www.sathuragiriherbarium.comகொடுத்த கடனை வசூல் செய்ய தங்களது நக்ஷத்திரத்துக்கு உறிய பறவை எது என்பதைத் தெரிந்து கொண்டு அதன்
நேரத்தை அறிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி மிருக சீரிடம் இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தோருடைய பறவை - வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் இதில் பிறந்தாருடைய பறவை - ஆந்தை
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இதில் பிறந்தாருடைய பறவை - காகம்
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இதில் பிறந்தாருடைய பறவை - கோழி
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இதில் பிறந்தாருடைய பறவை - மயில்
பஞ்சாங்கத்தில் பஞ்சபக்ஷி சாஸ்திரம் என போட்டிருப்பார்கள் ஒருபுறம் வளர்பிறை நாட்கள் பகல் இரவு, இன்னொரு
புறம் தேய்பிறை நாட்கள் பகல் இரவு என்று அதை பார்த்து கிழமை அறிந்து வளர்பிறை/தேய்பிறை அறிந்து நம்
நக்ஷத்திரத்துக்குறிய பறவை அரசாளும் அல்லது ஊண் உண்ணும் நேரம் கண்டு அதில் முயற்சிகள் செய்ய காரியம்
நிச்சயம் வெற்றி அடையும்.
குரு ஹோரையில் கடன் வாங்கினால் அடைத்து விடலாம்.
சனி ஹோரையில் கடன் வாங்கினால் அடைப்பது சிரமம்.
இந்த ஹோரை தவிர இன்னொரு சாத்திரமும் உண்டு.
நம்முடைய 27 நக்ஷத்திரங்களையும் ஐந்து பறவைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து பறவைகளின் உண்ணும் நேரம், அரசாளும் நேரம், நடை பயிலும் நேரம், உறங்கும் நேரம் மற்றும் இறந்து
போகும் நேரம் என ஒரு நாளை இப்படி பகுத்து ஒன்றுக்கு 2-1/4 மணி நேரமாக பகலிலும் இன்னொரு 2-1/4மணி நேரம்
இரவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் பக்ஷி (பறவை) தற்போது எந்த நேரத்தில் உள்ளது என்று அறிந்து கொள்ளவும். அது அரசு செய்யும் நேரம் மிக
மிக சிறந்த நேரம் இதில் கடன் வாங்கினால் அடையும். கொடுத்த கடன் வசூலாகும்.
பலவிதமான காரியங்களுக்கும் தன்னுடைய பறவை அரசு செய்யும் நேரம், ஊண் உண்ணும் நேரத்தில் மிக ப்ரமாதமான
வெற்றி தரும். சுமாரான பலனையே தரும் உறக்கம் மற்றும் சாவு நேரத்தில் எந்த காரியத்திலும் ஈடுபட கூடாது அது
நஷ்டத்தையும் துன்பத்தையும் தரும்.www.sathuragiriherbarium.com
No comments:
Post a Comment