youtube

31 October 2014

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

உடற்கட்டு பயிற்சிஇந்த பயிற்சியின் அவசியம் அறிந்து கொள்ளுங்கள். இந்த லோகத்தில் நல்ல சக்தி தீய சக்தி என எவளவோ சுற்றி கொண்டிருக்கிறார்கள். அதில் துஷ்டமாக இறந்து போன கேட்ட எண்ணம் கொண்ட ஆத்மாக்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு நிலைப்பட்ட மனம் கொண்ட ஒரு உடல் கிடைத்தல் கூடு பாய்ந்து விடும். அதாவது நம் உடலில் நுழைந்து அதன் இஷ்டத்திற்கு நம்மை  ஆட்டுவிக்கும். புத்தியை கெடுத்து விடும். பிறகு குடும்பத்தையே கெடுத்து விடும். இப்படியும் துன்பம் வரலாம். மற்றொன்று மந்திர உச்சரிப்புகளில் சில தவறு நேர்ந்தாலும் தேவதையின் கோபத்திற்கு ஆளாகலாம். மேலும் சக மாந்திரீகர்கள் நம்மை விட பெரிய ஆளாக இவன் வந்து விட கூடாது என நமக்கு கட்டு கட்டலாம். (அதாவது செயலிழக்க ஸெஇதல௦ உடல் உஷ்ணத்தால் நம் இந்தியர்கள் வெளியாகி நம்மை தீட்டக்கலாம். நாய் நம்மை முகர்ந்தால் மந்திரம் செயலிழக்கும் நிலை உருவாகும். இதனாலும் நமக்கு கெடுதல் உண்டாகலாம். வேறொரு தேவதை நம் உருவேற்றிய மந்திரத்தை சக்தியை அபகரிக்கலாம். இது போன்ற செயல்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். நாம் விரும்பிய தெய்வம் மட்டும் நம்மை அணுகி அருள்புரியவும் ஏற்படுத்தி கொள்ளும் மந்திர கட்டு அதாவது மந்திர பாதுகாப்பே இந்த உடற்கட்டு மந்திரம் ஆகும். நாம் நினைவு மறந்து இருக்கும் தருணத்தை பயன்படுத்தி பல தீய சக்திகள் நம் உடல் உறுப்பை பாதிக்க செய்யும். இதில் இருந்தும் தப்பிக்கவும், நமக்கு ஒரு கேடயம் போல் நம்மை சுற்றி பாதுகாக்கவும் நமக்கு நாமே போட்டு கொள்ளும் வேலியே இந்த உடற்கட்டு மந்திரமாகும். எனவே இதை தினமும்  11 முறை கூற வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் முன் தீபம் ஏற்றி உங்கள் ஆசனத்தில் அமர்ந்து கையில் விபூதி எடுத்து தங்களை சுற்றி போட்டு கொள்ளவும். இதுவே தெய்வ பாதுகாப்பு இதை தாண்டி வேறு சக்திகள் நுழைய முடியாது. நாம் விரும்பும் சக்திகள் மட்டுமே வர அனுமதிக்கும். பின்பு தான் மற்ற மூல மந்திரங்களை உரு ஏற்ற வேண்டும். பாதுகாப்பான முறையே உங்களுக்கும் குடும்பத்திற்கும் நல்லது. எனவே உடர்கட்டின் அவசியத்தை இப்போது அறிந்திருப்பீர்கள்.
மேலும் கட்டு மந்திரம் உச்சரிக்கும் பொது எந்த தேவதையை எந்த பக்கத்தை காக்க சொல்லி சொல்கிரிர்களோ. அந்த பாகத்தை கற்பனையில் செய்ய வேண்டும்.  உதாரணமாக கைகளை அம்பிகை காக்க வேண்டும் என்று மந்திரத்தில் இருந்தால் அதை சொல்லும் பொது கைகளை கற்பனையில் பார்க்க வேண்டும். தேகத்தை காக்க வேண்டும் என்று இருந்தால் தேகத்தை ஒருமுறை முழுமையாக ஒரு நொடியில் கற்பனையில் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் உணர்வு பூர்வமாக உங்களுக்கு ஒரு பாத்து காப்பு கிடைக்கும். பாதுகாப்பு கிடைத்ததை நிச்சயம் உணர்விர்கள். காவல் தெய்வமான நாய்கள் உங்களை கண்டாலே அன்போடு அருகில் வரும். விளையாட பார்க்கும். இது நிகழும் அப்போதே கட்டு மந்திரம் உங்களுக்கு வேலை செய்வதை உணர்வீர்கள் இதுவும் தேவ ரகசியமாகும். இனி மந்திர்ணகளை காண்க. இந்த கட்டு மந்திரம் எந்த சூழலிலும் ஒருவருக்கும் தெரிய கூடாது கவனம். கையில் விபூதியை எடுத்து கொண்டு இம்மந்திரங்களை கூறவும்.

ஓம் கம் கணபதயே நம:
ஓம் நன்றாழ்க்க குரு வாழ்க குருவே துணை
(இம்மந்திரத்தை மூன்று முறை கூறவும் ) பிறகு
ஓம் பகவதி ஈஸ்வரி என்றே தேகத்தில் பஞ்சாட்சர மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஸ்வரி சாமுண்டீஸ்வரி காவல் என்றே, சிரசு முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் காதில் வீரபத்ர தேவரும், நவதுவரத்தில் நவ கிரகங்களும் என்னை சுற்றி கால பையிரவனும் காத்து ரட்சிக்க வேண்டும் .
(அன்றாடம் பதினோரு முறை கூற வேண்டும்)
இம்மந்திரத்தை பதினோரு முறை கூறவும். கூறிய பின்பு உங்கள் உடலை சுற்றி கையில் வைத்து உள்ள விபூதியை போட்டு கொள்ளவும். இந்த உடற்கட்டு பூஜையை விளக்கு ஏற்றிய உடன் முதல் வேலையாக செய்யவும். பிறகு மற்ற மூல மந்திர பூஜையை கையாளலாம். இதழ் வாழ் நாள் முழுவதும் கடைபிடிக்கவும். வெளியிடம் செல்லும் சூழல் அமைந்தாலும் அன்தும் இந்த உடற்கட்டு பூஜையை நின்ற இடத்தில் இருந்தே செய்யலாம். வடக்கு அல்லது வடகிழக்கு மூலை பார்த்து மந்திரம் சொல்ல சிறப்பு.
உடற்கட்டு பூஜை முற்றிற்று காலை மாலை இருவேளை பூஜியின் போடும் உடற்கட்டு பண்ணவும். வாழ்நாள் முழுக்கவும் இந்த முறையை பின்பற்றவும்.

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

விநாயகர்  பூஜை  தொடர்ச்சி

அவருக்கு அருகம்புல் நிறைய வைத்து சுத்தமான வெற்றிலை நிறைய ஒற்றை படையில் வைத்து, முளுகளை பாக்கு இரட்டை படையில் நிறைய வைத்து வழிபடவும். அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொறி காதலி, அவுல், ஐந்து வகையான கனிகள், எருக்கன் பூ, மல்லிகை பூ, வாசனை பத்தி, தேங்காய், வாழைபழம் இவைகள் அனைத்தும் கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜிக்க வேண்டும். இந்த பூஜையே தங்களின் முதல் முழு பூஜையாக கணக்கில் கொள்ள வேண்டும். இவரிடம் சில கோரிக்கைகளை கூற வேண்டும். அது மிக தெளிவான சின்ந்தனையோடு ஒளிவு மறைவு இல்லாமல் வேண்டி  கொள்ள வேண்டும். (இதற்கு சங்கல்பம் என்று பெயர்) எதற்காக பூஜையை செயகீறிர்கள் உங்கள் கோரிக்கை என்ன உங்கள் கோரிக்கை கிடைத்த பின் அதை எதற்காக பயன்படுத்தபோகிறீகள். பயன்படுத்துவதின் மூலம் உங்களுக்கு என்ன லாபத்தை எதிர்பார்கிறீர்கள் என்பதை மனம் விட்டு கூச்சபடாமல் மனதில் உள்ளதை (அது எதுவாக இருந்ததாலும்) அப்படியே வேண்டி கொள்ள வேண்டும். ஏன் தாயும் தந்தையுமான ஏன் இறைவா ஏன் உயிர் சுவாசமாகவும் லோக ஆதாரமாகவும் என்னை ஆளும் பெரும் குருவே தங்களை சரணடைகிறேன். இந்த ஆதி அந்த லோகமும் உங்களுக்கு அடக்கம். எனக்கும் ஆத்மாவை அளித்த மூல பரம்பொருளே தங்களை முன் வைத்து துதிக்க்றேன். துணைக்கு அழைக்கின்றேன். தயங்காமல் நான் அளிக்கும் இந்த சிறு உபசரிப்பை ஏற்று மனமிறங்கி வாருங்கள் என்னை ஆளும் இறைவா! தெய்வ கடைமைகளை நான் அறியேன், தெய்வ நிபந்தனைகளை நான் அறியேன், பாவ புண்ணியங்களை நான் அறியேன், என் சகல கோத்ர பாவங்களை நான் அறியேன், நான் செய்த தவறுகள் சிலதை தவிர பலத்தை நான் அறியேன், ஏன் கடைமகைளை நான் அறியேன், என் குரு கடைமையை நான் அறியேன், வரப்போகும் துன்பங்களை நான் அறியேன், ஏன் குரு கடைமையை அறியேன், வரப்போகும் துன்பங்களை நான் அறியேன், நல்லது கெட்டதை நான் அறியேன் என் இறைவ இத்தனையும் அறியாத போடும் என் ஆசையும் தேவையும் பூர்த்தி செய்ய உங்களையே சரணடைகிறேன். அதற்கு பக்க துணையாக உறுதுணையாக காவல் தெய்வமாக, எவ்வித இடையூறும், என்னையா என் குடும்பத்தினரையோ அண்டாமல் காக்க வேண்டும். ஏன் இதயத்தில் வைத்து உங்களை பூஜிக்கிறேன். நான் தங்களை அற்பப் புத்தியால் நினைக்க மறந்தாலும் ஏன் நினைவில் நீங்காமல் இருந்து என்னை வலி நடத்துங்கள். லோக குலதெய்வமே. நான் நேசிக்கும் சித்திகளை எனக்கு பெற்று தாருங்கள். முக்காலம் உணரும் சக்தியும், வாக்கு பலித்தமும், ஜன வசியமும், சர்வ செல்வா வசியமும், கிடைக்க எந்த தெய்வங்களை நான் அழைத்தாலும், எவ்வித இடையூறுகள், எதிர்பார்ப்புகள் இல்லாமல் எனக்கு உதவிட தாங்களே எனக்கு உதவுங்கள். எந்த செயல் நடந்தாலும் அது தங்கள் செயலாலே நடந்தாக நான் வாழ்வேன். ஏன் ஆதார பரம் பொருளே எனக்கு தாங்கள் வசியமாய் இருந்து என்னை ஆசிர்வதியுங்கள்
ஓம் கம் கணபதயே நம:
என்று கூறி மனம் சலிப்பில்லாமல் கீழ் காணும் மந்திரத்தை காலை , மாலை, கூறவும் முடிந்தால் ஒரு வேலைக்கு மந்திரமும் கூறலாம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத
சர்வ ஜனம்மே வசமானய  சுவாக
மேற்கண்ட பிரார்த்தனை மிக மிக முக்கியமானது. இதனை படித்து மனப்பாடம் செய்து ஒரு செய்யுள் ஒப்பிப்பது போல ஒப்பித்தால் போதாது, ஒன்றிற்கு பலமுறை ஒவ்வொரு அர்த்தமும் நன்கு புரிந்து உணர்ந்து அதன் உருக்கத்தையும், அத்தியாவசியத்தையும் உணர்ந்து சொல்ல வேண்டும். இந்த வார்த்தைகள் சத்தியம் செய்வது போலாகும். இந்த பூஜை
பிரார்த்தனை தான் உங்களுக்கு ஆரம்ப பிள்ளையார் சுழி போன்றது. இந்த பூஜையின் அத்தியாவசியத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் மேலும் மன ஈடுபாடோடும் செயல்பட எதுவாகி இருக்கும். எனவே கீழ்காணும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அத்தனையும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு அடிமையானது. இதை வசியமானது என்று கூட வைத்துக் கொள்ளலாம். அவர் மக்களுக்காக சாபம் இல்லாமல் கொடுத்த மூலிகைகள் ஐந்து அருகம்புல் வெற்றிலை வேப்பிலை துளசி வில்வம். இவைகள் சாபமற்றதகும். இதில் அகரம் எனும் முதல் அட்சரத்திற்கு உரியது அருகம்புல் தான். இந்த அருகம்புல்லும் அதற்கான இறைவன் ஸ்ரீ கணபதியும் வசியம் நமக்கு ஆனால் தான் மற்ற மூலிகைகள் வசியமாகும். இல்லை என்றால் எதுவும் நமக்கு கட்டுபடாது. மந்திரமும் பலன் தராது. இந்த ரகசியத்தை அறிந்த நம் முன்னோர்கள் எந்த செயலுக்கும் துவக்கத்திற்கு முன் ஸ்ரீ கணபதியை அருகம்புல் கொண்டு வழிபட்ட பின் தான் மற்ற பணியை செய்தார்கள். நாமும் எந்த விசேஷமாக முதலில் விநாயகரை வணங்கியே தொடங்குவோம். அதற்கு காரணமே மேற்கண்ட நிகழ்வுதான். அவரிடம் தான் எல்லாம் ஐக்கியம். எந்த நிகழ்வை நாம் எடுப்பதாக இருந்தாலும் அவர் அனுமதித்தால் தான் அருள் கிடைக்கும். இல்லையேல் எதுவும் சிந்திக்காது. எனவே இவரிடம் தான் மனபூர்வமாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இவர் தான் ஞானத்தின் திறவுகோல். இவரின் முக்கியத்துவம் இப்போது புரிந்திருக்கும். எனவே இதை மனதில் கொண்டு பிரார்த்தனையை இவரிடம் தொடங்குங்கள் தடை இல்லாமல் முடித்து கொடுப்பார். சுருக்கமாக சொல்ல போனால் நம்மை ஆளக்கூடிய நவகிரகங்களும், உலகை ஆளக்கூடிய பஞ்ச பூதங்களும் பத்து திக்குகளும் இவருக்கே கட்டுப்பட்டது. நமக்கு ஸ்ரீ விக்னேஸ்வரர் உடனே கட்டுபடுவார். உண்மையான அன்போடு அழைத்தால் உடனே வரக்கூடியவர் இவரே எனவே முதல் பூஜை இவரிடம் அனுமதி பெற்று செய்வதே முதல் தேவ ரகசியமாகும்.
இதில் பொய் என் ரகசியம் இருக்கிறது. எல்லோருமே அவருக்குத்தான் முதல் பூஜையே கொடுக்கிறோம் ஏன் கேள்வி கேட்கத் தோன்றும். இங்கு ஒரு விஷயத்தை உணர வேண்டும். எல்லோருமே பொதுவாக ஏதோ பெரியவர்கள் முதலில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிக்க சொல்லி இருக்கிறார்கள். நாமும் செய்வோமே நமக்கேன் வம்பு என்று தான் நினைத்து செய்கிறார்களே தவிர மனபூர்வமாக அவரின் பெருமைகளை அறிந்து பூஜை செய்யக் கூடியவர்கள் யாரோ ஒருவர் தான். அவரின் மேற்கண்ட ரகசியத்தை அறிந்து உணர்ந்து பூஜை தொடங்குபவருக்கு தான் அருளை கொடுப்பார். இல்லை எனில் கொடுக்க மாட்டார் சோதிப்பார். எனவே தங்களுக்கு அவரின் அணைத்து ஐக்கியமும் கொண்ட இறைவன் என்பதை உணர்தியுள்ளோம். இப்பொது அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டதால் உங்களுக்கு எல்ல பாக்கியமும் கிட்டும். எனவே இதை ரகசியமாக பாவித்து தேவ ரகசியம் என்று குறிப்பிட்டேன்.
நீங்கள் இதையே முதல் பூஜையாக கணக்கில் கொள்ளவும்
விநாயகர் பூஜை என்றாலே சங்கடஹர சதுர்த்தியில் தானே ஆரம்பிப்பார்கள் என சந்தேகம் வேண்டாம். இது நித்ய பூஜை போன்றது முடன் முதலில் தொடங்கிய முகூர்த்த நாள் பார்த்து ஆரம்பித்த ஆரம்ப பூஜை பின் அடுத்து வரும் இந்த பூஜைக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.
.

30 October 2014


மந்திரம் ஓதுவதற்கு எது தேவை?

சிவசக்தி மந்திரம் ஓதுவதற்கு ருத்திராட்ச மாலை.

விஷ்ணு மந்திரம் ஓதுவதற்கு கிருஷ்ண துளசி மாலை.

பண வரவுக்கு 30 ருத்திராட்ச மாலை.

மோட்சம் அடைய- 50 ருத்திராட்ச மாலை.

பொது ஆசைகள் நிறைவேற 27 ருத்திராட்ச மாலை.

சிற்றின்பச் சிறப்பு பெற 54 ருத்திராட்ச மாலை.

எல்லா எண்ணங்களும் நிறைவேற 108 ருத்திராட்ச மாலை.

பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக உலகளாவிய எச்சரிக்கை உலா வருகிறது. சாஸ்திர, சம்பிரதாயமாக என்ன செய்யலாம்?

வீட்டு விலக்கான பெண்கள் முதல் நான்கு நாட்கள் கலவியில் ஈடுபடக் கூடாது.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூசம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும் உடலுறவு வேண்டாம். பிதுர் திதி மற்றும் கிரகணத்தன்றும் வேண்டாம்.

பெண் குழந்தை பிறக்க: விலக்கிற்குப்பின் 5, 7, 9, 13-ஆம் நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் மகவு, (7 மற்றும் 11-ஆவது நாளில் உறவு கொண்டால் குடும்பத்திற்குக் கேடான பெண் குழந்தை பிறக்கும் என்பது பொதுக் கருத்து.)

ஆண் குழந்தை பிறக்க: 6, 8, 10, 12, 14, 16-ஆவது நாட்களில் உறவு கொண்டால் ஆண் மகவு பிறக்கும். 8, 14-ஆவது நாள் உறவில் பிறக்கும் குழந்தை கல்வியில்- திறமையில்- புத்தியில் ஜொலிக்குமாம்.
12, 16-ஆம் நாளில் இணைந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமாம்

28 October 2014

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா8

இனி மந்திரங்களை காண்க

ஓம் ஆதித்ய குருவே லோக வசியம்
நான் நேசிக்கும் சித்திகளெல்லாம்
என் வசமாக சுவாக

(108 முறை கூறவும்)
இவ்வாறாக வணங்கி பிறகு நீங்கள் நிற்கும் தண்ணீரையும் வணங்கி பூமியையும் தொட்டு வணங்கி பூஜையை நிறைவு செய்யவும். இந்த குரு பூஜை பஞ்ச பூத பூஜையும் இணைந்தது. ஆகாயம், நெருப்பு, பூமி, தண்ணீர் பார்த்து வணங்குகீறீர்கள் மூச்சு பயிற்சியும் முன்னமே செய்கீறீர்கள். ஆக இது பஞ்ச பூதத்தையும் நம் வசமாக்குவதொடல்லாமல் நல்ல குருவும் கிடைத்து துணை நிற்பார்.

இது போல் 11 தினமும் செய்ததல் குரு பூஜை நிறைவு பெற்றது. இனி இரவில் ஒரு பயிற்சி உண்டு. அதையும் இந்த 11 தினமும் மட்டும் கடைபிடிக்கவும்.


விளக்கு பயிற்சி
சூரிய பூஜை என்னும் குரு பூஜை காலை ஒரு வேலை மட்டும் தான் செய்வீர்கள். அன்று மாலையை வீணாக்காமல் பயனுள்ள இன்னொரு பயிற்சியை செய்யுங்கள். வீட்டிற்குள்ளேயே ஒரு அறையில் கண் உயரத்திற்கு ஒரு காமாட்சி அம்மன் தீபத்தை 3 அடி தூரத்தில் வைத்து தாங்கள் பத்மாசனம் இட்டு அந்த தீபத்தின் ஒளியையே நெற்றிக் கண்ணால் ஒரு மணி நேரத்திற்கு உற்று பாருங்கள். அந்த ஒளி 11 தினத்தில்  நெற்றியில் வந்து அமர்ந்து விடும். அதன்பின் இந்த பயிற்சி தேவை இல்லை. (சூரிய பூஜையும் 11 தினத்தில் நிறைவடையும்). இந்த விளக்கு பயிற்சி செய்யும் போடு கண்களில் நீர் வடியும். சிலருக்கு கண் வலிப்பது போல் இருக்கும். அப்படி இருந்ததால் பூஜை நேரத்தை குறைத்து கொள்ளுங்கள். படிபடியாக ஒரு மணி நேரத்திற்கு கொண்டு வாருங்கள். தீபம் தீவட்டி போல் எரியாமல் நிதானமாக எரிய வேண்டும். அறையில் கற்று அதிகம் வீசி தீபம் ஒளியை ஆட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் பார்வை ஒரு நிலைப்படாது. எனவே நின்று எரிய கற்று அதிகம் இல்லாமல் இருந்தால் நல்லது. இப்பயிற்சி பார்வை பலப்படும். நெற்றிக்கண் திறக்க உதவும். அவசியம் கடைபிடிக்க வேண்டும். வீட்டில் சத்தம் அதிகமாக இருந்தால் காதில் பஞ்சை அடித்துக் கொண்டும் செய்யலாம்.
விளக்கமாக மீண்டும் கூறுகிறோம்
ஸ்ரீ சூரிய பூஜை என்னும் குரு பூஜையை 11 தினங்கள் காலை வேலை மட்டும் செய்வீர்கள். இன்று மாலை வேலைகளை ஒரு சில மன அடக்க உடல் அடக்க பயிற்ச்சிக்கு 11 தினங்களை பயன்படுத்துங்கள். அதாவது தங்கள் பூஜை அறையில் ஆசனத்தை விரித்து அதன் மேல் அமர்ந்து (பத்மாசனம் இட்டே அமர வேண்டும். இந்த ஆசனம் உடல் அடக்கத்திற்கு பயன்படும்) உங்கள் எதிரில் ஒரு விளக்கு ஏற்றி கண்ணுக்கு நேராக இருக்கும்படி 3 அடி தூரத்தில் வைக்கவும். அழகாக பத்மாசனம் போட்டு, சின்ன முத்திரை வைத்து அதாவது கட்டை விரலும், ஆள்காட்டி விரலும் ஒன்றின் முனை ஒன்றில் ஒட்டி வைத்து தொடை மேல் கைகளை நீட்டி வைத்திருப்பது சின்னமுத்திரை ஆகும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடித்து இருக்க வேண்டும். (சிவன் தவக் கோலத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்தல் அதில் பத்மாசனம் இட்டு சின்முத்திரை பிடித்து நிமிர்ந்து அமர்ந்திருப்பார் அது போல இருக்க வேண்டும்) கழுத்தையும் அண்ணாந்து பார்க்காமல் நேராக தலை இருக்க வேண்டும். குனிந்து குனிந்து நிமிர கூடாது. நேராக உடல் இருக்க வேண்டும். அப்படியே எரியும் தீபச் சுடரையே கண்கள் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படியே உங்கள் மூச்சுகாற்று உள்ளே போவது வெளியே வருவது எவ்வாறு நிகழ்கிறது என அந்த காற்றையும் கவனிக்கவும். மிக எளிதில் நெற்றி கண்ணில் ஒளி வசப்படும். காற்று வசப்படும். உடல் வசப்படும். மனம் நிலைப்படும். ஆசனம் பழக்கப்படும். எனவே இப்பயிற்சியை அரை மணி நேரமுதல் 1 மணி நேரம் வரை செய்யலாம். இருட்டறையில் விளக்கு வெளிச்சம் மட்டுமே இருக்க வேண்டும். இப்பயிர்ச்சியை 11 தினம் செய்தல் போதும். அவசியமான பயிற்சி என்பதால் இதை செய்ய வேண்டும். வேண்டுமானால் விளக்கு பார்க்கும் போடு ஓம் என்று மனதிற்குள் கூறிக்கொண்டே பயிற்சி செய்யலாம். கட்டாயம் செய்ய வேண்டும்.
அடுத்த பூஜை மிக முக்கியமானது என்பதால் மன அழுத்தம் குறைய தேவை பட்டால் ஓரிரு நாட்கள் ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். முடியுமானால் தொடர்ந்தும் செய்யலாம். எந்த பூஜையும் விடியற்காலை தான் தொடங்க வேண்டும். அடுத்தடுத்த பூஜையா என்ற மலைப்பு இல்லாமல் ஆர்வத்தை அதிகபடுத்தி பூஜை செய்யுங்கள். நம் வாழ்வே இது தான் என்றான பின் மலைப்புக்கு இடம் தரலாகாது.
இதன் அவசியத்தை மனதில் பதியவைத்து படியுங்கள் மீண்டும் படியுங்கள்
இந்த முறை மூன்று தினங்கள் செய்ய வேண்டும்
மண் பூஜை
கடந்த பயிற்ச்சிகளில் நல்ல குருவை நாடி துணை பெற்றாகி விட்டது. இனி அடுத்த ஒரு பூஜையும் உண்டு. அது மண் பூஜை ஆகும். அதாவது, அவரவர் விதிக்கு தக்கப்படி இந்த வகை மனிதர்களின் பிரச்சனையைத் தான் ஒருவருக்கு போக்கும் சக்தி உண்டு என்ற கட்டுப்பாடு உண்டு.  வகை மனிதர்கள் எனபது ஜாதியோ மதமோ கிடையாது. நம் ஜாதகப்படி வசியமாகக் கூடியவர்கள், நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு அப்படியே பலிக்கும். நம்மை கண்டாலே ஒரு ஈர்ப்பு அவர்களுக்கு உண்டாகும். நமக்கு கட்டுப்படக்கூடியவர்கள் என்று இந்த லோகத்தில் உண்டு. அவர்கள் மட்டும் நம்மிடம் வந்து பலன் பெற வேண்டுமானால் வசியம் வேண்டும். இந்த வசியம் நம்மிடம் இல்லையேல் பலதரப்பானவரும் நம்மிடம் வருவர் அதில் நம் விதியோடு தொடர்பு உள்ளவருக்கு எல்லாம் நடக்கும். விதி தொடர்பு இல்லாதவர்களுக்கு எதுவும் நடக்காது. நடக்காதவர்கள் நம்மை தேவை இல்லாமல் புரிந்து கொள்ளாமல் தூற்றி பேசுவார்கள். நம் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும். எனவே நம் விதி தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே நம்மிடம் வருவது நக்கு நலம். சரி அவர்களை மட்டும் அப்படி அடையாளம் கண்டுபிடிப்பது என்றால் நம்மால் முடியாது. சற்று சிரமமான விஷயமும் கூட. இதற்காக ஒரு உபாயம் உண்டு. அதற்க்கு உதவி செய்வது தான் மண் போசை. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண் பொதுவானது. அது போல இதன் அதிபதி ஸ்ரீ கணபதியும் பொதுவான கடவுள் இவரை வழிபடுவதே மான் பூஜையாகும். மண் பூஜை என்றால் வேறு எதோ தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். மண்ணில் பிறந்த நமக்கு. நமக்குரியவர் மட்டும் நம்மை நாடி வர, வசியம் தர மக்களுக்குள் நமக்குரிய மக்களை பிரித்து நம்மிடம் சேர்க்க நம்மிடம் பலன் பெற தகுதி உள்ளவரை மட்டும் நம்மிடம் இணைக்க இந்த மண்ணில் இருந்து ஆளக்கூடிய பொருளையோ, உயிரையோ நமக்கு அடங்கி வசியமக்கி கொடுப்பார். எனவே ஸ்ரீ கணபதி பூஜையை செய்தேயாக வேண்டும். இந்த பூமியில் இருந்து எந்த மந்திரம் சொன்னாலும் அப்போது தான் கட்டுப்படும். பூமிக்கு ஆகாயமும், ஆகாயத்திற்கு பூமியும் எப்போதுமே வசபட்டுதான் இருக்கும். குரு பூஜையும், மண் பூஜையும், மண் பூஜையை அகர பூஜை என்றும் கூறலாம். மேலும் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பூமியில் எதற்காக மாந்தீரிக கலையை பயில்கிரீர்களோ, என்ன தேவைக்கு உபயோகபடுத்தபோகிறீர்களோ அதற்கு இவரிடமும் தான் அனுமதி பெற வேண்டும். அப்போது தான் அகரம் முதல் ஆகாயம் வரை வசப்பட்டு நிற்கும். இல்லையேல் மாயை உங்களை நம்பி ஏமாற்றி விடும். எனவே கொடுத்துல்ள்ள படி பூஜையையும், வேண்டுதலையும், மன நிறைவாக செய்யுங்கள். இந்த பூஜை மூன்று தினங்கள் செய்ய வேண்டும். காலை மாலை இரு வேலையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் ஒரு வேலைக்கு 504 முறை சொல்ல வேண்டும். காலை மாலை சேர்த்து 1008 முறை சொல்ல வேண்டும். 11 தினம் குரு பூஜைக்கு பிறகு வீட்டிலேயே யாம் கொடுத்துள்ள வெள்ளருக்கான பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்து அலங்கரித்து அவருக்காக வாங்கிய துண்டை அவருக்கு அணிவித்து புஷ்பம் சாத்தி காமாட்சி அம்மன் தீபம் ஏற்றி பூஜையை துவக்கவும். இதை துவக்குவதற்கு முன் தங்கள் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று ( குறிப்பாக அரசமர அடி பிள்ளயராக இருந்தால் சிறப்பு) அவருக்கு புஷ்பம் வைத்து ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி 9 முறை வளம் வந்து பின்பு ஏன் பாவங்களை மன்னித்து எனக்கு உதவுங்கள் என வேண்டி கொள்ளவும். பிறகு இல்லம் திரும்பி வெள்ளருக்கன் பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்து அலங்கரித்து அவருக்காக வாங்க வைத்துள்ள துண்டை அவருக்கு அணிவித்து புஷ்பம் சாத்தி தீபம் ஏற்றி

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், ஜின் சிய பூஜா

7இந்த ஸ்ரீ சூரிய குரு பூஜையை வெறும் தரையில் இருந்து செய்யக்கூடாது
ஒரு தொட்டியோ, அல்லது ஒரு பேஷனோ, பதம் முழுகும் அளவு உள்ள அகண்ட பாத்திரமோ எது தங்களிடம் உள்ளதோ அதை சுத்தபடுத்தி அதில் சுத்தமான நீர் பாதம் அல்லது முட்டி வரை மூழ்கும் அளவு நீரை கொட்டி அதில் கல் உப்பு ஒரு கை பிடி அளவு குறையாமல் போட்டு (மேற்கொண்டு எவ்வளவு உப்பு வேண்டுமானாலும் போடலாம்) கலக்கி சிறிது மஞ்சள் தூளும் போட்டு அதில் ஏறி நின்று கிழக்கு பார்த்து வணங்க வேண்டும். வீட்டிற்குள் செய்ய கூடாது. வெளிக்காற்று படும்படியான இடமாக இருக்க வேண்டும். வாசல், மொட்டை மாடியகவும் இருக்கலாம். தங்கள் பகுதியில் கடல், குளம், ஆறு, எரி போன்ற நீர் உள்ள இடங்கள் இருந்தால் தான் தண்ணிரில் உப்ப்பு, மஞ்சள் தூள் போட வேண்டும். வெளியிட நீர் நிலைகளில் எதுவும் வேண்டாம். அப்படியே பூஜை செய்யலாம். எங்கு செய்வதாக இருந்தாலும் தினமும் ஒரே இடமாகத்தான் செய்ய வேண்டும். இடம் மாற்றி மாற்றி செய்ய கூடாது. கிழக்கு பார்த்தார் போல் நின்று தான் பூஜை செய்ய வேண்டும். தண்ணிரை தொட்டு வணங்கிய பின்னரே அதில் இறங்கி நின்று வணங்க வேண்டும். எதற்குமே மரியாதையை கொடுக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அப்போது தான் ஸ்ரீ சூரிய பகவன்  உங்களுக்கு குருவாக சம்மதிப்பார். ஸ்ரீ சூரிய பகவானுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மிகவும்  பிடித்தமானது தர்மம். எனவே உங்களால் இயன்ற தர்மங்களை வாய்ப்பு கிடைக்கும் போது செய்ய வேண்டும். அவ்வாறு செய்தல் நீங்கள் செய்ததை விட ஆயிரம் மடங்கு உங்களுக்கு குருவாக இருந்த திருப்பி செய்வர். எந்த தர்மத்தையும் உங்களுக்காக பயன்படுத்த கூடாது. உதரணமாக நாம் தர்மம் செய்தால் நான் செய்த தர்மம் என் தலை காக்கும். என் பிள்ளை குட்டிகளை காக்கும் என வேண்டி கொள்வோம். அனால் அவ்வாறு வேண்டி கொள்ளக் கூடாது.. இறைவா எனக்கு மேலும் மேலும் தர்மம் செய்ய வைப்பு தாருங்கள் என வேண்டவும். வாய்ப்பு தந்தமைக்கு என்றும் தங்கள் பாதங்களை வணங்குகிறேன் என கூறவும். மற்றவரையும் தர்மம் செய்ய தூண்டுவதும் தர்மமே. எனவே எந்த தர்மத்தையும் நாம் கொண்டாடாமல் இறைவனுக்கே அணைத்து தர்மத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன் என வேண்டிக் கொள்ளவும். அவ்வாறு வேண்டினால் தான் இறைவன் நம் தர்மத்தை பெற்று நம் பாவங்களை போக்கி ஆசைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்.
தர்மம் மட்டும் கிடையாது நாம் எந்த தெய்வ மந்திரம் பூஜைகள் செய்தலும் இறுதியில் தங்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். நான் கேட்கும் வரம் இது தான் தாருங்கள் என கேட்க வேண்டும். (இதுவும் தேவ ரகசியமே) அப்போது தான் அருள் புரிவார்கள்.
ஆக மேற்கண்ட செயல்களை ஸ்ரீ சூரிய குருவானவர் குரு தட்சணையாக பெற்று நமக்கு சித்திகளை பிச்சை இடுவார். (இந்த லோகத்தில் வாழும் ஏட்டு கல்வி, செயல்முறை குருவை இதில் சம்பந்த படுத்த கூடாது. இல்லையேல் யாருக்கும் சித்தி கிடைக்காது. இது அனுபவத்தில் வெற்றி கண்டவர்கள் ரகசியமாக வைத்து வழிபடும் குருமுறையாகும். வெற்றி கண்டவர்கள் மற்றவரை வெற்றி அடையவிடுவதில்லை. எனவே இந்த சூட்சும குருவை மறைத்து விட்டார்கள். உங்களுக்கு இனி அந்த குறையில்லை என்பதை நினைத்து சந்தொஷபடுங்கள்)
ஆக மேற்கண்ட வழிமுறைகள் மிக முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி பயிற்சியைக் தொடருங்கள். உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இடையில் வந்து விடக்குடதே என்பதற்காக தான் விளக்கமாக கூறியுள்ளேன். ஏன் எதற்காக என்ற சந்தேகம் நம் முதல் விரோதியாகும். நமக்கு விளக்கம் கிடைத்து விட்டால் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே தான் எந்த பயிற்சியும் விளக்கமாக கூறுகிறேன்.
இனி தொடர்ந்து பயிற்சியை காணுங்கள். தண்ணீரில் கிழக்கு பார்த்து நின்று முதல் நாள் மட்டும் வெற்றிலை பக்கு, வாழை பழம், வைத்து ஊதுவத்தி ஏற்றி தேங்காய் ஒடித்து வைத்து கற்பூரம் ஏற்றி தீபத்தை வணங்கி நிமிர்ந்து நின்று இரு கைகளையும் ஒன்றாக இணைத்து தலைக்கு மேல் கைகளை தூக்கி வணங்கவும்.

ஓம் நமோ ஆதித்யாய நம:

(இம்மந்திரத்தை ஒன்பது முறை கூறவும்)
பிறகு உயர்த்திய கைகைகளை இறக்கி, இரு கைகளையும் பிச்சை கேட்பது போல் ஒன்றாக வைத்து (இஸ்லாமியர்கள் தொழுகையின் போது இரு கையை இணைத்து வைத்திருப்பார்கள் அதை போல வைக்கவும்) மார்புக்கு நேராக கை மரபில் ஒட்டாமல் சற்று தள்ளி வைத்துக் கொண்டு சூரிய திசை பார்த்து (கிழக்கு) அண்ணாந்து கீழ்காணும் அற்புத மந்திரத்தை கூறவும். கூறும் போது உதடு பிரிய கூடாது. அதாவது வாய் திறந்து செல்லக்கூடாது. உங்கள் நெற்றிக்கண் தான் வாய் என்று கற்பனை செய்து நெற்றிக்கண் தான் மந்திரம் செபிக்க்றது என்ற உணர்வோடு மந்திரம் கூறவும். (எந்த மந்திரத்தையும் அப்படிதான் கூறவும், தன்னால் மனம் நிலைப்படும். யாரை பார்த்தாலும் நெற்றிகன்னால் பார்ப்பதாக உணருங்கள். எதை கேட்டாலும் நெற்றி கண் தான் காது என நினைத்து கேளுங்கள். அவ்வாறு செய்தல் ஞானக்கண், எப்பொழுதும் திறந்தே இருக்கும். ஞானக்கண் ஐந்து நிமிடத்தில் இவ்வாறு செயல்பட்டால் விழித்து கொள்ளும்.
எதோ ஒன்றும் நெற்றிக்கண்ணில் ஒட்டிக் கொண்டு உறுத்துவது போல தோன்றும். அதுவே ஞானக்கண் தோன்ற ஆரம்பிகிறது என்பதை அறியலாம். (இதுவும் தேவ ரகசியமே) பூஜை அல்லாத நேரத்திலும், இவ்வாறு செயல்படுங்கள் வெகுவிரைவில் காற்றும், மனமும் வசப்படும் கூடவே தெய்வமும் வசப்படும்.
ஆக கீழ்காணும் மந்திரம் நெற்றிக்கண்ணே கூறுகிறது என்பதை கவனித்து மந்திரம் மனதிற்குள் கூறுங்கள். முறையோ அல்லது அதற்கு மேலோ இந்த மந்திரத்தை கூறவும். இந்த எண்ணிக்கைக்கு ஜபமாலை எதுவும் கூடாது. எல்லாம் மன கணக்கில் தான் எண்ண வேண்டும். இரு கைகளையும் ஒன்றாக சேர்த்துள்ளதால் கைகளை வேறு எந்த செயலுக்கும் பயன்படுத்த கூடாது. மனக்கணக்கில் எண்ணிக்கை வைத்து கொள்ள முடியவில்லை என்றால் எவ்வளவு மந்திரம் சொல்ல முடியுமோ அவ்வளவு மந்திரம் கூறுங்கள். அதிகப்படியாக கூறினாலும் தவறில்லை. இதில் ஒரே ஒரு நிபந்தனை உண்டு. அதாவது இந்த கைகூப்பி மந்திரம் கூறும் போது யாராவது பார்த்து ஏளனமாக நினைபர்களா என கூச்சபடகூடாது. எப்படா பூஜை முடியும் என்று என்ன கூடாது. தண்ணிரை விட்டு எப்போது வெளியேறுவோம் என்றும், எண்ணக்கூடாது முழுமையாக மனம் லயித்து உங்கள் குருவை சரணாகதி அடைந்து அவரை வாழ்நாள் முழுவதும் குருவாக அடைய செய்யும் பிரார்த்தனை இது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சலிப்பு வராது மாறாக பிரார்த்தனை பாசத்தோடு அதிகரிக்கும் முதல் நாள் மட்டும் தேங்காய் உடைத்து வைத்து படிக்கவும். 11 நாளும் தேவை இல்லை. அனால் அவசியம் தாம்ப்பூலம் வைத்து ஊதுவத்தி ஏற்றியே மந்திரம் கூறவும். இந்த 11 தினமும் இடத்தையும், நேரத்தையும் மாற்ற வேண்டாம். மந்திரமும் வேக வேகமாகக் கூறக்கூடாது. ஒரே மூச்சில் மந்திரம் கூற வேண்டும். ஒரே சீராக முதல் தடவை ஆரம்பித்த வேகம் தோனி கடைசி வரை மாறாமல் பார்த்துக் கொள்ளவும். சீக்கிரமாக 108 எண்ணிக்கையை முடித்து விட வேண்டும் என வேகமெல்லாம் மந்திர ஜெபத்தின் போது பயன்படுத்த கூடாது.