வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்?
நி லம் ... நீர்.... நெருப்பு... காற்று .... ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டது வாஸ்து சாஸ்திரம். பஞ்ச பூதங்களை எந்த விகிதாச்சாரத்தில் பிரித்து அமைக்கிறோமோ அது சரியாக இருந்தால் நம் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அதில் குற்றம் குறைகள் இருந்தால் அது நம் வாழ்க்கையை பாதிக்கிறது.வீடு கட்டி என்னிடம் வாஸ்து பற்றிக் கேட்க வருகிறார்கள். அப்போது வீட்டில் உள்ள குறைகளை மட்டும் நிவர்த்தி செய்ய முடியும். முழுக்க, முழுக்க நூறு சதவீதம் நன்றாக அமைக்க முடியாது. இடத்தை வாங்கி விட்டு என்னிடம் பிளான் போட்டுத்தர சொல்கிறார்கள். அதுவே இரண்டாம் பட்சமானதுதான். இடத்தை தேர்வு செய்யும் போது வாஸ்து நிபுணரிடம் கலந்து ஆலோசித்து வாங்கினால் தான் முழுமையான 'ஸ்தானபலம்' உள்ள இடத்தை உருவாக்கி சௌபாக்கியங்களை பெற முடியும்.
மனை தேர்வு என்பது மிக முக்கியமான விஷயம் ஒரு மனைக்கு தெரு... ரோடு முக்கியம் சாலை மனைக்கு ஒரு பக்கம் ... இரண்டு பக்கம்...... மூன்று பக்கம் சில மனைக்கு நான்கு பக்கமே ரோடுகள் இருக்கும். கிழக்கு தெரு உள்ள மனை கிழக்கு மனை என்றும், இது போல மேற்கு மனை, வடக்கு மனை, தெற்கு மனை என்றும் குறி;க்கப்படுகிறது. வடக்கும், கிழக்கும் ரோடு உள்ளதை இரண்டு பக்கமும் ரோடு இருப்பதை 'ஈசானிய கார்னர் பிளான்' என்கிறோம்.
தெற்கும், கிழக்கும் சந்திக்கும் இடத்தை 'ஆக்கினேய கார்னர் பிளாக்' என்கிறோம். வடக்கும், மேற்கும் சந்திக்கும் இடத்தை ;'வாய விய கார்னர் பிளாக்' என்கிறோம். திசை காட்டும் கருவி வைத்துப்பார்த்தால் பல வீடுகள் கிழக்கு என்பார்கள். ஆனால் அவர்கள் ரோடு உள்ள திசை தென் கிழக்கு அல்லது வடகிழக்காக இருக்கும்.
காம்பஸில் தென் கிழக்கு அவர்கள் வாசல் பகுதி காட்டினால் அது 'ஆக்கினேய பிளாக்' என்கிறோம். அது ஈசானியத்தைக் காட்டினால் 'ஈசானிய பிளாக்' என்கிறோம். நைருதியை காட்டினால் நைருதி பிளாக். வாயவியத்தைக் காட்டினால் வாயவிய பிளாக் என்கிறோம். மேற்கு மூலையில் இரண்டு ரோடுகள் வந்தால் 'மேற்கு கார்னர் பிளாக்' என்கிறோம். கிழக்குப்பக்கம் ;இரண்டு ரோடு வந்து சேர்ந்தால் 'கிழக்கு கார்னர் பிளாக்' என்கிறோம். இது போல 'தெற்கு கார்னர் பிளாக்' ... வடக்கு கார்னர் பிளாக் உள்ளது
No comments:
Post a Comment