ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359
மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.
youtube
31 July 2012
கிரகங்களின் பலன்கள்
பலன்கள் லக்கினம்
1
மேஷ லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,
**** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்
களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்
களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!
சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்
இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு
அதையும் மனதில் கொள்க!
மாரக அதிபதி: (killer) சுக்கிரன்
==================================================
2
ரிஷப லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், சனி
யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன்
==================================================
3
மிதுன லக்கினம்
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி
====================================================
4.
கடக லக்கினம்
யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன்
யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன்
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
5
சிம்ம லக்கினம்
யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி
நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில்
இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம்
மாரக அதிபதி: (killer) சனி
=======================================================
6
கன்னி லக்கினம்:
யோககாரகர்கள்: சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
=======================================================
7.
துலா லக்கினம்
யோககாரகர்கள்: சனி, புதன்
யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு
நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
8
விருச்சிக லக்கினம்
யோககாரகர்கள்: குரு, சந்திரன்
யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும்
சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka)
========================================================
9
தனுசு லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன்
யோகமில்லாதவன்: சுக்கிரன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து,
கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு
அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன்.
========================================================
10
மகர லக்கினம்:
யோககாரகர்கள்: புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) செவ்வாய்
========================================================
11
கும்ப லக்கினம்
யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது
இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்
மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய்
======================================================
12
மீன லக்கினம்.
யோககாரகர்கள்: செவ்வாய், குரு
யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை
மாரக அதிபதி: (killer) சனி, புதன்
_______________________________________________________________________________
குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்
நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.
கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார்.
ஜென்மத்தில் குரு
குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும்.
குரு 2ல் இருந்தால்
தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.
குரு 3ல் இருந்தால்
குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.
குரு 4ல் இருந்தால்
கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும்.
குரு 5ல் இருந்தால்
5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும்.
குரு 6ல் இருந்தால்
குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும்.
குரு 7ல் இருந்தால்
குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும்.
8ல் இருந்தால்
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.
9ல் இருந்தால்
குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும்.
10ல் இருந்தால்
குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு.
11ல் இருந்தால்
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.
குரு 12ல் இருந்தால்
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும்.
_________________________________________________________________________
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்
ஜென்ம லக்கினத்தில்
சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல.
2ல் இருந்தால்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும்.
3ல் சுக்கிரன்
சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும்.
சுக்கிரன் 4ல்
சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள்.
5ம் வீடு
சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும்.
6ல் இருந்தால்
சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும்.
7ல் இருந்தால்
சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும்.
8ல் இருந்தால்
சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும்.
9ல் இருந்தால்
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும்.
10ல் இருந்தால்
சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும்.
11ல் இருந்தால்
சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும்.
12ல் இருந்தால்
சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும்.
___________________________________________________________________________
1ல் அதாவது லக்கினத்தில் சனி
லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்
வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல்
Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல்
++++Saturn in the Third House
Saturn in the 3rd makes one very intelligent & liberal minded.
Will have strength of character and will be adventurous.
Will have subordinates and all the comforts of life.
துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல்
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல்
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல்
Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------
7ல்
++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?
அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்
ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்
வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல்
++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.
ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்
நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல்
+++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்
ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
_______________________________________________________________________________________
1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.
3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும்.
4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.
5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது.
6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!
10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான்
12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு.
_______________________________________________________________________________
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்
1ல்
லக்கினத்தில் கேது
ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான்.
பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத
விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள்
சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும்
மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள்
சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை
மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன்
இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
-----------------------------------------------------------------------------------------
2ல்
இரண்டில் கேது!
ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk)
படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான்.
குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான்.
குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்
சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள்
மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
3ல்
மூன்றில் கேது.
ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில்
பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன்.
சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன்.
செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான
சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான்.
-----------------------------------------------------------------------------------
4ல்
நான்கில் கேது
இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு
உகந்தது அல்ல!
நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு
இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது
சேர்க்கை இருந்தால் வராது.
ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று
எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.
சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
---------------------------------------------------------------------------------------
5
ஐந்தில் கேது
ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன்
இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக
இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள்
உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.
இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக
மாறிவிடும்.
----------------------------------------------------------------------------------------
6
ஆறில் கேது
ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில்
தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக
இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக
இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை
உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும்.
வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்
----------------------------------------------------------------------------------------
7
ஏழில் கேது
ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது.
மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்
இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
கணவன் அமையக்கூடும்
------------------------------------------------------------------------------------
8
எட்டில் கேது
ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன்
சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே
உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம்
சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன்
சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள்.
சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
9
ஒன்பதில் கேது
ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு,
பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன்.
சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி
விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில்
ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான்.
சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள்
--------------------------------------------------------------------------------
10
பத்தில் கேது
மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும்.
சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன்
உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services,
time and/or effort to support a socially beneficial cause, with a defined objective
and with no financial or material reward to the donor. In a more general sense,
activity intended to promote good or improve human quality of life.
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான்.
திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான்.
கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும்.
This is the best place for professional enhancement.
---------------------------------------------------------------------------------------
11
பதினொன்றில் கேது
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம்
படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும்
உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான்
பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும்
உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும்
நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான்
---------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டில் கேது
இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு
பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை
பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம்.
ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு
என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும்
பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன்.
சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்
சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள்
---------------------------------------------------------------------------------------
லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.
இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.
மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்
நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்
ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்
ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.
எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்
ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்
பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்
பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்
பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!
1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!
ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)
செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------
3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.
தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.
இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்
ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.
(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.
சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.
மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.
சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.
சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.
சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.
சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்
ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)
நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.
ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்
சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))
பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்
சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================
சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்
சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும்.
2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார்.
3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.
4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.
5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.
6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.
9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.
10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.
வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.
12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும்.
______________________________________________________________
குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:
In the first house.: Magnetic personality, good grammarian, majestic
appearance, highly educated, many children, learned, dexterous,
long-lived, respected by rulers, philologist political success, sagacious,
stout body, able, influential leader.
Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent
speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune,
witty, good wife and family, eloquent, humorous, and dexterous.
Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family,
miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good
success, energetic, bold, taste for fine arts and literature, lived by
relatives.
Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy,
founder of charitable institutions, comfortable, good inheritance,
good mother, well read, contented life.
Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted,
a leader.
Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons,
dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless.
Seventh house.: Educated, proud, good wife and gains through her,
diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture,
virtuous wife, pilgrimage to distant places.
Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long
life, mean, degraded, thrown with widows, colic pains, pretending
to be charitable, dirty habits.
Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful,
pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative,
generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured,
famous, high position.
Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth,
conveyances, children, determined, highly principled, accumulated
wealth, founder of institutions, good agriculturist, non-violent,
ambitious, scrupulous.
Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability,
good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat
dependent, influential, many friends, philanthropic.
Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character,
unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste,
pious in after-life.
மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்
சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.
ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து
வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))
=================
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
No comments:
Post a Comment