youtube

11 March 2017

கால சர்ப்ப தோஷம் : சர்ப்ப தோஷ அமைப்பில் ராகு கேதுவோ

கால சர்ப்ப தோஷம் : சர்ப்ப தோஷ அமைப்பில் ராகு கேதுவோ சூரியனுடைய நக்ஷத்திரத்தில் நின்று விட்டால் தோஷத்தை தராது. ஏன் என்றால் சர்ப்பங்களின் அதிதேவதை சூரியன். சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன் ஆகவே தோஷம் தராது. ஒரு ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால் அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஒரு கிரஹம் இதை விட்டு வெளியே சென்றால் அது தோஷம் இல்லை. இந்த யோகத்தின் மூலமாக விபத்து, மந்திர அடிமை, போன்றவை ஏற்படுமா என்பதை காணலாம். இந்த யோகம் தீமை செய்யாது. பலவீனமான கிரஹங்கள், வீடுகள் இவற்றிர்க்கு ராகு, கேது பார்வை, சேர்க்கை பெற்றால் கால சர்ப்பதோஷம் தீமை செய்யும். இந்த தோஷம் பல வகைப்படும். அவை பின் வருமாறு:

1. அனந்த கால சர்ப்பதோஷம் (விபரீத கால சர்ப்பதோஷம்): லக்னத்தில் ராகு 7ம் வீட்டில் கேது அமைந்து இவைகளுக்கு இடையில் மற்ற கிரஹங்கள் அமைவது. 27வயது வரை சிரமமும் பிறகு நல்ல மாற்றங்களும் ஏற்படும்.

2. குளிகை கால சர்ப்பதோஷம்: 2ம் வீட்டில் ராகு 8ம் வீட்டில் கேது : இந்த அமைப்பு எதிர்பாராத பொருள் இழப்பையும், பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலையும், உடல் நலத்திற்க்கு கேடும், விபத்து போன்றவையும் ஏற்படும். 32 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்

3. வாசுகி கால சர்ப்பதோஷம்: 3ம் வீட்டில் ராகு 9ம்வீட்டில் கேது: இந்த அமைப்பு ஜாதகரின் தொழிலில் அல்லது அவரது வேலையில் பிரச்சனைகளைக் கொடுக்கும். சகோதரி, சகோதரர்களுக்குள் பிரச்சனை, தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்காமை, துணிந்து எதையும் செய்யமுடியாமல் இருப்பது போன்ற பலனை தரும். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.

4. சங்கல்ப கால சர்ப்பதோஷம்: 4ம் வீட்டில் ராகு 10ம் வீட்டில் கேது: 3வதில் சொன்ன பலனோடு மன அழுத்தம் போன்றவை வரும் . வேறு சில பெண்களோடு தொடர்பு ஏற்படும் அதனால் இவருக்கு குழந்தை ஏற்பட்டு அதனால் அவமானம் ஏற்படும். வெளியில் சொல்ல முடியாத தகாத உறவுகள் ஏற்படும். 42வயதுக்கு மேல் நல்ல பலன் தரும்.

5. பத்ம கால அல்லது பாத கால சர்ப்பதோஷம்: 5ம் வீட்டில் ராகு 11ம் வீட்டில் கேது: இது தான் புத்ர தோஷத்தை கொடுக்கக் கூடிய மிகவும் பாதகமான சர்ப்பதோஷம் ஆகும். மேலும் 5ம் வீடு பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிற படியால் இந்த அமைப்பு இருந்து சந்திரனும் கெட்டுவிட்டால் பேய், பிசாசு போன்ற ஆவிகளின் தொல்லைகள் ஏற்படும். நண்பர்கள், பழகியவர்கள் கூட விரோதியாவார்கள். எடுத்த காரியங்களில் தடை உண்டாகும். 48 வயதுக்கு மேல் நல்ல பலனை கொடுக்கும்.

6. மஹா பதம கால சர்ப்பதோஷம்: 6ம் வீட்டில் ராகு, 12ம் வீட்டில் கேது: : இது முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு அமையும். ஏன் என்றால் இது பிற்காலத்தி ஒரு நல்ல புகழையும், அதிகார பதவியும், அந்தஸ்த்தையும் கொடுக்கவல்லது. இந்த அமைப்பு எதிரிகளால் பிரச்சனை, சிறைவாசம், வீண்விரயங்கள், அரச தண்டனை போன்றவை ஏற்பட்டு 54 வயதுக்கு மேல் மேற்ச்சொன்ன பலனை தரும். சிலர் தன் கெளவரத்திற்காக கோயில் திருப்பணி, அறக்கட்டளை போன்றவை நிறுவி தொண்டு செய்வார்கள்.

7. தக்ஷக கால அல்லது கால மிருத்யு சர்ப்பதோஷம்: 7ம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது: ஒன்றில் சொன்ன பலன் 27வயதுக்கு முன்திருமணம் செய்து கொண்டால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும், சிலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தெய்வ திருப்பணி செய்வார்கள்.

8. கார்க்கோடக கால சர்ப்பதோஷம்: 8ல் ராகு 2ல் கேது: மிகவும் கொடிய தோஷம்: தனக்குதானே அழிவை ஏற்படுத்திக் கொள்வார். தந்தையின் பணத்திற்காக அவருக்கே உயிருக்கு உண்டான கண்டத்தை ஏற்படுத்துவார். அதனால் தந்தை வழி சொத்து இவருக்கு கிடைக்காது. மற்றவர்களின் இன்ஷூரன்ஸ் பணம் இவருக்கு கிடைக்கும்.

9. சங்ககுட கால சர்ப்பதோஷம்: 9ல் ராகு 3ல் கேது: வாழ்க்கை மேடு பள்ளமானதாக இருக்கும். சில நாட்கள் முன்னேற்றம், சில நாட்கள் தாழ்வு நிலை, சில நாட்கள் பிரபலமாகவும், சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்துவார்கள். 36வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.

10. கடக கால சர்ப்பதோஷம்: 10ல் ராகு 4ல் கேது: தொழிலில் தடை , அலுவலகங்களில் அவமரியாதை ஆனால் 47 வயதுக்கு பிறகு மிகச் சிறந்த தொழில் அதிபர், வேலையில் உயர் பதவி கிடைக்கும். ஆனால் சிம்ம, கன்னி லக்னக்காரர்களுக்கு இந்த அமைப்பு அரசின் உயர் பதவி கிடைக்கும்.

11. விஷ்தார கால சர்ப்பதோஷம்: 11ல் ராகு 5ல் கேது: வெளி நாட்டில் வாசம். குழந்தைகள் மூலமாக வருத்தங்கள் ஏற்படும். அடிக்கடி பயணம் ஏற்படும். 48 வயதுக்கு மேல் நல்ல பலன் உண்டு.

12. சேஷ கால சர்ப்பதோஷம் : 12ல் ராகு 6ல் கேது: அசுபர்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பலன் கல்வியில் சிறந்த நிபுணத்தன்மை ஏற்படும். வெளி நாட்டில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். வயோதிக காலத்தில் பேரும், புகழும் உண்டாகும். அந்நிய நாட்டில் சில காரணங்களுக்காக சிறை செல்ல நேரிடும்.

மேற்ச் சொன்ன பலன்கள் யாவையும் ராகு, கேது தசாவிலும், மற்றவர்களின் தசாவில் ராகு, கேது அந்தரங்களிலும் நடக்கும்.

அந்த தசா புத்திகள் காலத்தில் ஒரு நல்ல ஜோதிடரை அணுகி என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அந்த காலத்தில் தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு கேதுக்கள் எந்த நக்ஷத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நக்ஷத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்வாதி, சதயம், திருவாதிரை நக்ஷத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் உடலில் உள்ள ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறலாம்.

9 March 2017

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.
அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.
மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.
இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!
நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்;அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும்,வலிமையோடும்,சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;
இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது;ஆண்கள் எனில்,மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது;எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ,அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;
எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்;கடன்கள் தீரும்;அரசு வேலை கிடைக்கும்;நிறுவனம் வளர்ச்சியடையும்;வராக்கடன் வசூலாகும்;ஆரோக்கியம் மேம்படும்;தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்;கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்;பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்;அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது;குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்;சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்;கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்;அவ்வாறு தொடர்ந்து வீட்டில் வழிபட்டதால்,ஒவ்வொருவருக்குமே மேற்கூறிய பலன்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன;கிடைத்து வருகின்றன;
18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்;தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்;சாதி,சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் இந்த வழிபாட்டைப் பின்பற்றலாம்;
கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு;
மஞ்சள் துண்டு,(வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு),மண் அகல்விளக்கு ஒன்று,சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி,சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு,அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு,எவர்சில்வர் கிண்ணம் ஒன்று,காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)
தினமும் காலை 4.30 மணி முதல் காலை 6 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்;அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப்பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்;செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்;(தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது).கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்;பிறகு அவரது பாதத்திலும்,பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,சூலாயுதம்,அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கக் கூடாது;பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்;பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)
இவ்வாறு பாடுவதற்கு முன்பே,வீட்டில் சமையல் முடிந்திருந்தால்,நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்;அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்;இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்;எனவே,இந்த வழிபாடு முடித்துவிட்டு,எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு(வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு) படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி,வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்;அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.
இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில்(ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;
பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது;அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று;ஏனெனில்,மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு(மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது,ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும்,நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்;அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;
தொலைதூர மாநிலங்கள்,அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்;அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும்;காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது.கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!
ஓம் வாரதாரகர் சித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஓம் ஹ்ரீம் சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ

8 March 2017

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திர

கடன் தீர்க்கும் ருணவிமோசன மந்திரம்

ஓம் காம் தத்புருஷ லிங்கேஸ்வராய விஸ்வேஸ்வராய
த்ரியம்பகாய ருத்ரமூர்த்தயே ருணவிமோசனாய
மம ஜென்ம ருண ரோக விமோசனம்
குருகுரு ஓம் ஸ்ரீம் காம் சாம் ஸ்ரீபரசிவாய ஸ்வாஹா"

இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க கடன் பிரச்சனை தீரும்.