youtube

8 February 2016

இறந்தோருக்கும், காகத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏன் முன்னோர்களுக்கு திதி தரும்போது காகங்களுக்கு உணவு தருகிறோம் ?

இறந்தோருக்கும், காகத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏன் முன்னோர்களுக்கு திதி தரும்போது காகங்களுக்கு உணவு தருகிறோம் ?

காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.
தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது....

மேலும் காக்கை சனி பகவானின் வாகனம். அதே போல எமனின் இன்னொரு வாகனமாகவும் கருதப்படுகிறது. காரணம் காரி என்ற சனி கிரகம் பூமிக்கு கிரக ஈர்ப்பின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எருமை எனும் கரிய மிருகத்தை வாகனமாகக்கொண்ட எமன் என்னும் யாமம் அல்லது காலம் என்பதும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இரண்டுமே அடிப்படையில் கரிய நிறம் என்பதால் காகம் ஒரு தூதுவராக கருதப்படுகிறது.

No comments: