youtube

16 March 2016

ரஜ்ஜீ(ரச்சு) நட்சத்திரங்கள் என்றால் என்ன?

ரஜ்ஜீ(ரச்சு) நட்சத்திரங்கள் என்றால் என்ன?

ரஜ்ஜீ(ரச்சு) நட்சத்திரங்கள் என்றால் என்ன?

திருமணப் பொருத்தத்தில் தென்னாட்டில் குறிப்பாக தமிழக சோதிடர்களால் ரஜ்ஜீ பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது;ரஜ்ஜீ தட்டினால் பொருத்தம் இல்லை என்பது சொல்லப் படுகிறது.

இதன் உண்மை நிலை என்ன?

(அசுவினி-மகம்-மூலம் ) எனும் கேதுவின் நடசத்திரங்களுக்கும் (ரேவதி-ஆயில்யம்-கேட்டை) எனும் புதனின் நட்சத்திரங்களுக்கும் பாத ரஜ்ஜீ தட்டுகிறது. இவர்களை சேர்த்து வைத்தால் பிரிந்து விடுவர் என்று சோதிடர்கள் சொல்கிறார்கள்.

(பரணி-பூரம்-பூராடம்)எனும் சுக்ரனின் நட்சத்திரங்களுக்கும் (பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி) எனும் சனியின் நட்சத்திரங்களுக்கும் தொடை(ஊரு) ரஜ்ஜீ தட்டுகிறது.இவர்களை சேர்த்து வைத்தால் தேக ஆரோக்கியம் இழப்பர் என சோதிடர்கள் சொல்வர்.

(கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்)எனும் சூரியன் நட்சத்திரங்களுக்கும் (புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி) எனும் குருவின் நட்சத்திரங்களுக்கும் நாபி(வயிறு) ரஜ்ஜீ தட்டுகிறது இவர்களை சேர்த்து வைக்க நோய்களுக்கு ஆளாவார்கள் என சோதிடர் சொல்வர்.

(ரோகிணி-அஸ்தம்-திருவோணம்)எனும் சந்திரனின் நட்சத்திரங்களுக்கும் (திருவாதிரை-சுவாதி-சதயம்)
எனும் ராகுவின் நட்சத்திரங்களுக்கும் கண்ட(கழுத்து)
ரஜ்ஜீ தட்டுகிறது.இவர்களை சேர்த்து வைத்தால் விபத்து ஆபத்து ஏற்படும் என சோதிடர் சொல்வர்.

(மிருகசிரீடம்-சித்திரை- அவிட்டம்) எனும் செவ்வாயின் நட்சத்திரங்களுக்கு ஒன்றுக்கொன்று சிரோ(தலை) ரஜ்ஜீ தட்டுகிறது.இவர்களை சேர்த்து வைத்தால் உயிருக்கு கேடு என சோதிடர்கள் சொல்வர்.

முதல் நிலையில் சோதிட ரீதியான காரணங்களை பார்ப்போம்.

1.கேதுவின் நட்சத்திரங்களும் புதனின் நட்சத்திரங்களும் கண்டாந்தங்களில் அமைந்து (மீன நீர் மேஷ நெருப்பு )(கடக நீர்-சிம்ம-நெருப்பு)(விருச்சிக நீர்-தனுசு நெருப்பு) இருப்பதால் இவர்களை சேர்க்க கூடாது

2. சுக்கிரனின் நட்சத்திரங்களும் சனியின் நட்சத்திரங்களும்  தாரா பலத்தில் வதை தாரையில் அமைந்து விடுவதால் இருவரையும் சேர்க்க கூடாது.

3.சூரியனின் நட்சத்திரங்களும் குருவின் நட்சத்திரங்களும் தாரா பலத்தில் பிரத்யக்கு(குழப்பம்-தடை)தாரையில் அமைந்து விடுவதால் இருவரையும் சேர்க்க கூடாது

4.சந்திரனின் நட்சத்திரங்களும் ராகுவின் நட்சத்திரங்களும் தாராபலத்தில் விபத்து தாரையில் அமைந்து விடுவதால் இவர்களை சேர்க்க கூடாது.

5.செவ்வாயின் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ராசி சஷ்டாஷ்டகமாக வருவதால் இவர்களை சேர்க்க கூடாது

No comments: