தர்வ வேதம் தவிர வராஹமிஹிரரால் ஆக்கப்பட்ட பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலிலும் வாஸ்து சாஸ்திரம் பற்றிக் குறிப்பிடத்தக்க அளவு தவல்கள் உள்ளன. மயனால் எழுதப்பட்ட மயமதம், மானசாரரால்ஆக்கப்பட்ட மானசாரம், விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய
பல நூல்கள் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்களாகும். 20 ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த
நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப்
பட்டியலிட்டிருக்கிறது.
இதில்
கண்டவை 1) விசுவதர்மம், 2) விசுவேசம், 3) விசுவசாரம், 4) விருத்தம், 5)
மிகுதாவட்டம், 6) நளம், 7) மனுமான், 8) பானு, 9) கற்பாரியம், 10)சிருஷ்டம்,
11) மானசாரம், 12) வித்தியாபதி, 13) பாராசரியம், 14) ஆரிடகம், 15)
சயித்தியகம், 16) மானபோதம், 17) மயிந்திரமால், 18) வஜ்ரம், 19) ஸௌம்யம்,
20) விசுவகாசிபம், 21) கலந்திரம், 22) விசாலம், 23) சித்திரம், 24)
காபிலம், 25) காலயூபம், 26) நாமசம், 27) சாத்விகம், 28) விசுவபோதம், 29)
ஆதிசாரம், 30) மயமான போதம், 31) மயன்மதம், 32) மயநீதி என்பனவாகும்.
இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும்
புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.
No comments:
Post a Comment