youtube

30 January 2013

உடல் இளைக்க வேண்டுமா? இஞ்சி சாறு சாப்பிடுங்க!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்

No comments: