3′காப்பர்பிரமிடு:
3′தாமிரப்பிரமிடை வீட்டில் பூஜைஅறையில் வைத்துக்கொள்ளலாம். வாஸ்துகுறைகள் இருந்தால் ஈசானியமூலையில் தரைதளத்தில் வைக்கவேண்டும்.
கடைகள்,வியாபாரஸ்தலங்களில் நம்முடைய டேபிளின்மேல் பிரமிடை வைக்கவேண்டும்.
கண்ணாடி
டம்ளரில் நல்ல தண்ணீரை நிரப்பி அதன் வாய்ப்பகுதியில் பிரமிடை வைத்து இரவு
முழுவதும் மூட வேண்டும். காலையில் அந்த தண்ணீர் மஹாத் தீர்த்தமாகவும்
மருத்துவகுணம் கொண்டதாகவும் மாறிவிடும்.(தண்ணீர் வைத்து பிரமிடை பயன்படுத்தும்போது மூன்று நாளுக்கு ஒருமுறை பிரமிடை நன்கு கழுவவேண்டும்.)
தானியங்கள், உணவுப்பொருட்கள் மீது பிரமிடுவை வைத்து பயன்படுத்தலாம். இதனால் அவை சக்தியையும் நல்ல ருசியையும் பெறுகின்றன.
தியானம், தவம் செய்யும்போது பிரமிடை தலையில்
வைத்துக்கொள்ளலாம். இதனால் மனஅமைதி, தவநிலை விரைவில் கிடைக்கும். ஞாபகசக்தி
அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
நமக்கு ஏதாவது காரியத்தடைகள் இருந்தால் அதை
வெள்ளைத் தாளில் எழுதி பிரமிடு உள்ளே வைத்து தினமும் பிராத்தனை செய்து
வரவேண்டும். இதனால் கோரிக்கைக்கு ஆற்றல் பெருகி எண்ண அலைகள் பிரபஞ்சம்
முழுவதும் பரவி விரைவில் நிறைவேறிவிடும்.
மரக்கட்டிலில் படுப்பவர்கள் கட்டிலுக்கு அடியில் பிரமிடைவைத்துப் படுக்க வேண்டும். இதனால் சூரியநாடி நன்றாக இயங்கும்.
6′தாமிரப்பிரமிடு:
மேலே கூறிய அனைத்து உபயோகங்களுக்கும் இந்த
பிரமிடைப் பயன்படுத்தலாம். மேலும் உடலில் வலிஉள்ள எல்லா இடங்களிலும்
இப்பிரமிடை வைத்து சிகிச்சை செய்யலாம்.
தலைவலி, ஞாபகசக்தியை அதிகரிக்க, தியானம்
தவம்செய்ய, டென்ஷனைப் போக்க வடக்குப் பார்த்து உட்காhந்து கொண்டு தலையில்
6′ பிரமிடை வைத்துக் கொள்ளலாம். அற்புதமான பலன்கிடைக்கும்.
வாஸ்து குறைகள் உள்ள வீட்டில் பூமியில்
முறைப்படி தொட்டி அமைத்து வாஸ்து பூஜை செய்து, கன்னிமூலை, ஈசானியமூலை,
பிரம்மஸ்தானம் பகுதிகளில் பிரமிடைவைத்து மூடிவிடவேண்டும்.
மேலும் பல்வேறு உபயோகங்களுக்கு 6′ தாமிரப் பிரமிடு பயன்படும். எங்களிடம் ஆலோசனை பெற்றும் பயன்படுத்தலாம்.
1′ அடி காப்பர் பிரமிடு:
இந்த பிரமிடை சிறிய மண்டபம் போல் தூண்களின்
மீது அமைத்து அதனடியில் அமர்ந்து தியானம், நோய்களுக்கு சிகிச்சை செய்யலாம்.
காய்கறி, பழங்கள், தானியங்கள் போன்றவற்றை இந்த பிரமிடுக்குள் வைக்கலாம்.
வீட்டில் உள்ள மிகப்பெரிய ஹால், தொழிற்சாலைகளில் உள்ள பெரிய அறைகளில் வாஸ்து குறை இருந்தால் 1 அடி பிரமிடை பூமிக்கடியில் வாஸ்து பூஜை செய்து மூடிவிடவேண்டும்.
நம் எண்ணஅலைகளை தொலைவில் உள்ளவர்களுக்கு அனுப்பி நம் வசப்படுத்தும் டெலிபதிசக்தியை அதிகரிக்க இந்த பிரமிடு பயன்படும்.
நவக்கிரக சிப்பிரமிடு:
இந்தசிப்பிரமிடை சட்டைப்பை, லக்கேஜ், பர்ஷ்
போன்றவற்றில் வைத்துக் கொள்ளலாம். பிரயாணம் செய்யும்போது, முக்கியாமான
காரியங்களுக்குச் செல்லும்போதும் சட்டைப்பையில் சிப்பிரமிடை வைத்துக்
கொள்ளலாம். இதனால் நமக்கு டென்ஷன் நீங்கி, மனஅமைதி கிடைப்பதோடு, பிரமிடு
சக்தியும் கிடைக்கும். தடைகள் விலகி நல்லவிதமாக முடிவுகள் உண்டாகும்.
தூக்கம் வராதவர்கள் தலையணைக்கடியில் சிப்பிரமிடை வைத்துப் படுத்தால் நல்ல தூக்கம்வரும்.
வியாபார ஸ்தலங்களில், கல்லாப்பெட்டி, பீரோ போன்றவற்றில் சிப்பிரமிடு ஒன்றை வைத்து விட்டால் மிகவும் நல்லது.
வாஸ்து குறைகளுக்கு பூமிக்கு உள்ளே 91′ சிப்பிரமிடுவை பதித்துவிட்டால் அதிகமான சக்தி கிடைக்கும். எதிர்மறைச்சக்திகள் முற்றிலும் நீங்கிவிடும்.
91 விஷ்பிரமிடு:
இது மூன்று அடுக்கு கொண்டது. 91
பிரமிடுகளைக் கொண்டது. வீட்டில் வாஸ்துகுறைகள், எதிர்மறை சக்திகளின்
தாக்கம் அதிகம் இருந்தால் இந்தப்பிரமிடை வடகிழக்கு மூலையில்
வைத்துவிடவேண்டும். அதிகமான சக்திகள் உருவாகும். பஞ்சபூதசக்திகள் பெருகி
வாஸ்துபலம் மேம்படும். வரவேற்பறையில் டேபிளின்மேல் வைக்க வேண்டும்.
6′அடி உயரபிரமிடுகள்: (life size models)
வீட்டில் இடவசதி உடையவர்கள் 5′,6′ அடி உயரத்தில் தாமிரத் தகடுகள் அல்லது பைபர்கிளாஸில் பிரமிடு செய்து கொள்ளலாம். இவற்றை வீட்டுக்குவெளியே, (sitout) வீட்டின்உள்ளே, மொட்டைமாடி எங்குவேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
பலன்கள்:- இந்த பிரமிடு உள்ளேயே நோயாளிகள் படுத்து சிகிச்சை செய்யலாம். நோய்கள் விரைந்து குணமாகும். நோய்எதிர்ப்புசக்தி அதிகமாகும். உள்ளேயே உட்கார்ந்து தியானம் செய்யலாம். தேவையான அளவு தண்ணீரை உள்ளே வைத்துப் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment