youtube
31 July 2012
ஸ்தான அதிபதி நின்ற பலன்கள்
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:
ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக
இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான்
தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான்.
ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான்.
சொத்துக்களை உடையவனாக இருப்பான்.
பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான்.
வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும்.
மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.
உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.
தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.
மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்
நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர்
மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக
இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள்
எல்லா இடங்களிலும் எடுபடும்.
தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான்
தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக
இருப்பான்.
செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான்.
மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான்.
அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.
எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான்
சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள்
ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக
இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான்.
நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான்
அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும்.
அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும்
ஜாதகன் இருப்பான்
ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான்.
நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான்.
ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத
வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.
தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான்.
தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.
கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்
சுகவாசியாக இருப்பான்.
வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான்.
இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை
பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான்.
அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு
தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக
இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை
உடையவனாகவும் இருப்பான்.
மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும்
இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:
******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
சிறப்பைப் பெறுவார்கள்
சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.
சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள்.
மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான்.
ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான்.
மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்
எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு
சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான்.
சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும்.
ஒழுக்கக் குறைவு ஏற்படும்.
சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும்,
ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை
உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும்.
ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்
சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை
எடுத்து வளர்க்க நேரிடும்.
இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம
ஆயுளை உடையவன்.
வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.
ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.
நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது.
இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை
கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்
கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும்
ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்
சிறந்த பக்திமானாக விளங்குவான்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்,
நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள்
எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான
அமைப்பு இது.
பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட
தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்
அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான்.
நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.
தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும்.
அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும்.
சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.
நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான
வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான
தொழிலைச் செய்வான்.
நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும்.
மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த
பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.
ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன்
இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும்
Gains; Gains: Gains - அவ்வளவுதான்.
ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.
இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு
மேற்கூறிய நன்மைகள் இருக்காது.
ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து
கொண்டே இருக்கும்.
எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின்
கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.
வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.
வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.
இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய
கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம்
செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி
இல்லாதவனாகவும் இருப்பான்.
அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.
திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்
வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன
நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
முதல் வீடு
இதுவரை நாம் பொதுவானபலன்களை மட்டும் பார்த்தோம். இப்பொழுது ஜாதகத்தில் ஒவ்வொரு வீட்டையும் பார்க்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் என்ன என்ன குணங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
முதலில் முதல் வீட்டுக்கு என்ன குணங்கள் என்று பார்ப்போம். முதல் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது. ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் அது தான் முதல் வீடு. அது தான் ஒருவரின் தலைபகுதி. அவர் முகம் எப்படி இருக்கும். குணம் எப்படி இருக்கும். உயரம் எவ்வளவு. அவர் வாழ்க்கையில் எந்தளவு முன்னேறுவார் என்று காட்டும். இதை மட்டும் வைத்து பலன் சொல்லகூடாது.
லக்கினத்தின் மீது எந்த கிரகத்தின் பார்வை விழுகிறது. லக்கினம் சென்று அமர்ந்த இடம் எல்லாத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பலன் சரியாக வரும்.
சிலபேருக்கு லக்கினம் கெட்டு இருந்தாலும் மற்ற வீட்டின் கிரகங்கள் மூலம் நல்ல வாழ்க்கை அமையும். அதனால் அனைத்து வீட்டின் தன்மைகளும் கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும். லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் நல்லது. கெட்ட கிரகங்கள் இருந்தால் பல துன்பங்களை அனுபவிக்கவேண்டும்.
இப்பொழுது லக்கினாதிபதி சென்று அமரும் பலன்களைப்பற்றி பார்க்கலாம். லக்கினாதிபதி முதல் வீட்டில் இருந்தால் ஆட்சியில் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால் நல்ல ஆயுள் இருக்கும் கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமையும். நல்ல மரியாதையுடன் வாழ்க்கை நடத்தபவராகவும் இருப்பார்.
லக்கினாதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் சுயசம்பளத்தில் குடும்பத்தை நடத்துபவராகவும் நல்ல குடும்ப வாழ்க்கையும் அமையும். 2 ஆம் வீடு குடும்பம் ஸ்தானம் ஆகையால் குடும்பம் மூலம் வருமானத்தை பெறலாம்.
லக்கினாதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் மூன்றாம் வீடு தைரியம் ஸ்தானம் அதனால் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். தம்பி மூலம் வருமானம் இருக்கும். அடிக்கடி சிறு பயணங்கள் ஏற்படும்.
லக்கினாதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நன்றாக இருப்பார் தாய் மூலம் வருமானம் இருக்கும். கல்வி நன்றாக வரும். கல்வி என்றால் பள்ளி படிப்பு நன்றாக இருக்கும். உயர்கல்விக்கு வேறு வீட்டை பார்க்க வேண்டும். நல்ல வீடு அமையும். தாய்வழியில் நன்றாக உதவி இருக்கும்.
லக்கினாதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குழந்தை பாக்கியம் அமையும். குழந்தை மூலம் நல்ல பெயர் கிடைக்கும். தெய்வ ஆற்றல் கிடைக்கும். மத வழிபாடு சத்சங்கம் செய்தல் ஆகியவை கிடைக்க பெறும். குலதெய்வம் அருள் கிடைக்கும்.
லக்கினாதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நோய் உடையதாக இருக்கும் அல்லது அடிக்கடி மருத்துவச் செலவு வைக்கும். 6 ஆம் வீடு சத்துரு ஸ்தானம் அதனால் விரோதிகள் மூலம் தொந்தரவு இருந்துக்கொண்டே இருக்கும். பொதுவாக 6 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருப்பது நல்லதல்ல.
லக்கினாதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியும் மூலம் சொத்துக்கள் கிடைக்கப்பெறும். மனைவியின் சம்பாதியத்தில் வாழ்பவராகும் இருப்பர். அடிக்கடி வெளியில் சுற்றபவராகவும் இருப்பார்கள்.
லக்கினாதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் இருப்பார் ஆனால் மிகுந்த வறுமையுடன் குடும்பத்தை நடத்துபவராகவும் இருப்பார்கள். கடன் தொல்லை இருந்துகொண்டு இருக்கும். ஒரு சிலர்கள் உடல் நோய் இருக்கும்.
லக்கினாதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் ஆதரவை பெற்றவராவார். தந்தையார் நன்றாக இருப்பார் அதைபோல் முன்னோர்களின் ஆசி பெற்றவராவார். சிலர் வெளிநாடுகளில் சென்று வருவார்கள். தெய்வ அருள் கிடைக்கும்.
லக்கினாதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். தொழில்துறையில் வளர்ச்சி இருக்கும். அரசாங்க உதவி கிடைக்க பெறுவார்கள். உறவினர்கள் மூலம் மதிக்கப்படுவார்கள்.
லக்கினாதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை முழுவதும் நல்ல நிலையில் இருப்பார்கள் . நல்ல தொழில் அமையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.
லக்கினாதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல எவ்வளவு வருமானம் கிடைத்தாலும் செலவு செய்துவிடுவார்கள். எந்த வேலையும் ஒழுங்காக செய்ய மாட்டார்கள். வேலையில் இருந்தால் ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். அடிக்கடி இடம் மாற்றல் ஆகும். சோம்பேறி என்று பெயர் எடுப்பார்கள்.
_____________________________________________________________________________
இரண்டாம் வீடு
இரண்டாம் வீடு என்பது குடும்ப ஸ்தானம்.தன ஸ்தானம். வாக்கு ஸ்தானம் எனப்படும். இரண்டாம் வீட்டை வைத்து என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம். முதலில் இரண்டாம் வீட்டு அதிபதி யார் அவர் எங்கு இருக்கிறார். இரண்டாம் வீட்டை எந்த கிரகங்களின் பார்வை இருக்கிறது என்று பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் பலன் சரியாக வரும். இரண்டாம் வீடு என்பது ஒருவரின் பணநிலமை. வங்கியில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகள் குறிக்கும். குடும்பம் எப்படி இருக்கும் குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குடும்பத்தில் கலவரம் இருக்குமா ஒருவர் எப்படி பேசுவார் திக்கிதிக்கி பேசுவார அல்லது வேடிக்கையாக பேசுவார அல்லது பேசவே மாட்டாரா என்று கூறலாம். ஒருவருடைய கண்பார்வை எப்படி இருக்கும் என்பதும் பற்றியும் கூறலாம்.
ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தையும் இந்த வீட்டை வைத்து சொல்லலாம் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்ததை கொடுக்கும் வீடு 5 ஆம் வீ்டு ஆனால் குழந்தை பாக்கியம் என்றால் ஒரு நபர் குடும்பத்தில் கூடுகிறார் என்று அர்த்தம் குடும்பத்தின் நபர்களை குறிப்பது இரண்டாம் வீடு இரண்டாம் வீடு நன்றாக இருந்தால்தான் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் இரண்டாம் வீடு கெட்டால் குழந்தை பாக்கியம் இருக்காது. இப்பொழுது புரிகிறதா இரண்டாம் வீட்டின் பயன் என்ன வென்று.
அதைப்போல் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால் ஏன் என்று இரண்டாம் வீட்டை வைத்து பார்க்க வேண்டும். இரண்டாம் வீட்டின் அடுத்த பண்பு இளைய சகோதரத்தின் விரையம். எப்படி இது சாத்தியம் இளைய சகோதரத்தைப் பற்றி கூறுவது மூன்றாம் வீடு மூன்றாம் வீட்டிற்க்கு 12 ஆம் வீடு இரண்டாம் வீடு அல்லவா அதனால் அது மூன்றாம் வீட்டிற்க்கு விரையம் ஆகிறது. இளைய சகோதரத்தின் விரையம் மரணம் ஆகியவற்றை காட்டும். அவர் எப்படி இறப்பார் எப்படி பணத்தை செலவு செய்வார் ஆகியவற்றை காட்டும் வீடு இரண்டாம் வீடு
இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்று கூறினேன் அல்லவா அதைப்பற்றி பார்ப்போம் இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடினமாக பேசுவார் கேது இருந்தாலும் பேச்சு கடினம் இருக்கும். புதன் இருந்தால் நன்றாக பேசுவார். நல்ல கிரங்கள் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும்.
அடுத்ததாக இரண்டாம் வீட்டை தன ஸ்தானம் என்றும் கூறுவது எப்படி என்று பார்ப்போம் நமக்கு வரும் வருமானம் அதாவது பொருளாதார வளர்சி எப்படி என்று காட்டுவது இரண்டாம் வீடு. இரண்டாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் தீயகிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது 10 ஆம் மற்றும் 11 வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் 6 ஆம் வீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் 6 ஆம் வீடு ஜாதகர் செய்வது சுயதொழிலா அல்லது அடிமைதொழிலா என்று தெரியவரும். இவற்றையேல்லாம் கணக்கில் கொண்டுதான் தன ஸ்தானத்தை முடிவு செய்யவேண்டும்.
இப்பொழுது 2 ம் வீட்டு அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். முதல் வீட்டில் இருந்தால் நன்றான குடும்ப வாழ்க்கை அமையும் சுயமாக சம்பாதித்து முன்னுக்கு வருவார்.
இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மொத்தத்தில் கொடுத்துவைத்தவர்.
மூன்றாம் வீட்டில் இருந்தால் சகோதர் மூலம் வருமானம் கிடைக்கும.
4 ஆம் வீட்டில் இருந்தால் வீடு வாகனம் மூலம் வருமானம் உண்டு.
இரண்டாம் வீட்டு அதிபர் 5 ல் இருந்தால் அவருக்கு திடிர் என்று பணவரவு இருக்கும் லாட்டரி அல்லது ரேஸ் மூலம் பணவரவு இருக்கும்.
இரண்டாம் வீட்டு அதிபர் 6 ல் இருந்தால் வேலையின் மூலம் பணவரவு இருக்கும்.
இரண்டாம் வீட்டு அதிபதி 7 ல் இருந்தால் அவரின் மனைவி அல்லது கணவன் மூலம் வருமானம் இருக்கும் சிலருக்கு அந்நிய நாட்டின் மூலமாக வருமானம் இருக்கும்.
இரண்டாம் வீட்டு அதிபர் 8 ல் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல ஏன் என்றால் 8 ஆம் வீடு மறைவு ஸ்தானம் ஆகும்.
இரண்டாம் வீட்டு அதிபர் 9 ல் இருந்தால் தந்தை வழியாக பணம் வரும் அல்லது அந்நிய நாட்டின் மூலமாக பணவரவு இருக்கும்.
இரண்டாம் வீட்டு அதிபர் 10 ல் இருந்தால் தொழில் செய்து சம்பாதிப்பார்.
இரண்டாம் வீட்டு அதிபர் 11 ல் இருந்தால் நல்ல பணவரவு இருக்கும். அண்ணன் மூலமாகவும் பணவரவு உதவி இருக்கும்
இரண்டாம் வீட்டு அதிபர் 12 ல் இருந்தால் பணம் விரையமாகும்.
இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் கண் பார்வையில் கோளாறு இருக்கும். அதைப்போல் 7 ம் வீட்டு மூலம் நன்றான மனைவி அமைந்தாலும் இரண்டாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்துவிடும். ஒருவருக்கு இரண்டாம் வீட்டு அதிபதியின் தசா புத்தியில் மரணம் ஏற்படும். மரணத்தைப் பற்றி எழுதும் போது முழுவதும் எழுதுகிறேன்.
இரண்டாம் வீட்டை வைத்து அண்ணனின் வீட்டைப்பற்றி கூறலாம். எப்படி என்றால் 11 ம் வீடு அண்ணனின் வீடு 11 ம் வீட்டில் இருந்து 4 ம் வீடு ஜாதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் அண்ணனின் வீடு எப்படி இருக்கும் என்று கூறலாம். அதைப்போல் தாயின் வருமானத்தைப்பற்றியும் கூறலாம் எப்படி என்றால் 4 ம் வீடு தாய் ஸ்தானம் 4 ம் வீட்டிற்க்கு 11ம் வீடு ஜhதகரின் இரண்டாம் வீடு அல்லவா அதனால் தாயாரின் லாபம் எப்படி என்றும் கூறலாம். இதுவரை 2 ம் வீட்டின் காரதுவத்தைப்பற்றி பார்த்தோம் இனி அடுத்த வீடு இதுவரை பொறுமையாக படித்தற்க்கு மிக்க நன்றி.
_____________________________________________________________________________
16. If the second lord is associated with rahu or ketu, the native
will be weak
17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால்(If the second lord is
placed in the sixth house) அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.
20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்
21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்
23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்
24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.
______________________________________________________________________________
மூன்றாம் வீடு
மூன்றாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். மூன்றாம் வீடு சகோதர ஸ்தானமாகும். ஜாதகன் குணங்கள் மனோவலிமை இளைய சகோதரம் எப்படி இருப்பார் . அவர் ஜாதகருக்கு நன்மை செய்வாரா தாயாரின் விரையம் தபால் போக்குவரத்து இப்பொழுது ஏது தபால் போக்குவரத்து email லை வைத்துக்கொள்ளலாம் பக்கத்துவீட்டு நபர்கள் எப்படி இருப்பார்கள் குறுகிய பயணம் எப்படி இருக்கும், காது சம்பந்தமான நோய், நீங்கள் இருக்கும் வீடு எப்பொழுது காலி செய்வது ஆகியவைகள் எல்லாம் மூன்றாம் வீடு மூலம் காணலாம்.
இப்பொழுது மூன்றாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
மூன்றாம் வீட்டு கிரகம் 1 வது வீடாகிய லக்கினத்தில் இருந்தால் இளைய சகோதரம் இருக்கும் பல வேலைகளை வைத்து வேலை வாங்கும்படியான அதிகாரம் கிடைக்கும். சங்கீதம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும். உடல் பலம் போகங்களுடன் இருப்பார்கள் வைரம்.நகைகள பெறுவார்கள் சகோதர. சகோதரிகளின் ஆதரவை பெறுவார்கள்.
மூன்றாம் வீட்டு கிரகம் 2 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர.சகோதரிகளின் ஆதரவில் காலம் கழிப்பவனாகவும்.தைரியமில்லாதவனாகவும் உடலில் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள். மூன்றாம் வீட்டு அதிபதி கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் சகோதர சகோதரிகளின் சொத்து கிடைக்கும்.
மூன்றாம் வீட்டு கிரகம் 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் நல்ல அந்தஸ்த்தோடு இருப்பார்கள் அவர்களால் இவருக்கு எல்லாவிதத்திலும் ஆதரவு இருக்கும். கலைகளில் பிரியம் கொண்டவனாக இருப்பார்கள் . நல்ல பலசாலியாகவும் இருப்பார்கள். தங்கம்.வெள்ளி ஆடை மீது ஆசை இருக்கும் அதுபோல் கிடைக்கும். தெய்வ வழிபாடு கிடைக்கும்.
மூன்றாம் வீட்டு கிரகம் 4 ஆம் வீட்டில் இருந்தால் சுபபலமிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் சகோதர சகோதரிகள் நீண்ட ஆயுளுடனும் தாயார் தாய்வழி ஆதரவை பெற்றவர்களாகவும் குடும்பத்தில் செல்வமும் சுகமும் நிறைந்து விளங்கும்.
மூன்றாம் வீட்டு கிரகம் 5 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியங்களை பெற்றவனாகவும். சகோதர சகோதரிகளின் ஆதரவை பெற்றவராகவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வீக வழிபாட்டில் உள்ளவர்களிடம் தொடர்பு கிடைக்கும்.
மூன்றாம் வீட்டு கிரகம் 6 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் பரம எதிரிகளாக இருப்பார்கள் உடல் பலமில்லாமலும் இருப்பார்கள் அடிக்கடி நோய் வந்து தொந்தரவு தரும்.
மூன்றாம் வீட்டு கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்தால் பெண்களின் மீது ஈர்ப்புடன் இருப்பான். வேலை இல்லாமல் ஊர் சுற்றி திரிபவனாகவும் இருப்பான். தன்னுடைய சுகங்கள் மட்டும் பார்ப்பான். மனைவியின் சொத்துக்களை பெற முயல்வார்கள். நன்றாக சாப்பிடுவார்கள்.
மூன்றாம் வீட்டு கிரகம் 8 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் உடன் சண்டை இருந்து கொண்டு இருக்கும். உடல் ஊனம் ஏற்படும். சிரமத்துடன் குடும்பம் நடத்த வேண்டும். சில பேர்க்கு கடன்கள் ஏற்படும். சிலருக்கு அவமானம் ஏற்படும்
மூன்றாம் வீட்டு கிரகம் 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாகவும் பூர்வ புண்ணியத்தில் நல்ல வசதி பெற்றவராகவும் இருப்பார்கள். தெய்வபக்தியுடன் இருப்பார்கள்.
மூன்றாம் வீட்டு கிரகம் 10 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் குடும்பத்தை நடத்துபவர்களாக இருப்பார்கள்.
மூன்றாம் வீட்டு கிரகம் 11 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகளின் அன்பை பெற்றவர்களாக இருப்பார்கள் அவர்களிடம் இருந்து லாபம் கிடைக்கும்
மூன்றாம் வீட்டு கிரகம் 12 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் மூலம் விரையம் ஏற்படும். சொத்துகள் விரையத்தை ஏற்படுத்தலாம். அலைச்சலும் மன சஞ்சலம் ஏற்படும்.
இதுவரை பொறுமையாக படித்ததற்க்கு மிக்க நன்றி.
___________________________________________________________________________
மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்
1
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்:
இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும்.
ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச்
செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து
இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான்.
செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான்.
ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும்.
அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக
இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான்.
அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக
மாறிவிடும்.
சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும்
சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி
வெற்றி பெறுவார்கள்.
இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும்
ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று
நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில்
சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.
===================================================
2
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.
இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.
சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்
இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
வாழ்க்கை வாழ்வான்.
சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
சொல்லவும் வேண்டுமா?
If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic
He/she do not take his/her undertakings seriously.
Their image may be spoiled by their headstrong behavior
They may not keep punctuality and they may not also keep up the decencies of debate.
They may not have good relations with the younger co-borns.
They may have hostile neighbors.
=========================================================
3.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே
(in his own house) இருந்தால்:
அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால்,
ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர்
சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால்
ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும்
சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது.
ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான்.
பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான்.
போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள்.
சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.
பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.
மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி
செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப்
பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும்
If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters.
They view everything philosophically.
They are confident that everything happens for the good.
They are not the type who cry over the things lost.
They do not bother about the past which is gone
==========================================================
4
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப்
பெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.
இந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அதை மனதில் கொள்க!
குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.
The life of the native will be happy on the whole
மூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக
இருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்
===========================================================
5.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான்.
ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.
ஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது.
அதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும்.
ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.
சிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும்.
சிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம்
கிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.
Since the 3rd lord is in the 5th, the native will be virtuous
Their brothers will definitely help them in their hour of need.
They are best suited to agriculture as they know when to sow and when to reap.
They may not have much happiness from their children.
===============================================================
6.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக
மாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.
வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில்
பணம் கரையும்.
சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத்
தொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது.
ஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான
பலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள்
குறைந்துவிடும்.
மொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான்.
அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்
Since the 3rd lord is in the 6th, it will be difficult for the native to
maintain good relationships with brothers and sisters
Their honesty and sincerity in financial dealings have got drawbacks.
Their mind will be troubled by enemies.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் பெண் பித்தனாக இருப்பான்.
யாருக்குத்தான் பெண் பித்து இல்லையென்கிறீர்களா?
சரி, வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அமைப்பு உள்ளவன் அதிகமான அளவு பெண் பித்து உள்ளவனாக
இருப்பான். தேவையான சுகங்களைத் தேடிப்பிடித்து அனுபவிப்பவனாக
இருப்பான். அதற்கான துணிச்சல் இருக்கும்.
சிலருக்கு ஜொள்ளுப் பார்ட்டி எனும் விருது கிடைக்கும்.
பெண்களிடமிருந்து சொத்துக்களும் கிடைக்கும்.
இலை விருந்து, பெண் விருந்து என்று ஆசாமி எப்போதும் சாப்பாட்டு
ராமனாக இருப்பான்.
சிலர் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
சிலர் எந்தவிதமான வேலையும் இன்றி சுகஜீவனத்துடன் இருப்பார்கள்.
If the 3rd lord is in the 7th, the native will be an employee than a businessman.
He will excel as subordinate than as a commanding officer.
He will forget a duty or debt when it falls due.
===========================================================
மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:
சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது. தேக ஆரோக்கியம் முழுமையாக
இருக்காது. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். வாக்கு
வன்மை இருக்காது. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.
சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.
இந்த அமைப்பு சுப பலத்துடன் இருந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டாலும்
கஷ்ட நிவாரணமும் கிடைக்கும்
சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. அதுபோல சிலருக்குச்
செய்யும் தொழிலும் சிலாக்கியமாக இருக்காது. அதாவது பிடிதமாக இருக்காது
துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின் தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.
If the 3rd lord is in the 8th, the native will be driven by the desire
to take possession of things and take charge of situations without any
authority whatsoever.
The native will have the tendency to die for his/her love.
He will miss the company of his brother or sister.
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். வசதி
படைத்தவனாக இருப்பான். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.
இந்த அமைப்பு தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றால் மேற்சொன்ன
பலன்கள் இருக்காது
பெற்றோர்வழிச் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
போராடிப் பெறவேண்டியதிருக்கும். உணர்ச்சி மிகுந்தவர்கள்.
அந்த உணர்ச்சியால் அடிக்கடி சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
சிலருக்குப் புரிதல் இன்மையால் தந்தையுடன் கூடிய உறவு பாதிக்கப்படும்
சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:
இந்த அமைப்பு சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால்,
உடன்பிறப்புக்களால் ஜாதகனுக்குப் பயன் இருக்காது.
அவர்களும் அந்தஸ்து இல்லாமல் இருப்பார்கள்.
ஆதரவான சூழ்நிலை இருக்காது.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு
எதிர்மாறான பலன்கள் இருக்கும். அதாவது நன்மையான பலன்கள் இருக்கும்
ஜாதகன் நற்பெயரோடும், ஓரளவு செல்வாக்கோடும் இருப்பான்.
பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
உத்தியோக வளர்ச்சியினல் மட்டுமே அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்
If the 3rd lord is in the 10th, the native will be selfsufficient!
He will have pleasing personality and sincere approach
His profession may be connected by travelling
He will attain to a professional reputation
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
நன்மைதரும் அமைப்பு அல்ல! ஜாதகன் தன் முயற்சியால் மட்டுமே
வளர்ச்சியைக் காண முடியும்.
இங்கே வந்தமரும் மூன்றாம் வீட்டதிபன் சுபக்கிரகமாக இருந்தால்
உடன் பிறப்புக்களால் ஜாதகனுக்கு நன்மைகள், லாபங்கள் கிடைக்கும்.
உடன்பிறப்புக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வுடன்
இருப்பான்
The native will get help from their sisters and brothers
He will have gains of a high order.
His desires will be fulfilled in time by his own efforts
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.
சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும். சொத்துக்கள்
கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.
வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.
கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.
சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்
__________________________________________________________________
நான்காம் வீட்டு அதிபன் ஜாதகத்தில் சென்று அமர்ந்த இடத்தை வைத்துப்
பொதுப் பலன்கள்.
1ல் அதாவது லக்கினத்தில் இருந்தால்
ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக
இருப்பான்.
மாடு கன்றுகள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தவன்
அப்படித்தான் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான்.
நீங்கள் அவற்றை மைனஸ் செய்து கொள்ளுங்கள்.
கிராமத்தில் இருப்பவன் டிராக்டர்கள் வைத்திருப்பான்.
நகரத்து ஆசாமி குவாலிஸ் வண்டி வைத்திருப்பான்.
வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும் அல்லது
ஜாதகன் வேளாவேளைக்கு 'மேரி பிரவுன்' அல்லது 'சரவண பவன்'
டேஸ்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.
மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். மனையாள் சுகம்
என்ன வென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்:-))))
பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான்.
தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள்.
கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான்.
நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன்
அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான்.
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
If the 4th lord is in the ascendant, the native will have all sorts
of domestic comforts, houses & conveyances.
They are outspoken, independent, clever and intelligent.
Their mother will be affectionate!
They will be appreciated in the field of education.
They will have the help of many friends and uncles.
--------------------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்
தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும்
ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்
அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். இன்றைய
காலகட்டத்தில் நாம் சம்பாதிக்காமல் வரும் சொத்துக்கள் முக்கியம்தானே?
குடும்ப வாழ்க்கை, ஏஆர் ரஹ்மான் இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும்
ரம்மியமாக இருக்கும்.
If the 4th lord is in the 2nd the native will inherit much from their
mother or maternal relatives
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
----------------------------------------------------------------------------------------
3ல் இருந்தால்
ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள்.
அதாவது நல்ல நிலைமையில் (position) இருப்பார்கள். ஜாதகனைவிட
அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும்
கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும்.
வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல்
இருக்கும்
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும்
தாய்வழி உறவுகள் பகையாக மாறிவிடும். வாழ்க்கை வசதிகள் நீங்கிவிடும்
அல்லது இல்லாமல் போய்விடும்.
இது நான்காம் வீட்டிற்கு, அதிலிருந்து பன்னிரெண்டாம் வீடு. அதை மனதில்
கொள்க!
-----------------------------------------------------------------------------------------------
4ல் இருந்தால்
நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம்
என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு
கிடைக்கும்
மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை
பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.
ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள்.
அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக
இருப்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம்
விசுவாசமாக இருப்பார்கள்.
பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
ஜாதகனுக்கு அமையும்.
பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழிச்
சொத்துக்களும் கிடைக்கும் (ஆகா, இதல்லவா டபுள் அதிர்ஷ்டம்:-)))
------------------------------------------------------------------------------------------
5ல் இருந்தால்
நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய
குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும்.
ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு
இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான்.
வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான்.
தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான்.
சிலர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள்
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
--------------------------------------------------------------------------------------------
6ல் இருந்தால்
நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்
They may not get much happiness from mother & conveyances
They are basically careless and indifferent.
Their mother's health may be affected.
They are short tempered. Some of their friends may turn enemies.
Uncles and aunts also turn enemies. ---------------------------------------------------------------------------------------------------
7ல் இருந்தால்
ஜாதகன் கல்வித்துறையில் இருந்தால், தன் துறையில் புகழ் பெறுவான். சிறந்த கல்விமானாக இருப்பான். அதிகம் படித்தவனாக இருப்பான். நான்காம் வீடு
கல்விக்கும் உரிய வீடு, அதன் அதிபதி ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்ப்பதால் இந்தப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்.
ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள்
மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள்.
நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன்
பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள்.
இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் (7th House, house of marriage)
வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது.
ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து
மனைவி கிடைப்பாள்.
சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.
அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக்
கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி
மாற்றுவார்கள்.
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்காக வருத்தப் பட வேண்டாம்.
அதற்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வேறு வழியில் கொடுக்கப்பட்டிருக்கும்! --------------------------------------------------------------------------------------------
8ல் இருந்தால்.
எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல, வாழ்க்கையில்
சந்திக்கப்போகும் சிரமங்கள் மற்றும் அவஸ்தைகளுக்கான வீடும்
அதுதான்.
It is also house of difficulties.
சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான்.
அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது.
தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில்
பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள்.
சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத்
தரமுடியாது.
ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான்.
வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக்
கிடைக்காது.
உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள்.
இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப்
போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம்
அவ்வளவுதான்.
நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள்
நீங்கும் அல்லது குறையும் =================================================
9ல் இருந்தால்
ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
அமைப்பு இது.
ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?
சரி, ரெம்பவும் நெகிழ்ந்து, கதை விடாமல் பலனைச் சொல்லுங்கள்.
இதோ பலன்கள்:
The native will be blessed by a loving and compassionate mother
அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.
ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.
ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும்
இருப்பான்.
ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு
மிகுந்து இருக்கும்
நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத
அமைப்பாகும்.
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் -------------------------------------------------------------------------------------------
10ல் இருந்தால்
ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!
ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம்
கிடைக்கும்.
தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக
இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும்.
அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்
ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான்.
எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும்
உணரும்படி செய்யக்கூடியவன்.
வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு
உதவுபவர்களாக இருப்பார்கள்
நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் ------------------------------------------------------------------------------------------
11ல் இருந்தால்
இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக
இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான்.
சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும்.
இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு.
அதை மனதில் கொள்க!
If the 4th lord is in the 11th the native will be wealthy.
The native will have a lot of good friends.
They will have lots of gains as 11th house rules gains and
the fulfillment of all desires.
A good house and conveyances are guaranteed.
He will have lot of mental tensions also as 11th is 8th to the fourth.
Lack of mental peace and bliss can result. -------------------------------------------------------------------------------
12ல் இருந்தால்
நன்மை எதுவும் இல்லாத அமைப்பு.
சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும்.
நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது.
வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும்,
வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக்
காணாமல் போய்விடும்.
மொத்தத்தில் சிரமமோ சிரமம்.
The native will have to face many ills & unhappy situations in life.
The lord of 4th house in this house of loss shows loss of comforts.
Regarding house they may have to face many problems.
They may have to encounter litigation and problems regarding house.
They may not be happy with regard to mother.
Uncles and aunts will become enemies
Some friends also go against them.
They will be beset by many problems and difficulties.
Expenditure rises and they may have to spend much money on house
and conveyances.
They may have to face losses in speculation.
சுபக் கிரகங்களின் பார்வை இந்த அமைப்பின் மேல் பட்டால் அவை
குறையும் அல்லது நீங்கும். இல்லாவிட்டால் நோ சான்ஸ்!
------------------------------------------------------------
நான்காம் வீடு
இப்பொழுது நாம் நான்காம் வீட்டைப்பற்றி பார்க்கலாம். நான்காம் வீடு தாயார் ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. தாய்,தாய்மாமன்,வாகனம்,உறவினர், இன்பங்கள், மூதாதையர்கள் சொத்து,பயிர்,நிலம்,வீடு வாசல் பள்ளிக்கல்வி ஆகியவற்றை நான்காம் வீட்டின் மூலம் காணலாம்.
இப்பொழுது நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
நான்காம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் பங்களா போன்ற வீடுகள், நிலபுலங்கள், வண்டி வாகனங்கள், மாடு கன்று, பால் பாக்கியம் ஆகியவற்றுடன் நன்றாக வாழ்வான். தாய் வழி பாட்டி மாமன் முதலானேர் ஆதரவு நிரம்பி இருக்கும். கல்வியில் திறமையுடன் இருப்பார்கள் அதைப்போல் உயர்ந்த பதவியில் அமருவான். 4 ஆம் வீட்டு அதிபதி கெட்ட சேர்க்கை ஏற்பட்டால் கெடுதிபலன் நடைபெறும்.
நான்காம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் தாய்வழி ஆதரவையும் சொத்துக்களையும் பெறுவார்கள் குடும்பத்தில் சுகம் நிறைந்து காணப்படும்.
நான்காம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகனிட விட அவன் சகோதரன் சிறந்த விளங்குவான். ஜாதகனின் தாயார் நோய்வாய்ப்படுவார்கள். குடும்பத்தில் கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படும். வருமானத்தைவிட செலவு அதிகமாகும்.
நான்காம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் நிலபுலங்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் பால்பாக்கியம்இ கல்வியில் திறமை கீர்த்தி வண்டி வாகனங்கள் முதலியவற்றுடன் வாழ்வான். எல்லாரும் மரியாதையுடன் இவர்களிடம் பழகுவார்கள். நண்பர்கள் இவரின் புகழ் பேசுவார்கள். பெண் சுகம் நிரம்ப பெற்றும். பெண்களின் சொத்துக்களை பெற்றும் விளங்குவார்கள். இவர்களில் நல்ல சுகபோகங்களுடன், செல்வாக்குடன் விளங்குவார்கள்.
நான்காம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திரங்களை உடையவனகாவும் வண்டி வாகனங்கள் பெற்றவனாகவும் லாபங்களை உடையவனகாவும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு வாழ்வார்கள்.
நான்காம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் சுக சௌகர்யங்களை இழந்தவனாகவும்,தாயிடமும் தாயார் வழிகளிலும் விரோதங்களை கொண்டவனாகவும், பூர்வீக சொத்துக்களை இலந்தவனாகவும்,சண்டை சச்சரவுகளில் செலவு செய்பவனாவும் வியாதி உடையவனாகவும் இருப்பார்கள்.
நான்காம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பலமாக இருந்தால் தாயார் மாமன் வழியில் மனைவி வருவாள். வருமானமும் செலவும் சரிசமாக இருந்து வரும். வீடு மாறி மாறி குடி இருக்கும் படி இருக்கும் வாகனங்கள் அடிக்கடி மாற்ற வேண்டும் மனைவியின் போக்கின் படி ஜாதகர் நடப்பர்.
நான்காம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் தாயார் ஏழை வீட்டில் பிறந்தவராக இருப்பார். தாய்வழி ஆதரவு குறைந்து இருக்கும் வறுமையும் அவமானங்களும் நிறைந்து காணப்படும்.
நான்காம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் நிலபுலங்கள் வீடு வாகனங்கள் பால் பாக்கியம் நிறைந்து இருக்கும். தகனப்பாரின் அன்பை பெற்றவராக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நிறைந்து காணப்படும்.
நான்காம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தை பெறுவார்கள். தொழில் பலம் நிறைந்து காணப்படும். பெரிய அந்தஷ்து உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்படு்ம். செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெற்று விளங்குவான்.
நான்காம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் சுகங்கள் நிறைந்தவனாகவும் பூமி வியாபாரங்கள் மூலம் நல்ல லாபம் ஏற்படும் தாயாருக்கு உடலில் நோய் ஏற்படும்.
நான்காம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் சுகங்கள் அற்றவனாகவும் சொந்தங்கள் ஆதரவு இல்லாமாலும் இருப்பான். வறுமை மிகுந்து காணப்படும். சொந்த நிலம்கள் விரையம் ஏற்படும். மொத்தத்தில் சிரம வாழ்க்கை நடத்தும்படி இருக்கும்.
இத்துடன் நான்காம் வீட்டின் காரத்துவம் முடிந்தது.
இதுவரை பொறுமையாக படித்ததற்க்கு மிக்க நன்றி.
_____________________________________________________________________________--------------------------------
ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:
5th lord 1ல் இருந்தால்:
மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)
அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்
சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
-------------------------------------------------------------------------------
5th lord 2ல் இருந்தால்:
If favourably disposed as said in the earlier paragraph:
அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக
இருப்பார். அரச மரியாதை கிடைக்கும்.
If not favourably disposed:
தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார்.
மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.
-------------------------------------------------------------------------------
5th lord 3ல் இருந்தால்:
If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!
If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.
-------------------------------------------------------------------------------------------------
5th lord 4ல் இருந்தால்:
If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார்.
அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட
தொழில் செய்பவர்.
If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
---------------------------------------------------------------------------------------------------
5th lord 5ல் இருந்தால்:
If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய
செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.
If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார்.
குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம்
உடையவர்.
----------------------------------------------------------------------------------------------------
5th lord 6ல் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
------------------------------------------------------------------------------------------------------
5th lord 7ல் இருந்தால்:
If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை
உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர்.
செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர்.
If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும்
பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்
-------------------------------------------------------------------------
5th lord 8ல் இருந்தால்:
மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
------------------------------------------------------------------------------------------------------
5th lord 9ல் இருந்தால்:
If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர்.
சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான்.
If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம்
தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
---------------------------------------------------------------------------------------
5th lord 10ல் இருந்தால்:
If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.
If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
--------------------------------------------------------------------------------------
5th lord 11ல் இருந்தால்:
எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
5th lord 12ல் இருந்தால்:
எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும்
அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்
--------------------------------------------------------------------
ஐந்தாம் வீடு
இப்பொழுது நாம் ஐந்தாம் வீட்டைப்பற்றி பார்க்கலாம் ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானம் எனப்படுகிறது.
ஐந்தாம் வீட்டு மூலம் குழந்தை பிறப்பு, பூர்வ புண்ணிய பலன்கள், வித்தை, எண்ணங்கள், கல்வியில் திறமை, மஹான்களின் சந்திப்பு, பதவி உயர்வு, குலதெய்வம் வழிபாடு ஆகியவற்றை காணமுடியும்.
இப்பொழுது ஐந்தாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் குழந்தை பாக்கியம் பெற்றவனாகவும் அந்த குழந்தைகள் நல்ல பெயர் பெற்று நலமுடன் வாழும். மஹான்களிடம் ஆசி பெறுவான் அரசாங்கத்திலும் மக்களிடம் நல்ல பெயர் பெற்று விளங்குவான்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் பிள்ளைகளால் தனம் சந்தோஷம் நிறைந்து இருக்கும் பக்தி விசுவாசத்துடன் பிள்ளைகள் இருப்பார்கள் கல்வியில் தேர்ச்சி நல்ல அறிவுடன் இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல வருமானம் குடும்பத்திற்க்கு கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் உண்டாகும். புராணங்கள்இ சாஸ்திரங்கள் மீது ஈடுபாடு இருக்கும். பிள்ளைகளால் ந்ன்மை ஏற்படாது.
ஐந்தாம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும் வண்டி வாகனம்இ நிலபுலங்கள் கிடைக்கும். பெரிய மனிதர் தொடர்பு கிடைக்கும்.
குடும்பத்தை கௌருவத்துடன் நடத்துபவராக இருப்பார்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் உயர் பதவிகளில் இருப்பார்கள் படித்த அறிவாளிகளின் சமூகத்திலும் சுற்றத்திலும் வாழ்க்கை நடத்துவார்கள் கல்வியில் நல்ல ஞானம் இருக்கும். அரசாங்கத்தில் உயர்பதவிகள் வசிப்பார்கள். ஐந்தாம் வீட்டில் சுபகிரங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ராஜயோகம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்பட்டாலும் எதிரிகளாக மாறுவார்கள். புத்திரர்களால் நன்மையே லாபமே ஏற்படாது. இவர்களுக்கு ஞாபசக்தி குறைவு. பெரியவர்களிடம் விரோதம் ஏற்படும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. மனைவியின் குடும்பத்தாரால் மனஅமைதி குழையும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும் சிரமமாக குடும்பத்தை நடத்துவார். நல்ல வருமானம் இருக்காது.
ஐந்தாம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர விருத்தி இருக்கும். புத்திரர்களால் சந்தோஷங்களும் சுகமும் ஏற்படும். கல்வியில் பிரகாசத்துடன் விளங்குவார்கள். தெய்வீக வழிபாடுகளில் பற்றுதலுடன் இருப்பார்கள் .
ஐந்தாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள். மதங்களை பரப்புவதில் ஆர்வம் இருக்கும். புத்திரர்களால் நல்ல தொழில்கள் அமையும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் குடும்பம் அமைதியும் சந்தோஷத்தையும் அடையும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் மனைவிக்கு அடிக்கடி கர்ப்ப சிதைவு ஏற்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருக்கமாட்டார்கள். குடும்பம் அமைதி இல்லாமல் இருக்கும்.
இதுவரை பொறுமையாக படித்ததற்க்கு மிக்க நன்றி.
-----------_____________________________________________________________________________-----
ஆறாம் வீட்டு அதிபதி வெவ்வேறு வீடுகளில் அமர்ந்திருப்பதால் ஏற்படும்
பொதுப் பலன்கள் (The results of Sixth Lord occupying different houses)
1.
முதல் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying lagna in a horoscope)
நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புத்
துறையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கும். சாதாரண ராணுவ வீரராகவோ
அல்லது காமாண்டராகவோ பணிபுரிவார். அல்லது காவல் துறையிலோ அல்லது
சிறைத்துறையிலோ பணிபுரிவார். ஜாதகத்தின் மேன்மை அளவை வைத்து
அதில் பெரிய பதவி வரைக்கும் சென்று அமரக்கூடியவராகவும் இருப்பார்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் திருட்டுத்தொழிலோ அல்லது ஒரு பெரிய மோசடிக் கூட்டத்திலோ
பணியாற்ற நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying second house in a horoscope)
இது நல்ல அமைப்பு அல்ல! இது குடும்ப வாழ்க்கைக்கும், நிதிநிலைக்கும்,
கண் பார்வைக்கும், பேச்சுத்திறமைக்கும் உரிய வீடாகும். இந்த வீட்டில்
ஆறாம் அதிபதி வந்து அமர்ந்தால், ஜாதகனுக்குப் பார்வைக்கோளாறுகள்,
பற்சிதைவுகள் ஏற்படும். திக்குகின்ற பேச்சு நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கை
தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்ததாக இருக்கும். எதிரிகளால்
பண இழப்புக்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அது அந்த தீய கிரகத்தின்
தசா புத்தியில் ஏற்படும். அதே அமைப்போடு சுக்கிரனும் நீசமாகியிருந்தால்
ஜாதகன் வறுமையில் உழல்வான். பசிக்கு உணவின்றி பட்டினி கிடக்க
நேரிடும்.
-----------------------------------------------------------------------------------------------------
3
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying third house in a horoscope)
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும். அல்லது உடன்
பிறப்புக்களுக்கு அடிக்கடி நோய் நொடிகளை ஏற்படுத்தும். அதன் பொருட்டு
ஜாதகனுக்கு பண இழப்புக்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அல்லது இங்கே வந்து அமரும் ஆறாம் அதிபதி நீசமாகியிருந்தால் ஜாதகன்
வீட்டின் கடைசி ஆண் குழந்தையாக இருப்பான். ஜாதகியாக இருந்தால்
அவளுக்கு அடுத்து அவள் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்காது.
--------------------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fourth house in a horoscope)
ஜாதகன் ஒரு மோசமான வீட்டில் குடியிருப்பான் அல்லது மோசமான சூழலில்
அவன் வீடு இருக்கும். கல்வி தடைப்பட்டுவிடும். ஜாதகன் தன் அன்னையைக்
கைவிட்டுவிடுவான். தாய் மாமாக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பார்கள்
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
பெற்ற தாயுடனான உறவு தர்க்கங்களால், சண்டைகளால் சீர்கெட்டு இருக்கும்.
முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை நடத்திக்
கொண்டிருப்பான். குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fifth house in a horoscope)
நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான். தாயார் மூலம் மாமா வழிச்
சொத்துக்கள் கிடைக்கும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மனப் போராட்டம் உடையவனாக இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying his own house in a horoscope)
தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை
உடையவனாக இருப்பான். தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
இந்த வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய
உறவுகளுடன் பகை ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
7
ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying seventh house in a horoscope)
இந்த அமைப்புள்ள ஜாதகன் தாய்வழி மாமா மகளையோ அல்லது தந்தை
வழி அத்தை மகளையோ திருமணம் செய்துகொள்வான்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் விவாகரத்துப் பெற்றவனாக இருப்பான்.அல்லது மனைவி இளம்
வயதிலேயே இறந்து போயிருப்பாள். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான்
நவாம்சமும் கெட்டிருந்தால் (ஏழாம் வீடு)ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக
அழகிழந்தவளாக இருப்பாள். இதே வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின
அதிபதியும் கூட்டணி சேர்ந்தால், ஜாதகன் ஆண்மைக் குறைபாடுகள்
உடையவனாக இருப்பான். தீயபெண்களின் சகவாசத்தால் அடிக்கடி
தொல்லைகளுக்கு ஆளாகுபவனாக இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eigth house in a horoscope)
ஜாதகன் மத்திம ஆயுள் உடையவனாக இருப்பான்.
(He will die in the middle age). இது பொது விதி!
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் இதற்கு விதிவிலக்கும் உண்டு!
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவனாக
இருப்பான். பெண் வேட்டையில் ஈடுபடுபவனாக இருப்பான். மற்றவர்களை
இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying ninth house in a horoscope)
நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால், ஜாதகனின் தந்தை நீதித்துறை
யில் பணியாற்றுபவராக இருப்பார். தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில்
இருப்பார்கள்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
தந்தையுடன் சச்சரவுகள் ஏற்பட்டு சுமூகமான உறவு இருக்காது.
வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
உறவினர்களால் தீமைகள் ஏற்படும். நன்றி கெட்ட செயல்களைச் செய்ய
நேரிடும். அறவழிகளுக்கு எதிரான செயல்களைச் செய்ய நேரிடும்
--------------------------------------------------------------------------------------------------
10
பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying tenth house in a horoscope)
பாவச் செயல்கள், தீய செயல்களைச் செய்ய நேரிடும் அல்லது தொழிலாகக்
கொள்ள நேரிடும். இறையுணர்வாளர்கள் போல இருப்பார்கள். ஆனால்
கேவலமான வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சிலர் போலிச்
சாமியார்களாக இருப்பார்கள்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்வார்கள். தானும்
பயப்படக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பார்கள்.கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வார்கள். கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eleventh house in a horoscope)
மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான
புகழுடன் வாழ்வார். அவரால் ஜாதகன் பல ஆதாயங்களைப் பெறுவார்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஏழ்மை தாண்டவம் ஆடும். மோசமான சூழலில் வாழ நேரிடும். அடிக்கடி
சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெறவும் நேரிடும்
------------------------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying twelth house in a horoscope)
வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகனால்
மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்
--------------------------------------------------------------------
ஆறாம் வீடு
இப்பொழுது நாம் ஆறாம் வீட்டை பற்றி பார்க்கலாம். ஆறாம் வீடு சத்ருஸ்தானம் ரோக ஸ்தானம் ஆகும். கடன், வியாதி பகைவர்களின் தொல்லை, சிறைபடுதல், விரோதங்கள், விஷபீடைகள், திருட்டுப்போதல் ஆகியவற்றைப் பற்றி ஆறாம் வீட்டின் மூலம் நாம் அறியலாம்.
இப்பொழுது ஆறாம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஆறாம் வீட்டு அதிபதி 1 ஆம் வீட்டில் இருந்தால் சதா வியாதிகளும் நோய் நொடிகளும் இருக்கும் தைரியமில்லாதவராகவும் எதிரிகளால் தொல்லை இருந்துகொண்டே இருக்கும்.
ஆறாம் வீட்டு அதிபதி 2 ஆம் வீட்டில் இருந்தால் வாக்குவன்மை இருக்காது நல்ல பேச்சு இருக்காது. அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வார்கள். கல்வி வராது. கண் கோளாறு இருக்கும்.
ஆறாம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் இருந்தால் சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
ஆறாம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் தாயாருடைய உடல் நலம் பாதிக்கப்படும் நிலம் வீடுகள் இருந்தாலும் வருமானம் இருக்காது. கடன்களால் அந்த சொத்துக்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகமாகும் எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பார்கள் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவகிக்க வேண்டும். பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள்.
ஆறாம் வீட்டு அதிபதி 6 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லை படுத்தி எடுத்துவிடும். சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம் இருக்கும்.
ஆறாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் இல்லற வாழ்க்கை கசக்கும். இருவருக்கும் விவாகரத்துவரை கொண்டுவிடும். மனம் அமைதி இருக்காது.
ஆறாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் எட்டாம் வீட்டில் வறுமைகள் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி வரும்.
ஆறாம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் தந்தை வழி சொத்து நாசமாகும். பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள். பெரியவர்களுடன் சண்டை ஏற்படும்.
ஆறாம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் அவன் சம்பாதிக்கும் வழி திருட்டுதனமாக இருக்கும். பிறர் பொருளையே நம்பி இருப்பான். ஊர் சுற்றி திரிவான். மக்கள் மனதில் அயோக்கியன் என்று பெயர் எடுப்பான். சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி பெருவான்.
ஆறாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் வியாதியுடன் இருப்பார்கள் கடன் இருக்கும். சிலபேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.
ஆறாம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும. அனாவசியமான செலவு இருக்கும. குறியில் நோய் ஏற்படும்.
____________________________________________________________________________
ஏழாம் வீடு
ஏழாம் வீட்டைப்பற்றி இப்பொழுது பார்க்கலாம். ஏழாம் வீட்டின் கிரக குணங்களை கொண்டு எப்படி பட்ட கணவன் அல்லது மனைவி வருவாள் என்று கூறலாம். ஆசை சொத்துக்கள் சேர்க்கை , மரணம் ஆகியவற்றை கூறலாம்.
இப்பொழுது ஏழாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டின் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அவன் கவர்ச்சி கொண்டவனாக இருப்பான். அவனிடம் பெண்கள் அன்பு வைத்து இருப்பார்கள் பாபகாரியகள் அறியாது காமகாரியங்கள் செய்வான். இவர்களுக்கு மனைவியின் மூலம் வருமானம் இருக்கும்.
ஏழாவது வீட்டின் கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் சொத்துக்கள் வரும். மனைவியின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். மனைவியின் மூலமும் உறவினர்கள் மூலமும் உதவி இருக்கும்.
ஏழாம் வீட்டு கிரகம் மூன்றாம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷம் மனைவிக்கு மாரகம் ஏற்பட்டு மறு விவாகம் செய்துக்கொள்ளவும் கூடும். அதைப்போல் அதிகமாக காமமோ பற்று இருக்காது.
ஏழாம் வீட்டு கிரகம் நான்காம் வீட்டில் இருந்தால் அமர்ந்திருந்தால் எதிர்பார்க்கும் இன்பத்தை அடைவான். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும் யோக்கியத்தை அம்சங்களையும் அவனுக்கு வரும் மனைவி பெற்று இருப்பாள்.
ஏழாம் வீட்டு கிரகம் ஐந்தாம் வீட்டில் இருந்தால் அவருக்கு களத்திர தோஷம் பெற்றவனா இருப்பான் சினிமா போன்றவற்றில் ஈடுபாடு இருப்பான். காதல் மணம் முடிப்பான் ஆனால் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது.
ஏழாம் வீட்டு கிரகம் ஆறாம் வீட்டில் இருந்தால் மனைவி வியாதிகள் கொண்டவளாக இருப்பாள். கணவனக்காக எதிராக கலகங்கள் விரோதங்கள் செய்வாள் மனைவியினால் ஆதரவு இருக்காது.
ஏழாம் வீட்டு கிரகம் ஏழாவது வீட்டில் இருந்தால் ஜhதகன் மனைவியின்
வீட்டில் அடிமையாக இருப்பான் மனைவியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
ஏழாம் வீட்டு கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தால் அவனக்கு வரும் மனைவியினால் அவன் கஷ்டங்களை வறுமைகளை அனுபவிப்பான். குடும்பத்தை ஓழுங்காக நடத்தும் பொறுப்பு அற்றவளாகவும் வீனான ஆசை கொண்டவளாகவும் வருமான குறைவுடனும் இருப்பாள்.
ஏழாம் வீட்டு கிரகம் ஓன்பதாம் வீட்டில் இருந்தால் பெரியவர்களின் அனுக்கிரக்தாலும் பூர்வ புண்ணியத்தாலும் சிறு வயதில் திருமணம் நடைபெறும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.
ஏழாம் வீட்டு கிரகம் பத்தாவது வீட்டில் இருந்தால் வரும் மனைவியால் சம்பாத்தியம் இருக்கும். சொத்துக்களும் நகைகளும் சேரும்.
ஏழாம் வீட்டு கிரகம் பதினேராவது வீட்டில் இருந்தால் நல்ல செல்வத்துடன் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் அந்தஸ்துடன் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும்.
ஏழாம் வீட்டு கிரகம் பன்னிரேண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியினால் அதிகமான தன சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க்கை வாழ ஆசைபடுவாழ். கடன்கள் வாங்கியும் சொத்துக்கள் விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கும்.
-------------------------------------
எட்டாம் அதிபதி
1. எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்: கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால். கடனிலேயே வாழ வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை கூடவே இருக்கும் எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் வறுமையில் வாழ நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பான். விபத்துக்கள் நேரிடும்.
2. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்: கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
3. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்: உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும். மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
4. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்: தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்.
5. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்: பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
6. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்: அற்ப ஆயுள்-(sub-sub test onlty) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
7. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்: பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
8. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு: மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம். எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும். எட்டாம் அதிபதி (சேர்க்கை அல்லது பார்வையால்) கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார். எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்
9. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்: பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும். இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
10. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்: ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும். இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும். எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்: மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான். எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.
12. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்: தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள். ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும். சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான். எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்
_____________________________________________________________________________
எட்டாம் வீடு
எட்டாவது வீட்டைக்கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். எட்டாவது வீடு மறைவு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு மரணம் இயற்கையானதாக வருமா அல்லது துர்மரணமா என்று பார்பதற்க்கும் எட்டாம் வீட்டை வைத்துதான் பார்க்கவேண்டும். ஒருவரின் துன்பங்கள் தடைகள் தோல்விகள் வாழ்க்கையில் படபோகிற கஷ்டங்கள் ஆகியவற்றையும் எட்டாம் வீட்டை வைத்து சொல்லலாம்.மூதாயர்களின் சொத்து உயில்கள் இன்ஷீரன்ஸ். பிராவிடண்ட் பண்டு ஆகியவற்றையும் எட்டாம் வீட்டைக்கொண்டே பார்க்க வேண்டும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிகவும் முக்கியம் அவர்களின் மாங்கல்ய பாக்கியம் எட்டாம் வீட்டை கொண்டே கணிக்க முடியும்.
இப்பொழுது எட்டாம் வீட்டின் அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
எட்டாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பான்.
எட்டாம் வீட்டு கிரகம் இரண்டாம் வீட்டில் இருந்தால் வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பார்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. உடல் பலம் குறைந்து காணப்படும். பைத்தியம் பிடித்தவன் போல் இருப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 3 ம் வீட்டில் இருந்தால் சகோதரர்கள் ஒற்றுமை இருக்காது. தைர்யம் குறைந்து காணப்படும். மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். பெரியவர்களால் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்கள் பலவிதங்களில் நாசமாகும்.
எட்டாம் வீட்டு கிரகம் 4 ம் வீட்டில் இருந்தால் தாயாரும் தாய்வழிமாமன் முதலானவர்களின் ஆதரவு இருக்காது. குடும்பத்தில் சதா சச்சரவுகள் தோன்றும். சிரமாக குடும்பத்தை நடத்தவேண்டி வரும். முன்னோர்களின் சொத்துக்கள் அழியும்.
எட்டாம் வீட்டு கிரகம் 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்களால் மன அமைதி இல்லாமலும் சதா பிரச்சினைகளுமாக இருக்கும். உடல் நோய் இருந்து வரும். பிள்ளைகளுடன் விரோதம் இருந்துவரும்.
எட்டாம் வீட்டு கிரகம் 6 ம் வீட்டில் இருந்தால் உடல் நலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவனாகவும் தந்திரவானகவும் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பான்.
எட்டாம் வீட்டு கிரகம் 7 ம் வீட்டில் இருந்தால் மனைவியை சதா சண்டை போட்டுக்கொண்டும் மனைவியால் கலகம். மனைவி அற்ப ஆயுள் உள்ளவராகவும் இருப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 8 ம் வீட்டில் இருந்தால் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்துவான் நன்மை தீமை அறியாது நினைத்த மாத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அவமானத்தையும் அலைச்சல்களை அடைவான்.
எட்டாம் வீட்டு கிரகம் 9 ம் வீட்டில் இருந்தால் தந்தை சொத்துக்கள் நாசமாகும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும்.
எட்டாம் வீட்டு கிரகம் 10 ம் வீட்டில் இருந்தால் வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டார்கள். அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அரசாங்கத்தில் கெட்ட பெயர் எடுப்பார்கள்.
எட்டாம் வீட்டு கிரகம் 11 ம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர்கள் சகோதரிகளுக்கு கண்டம் குழந்தைகளால் வருமானம் ஏற்படும்.
எட்டாம் வீட்டு கிரகம் 12 ம் வீட்டில் எப்பொழுதும் ஊர் சுற்றும் குணம் ஏற்படும். வண்பு வழக்குகள் ஏற்படும். இன்பசுகம் ஏற்பட்டு கையில் உள்ள பணத்தை இழப்பார்கள்.
_______________________________________________________________________________________________________
ஒன்பதாம் அதிபதி ஒன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்: நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும். சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் தன் தந்தை, பெரியவர்கள், குரு ஆகியோரின் மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டான். மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான். உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் இணைந்து, லக்கினத்திலோ அல்லது வேறு நல்ல இடங்களிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால்மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும்.
53. ஒன்பதாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார். தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன் தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில் இருக்கும். நன்றாக இல்லாவிட்டால் பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
54. ஒன்பதாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால் பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன், சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகத்தில் கிரகங்கள் எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும். வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.
55. ஒன்பதாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் நன்றாக பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான். உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும் நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான். நன்றாக இல்லாவிட்டால் வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும். இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும். ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள் அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.
56. ஒன்பதாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால் நன்றாக ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும் இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள். ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும். ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார். மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய வாழ்க்கை வாழ்வான்.
57. ஒன்பதாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை அடையமுடியும். நன்றாக இல்லாவிட்டால் தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக் கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும். பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல! எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார். அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்!
58. ஒன்பதாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக் கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின் சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும் ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும். ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயேவாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது.
59. ஒன்பதாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின் சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும். நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும். வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடுவான். தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும். இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.
60. ஒன்பதாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார். தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில் வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான். அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர் அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில் வாழ்வார்கள். நன்றாக இல்லாவிட்டால் ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.
61. ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான். அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர் அமைச்சராகக்கூட ஆவதுண்டு! தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின் தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான்.
62. ஒன்பதாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே இருப்பார் நன்றாக இல்லாவிட்டால் நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும் சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில் செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்
63. ஒன்பதாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் நன்றாக இருந்தால் (If well placed): பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை இழக்க நேரிடும். நன்றாக இல்லாவிட்டால் ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக் கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார். எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல! பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும் பாதிக்கும்.
________________________________________________________________________________________________________
ஒன்பதாம் வீடு
ஒன்பதாவது வீட்டின் பலன் பிதுருக்கள் தகப்பனார் உயர்கல்வி முன்பின் தெரியாதவர்கள், தெய்வதரிசனம் போன ஜென்மத்து அதிர்ஷ்டம்,ஒருவர் செய்யும் தர்மம், நீண்ட தூர பயணம் அதாவது வெளிநாடு ஆகியவற்றை பற்றி தெரிவிப்பது இந்த வீடுதான்.
ஒன்பதாவது வீட்டுக்கிரகம் லக்கினத்தில் இருந்தால் அதாவது முதல் வீட்டில் இருந்தால் பெரியவர்களிடம் பிதா, குரு, தெய்வம் ஆகியவற்றுகளிடம் பிரியத்தை கொண்டவர்களாகவும் தான தர்மங்கள் செய்வர்களாகவும் இருப்பார்கள். பிதுர் சொத்துக்கள் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் செல்வாக்குடன் முன்னோர்கள் சொத்துக்களை பெற்றவராகவும் இருப்பார்கள். அயல்நாட்டு மூலம் பணவரவு இருக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு இருக்கும். பிதுர் தோஷம் பெற்றவனாக இருப்பான்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். வண்டி வாகனம் சொத்துக்கள் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல பாக்கியத்துடன் இருப்பார்கள் அரசாங்கத்தில் பெரியபதவி கிடைக்கும. தெய்வீக வழிபாடுகள் நிறைந்து காணப்படும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டு பயணம் கிட்டும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும் . முன்னோர்களின் சொத்துக்கள் கடன்களிலால் அழியும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும் அந்நிய பெண் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். தந்தையின் சொத்துக்களால் பயன் பெறுவார்கள்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்ககூடும். தந்தையார் இறந்து போக வாய்ப்பு உண்டு. புத்திர தோஷம் ஏற்படும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தகப்பனாரின் சொத்துகள் கிடைக்கும். தான தர்மங்கள் குடும்பத்தில் நிறைந்து விளங்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். தந்தையாரின் சொத்துக்கள் விருத்தி ஆகும். பெரியவர்களிடத்தில் மரியாதையாக இருப்பார்கள்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் தெய்வகாரியங்கள் வீட்டில் நடைபெறும். தந்தையால் லாபம் இருக்கும் அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் தந்தையாருக்கு கெடுதல் உண்டாகும். வெளிநாட்டு பயணம் கிடைக்கும். தந்தையாரின் சொத்துகள் நிலைக்காது.
ஒன்பதாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.
பரிகாரம்
இராமேஸ்வரத்தில் திலா ஹோமம் செய்ய வேண்டும். மாத அமாவாசை விரதம் இருக்க வேண்டும். அமாவாசை அன்று பசு மாட்டிற்க்கு அகத்திகீரை கொடுக்கவேண்டும். வாழ்வில் ஒருமுறையாவது இராமேஸ்வரம், காசி சென்றுவரவேண்டும்.
____________________________________________________________________________________
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)
2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,
3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing
4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining
5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship
6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.
7.
Seventh:
business, trade, merchant, foreign business.
8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.
9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.
10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.
11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports
12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாவது வீடு Rajesh subbu
பத்தாவது வீடு ஜீவனஸ்தானம் மற்றும் கர்மஸ்தானம் எனப்படும். ஒருவருக்கு எப்படி பட்ட தொழில் அமையும் என்று பார்ப்பதற்க்கு இந்த வீட்டை வைத்துதான் முடிவு செய்யபடவேண்டும். சோதிடம் எழுதப்பட்ட காலத்தில் குறைந்த தொழில்கள்தான் இருந்தன அதனால் தொழில்களை சிறிய முயற்சியில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்று நிறைய தொழில்கள் வந்துவிட்டன. அதனால் கண்டுபிடிப்பது கடினம்
பத்தாவது வீட்டு ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.
பத்தாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால் அதாவது 1 ம் வீட்டில் இருந்தால் சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பார். செல்வம் சொத்துக்கள் கல்வி தான தருமங்களுடன் அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருப்பார். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
பத்தாவது வீட்டு அதிபதி 2 ம் வீட்டில் இருந்தால் நல்ல அழகுடனும் வாக்குவன்மை திறம்பட பேசும் சக்தி செல்வ செழிப்புடனும் இருப்பார்கள். சொத்துகள் கிடைக்கும் நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
பத்தாவது வீட்டு அதிபதி 3 ம் வீட்டில் இருந்தால் சகோதர தோஷம் ஏற்படும். சகோதரர்கள் இருந்தாலும் செல்வாக்குடன் இருக்கமாட்டார்கள்.
பத்தாவது வீட்டு அதிபதி 4 ம் வீட்டில் இருந்தால் அழகான வீடு, செல்வ செழிப்பான வாழ்க்கை தாய் வழி ஆதரவு முதலியன உண்டாகும். வண்டி வாகனம் அமையும். பூமியிலிருந்து புதையில் போன்றவை கிடைக்கும்.
பத்தாவது வீட்டு அதிபதி 5 ம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் அமையும் சந்தோஷ செல்வாக்குடன் கூடின வாழ்க்கை அமையும். பெரியமனிதர்களின் நட்பை பெறுவார்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பார்கள்.
பத்தாவது வீட்டு அதிபதி 6 ம் வீட்டில் இருந்தால் பிறர் பொருளை அபகரிக்கும் குணம் இருக்கும். உடம்பு மெலிந்தாக இருக்கும்.
பத்தாவது வீட்டு அதிபதி 7 ம் வீட்டில் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் மனைவி ஒற்றுமையுடன் இருக்கமாட்டாள். மனைவி மூலம் பொருள் சேரும்.
பத்தாவது வீட்டு அதிபதி 8 ம் வீட்டில் இருந்தால் நல்ல ஆயுள் உண்டு. புத்திர தோஷம் ஏற்படும். மனைவியுடன் திருப்தியான சந்தோஷங்களில் ஈடுபட முடியாது.
பத்தாவது வீட்டு அதிபதி 9 ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரின் சொத்துக்கள் விரயம் ஆகும். புத்திரவிருத்தி இருக்காது. சிரம வாழ்க்கைகளை அனுபவிக்கும்படி இருக்கும். தானதருமங்களிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
பத்தாவது வீட்டு அதிபதி 10 ம் வீட்டில் இருந்தால் பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். உலக விசயங்களில் நல்ல அறிவு இருக்கும்.
பத்தாவது வீட்டு அதிபதி 11 ம் வீட்டில் இருந்தால் செய்யும் காரியங்களில் ஒவ்வொன்றிலும் லாபத்தை பெறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
பத்தாவது வீட்டு அதிபதி 12 ம் வீட்டில் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். புத்திரர்களால் கஷ்டங்கள் ஏற்படும். அனாவசியமான செலவுகள் இருக்கும். சொத்துக்கள் அழியும்
_______________________________________________________________________
பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில்
வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ
அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான்.
போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house
லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை
அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில்
இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால்
போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின்
தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
Tenth lord placed in the 2nd house
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன்.
இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும்
கை நிறையப் பொருள் ஈட்டுவான்.
தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்.
குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை
ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும்
தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.
பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் பெரும் நஷடங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும்
தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Tenth lord placed in the 3rd house
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை
அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில்
பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும்
இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல்
மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால்
இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும்
அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Tenth lord placed in the 4th house
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடை
யவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால்
பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்
களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார்.
தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்
களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த
அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்
களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும்,
பயனுள்ளதாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
Tenth lord in the 5th House
ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த
அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம்
துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும்.
இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள
பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும்
இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த
முயல்வார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
Tenth lord in the 6th House
ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில்
இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை
அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர்
பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள்.
அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள்.
ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள்
செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு
அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
Tenth lord in the 7th House
ஏழாம் வீட்டில் இருந்தால்:
பாத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை
மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும்
அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து
கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில்
சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய
வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி
தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள்,
அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள்
கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும்.
இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
Tenth lord in the 8th House
எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது
வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி
களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள்.
பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும்
இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும்,
விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப்
11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம்
கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Tenth lord in the 9th House
ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர்
என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்
களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய
வராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டு
தலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள
மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு
இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது
போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Tenth lord in the Tenth House
பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால்
தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு
கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும்.
தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக
இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு
உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும்
உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை,
பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11
Tenth lord in the 11th House
பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும்,
மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக
இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு
வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும்
இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலரலும் விரும்பப்படுவார்கள்.
இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு
செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Tenth lord in the 12th House
பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க
நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க
நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முரையற்று நடந்தால்
பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த
அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ
அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை
மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவ்ற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்கு தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு
அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்
முதல் விதி.
அதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;
Maximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்
வருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்
குரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.
வியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து
லட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
டனும் இருப்பான்.
3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
வாழ்வான்.
4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்
மூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்
அவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.
5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு
இடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்
வாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்
செல்பவர்களாகவும் இருப்பார்கள்.
6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்
புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்
விளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்.
7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்
லாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க
நேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்
உண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்!
8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு
அவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
திருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்
சிறப்புப் பெற்று விளங்குவான்.
9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்.
10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.
11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.
12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,
ஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
வயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.
13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,
ஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,
வியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்
இருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.
____________________________________________________________________________
12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான்.
ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான்.
12ஆம் அதிபதியுடன் ஆறாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து லக்கினத்தில்
இருந்தால் ஜாதகன் நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
(உதாரணத்திற்கு சிம்ம லக்கின ஜாதகத்திற்குப் பன்னிரெண்டாம் அதிபதி
சந்திரன். ஆறாம் வீட்டு அதிபதி சனி. சந்திரனும் சனியும் கூட்டாக சிம்ம
லக்கினத்திலேயே வந்து அமர்ந்திருந்தால் என்பது போல இதற்குப் பொருள்
கொள்ளவும்)
இதே அமைப்பில் எட்டாம் வீடு பாதிப்படைந்திருந்தால், ஜாதகன் அல்ப
ஆயுளில் போய்விடுவான்.
பன்னிரெண்டாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகன் புத்திசாலித்தனமில்லாதவனாக இருப்பான். கருமியாக இருப்பான்.
பலராலும் வெறுக்கப் படுபவனாக இருப்பான்,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல்
படுவான். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவான். தேவையில்லாத
சிக்கல்களில் மாட்டிக் கொள்வான். வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிட
முடியாது. கண் பார்வை மங்கிவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
பன்னிரெண்டாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து வலுவாகவும் இருந்து இதே
இடத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கூறிய குறைகள் குறைந்து, பணம்
கையில் தங்கும் அமைப்புடன் இருப்பான். அதோடு எதையும் சமாளிக்கும்
பேச்சுத் திறமை உள்ளவனாக இருப்பான்.
பன்னிரெண்டாம் அதிபதி இங்கே தீய பார்வைகளுடன் அமர்ந்திருந்தால்
ஜாதகன் வாயைத் திறந்ததலே அது சண்டை, சச்சரவுகளில் போய் முடிவதாக
இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பான். அவன்
தன்னுடைய சகோதரனை இழக்க நேரிடலாம். எப்பவும் அழுக்கான தோற்றத்துடன்
திரிபவனாக இருப்பான்.தீயகிரகங்களின் பார்வை இங்கே வந்து அமரும்
கிரகத்தின் மீது விழுந்தால் ஜாதகனுக்குக் காது சமபந்தப்பட்ட நோய்கள்
உண்டாகும் (பார்க்கும் தீய கிரகத்தின் தசா புத்திகளில் உண்டாகும்)
ஜாதகன் தன் உடன்பிறப்புக்களுக்காக பணத்தை அதிகமாக செலவிட நேரிடும்
ஜாதகன் எழுத்தாளனனால், வெற்றி பெற்ற எழுத்தாளனாக முடியாது.
கூட்டத்தோடு கூட்டமாக வேலை செய்ய நேரிடும். அதிக வருமானமும்
இருக்காது.
பன்னிரெண்டாம் அதிபதியும், இரண்டாம அதிபதியும் கூட்டாக மூன்றாம்
இடத்தில் இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால்:
சிறுவயதிலெயே தாயை இழக்க நேரிடும். மனப் போராட்டங்கள் நிறைந்திருக்கும்
தேவையில்லாத கவலைகள் வாட்டும். உறவினர்களில் சிலர் விரோதமாக
இருப்பார்கள்.குடியிருக்கும் இடங்களில் வீட்டுக்காரனின் தொல்லை இருக்கும்.
நிம்மதி இருக்காது.சாதாரண பேட்டைகளில் குடியிருக்க நேரிடும்.
பன்னிரெண்டாம் இடத்து அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் அதிகமாகி அனுதினமும் தொல்லை
கொடுப்பதாக இருக்கும்.
ஜாதகனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், சொந்த வண்டி
வாகனங்கள் இருக்கும் ஆனாலும் இந்த அமைப்பால் அதுவும் பிரச்சினை
தருவதாகவே இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால்
பிரச்சினை இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.மிகுந்த இறைபக்தி உடையவனாக
இருப்பான். நினைத்தால் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவான். துணிவில்லாத
வனாக இருப்பான்.மனப்போராட்டங்கள் உடையவனாக இருப்பான்.
தான்தான் உலகத்திலேயே அதிகமாகத் துன்பப்படுபவனாக நினைத்துக் கொண்டு
சதா சர்வ காலமும் வருத்தத்திலேயே மூழ்கி விடுவான்.
இந்த அமைப்புள்ளவன் விவசாயம் செய்தால், அவன் தோட்டத்துப் பயிர்களுக்கு
அடிக்கடி, பூச்சிகளாலும், செடி நோய்களாலும் அழிவு வந்து, அதனால் அவதிப்
படுவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.செழிப்புள்ள
வனாக இருப்பான். எல்லா வசதிகளும் நிறைந்தவனாக இருப்பான்.ஆரோக்கி
யமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பான்,
எதிரிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு ஒன்றும் இல்லாத
வர்களாக ஆக்கிவிடுவான்.
சிலசமயம் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.ஆனாலும் முடிவு
அவனுக்குச் சாதகமாகவே அமையும்.
இதே அமைப்பில், இந்த இடம் தீய கிரகத்தின் பார்வை பெற்றால் (அதாவது
வந்து அமரும் பன்னிரெண்டாம் அதிபதி, தீய கிரகத்தின் பார்வை பெற்றால்)
பாவச் செயல்களைச் செய்வான்.சட்டென்று கோபப்படுபவனாகவும், சட்டென்று
உணர்ச்சி வசப்படுபவனாகவும் இருப்பான். சிலருக்குத் தன் தாயையே வெறுக்கும்
சூழ்நிலை உண்டாகும். பெண் பித்தனாக இருப்பான். அதனால் பல பிரச்சினை
களைச் சந்திக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு மிகவும் வறுமையில் வளர்ந்தவள் மனைவியாகக் கிடைப்பாள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும்.சிலருக்கு பிரிவில் முடிந்துவிடும்
அப்படி மனைவியைப் பிரிந்த ஜாதகன் சன்நியாசியாக மாறிவிடுவான். சிலர்
சிலர் உடல் உபாதைகளாலும், உணர்வுப் போராட்டங்களாளும்ச் சீக்காளியாகி
பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள்.
எதையும் கற்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.அதே போல சொத்து
சுகங்களும் இல்லாமல் போய்விடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்.மக்களால் அறியப் பட்டவனாக இருப்பான்.
சொகுசான் வாழ்க்கை அமையும். பல வேலையாட்கள் வேலை செய்ய
செள்கரியமான வாழ்க்கை வாழ்வான். பிறர் மரணத்தால், இவனுக்கு சொத்துக்கள்
கிடைக்கும் அமைப்பு உண்டு. சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடைய
வனாக இருப்பான்.தர்ம சிந்தனைகள் உடையவன்.புகழுடையவன். அன்புடையவனாக
நட்புடையவனாக இருப்பான்.நல்ல பண்புகளை உடையவனாக இருப்பான்.
அதன் மூலம் பலரையும் கவரக்கூடியவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான
ஜாத்கன் இருப்பான். அதிகமான சொத்துக்கள் சேரும். நேர்மையானவனாக
இருப்பான்,பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
தந்தையை இளம் வயதிலே பறிகொடுக்க நேரிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:
கடின உழைப்பாளி. வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள்
மேற்கொள்ள நேரிடும். சிலருக்குச் சிறைக் காவலர் வேலை கிடைக்கும்.
சிலருக்கு மருத்துவத் துறையில் வேலை கிடைக்கும். சிலர் மாயானங்களில்
பணி செய்ய நேரிடும்.
ஜாதகனுக்கு தன் குழந்தைகளால் எந்த செளகரியமும், மகிழ்ச்சியும்
கிடைக்காது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான்.
அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது.
குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்
சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக்
கைப் பொருளை இழக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:
பன்னிரெண்டாம் அதிபதி தன் சொந்த வீட்டிலேயே இருந்தால் ஜாதகன்
தர்மச் செலவுகளை அதிகமாகச் செய்பவனாக இருப்பான். நல்ல
கண் பார்வை இருக்கும். அதீதமான படுக்கை சுகம் கிடைக்கும்.
சிலர் விவசாயடததில் ஈடுபடுவார்கள்
இந்த அமைப்பை ஒரு தீய கிரகம் பார்த்தால், ஜாதகன் ஓய்வு ஒழிச்சல்
இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டி
ருப்பவனாகவும் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment