நமச்சிவாய வாழ்க
" தான் படைத்த ஒன்று, தன்னையே பதம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எழுந்தருள்வான் சிவபெருமான்."
அயனும் மாலும் ஈசன் படைப்புகள். ஈசனையே பதம் பார்க்க நினைத்த போது, சோதி பிழம்பாக எழுந்தருளினார் சிவபெருமான். அவரே இன்று அண்ணாமலையாக திகழ்கிறார்.
யானை என்ற ஒரு சீவன் ஈசனால் படைக்கப்பட்டது. அதை முனிவர்கள் ஈசனை அழிக்க ஏவினர். யானையும் ஈசனை விழுங்கியது. வயிற்றை கிழித்து வெளியேறி வீரட்டானேசுவரராக எழுந்தருளினார்.
அதன் பிறகு, காலம் சற்று மாறி, தன் அடியவருக்கு துயர் வரும்போதெல்லாம் எழுந்தருளினார் சிவபெருமான்.
மார்க்கண்டேயரின் அன்புக்கினங்கி, எமனயே எட்டி உதைக்க எழுந்தருளினார். வந்தி என்னும் பிட்டு விற்று பிழைப்பு நடத்தும் ஒரு பாட்டிக்காக எழுந்தருளினார். நாயன்மார்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல வகையான இடர்களை களைய எழுந்தருளினார்.
தற்போது நாம் வாழ்ந்து வரும் காலம் எத்தகையது என்றால்........... ஈசன் என்பவர் "சுடுகாட்டு சுவாமி" என்றும், ஈசனை வழிபட்டால் குடும்பமே ஆடிப்போகிவிடும் என்றும், சிவனை வணங்கவும், சிவச்சின்னங்கள் அணியவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கும் தலைமுறையில் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால்....... இது சிவம் உய்யக்கொள்ளும் காலம். சிவனை வணங்க கூடாது. சிவச்சின்னங்கள் அணிய கூடாது என்று நிபந்தனை வகுக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சிவனை விரும்புகிறவன், ஈசனாக எழுந்தருளிகிறான். சிவனே இறைவன் என்ற தெளிவோடு வளர்கிறான். சிவச்சின்னங்கள் அணிய, சிவனை தவிர எவனுக்கும் விதிகள் வகுக்க தகுதி இல்லை என்ற தெளிவுடன், சிவபெருமானே முழு முதற் கடவுள் என்ற தெளிவுடன் வாழ்கிறான்.
அவ்வாறு வாழ்பவனே சிவனை நினைக்கிறான். சிவனை நினைப்பவனே, சிவனை உரைக்கிறான். சிவனை உரைப்பவனே, சிவனடி சேர சீவித்திருக்கிறான்.
சிவனடி சேர சீவித்திருப்பவன்தான் இன்புர வாழ்வான். இன்புர வாழ்வாரே இறைவனடி சேர்வார்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய....

No comments:
Post a Comment