youtube

23 November 2012

ராகுவும் பரிகாரமும்


நவகிரகங்களில் சர்ப கிரகங்களாகவும், சாயா கிரகங்களாகவும் வர்ணிக்கப்படுபவை ராராகுவும் பரிகாரமும் கு, கேதுவாகும். ராகு, கேதுவுக்கு சொந்த வீடு இல்லை. எந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ அந்த வீடு அவர்களுக்கு பூரணப் பலனைக் கொடுக்கிறது. ராகு கேது நின்ற வீட்டதிபதிகள், ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானத்திலோ அமையப் பெற்று பலமாக இருந்தால் எல்லா வகையிலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும்.

ராகுவின் உச்சவீடு விருச்சிமாகவும், ரிஷபம் நீச வீடாகவும் கூறப்படுகிறது. ராகுவிற்கு புதன், குரு சம கிரகங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய் பகை கிரகங்கள். சனியும், சுக்கிரனும் நண்பர்கள். ராகுவின் மூல திரிகோண ராசி கடகமாகும். ராகு ஒரு ராசியை விட்டு கடக்க ஒன்றரை வருடம் ஆகிறது. ஒரு நாளைக்கு 3 காலை 11 விகலை சஞ்சாரம் ஆகும். சரியாக ஒரு பாதம் கடந்து செல்ல 2 மாதம் ஆகிறது. எப்போதும் பின்னோக்கியே ராசி சக்கரத்தில் சஞ்சரிப்பார்.

அஷ்டவர்க பரல்கள் என்ற கணக்கில் ராகு, கேதுவுக்கு இடமில்லை. ராகு கேது ஒன்றுக்கொன்று நேருக்கு நேராய் 180 டிகிரியாக அப்பிரதஷணமாக நகருவதால் இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் உச்சம் பெறுவதோ நீசம் பெறுவதோ இல்லை. அதுபோல வக்ரமோ அஸ்தங்கமோ அடைவதில்லை. ராகு திசை 18 ஆண்டு நடைபெறும். ராகு, கேதுவுக்கு தனி உருவமோ, கோள  அமைப்போ இல்லை. ராகுவின் அதி தேவதை காலன், பிரத்யதி, தேவரை சர்பம், பத்ரகாளியாகும். தானியம் உளுந்து, மலர் மந்தாரை, ரத்தினம் கோமேதகம், திசை தென்மேற்கு, பாலினம் பெண், குணம் தாமசம், சமித்து அருகம்புல், நிறம் கருப்பு, உலோகம் கருங்கல் ஆகும். ராகுவின் திசை மொத்தம் 18 வருடங்களாகும். அது போல ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயமாகும்.

ராகு, கேது இவற்றில் ஒருவர் சூரியனுடன் மற்றவர் சந்திரனுடனும் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அது போல சூரியனும்,  சந்திரனும் இணைந்து இவற்றுடன் ராகுவோ, கேதுவோ இணைந்தால்  சூரிய கிரகணம் உண்டாகிறது. சனி பகவானுக்கு சொல்லப்படும் அனைத்து குணமும் ராகுவுக்கு பொருந்தும்.

ராகு தான் நின்ற ராசியிலிருந்து 7ம் வீட்டை 7ம் பார்வையாக பார்வை செய்கிறார். ராகுவுக்கு 3,12 ம் இடங்களை  பார்க்கும் வலிமை உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே ராகுவிற்கு 3,7,12 ஆகிய வீடுகளை பார்வை செய்யக்கூடிய பலம் உண்டு.

ராகுவின் காரகங்களாக தந்தை வழி உறவு, கடற்பயணம், துன்பம், கடுமையான பேச்சு, சூதாட்டம், பயணம் விதவை, திருட்டு, தோல் சம்மந்தப்பட்ட வியாதி, நாய், எதிரிக்கும் தொல்லை, அடிமை நிலை, ஏமாற்றுதல், செல்வம் சேர்த்தல், வானங்கள், பாம்பு, உடல்வலி வீக்கும், அவமானம், மதத்தின் மீது வெறுப்பு போன்றவை கருதப்படுகிறது.

ராகு ஜென்ம லக்னத்தில் அமையப்பெற்றால் அழகோ கவர்ச்சியோ இருக்காது. குணம் கொடூரமானதாக இருக்கும்.  லக்கினாதிபதியுடன் சேர்க்கை பெற்றால் உடல் பலம் குன்றியே இருக்கும்.

லக்னாதிபதி ராகு, கேதுவின் நட்சத்திரங்களான சதயம், திருவாதிரை, சுவாதி,  அஸ்வினி, மகம், மூலம் போன்றவற்றால் இருந்தாலும், சாரம் பெற்றிருந்தாலும் குழந்தை கொடிசுற்றி பிறக்கும். லக்னத்திற்கு 7 ல் சனி, செவ்வாய், சூரியன் இவர்களுடன் ராகு (அ) கேது இணைந்து காணப்பட்டால் எத்தனை தாரங்கள் அமைந்தாலும் இழக்கவே நேரிடும். அது போல 5 ல் ராகு அமைந்தால் புத்திர தோஷம் உண்டாகிறது. பெண்களுக்கு 9 ல் ராகு அமைந்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.

ராகுவும் சனியும் இணைந்து ஜென்ம லக்னத்திற்கு கேந்திரத்தில் அமைந்து குரு 5 ல் அமைந்தால் பெண்களால் யோகமான பலன்கள் உண்டு. ராகு 6 ல் அமைந்திருந்தால் நல்ல ஏற்றமான வாழ்க்கை உண்டாகும். எதிரிகளை வெல்லும் வலிமை கொடுக்கும். ராகு 6ம் அதிபதியோடு சேர்ந்து நின்று செவ்வாய் பார்த்தால் நெருப்பால் கண்டம் உண்டாகும்.

1,5,9 அதிபதிகளுடன் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றால், ஏற்றமான வாழ்விற்கு  எல்லையே இருக்காது.  லக்னத்திற்கு 6 ல் ராகு அமையப் பெற்று, ராகுவுக்கு குரு 1,4,7,10 ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் வலிமையும், அரசியலில் முன்னேற்றமும் உண்டாகும்.

ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம் ஆகிய ஏதாவது ஒரு ராசியில் அமைந்து 1,4,7,10 கிரகங்கள் அமைந்திருந்தால்  அரசருக்கு சமமான ராஜயோகம் அமையும்.

ராகுவால் உண்டாகக்கூடிய யோகங்கள், அஷ்ட லஷ்மி யோகம், கண்டாள யோகம்,

அஷ்டலஷ்மி யோகம்,

ஜென்ம லக்னத்திற்கு 6 ல் ராகு அமையப் பெற்று, குரு ராகுவுக்கு கேந்திரத்தில் இருந்தால் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். இது அபூர்வமான அமைப்பாகும்.

சண்டாள யோகம்,

குரு ராகு சேர்க்கை பெற்றால் சண்டாள யோகம் உண்டாகிறது. எதிர்பாராத வகையில்  எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். இது அபூர்வமான அமைப்பாகும்.

மற்ற எல்லா கிரகங்களையும் விட பலம் பொருந்திய ராகுவிற்கு மற்ற கிரகங்களை போல ஒரைப் பலன் கிடையாது. ஆனால் தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலம் நடைபெறும். ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது என்றாலும், ராகு காலம் எல்லோருக்கும் கெடுதல் செய்வதில்லை. ராகுவின் நட்சத்திரமாகிய திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் 1,3,5,9,10,11 ஆகிய இடங்களில் ராகு அமையப் பெற்றவர்களுக்கும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் ராகு அமையப் பெற்றவர்களுககும், விருச்சிக ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் கெடுதல் செய்வதில்லை.

ராகு ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் உண்டாகும். இந்த ராகு காலத்தை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு பாடல் உண்டு. திருவிழா சந்தையில் வெய்யிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயமா?

திருவிழாவில் தி என்பது திங்கட்கிழமையை குறிக்கும்.
 அதுபோல திருவிழா திங்கள் ஏழரை 9 சந்தையில் சனி 9 பத்தரை


வெய்யிலில்  வெள்ளி  பத்தரை 12

புரண்டு  புதன் 12 ஒன்றரை

விளையாட வியாழன் ஒன்றரை 3

செல்வது  செவ்வாய்  3 நான்கரை

ஞாயமா  ஞாயிறு  நாலரை 6

ராகுவிற்குரிய பரிகார ஸ்தலங்கள்,

திருநாகேஸ்வரம்,

கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இந்த ஸ்தலம் உள்ளது. ஸ்ரீநாகநாதசாமி என அழைக்கப்படும் இவ்வூர் சிவனின் திருக்கோவிலில் ராகு வழிபாடு  செய்து தன் பாவங்களை போக்கிக் கொண்டதாக கூறப்படும். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

ராகுவை வழிபடும் முறைகள்,

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது.

சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும்.

சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது,

சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, அடுப்பில் உபயோகப்படுத்தும் கரி, நாணயங்கள் போன்றவற்றை தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது.
கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது,

பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நல்லது.

கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது.

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை 40 நாட்களில் 18000 தடவை கூறி வருவது.

கோமேதக கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது.

 எதிரிகளை  வெல்லவும், நோய் தீரவும், அரசாங்க உதவிகள் பெறவும். ராகு பூஜை  செய்வது நல்லது.

ராகுவின் நன்மையான காரகங்கள், அயல் மொழியில் புலமை, தைரியம், ஆராய்ச்சி, சமூக சேவை, புகைப்படக் கலை, மந்திர மாயங்களில் ஆர்வம் போன்றவை.

ராகுவின் துயகாரகங்கள், மனதில் இறு, மின்சார அதிர்ச்சி, எதிலும் ஆர்வம் இல்லாத நிலை, தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள், சமூகத்தில் தாழ்ந்து இருத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அயல் நாட்டில் இருக்கும் போது தொல்லை ஏற்படுதல், தீய வழிகளில் பணத்தை இழத்தல், உடல் நல பாதிப்பு, திருடரலயம், வழக்குப் பிரச்சினைகள், தீய ஆவிகளால் பிடிக்கப்படுதல் போன்றவை.

No comments: