youtube

15 March 2013

விந்து முந்துதலை குனப்படுத்தும் மூலிகைவிந்து முந்துதலை குனப்படுத்தும் மூலிகை

விந்து முந்துதலை குனப்படுத்த
விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம் (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்) தேவையான மருந்துகளும் செய்முறையும்: 1. பசுவின் பால் — கோக்ஷீர 800 கிராம் 2. நெல்லிக்காய்ச்சாறு — ஆமலகீ ரஸ 800 கிராம் 3. பால் முதுக்கன் கிழங்குச்சாறு — விடாரீ ரஸ 800 கிராம் 4. கரும்பின் ச்சாறு — இக்க்ஷூ ரஸ 800 கிராம் 5. ஆட்டுமாம்ஸரஸம் — அஜமாம்ஸரஸ 800 கிராம் 6. பசுவின் நெய் — க்ருத 800 கிராம் 7. தண்ணீர் — ஜல 3.கிராம்200 இவைகளை சேர்த்து அதில் 1. கீரைப்பாலை — ஜீவந்தி 12.500 கிராம் 2. காகோலீ — காகோலீ 12.500 கிராம் 3. க்ஷீரகாகோலீ — க்ஷீரகாகோலீ 12.500 கிராம் 4. மேதா — மேதா 12.500 கிராம் 5. மஹாமேதா — மஹாமேதா 12.500 கிராம் 6. காட்டுளுந்து வேர் — மாஷ பர்ணீ 12.500 கிராம் 7. காட்டுப்பயிறு வேர் — முட்க பர்ணீ 12.500 கிராம் 8. ருஷபகம் — ருஷபக 12.500 கிராம் 9. ஜீவகம் — ஜீவக 12.500 கிராம் 10. அதிமதுரம் — யஷ்டீ 12.500 கிராம் 11. சுக்கு — சுந்தீ 12.500 கிராம் 12. தண்ணீர்விட்டான் கிழங்கு — ஸதாவரீ 12.500 கிராம் 13. கோவைக்கிழங்கு — பிம்பிமூல 12.500 கிராம் 14. மூக்கரட்டை வேர் — புனர்னவ 12.500 கிராம் 15. சித்தாமுட்டிவேர் — பலாமூல 12.500 கிராம் 16. கண்டுபாரங்கி — பார்ங்கீ 12.500 கிராம் 17. பூனைக்காலி வேர் — ஆத்மகுப்தாமூல 12.500 கிராம் 18. கிச்சிலிக்கிழங்கு — ஸட்டீ 12.500 கிராம் 19. கீழாநெல்லிவேர் — பூ ஆமலகீ 12.500 கிராம் 20. திப்பிலி — பிப்பலீ 12.500 கிராம் 21. ஸிங்காடா — ஸ்ருங்காடக 12.500 கிராம் 22. கீரைப்பாலை — ஜீவந்தி 12.500 கிராம் 23. கண்டங்கத்திரி — கண்டகாரீ 12.500 கிராம் 24. முள்ளுக்கத்திரி — ப்ருஹத்தீ 12.500 கிராம் 25. ஓரிலை — ப்ரிஸ்னிபார்னீ 12.500 கிராம் 26. மூவிலை — சாலீபர்ணீ 12.500 கிராம் 27. நெருஞ்சில் — கோக்ஷூர 12.500 கிராம் 28. திராக்ஷை — த்ராக்ஷா 12.500 கிராம் 29. அக்ரோட்டு — அக்ஸோட 12.500 கிராம் 30. கொப்பரை — நாரிகேள 12.500 கிராம் 31. பாதாம்பருப்பு — பாதாம் 12.500 கிராம் 32. பேரீச்சை — சர்ஜூரபல 12.500 கிராம் சிலர் பூனைக்காஞ்சொறிவேரை (துராலபா) பயன்படுத்துகின்றனர். மற்றும் இனிப்பும், புஷ்டியும் தருவதுமான பழவகைகள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துறைந்து (விழுது) கல்கமாக்கிக் கலந்து காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டவும். சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோகிராம் தனியே பொடித்துச் சலித்து அத்துடன் 1. மிளகு — மரீச்ச 25 கிராம் 2. இலவங்கப்பட்டை — லவங்கத்வக் 25 கிராம் 3. ஏலக்காய் — ஏலா 25 கிராம் 4. இலவங்கப்பத்திரி — லவங்கபத்ர 25 கிராம் 5. சிறுநாகப்பூ — நாககேஸர 25 கிராம் இவைகளை பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும் தேன் (மது) 400 கிராம் ஆகியவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும். குறிப்பு: நெல்லிக்காய், பால்முதுக்கன்கிழங்கு இவைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்த்தைக் கொண்டு முறைப்படி கஷாயமாக்கிச் சேர்க்கவும். அளவும் அனுபானமும்: 5 முதல் 10 கிராம் வரை சூடான பசும்பாலுடன் ஒரு நாளைக்கு இரு வேளைகள். தீரும் நோய்கள்: அதிகமான தாகம் (த்ருஷ்ண), எரிச்சல் (தாஹ), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரத்தபித்த), காயம்பட்டதாலேற்படும் தசைகளின் தேய்மானம் (க்ஷதக்ஷீண), நோய்வாய்ப்படுவதால் விந்து வற்றிப்போதல் (வ்யாதி கர்ஷித நஷ்டசுக்ர எனப்படும் தாதுநஷ்ட) அதிகமான புணர்ச்சியினாலும், நோயினாலும் ஏற்படும் இளைப்பும், பலவீனமும், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீர் நோய்கள் (மூத்ர ரோக) மற்றும் பெண் பிறப்புறுப்பு நோய்கள் (யோனி ரோக). தெரிந்து கொள்ள வேண்டியவை . இந்த நெய் மருந்து -விந்து நட்டத்தில் ,தாதுக்கள் குறைவதால் ஏற்படும் விந்து நட்டத்தில் நல்ல பலன் அளிக்கும் ஆட்டு மாம்சம் சேர்வதால் -உடலை தேற்ற பயன்படுத்தலாம் விந்து முந்துதலில் தக்க துணை மருந்துகளுடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்பது திண்ணம் பெண்ணின் தளர்வான யோனியை இருக்க தக்க துணை மருந்துகளுடன் தர நல்ல பலன் கிடைக்கும்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள் :-
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.மருத்துவப் பயன்கள் :-

இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.