெடுக்கும். தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும். லக்கினத்திற்கு 6-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும். தேவை இல்லா கடன் பெருக செய்யும். ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும். எதிரிகளை உருவாக்கும். கவனமும், நிதானமும் தேவை. லக்கினத்திற்கு 7-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும். கல்யாணம், காலங்கடந்து நடக்கும். நண்பர்களால் விரையங்கள் உண்டு. அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. கூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும். லக்கினத்திற்கு 8-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடி கொடுக்கும். ஆனால் ஆயுளுக்கு பயமில்லை. வழக்கு வீண் விவாதங்கள் உண்டாக்கும். எச்சரிக்கை தேவை. மறைமுக தொல்லைகள் வரும். லக்கினத்திற்கு 9-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை உருவாக்கும். சொத்து வாங்கும் விஷயத்தில் வில்லங்கம் உண்டாக்கும். மேல் படிப்பு சற்று தடைசெய்யும். தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும். லக்கினத்திற்கு 10-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவை இல்லா பிரச்சினை உண்டாக்கும். முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும். வாக்கு பலிதம் கொடுக்கும். லக்கினத்திற்கு 11-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்ய வைக்கும். உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிக்க வைக்கும். சதா சிந்தனையை தூண்டும். தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும். அயல்நாடு விஷயத்தால் செலவு வைக்கும். லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும். செலவுகள், விஷம் போல ஏறும். பக்தி அதிகரிக்க செய்யும். நன்மைகள் செய்தாலும், தீமைகள் வந்தடையும். மனச்சஞ்சலம் உண்டாகும்.

No comments: