1945 ஆம் ஆண்டு ஸ்வாமிகள் ராணிப்பேட்டையில் முகாம்
நம் மதத்தினர் அல்லாத பிற மதத்தினர் மிகுந்துள்ள பகுதி.
ஆனாலும் சமய வேலியைக் கடந்து மக்கள் தரிசனத்துக்கு
வந்து கொண்டிருந்தார்கள்.
ராணிப்பேட்டையின் ஒரு பகுதியான நாவல்பூரில் தேவி
கருமாரியம்மனுக்கு ஆலயம் கட்ட முயற்சி செய்த சில
அன்பர்கள் ,செலவு மதிப்பைப் பார்த்து திகைத்து
விட்டார்கள்.''இந்த ஊரில் இவ்வளவு செலவா?..''
பெரியவாளிடம் ப்ரார்த்தனைசெய்ய ஸ்ரீமடம் முகாமுக்கு
வந்தனர்.
''பெரிய அளவிலே திட்டம் போட்டுட்டோம்..நன்கொடை
அவ்வளவு கிடைக்காது போலிருக்கு..ஸ்வாமிதான்
அனுக்ரஹம் செய்யணும்...''
நிச்சலமான பார்வை வெளிப்பட்டது.
பின்''அம்பாள் திருப்பணி இல்லையா...அவள் பார்த்துப்பாள்..''
''அந்த நம்பிக்கை இருக்கு..ஆனால் கால்வசி பணம் கூட
தேறவில்லையே...''
புன்னகை ஒன்று அழகாக வெளிப்பட்டது.
''பூமிக்கு மேலே நாலு அடி உயரத்துக்குக் கட்டிடம்
கட்டிடுங்கோ''
அப்புறம் கோவிலுக்கு, சிலைக்கு, கோபுரம்,
கும்பாபிஷேகம் இதெற்கெல்லாம் எங்கே போறது?''
...அதுக்குன்னு ஒருத்தர் வருவார்...''
ப்ரசாதத்தோடு இந்த ஆசியும் கிடைத்தது!
சரி..எங்கே போய்த் தேடுவது?எந்த ஆற்றில் வலை வீசுவது?
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம்ததேதி அந்த ஒருத்தர்
எங்கிருந்தார்?
ஆற்றில் வலை வீசிக்கொண்டுதான் இருந்தார்..மீன்
பிடிக்க அல்ல! ஜப்பான் குள்ளர்களைத் தேடிப் பிடிக்க!
ஆம்..உலக மஹா யுத்தம் ! பேரழிவு..1939ல் தொடங்கி
1945 வரை நீடித்தது.
மடகாஸ்கர்கள் இந்திய ப் படை வீரர்களைக் கரைக்கு
அனுப்பிவிட்டு,நீரில் பாய்ந்து பாதாளம் போய்ச் சேர்ந்தார்கள்
ஜப்பானியர் தங்களுக்குத் தோல்வி நிச்சயம் என்ற நிலையில்
கரையில் நின்றிருந்த இந்திய வீரர்களை,குருவிப் பட்டாளமாய்ப்
பொரிந்து தள்ளி விட்டார்கள்.
எஞ்சியது ஒருவர் மட்டுமே!
'நான் ஏன் பிழைத்தேன்..எது பிழைக்க வைத்தது?'
1945மே மாசம் போர் நின்றது..ஜெர்மானியர் சரண்
அடைந்தவுடன்!
ஐராவதி நதி புகழ் மேஜர் நாராயணஸ்வாமி
தன் மனைவியுடன் படையிலிருந்து விலகி இந்தியா
வந்து சேர்ந்தார்.ராணிப்பேட்டைக்கு!
ஒரு மாலைப்போது தம்பதியினர் வாக்கிங்க்
போனபோது,கருமாரி அவர்களைத் தடுத்து
ஆட்கொண்டாள்!
'நான் மட்டும் ஏன் பிழைத்தேன் என்று கேட்டாயே..
எனக்காகத்தான்...!
'உன்னைப் பிழைக்க வைத்த நான் வெயிலிலும்
மழையிலும் கிடக்கிறேனே..எனக்குக் கூரை போட்டுத்
தரமாட்டாயா?...''
திருப்பணிக் குழுவினர் பெரியவா தரிசனத்துக்குக்
கண்ணீர் மல்க வந்து நின்றார்கள்.
மிலிடரி மேஜர் நாரயணஸ்வாமியும் அவர்கள்
சம்சாரமும்...மொத்தக் கோவிலையும், கும்பாபிஷேகச்
செலவையும் தாங்களே ஏற்பதாகச் சொல்கிறார்கள்,
ஒருத்தர் வருவார்ன்னு சொன்னீங்களே...வந்துட்டார்!''
பெரியவா அனுக்ரஹ மழையில் தம்பதி நனைந்தனர்.
ஐரவாதி நதிப்பக்கம் இனி அவர்கள் போகவே மாட்டார்கள்...
ஐராவதம் வாழும் தெய்வ லோகத்தில்தான் அவர்களுக்கு
வாசம்!
சொன்னவர் சத்ய காமன் சென்னை
ஜய ஜய சங்கரா....

No comments:
Post a Comment