youtube

11 February 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா1

1குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா1

ஓம் உச்சிஷ்ட கணேசாய நம:
மரியாதையை நிமித்தமான பூஜைகளை முடித்த பின்னர் நாம் துவங்கும் முதல் பூஜை முழு முதற் கடவுள் ஸ்ரீ விநாயகரின் அவதாரங்களில் சகல வித மனிதரும், அசுரகுணம், தேவகுணம் கொண்ட மனிதரும், பொதுவாக வழிபாடு செய்தவுடன் எளிய பூஜைக்கும் பலனளிப்பவரும், அசுத்தமான சூழலையும் அனுசரித்து ஏற்று வழிநடதுபவரும். பாவ புண்ணியங்களை மீறிய நல்வெற்றியை தருபவரும் உலக மாயையில் அகப்பட்டவருக்கும் உதவி புரிபவரும், சிறு உபசரிப்ப்புகு பேரு நன்மை செய்பவரும், சிறந்த வழி நடத்துபவருமான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே நம் முதல் பூஜைக்கு உரியவர் ஆவர்.
நாம் ஏன் இவரை வணங்க வேண்டும்?
இவரை வணங்குவத்தின் முக்கியத்துவம் என்ன?
இவற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் பின்பு எல்லாம் ஜெயம். நம் உடலில் இயக்க நிலைகள் உண்டு. அணுக்கள் இயங்கினால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவும், அடையவும் திருப்திபடவும் முடியும். இதில் முதல் இருக்க மூன்றாவது இயக்கி பலன் இல்லை. மூன்றாவது இயக்க நம்மால் முடியும் அனால் அடித்தளம் போட்டால் தான் மேல்மட்டம் கட்டமுடியம். அதைப்போலத் தான் முதல் நிலை இயக்கம் சரியாக இயங்கினால் தான் அடுத்தடுத்த இயக்கமும் செயல்படுவதால் பலன் இருக்கும். இல்லையேல் எல்லாம் வீணே. இந்த முதல் நிலை இயக்கத்திற்கு உரியவர் ஸ்ரீ கணபதி ஆவார். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் கணபதி பூஜையை ஏற்கனவே செய்தோமே பிறகு மீண்டும் எதற்கு என்று கேட்கத்தோன்றும் அல்லவா இங்கு ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் மரியாதையை நிமித்தமாக முதல் கடவுளை வழிபடுவது என்பது வேறு. அவரையே விருப்பக் கடவுளாக வழிபடுவது வேறு. ஒரு சில கட்டுப்பாடுகளுக்கும் ஒருங்கினைப்பிற்க்கும், வழிமுறைகளை பெறவும் அதற்குரிய அவதார குண தெய்வங்களை உபசிப்பது எனபது வெறும் அந்த வகையில் நம் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதில் உச்சிஷ்ட கணபதி அவதாரமே முதல் நிலை.
இதற்கான காரணத்தையும் அடுத்து அறிக.
தேவைகளை கற்றுக்கொள்ள பல கட்டுபாடுகள் உண்டு. முதலில் குருமுகமாக கற்க வேண்டும் என்ற நிபந்தனையே முதன்மையான கட்டுபாடுகள் ஆகும். குருமுகம் எதற்காக என்றால்? தான் பயின்ற அனுபவங்கள், இடையூறுகள், வெற்றி பெற்ற விதம். ஒழுக்க நெறிகள், தவறுகளை ஒழுங்குபடுத்தி திருத்தி கொண்டு வருவதற்கும், கால நேரத்தில் எழுப்புவதில் இருந்து, கால நேரங்களை குறித்து கொடுப்பது முதலும், கலைகளில் முழுமை பெரும் வரையும் குருவின் அவசியம் இருந்தது. இது இக்காலத்தில் கடுகளவு தான் குருச்செயல் பொருந்தி வரும். குருவே சீடனை பார்த்து பொறாமைப்படும் நிலையே நிறைய இடத்தில் பார்க்கிறோம். அன்றைக்கு துரோணாச்சாரியார் போல யாரோ சில குருக்கள் தான் பொறமைக்காரர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அரிதிலும் அரிதாகவே குருநிலை சிறப்பு உள்ளது.
மேலும் குரு கட்டுபாடுகள் பல இருந்தாலும், ஆர்வமுடன் நாம் பயின்றாலும், நல்ல குருவே நமக்கு கிடைத்தாலும் எல்ல கட்டுபாடுகளும் கடைப்பிடித்து பின்பு தெய்வ பயிற்ச்சிக்கு வருவதற்குள் ஆர்வமே போய்விடும். மேலும் கட்டுபாடுகள் உள்ளவரனாலும் சிற்சில தவறுகள் அறியாமல் செய்ய நேர்ந்தாலும் தொடங்கிய பூஜை தடை பட்டு விடும். நிறைவு பெறாமல் போகும். மேலும் எடுத்த எடுப்பிலேயே நம் பக்தி நெறி வளர்ந்து விடாது. மனதயக்கம், நம்பிக்கை குறைவு, சரியாக செய்கிறோமோ என்ற சந்தேகம் எல்லாம் இருக்கும். நாம் தெய்வத்தை பிரார்த்தனை செய்ய தொடங்கும்போது தெய்வம் நமக்கு சிறு உதவியாவது செய்வதாக நாம் உணர்ந்தாலே நம் பக்தி அதிகரிக்க வைப்பு உள்ளது. மேலும் காம அடக்கம். மன அடக்கம், ஒழுக்க அடக்கம் இவைகளை எல்லாரும் முறையாக கடைபிடிக்கவிட்டாலும் இவர்களை போன்றவர்களை ஆதரித்து பொருத்து ஆன்மிக வழித்தடம் மாறாமல் பாதுகாப்பும், உயர்வும் கொடுத்து வழிநடத்தும் குரு ஸ்ரீ உச்சிஷ்ட கணநாதரே ஆவார்.
ஸ்ரீ சூரிய பகவனை யார் குருவாக நினைத்து வணங்குகிரர்களோ அவர்களுக்கு உச்சிஷ்ட கணபதி காபந்து செய்வார். இவரை வழிபடுவதால் மகா சரஸ்வதியையும், ஹயக்ரீவரையும் வழிபட்ட பலன் கிட்டும். யார் ஒருவர் உச்சிஷ்ட கணபதியை வழிபடுகிறார்களோ எந்த நிலையிலும் அவர்கள் சக்தி குறையாது.
உதரணமாக கூற வேண்டுமானால் குரு எத்தனை மாணவர்களுக்கு தன் அறிவை போதித்தாலும். அந்த குருவின் அறிவு குறையாது. மாறாக அறிவு அனுபவம் அதிகரிக்கும் அதை போலத்தான் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியின் நிலையும். அவரை முன் நிறுத்தி தொடங்கும் பூஜை பல தெய்வ வசிய அஷ்ட சித்துக்கள் அடுத்தடுத்து பெற அவரே வாய்ப்புகளை கொடுப்பார். மேலும் தாங்கள் செய்யும் யட்சணி பூஜை தோல்வி இன்றி முடியவும். யட்சனியால் எவ்வித இடையூறும் இன்று வாக்கு சொல்லவும் இவரை முன் நிறுத்தினால் தான் பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும் ஆன்மிகத்தில் ஈடுபடகூடியவர்களில் பெரும்பாலனோர் நாக கால சர்ப்பதோஷத்தில் அகபட்டவர்களாக தான் இருப்பார்கள். இந்த தோஷம் இருப்பதால் தான் நல்ல குருவும் கிடைப்பதில்லை. ஆன்மிக வெற்றியும் அடைய முடிவதில்லை. எனவே இவர்கள் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிப்பட்டால் தான் தோஷம் தீர்ந்து தெய்வ நிலை வெற்றி கிடைக்கும்.
இந்த கோஷ தரித்திர நிலை தொடரும் பட்சத்தில் ஒரு கால கட்டத்தில் தெய்வத்தையே இகழகூடிய நிலையும், உறவுகளின் சாப நிலையும் உண்டாகிறது. இந்த இழிவு நிலை தங்களை அண்டாமல் இருக்கவும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வணங்கியே ஆகா வேண்டும்.
உலகிற்கே போதனை குருவான ஸ்ரீமன் நாராயணன் ஒவ்வொரு முறை ஆசூரர்களை அழிக்க புறப்படும் போதும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபட்ட பின்புதான் சென்று வென்றுள்ளார். மொத்தத்தில் மும்மூர்த்திகளுக்குமே இவரை வழிபட்டுள்ளார். இந்த சிறப்பு மிக்க ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபடுவதால் தான் எல்லா வெற்றியும் தேவையும் பூர்த்தி அடையும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
எல்லா மனிதருக்கும் மூன்று மனம் உண்டு வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் இந்த ஆழ்மனமே நம் தெய்வங்கள் குடிகொண்டு செயலாக்கம் செய்கிறார்கள். இந்த ஆழ்மனம் அடுத்து இரண்டு மனதின் கட்டுப்பாட்டில் உலாவும் வரை நமக்கு தெய்வசக்தி சித்திக்காது. உள்மனம் அடங்கினால் வெளிமனம் அடங்கும். இவை இரண்டும் அடங்காததற்கு ஆசையும், காமமும் முக்கிய காரணங்களாகும். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை வழிபடும் பொது காமம் தன்னால் வெறுக்கும் ஆசை பூர்த்தியாகி அடங்கும். இவ்விரு நிலைகளும் பெறும்போது ஆழ்மனம் தன்னால் செயல்படும். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை மனப்பூர்வமாக வழிபடுங்கள். தோல்வி இல்ல, தடையில்லா, போராட்டமில்லாத தெய்வ வெற்றியை காணுங்கள்.
மேலும் நம் அறியாமை தனத்தை போக்கி ஞான தனத்தை இவர் வளர்ப்பார். இதனால் தன்னால் கலைகள் கற்று கொண்டே செல்லலாம். எந்த ஒரும் சந்தேகத்திற்கும் இவர் உடனே விடை கொடுப்பார். இதை அனுபவத்தில் தாங்களே உணரலாம். உபாசனை செய்ய வேண்டுமானால் ஸ்ரீ கணபதியே முதல்நிலை ஆவார். தெய்வத்தின் கருணையை பெற்று மற்றவருக்கு திரிகாலமும் கூற வேண்டுமானால் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே முதல் நிலை ஆவார்.
இனி இவரின் எளிமையான பூஜைகளை காண்க. ஐயோ இத்தனை பூஜைகளா என மனம் தளரக்கூடாது. இந்த எண்ணமே தோல்வியை வரவேற்பதாகும். வாழ்க்கையையே ஆன்மிகத்திற்கு அர்ப்பணித்த பின் அதில் தோல்வி இல்ல நிலைகளை கடக்க வேண்டுமானால் ஒன்று பக்குவம் வேண்டும். இல்லையேல் பொறுமை வேண்டும். இவை இரண்டும் சேர்த்தால் ஞானம் பெறலாம். இந்த ஞான பெற அடிப்படையில் இருந்தே ஆர்வத்தை பெருக்கி கொள்ள வேண்டும். சலிப்பூ சீக்கிரம், விரக்தி, சோம்பல் போன்ற குணங்களை விரட்ட நாம் தான் முயற்ச்சிக்க வேண்டும். இந்த செயல்களை கூட சரி செய்து தரும் அற்புத ஆற்றல் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு என்பதை மகிழ்வுடன் ஏற்று கடைபிடியுங்கள். இவர் உங்கள் ஆர்வத்தை அதிகபடுத்துவார். மறைமுக வெற்றிகளை நிறைய தருவார். நிரூபித்து காட்ட முடியாத வெற்றிகளை கொடுப்பார்.
அனுபவத்தில் நீங்களே உணர்வீர்கள்.

முக்கிய தகவல்:
உங்களுக்கு இவருடைய உபாசனை மட்டுமே போதுமானது என நினைத்தால் இந்த ரூ உப்பசனையோடு நிறுத்தி கொள்ளலாம். அது தங்கள் விருப்பம். யாம் அடுத்த பயிற்சிக்கும் ஊக்குவிக்க சில காரணங்கள் உண்டு. அறிவீராக. தெய்வ பயிற்சி நாம் தொடரக்கரணமே ஆத்ம திருப்திக்கும் மக்கள் சேவைக்கும் தான். மக்கள் அல்ப்பமான விஷயங்களையும், அசிங்கமான விசயங்களையும் நம்மிடம் கேட்க வருவார்கள். இது போன்ற கீழ்த்தரமான விஷயங்களும் எப்போதும் கணபதி உடன்படமாட்டார்.
ஸ்ரீ கணபதி நம் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார். வருவோரின் பாவங்களையும் போக்குவார். கஷ்ட சுமைகளை இறக்கி வைப்பார். இதெல்லாம் சரி தான் எனினும் கேவலமான செயல்களை முடித்து தரசொல்லி  வரும் மக்களுக்கு உடன்படமாட்டார பாவசெயலை செய்ய நம்மை தூண்டுபவர்களை விரட்டி விடுவார். பாவம் செய்து அவதிப்படும் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் கையாலேயே தர்மம் சேர்த்து செய்ய வைத்து அவர்களின் அவதியை போக்க வைப்பார். அதற்கு காலங்களை படிப்பினையாக கடத்துவார்.
இதுபோன்ற பாவ மக்களே ஆண்மிகர்களிடம் நிறைந்து காணப்படுவார்கள். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை நம் கோரிக்கை நம் செயல்கள் இவைகளின் வெற்றிக்காக உதவும் படி மட்டும் கேட்டுக்கொள்ளவும். தான் அழைக்கும் போது வந்து உதவ வேண்டும் எனவும் வேண்டி கொள்ளவும். அருள்வாக்கு மட்டும் கூற வேண்டுமானால் இவரை மட்டும் வழிபட்டால் போதுமானது.பரிகாரம் இவர் வாய்திறந்து கூறமாட்டார்.
வருவோர் துன்பத்திற்கு அவசியம் பரிகாரம் கூறவேண்டும் அல்லவா அதற்கு யட்சணி அன்னையை உபாசித்து வாக்குக்கும் பரிகார ரகசியம் கூறவும் வைத்துக் கொள்ளவும். மற்றவரின் நலனுக்காக தாங்களே சகல வித செயலுக்கும் பரிகாரம் செய்ய விரும்பினாலும் அந்த செயலால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவசியம் யாம் குறிப்பிடும் தெய்வங்களில் ஒருவரின் உபாசனை அவசியமானதாகும். ஒன்று ஸ்ரீ வாரஹி, அல்லது ஸ்ரீ ஆஞ்சநேயர் அல்லது ஸ்ரீ காலபைரவர் இவர்கள் மூவரில் ஒருவரை அவசியம் உபாசனை வைத்த பின்னரே மற்றவர் தர்ம கர்ம செயலை செய்ய நீங்கள் ஈடுபட வேண்டும். இந்த மூவருமே பாவ மனிதர்களின் அஷ்ட கர்ம செயல்களை செய்ய உதவக்கூடியவர்கள்.
தெய்வம், இயற்கை இந்த அஷ்ட கர்மத்திற்கு பஞ்சாட்சரம் மட்டுமே பயன்படும். மேர்கண்ட தேவதைகள் உடன்படமாட்டார்கள். இந்த பஞ்சாட்சரம் பெரும் தகுதி இப்போதைய மனிதருக்கு யாருக்குமே தகுதி மற்றும் அம்சம் இருப்பதில்லை. எனவே சிவனிடம் செல்ல வேண்டாம். மீறினால் தரித்திரம் தாண்டவமாடும் யாராலும் காபந்து செய்ய இயலாது. அக்காலத்திலேயே தோல்வி பெற்றவர்களே பலரும் இருந்துள்ளனர். ஒரு சிலரே வென்றுள்ளனர். உங்கள் சந்யசதையும் வைராக்கியத்தையும் பஞ்சாட்சரதோடு மோதினால் பாவமே மேலோங்கும் உங்கள் வாழ்வை வீணடித்து கொள்ளாதீர்கள். உங்கள் கவனத்திற்காக இந்த தகவலை இங்கு குறிப்பிட்டேன் இனி தகவலுக்கு வருவோம்.

No comments: