ஓம் குருவே துணை
கர்மவினைகளைத் தீர்க்க உதவும் வெறும் ஒருநாள் பைரவ மந்திரஜபம்
தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படம் ஒன்றை லேமினேசன் செய்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.புகைப்படத்தை கிழக்கு நோக்கி வைக்கவும்;புகைப்படத்தின் அருகில் வடக்கு நோக்கி எரியுமாறு ஒரு நெய்தீபம் ஏற்றவும்;பத்தி ஏற்றிவைக்கவும்.படையலாக டயமண்டு கல்கண்டு,மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை படையலாக வைக்கவும்;காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பின்வரும் பைரவர் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.ஒரு மணி நேரத்துக்கு 10 முதல் 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.இப்படி ஒரே ஒரு நாள் சொன்னாலே,நமது கர்மவினைகள் அனைத்தும் நசிந்துபோகும்.இந்த ஒரே ஒரு நாளில் வேறு எவரிடமும் பேசுவதைத் தவிர்க்கவும்.போனை,தொலைபேசியை,டிவியை,கணினியை மற்றும் அனைத்து தகவல் தொடர்புசாதனங்களையும் அணைத்துவிடவும்.முடிந்தவரையிலும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்;இயலாதவர்கள் பசும்பாலும்,வாழைப்பழமும் சாப்பிடலாம்.அல்லது ஒருவேளை உணவு அருந்தலாம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
இந்த பைரவ மந்திரஜபம் நிறைவடைந்த சில நாட்களுக்குள் உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த சிரமங்கள் குறைந்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள்.ஒருவேளை அப்படி உணரமுடியாவிடில் மேலும் ஓரிரு நாட்களுக்கு இதேபோல் பைரவ மந்திர ஜபம் செய்யலாம்.இதன் மூலமாக,இப்பிறவியில் அனைத்து கர்மவினைகளையும் தீர்த்துவிட்டு,நிம்மதியும்,செல்வ வளமும் பெற முடியும்.போட்டோ வைக்காமல்,அருகில் இருக்கும் பைரவ ஆலயம் அல்லது சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் இவ்வாறு வழிபாடு செய்யலாம்.

No comments:
Post a Comment