youtube

5 November 2012

சுக்கிரனுக்கான பொதுப் பலன்கள்:

சுக்கிரனுக்கான பொதுப் பலன்கள்:

1. ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் (அதாவது சனி, ராகு, மற்றும்
கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்தால் போதும்
ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

2. அதே போல செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அல்லது பார்வை
இல்லாமல் இருந்தாலும் ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி
நிறைந்ததாக இருக்கும்.

3. In short, if Venus (Sukkiran) is free from any affliction by association
or aspect, the native of the horoscope will be blessed with a happy
and comfortable married life!

4. சுக்கிரன், செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வையின்றியிருந்தால்
அதுவும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் ஜாதகனுக்கு
இளம் வயதில் அல்லது உரிய வயதில் திருமணமாகிவிடும்.
பெண்களுக்கும் அதுவேதான் விதி

5. அதேபோல ஜாதகத்தில் சுக்கிரன் எவ்வளவு வலுவாக இருந்தாலும்
இரண்டாம் வீடு நன்றாக அமையவில்லை என்றால் - அதாவது குடும்ப
ஸ்தானம் நன்றாக அமையவில்லை என்றால் பல தடைகளைத் தாண்டித்தான்
அந்த ஜாதகன் அல்லது ஜாதகி திருமணம் செய்துகொள்ள நேரிடும்

6. எனக்குத் தெரிந்து ஒரு பெரிய அரசியல்வாதிக்கு இரண்டாம் வீட்டில்
மாந்தி. அவருக்கு இன்றுவரை திருமணமாகவில்லை. குடும்ப வாழ்க்கை
அமையவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது அல்லது கெடுத்துவிட்டது.

வேண்டுமென்றே பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக்
கொள்ளுங்கள். அவருடைய ஜாதகம் என்னுடைய முன் பதிவில் உள்ளது.
கண்டுபிடித்தால், உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பின்னூட்டத்தில்
வெளிப்படுத்த வேண்டாம். மீறி வெளிப்படுத்தினால் அதை Delete செய்து
விடுவேன் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறேன். முடிந்தவரை உயிரோடு
இருக்கும் தலைவர்களைப் பற்றி எழுதுவதை நான் விரும்புவதில்லை.
அவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே வந்து தொல்லை கொடுப்பார்கள்

7. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் வீட்டுக்காரன் (அதாவது அந்த இடத்தின்
அதிபதி) 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன், கேந்திர அல்லது
திரிகோண இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகனுக்கு, சொத்து,
சுகம், மகிழ்ச்சி எல்லாம் தேடி வரும்.

8. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் அதிபதி, அந்த இடத்தில் இருந்து
அதாவது அவனுடைய வீட்டில் இருந்து ஆறாம் இடம் அல்லது
எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கும் அவனுடைய
மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் உண்டு

9. சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால். அது அவருக்கு மிகவும்
உகந்த இடம். ஜாதகனுக்கு, மகிழ்ச்சியையும், சுகங்களையும் அள்ளிக்
கொடுப்பார் அல்லது வாரி வழங்குவார். ஜாதகனுக்கு அழகிய
பெண்களுடன் நட்புக் கிடைக்கும். சிலருக்கு அழகிய பெண்களின்
சேர்க்கை கிடைக்கும் (நட்பிற்கும் சேர்க்கைக்கும் வித்தியாசம்
தெரியுமல்லவா?) ஆசைகள் பெருமளவில் நிறைவேறும்.
வீடு, வாகனம், பணியாள் என்று எல்லாம் கிடைக்கும்.
அதோடு சிலருக்குப் பெண் சம்பந்தப்பட்ட நோய்களும்
கிடைக்கும்:-)))))

10. துலாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், அரசாங்க ஆதரவு,
கீர்த்தி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சிலர் காம வேட்கை
மிகுந்தவர்களாக இருப்பார்கள் (சுக்கிரனின் சொந்த வீடல்லவா?
'அது' இல்லாமல் இருக்குமா?)

11. மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அவன் அங்கே உச்சம்.
பணம் வரும். சிலருக்கு வந்த பணம் களியாட்டங்களில்
கரைந்து போகவும் செய்யும். அல்லது வேறு விதத்தில் நஷ்ட
மடைவார்கள்.

12. கன்னியில் சுக்கிரன் நீசம். இங்கே சுக்கிரன் இருந்தால் ஜாதகனின்
வாழ்க்கையில் ஏமாற்றங்களை அதிக அள்வில் சந்திக்க நேரிடும்
குடும்பத்தில் துயரம் உண்டாகும். சிலர் ஒழுக்கமில்லாத வாழ்க்கை
வாழ்வார்கள்.

இதே அமைப்பை சுப கிரகங்கள் பார்த்தால் மேற்கூறிய தீய பலன்கள்
இல்லாமல் போய்விடும். அல்லது வெகுவாகக் குறைந்துவிடும்.

No comments: