தொடங்கும் நாள்
முகூர்த்த நாள்
அமாவசை, பௌர்ணமி, அல்லது வளர் பிறை
வெள்ளிக்கிழமை இதில் எதாவது ஒரு முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து அதி காலையில்
குளித்து ஆடையில் சிறிது மஞ்சள் வைத்து அணிந்து கொள்ளவும். அடுத்து
தெய்வ மாலை சுத்தம்
கழுத்தில் அணிய வேண்டிய ருத்ராட்ச மலையை பாலில்
சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை
சுத்தபடுத்தி இதற்கண் மந்திரம் ௯ முறை கீழ் உள்ளவாறு கூறவும். ருத்ராட்சமாலையை
கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்.
உ
ஓம் ஐயும் கிலியும் சவும் சரியும்
ஹரிஓம் நமசிவாய ஓம் சிவநேதிரையா
ருத்ராட்சாய நம:
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தன
மதிப்பவரிடம் கொடுத்து அணிந்து கொள்ளவும். அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம்
வங்கிக் கொள்ளவும்.
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல்
கழட்டக் கூடாது. சுய கட்டுபாடுகளுக்கு அடங்கி நடப்பதாக கருதி பூணுல் அணிவார்கள்.
அதைவிட பல மடங்கு கட்டுபாடுள்ளது ருத்ராட்ச மாலை எனவே இந்த மகா மாலை எல்லா
சக்திகளையும் ஒருங்கிணைக்க கூடியது. எனவே அதற்கு தனி மரியாதையை கொடுக்கவும்.
உடல் சுத்தி-ஜென்ம சுத்தி பூஜை
இதே முகூர்த்த நாளில் மேற்கண்ட முறை முடித்து
அடுத்து
ஸ்ரீ விநாயகர் ஆலயம் சென்று இரு புது அகலில்
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அங்கேயே சாதாரணமாக வெறும் தரையில் உட்கார்ந்து நிமிர்ந்து
கண்களை மூடிக் கீழ்காணும் மந்திரங்களை 108 முறை கூறவும். மூன்று தினங்கள் தொடர்ந்து
விடியற்காலை வேலை மேற்கண்டவாறு செய்யவும். உதட்டை மூடிக் கொண்டு வெளியில் சத்தம்
வராமல் நக்கு மட்டும் மந்திரங்களை கூற வேண்டும். அடி வயிற்றில் மந்திரம் கூருவத
நினைத்து கொள்ளவும். அப்போது வயிறு உள்ளிளுப்பதாக தோன்றும். இந்த பயிற்சி உடலில்
உள்ள மூலாதார சக்கரம் சுத்தப்படுத்தவும். விழிப்படையவும் செய்யவும் முதல்
பயிற்சியாகும். அடி சக்தியை உண்டாக்கும் ஆரம்பத்தில் இது அத்தியாவசியமான
பயிற்சியாகும். இனி இதற்க்கான மந்திரங்களை காண்க
ஓம் ஹ்றாம் ஹ்ஹீம் ஹ்றோம்
கங் கணபதயே நன்மை;
(முறை கூறவும்)
ஒவ்வொரு தடவி மந்திரம் சொல்லும் போடும் ஒரே
மூச்சில் முழு மந்திரமும் கூற வேண்டும், விட்டு விட்டு கூறக்கூடாது. இதை மூன்று
தினங்கள் செய்தல் போடும், பத்மாசனம் இட்டு சொல்ல முடியுமானால் சொல்லலாம் நல்லதே .
எந்த மந்திரம் சொன்னாலும் நிமிர்ந்து உட்கார்ந்து சொல்ல வேண்டும், கூனி குறுகி
உட்கார்ந்து சொல்லக் கூடாது.
இன்று மாலை நட்சத்திர பூஜை செய்யவும்
மேற்கண்ட பயிற்சி செய்யும் மூன்று நாட்களிலும்
மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும். இது மிக
அவசியமான பூஜையாகும்.
ஆலயம் செல்லும் போது மேல் ஆடை அணியாமல் தன உள்ளே
செல்ல வேண்டும், ஆலயம் விட்டு வெளியே வரும் முன் ஆகாயத்தை பார்த்து வழிபட்டு
பின்பு வெளி வரவும்.
தேக பயிற்சி, மூச்சு பயிற்சி
(பிராணாயமம்)
முன்பு கடைபிடித்து எல்லாம் முதற்கட்ட மரியாதையை
பூஜையாகும். அவைகள் பூர்த்தியானது. இனி இதன் பின்பு உடற் பூஜையுடன் உங்கள் அன்றாட
பூஜையில் அடுத்தடுத்து என சியா வேண்டும் என்பதை கடைபிடியுங்கள்.
தேகம் சுருசுர்ப்படைந்து ரத்தம் உடல் முழுக்க
சீராக பாய்ந்து உடலில் உள்ள சக்கரங்கள் இயங்க கற்று இரு நாசி வழியாக சமமாக ஓடவும்,
கீழ்க்காணும் பயிற்சியை அன்றாடம் கடைபிடிக்கவும். உடல் பக்குவபட்டால் மனம்
பக்குவபடும் எனவே தேக ஆரோக்கியம் மிக முக்கியம். தேகத்தில் இயங்க கூடியது சக்கரம்.
சக்கரம் இயங்கினால் மனம் நினைத்ததில் வெற்றி அடையும் மந்திரமும் சித்தி அடையும்.
எனவே கடைபிடிக்கவும்.
தினமும் அலாரம் வைத்தாவது அதிகாலை நான்கு
மணிக்கெலாம் சுறுசுறுப்பான மனதோடு எழுந்திருக்கவும். புரண்டு புரண்டு படுப்பது
இன்னும் ஐந்து நிமிடம் களைத்து எழுந்திருக்கலாம் என நினைப்பது சோம்பேறித்தனமான
செயலாகும். இந்த குணம் தன ஆன்மீகத்திற்கு முதல் விரோதி எனவே இக்குணத்தை விடுத்தது
நம் இலட்சியத்தை அடைய தூக்கம் ஒன்றும் முக்கியமில்லை எடுத் காரியத்தை வெற்றியுடன்
கடைபிடிப்பதே நம் லட்சியம் என நினைத்து எழுந்திருக்கவும். மனம் தன்னால்
சுறுசுறுப்படையும். இந்த சுறுசுறுப்பு தான் வெற்றியின் ரகசியம். ஏனெனில் காலை
சீக்கிரம் எழுந்திருக்க, சிறு வாசியோக பிரணயாம பயிற்சி செய்ய, பூஜைகளை பூரிப்போடு செய்ய,
அமர்ந்த நிலையில் பல தடவை மந்திர உரு ஏற்ற, கைகால் முதுகு தண்டு, கழுத்து வலி
தெரியாமல் இருக்க இந்த மன சுறுசுறுப்பே மிக மிக முக்கியமானதாகும். பலர் ஆன்மீக
பயிற்சி தொடங்கி பாதியிலேயே விட்டுவிட சோம்பலே பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர்
வெற்றி பெற மன உறுதியும், சுருசுருப்புமே வெற்றியின் ரகசியமாக உதவுகிறது.
சுறுசுறுப்பின் முக்கிய பங்களிப்பு என்ன என்பது இப்போது உங்களுக்கு
புரிந்திருக்கும். எனவே காலை எழுந்த்திருகும் போது மேற்கண்ட விஷயத்தை ஒரு கணம்
கவனத்தில் கொண்டு வாருங்கள். தன்னால் மனம் சுறுசுறுப்படையும். ஒரு வாரத்தில்
தன்னால் பழகி விடும். இந்த சுறுசுறுப்பு குறையாமல் பாதுகாத்து கொள்வது உங்கள்
பொறுப்பு. இதற்காக பிரத்யேக யோகாசனங்கள், உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும்
செய்யல்லாம். உடல் ஒத்துழைக்காத போது மனதிற்கு தன்னன்ம்பிகை ஊட்டி
சுறுசுறுப்படையச் செய்யலாம். மனம் வலிமையானால் உடல் தன்னால் வலிமையாகும்.
எனவே அனைவருக்கும் பொதுவான உடற்பயிற்சி அடுத்து
உள்ளவாறு செய்தால் போடும். இந்த பயிற்சி மன உடல் சுறுசுறுப்புக்காக மட்டும்
கிடையாது. சுழிமுனை ஓடவும் அந்த பயிற்சியே முக்கியமானதாகும். சுழிமுனை என்பது இரு
மூக்கு துவாரத்திலும் தங்கு தடையின்றி கற்று வர வேண்டும். அப்போது ஆன்மீக
பயிற்ச்சியில் ஈடுபட்டால் ஒரு மந்திரம் கூறினாலும் பல மந்திரம் கூறிய சக்தி
கிடைக்கும். உடல் சீதோஷ்ணம் சீராக இருக்கும் நேரத்திலும், மலை ஏற்றத்தின் போடும்,
கடல் ஆறு போன்ற இடத்தை காணுகின்ற போடும், தனி அறையில் ஒரே சிந்தனையாக இருக்கும்
போடும், ஆலயம் சுற்றும் போடும் தன்னால் சுழிமுனை ஓடும். அதனால் தான் அனுபவசாலிகள்
இது போன்ற இடத்தில் ஆன்மீக பயிற்சி செய்தல் நன்றாக இருக்கும் என கூறினார்கள். உடல்
நிலையும் கேட்டுப் போனால் மனம் வலுவிழக்கும். காற்றும் எதாவது ஒரு துவாரத்தில் தன
ஓடும். எனவே உடல் நலன் மிக முக்கியம். சிலருக்கு புதிதாக தலையில் தண்ணீர்
ஊற்றுவதாலும், அதிகாலை விழிப்பதாலும் உடல் நிலை பாதிப்பு அடைய வாய்ப்புண்டு. எனவே
அதற்கும் சேர்த்தே கீழ்க்காணும் பயிற்சியை செய்தால் கேட்ட நீரும் வெளியேறும்.
சுழிமுனையும் ஓடும், உடலும் பலப்படும். எனவே இப்பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கூட
கடைபிடிக்கலாம். அவ்வளவும் நன்மையே இனி பயிற்சியை காண்க. நமக்கு தெரியாத விஷயமா
இதெல்லாம் என உதாசீனமாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இதன் அத்தியாவசியம் எவ்வளவு
முக்கியம் என்பதை உணர்த்துவது யாம் கடமை. எனவே இந்த விஷயத்தை வலியுறுத்தவே விரிவாக
கூறினேன். குருகுல படத்தில் மிக முக்கிய பங்கு இந்த பயிற்சிக்கு உண்டு.
அனைத்தையும் கடைபிடியுங்கள்.
ஒரு தேவ ரகசியத்தை அறியுங்கள் வாசி எனும் கற்று
மற்ற செயல்களை செய்யும் போது சுழிமுனை ஓடக்கூடாது. பூஜை செய்யும் நேரத்தில்
மட்டுமே சுழிமுனை ஓட வேண்டும். மற்ற நேரத்தில் சுழிமுனை ஓடும் போது எச்செயலிலும்
ஈடுபடக்கூடாது. இதை பற்றி விரிவாகக் காணலாம். அதை பற்றி இவ்விடத்தில் விளக்கினால்
குழ்பபம் உண்டாகும்.
தும்பினால் சக்க்ரகளின் இயக்கம் மாறும் எனவே தன
உடல்நிலை சீராக இருக்க வேண்டும் எஎன கூறினார்கள். ஜலத்தால் ஜலதோஷமும், உஷ்ணத்தால்
கமதொஷமும் உண்டாகும். இவைகளை கட்டுபடுத்தவும் வேண்டியே உடல் நிலை படுகப்பு
அவசியமாகிறது.
தும்பல் வந்தால் அதை தடுக்க சிவ சிவ என்று
இடைவிடாமல் கூறவும் அல்லது வாசி வாசி
என்று வேகமாக கூறவும் தும்பலினால் பாதித்த சக்கரக்களின் இயக்கம் சீராகும்.
உடலின் உஷ்ணம் குறைய இரவில் நிம்மதியாக துங்கும்
மன சுழலை வளர்த்துக் கொள்ளவும் கிடைக்கும் நேரம் கொஞ்ச நேரமானாலும் மனம் சரியாய்
இருந்தால் நிம்மதியாக துங்கலாம். தூக்கம்
உடல் சீதோஷ்ண கட்டுபாட்டுக்கு மிக அத்தியாவசியமானது.
No comments:
Post a Comment