ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359
மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.
youtube
16 August 2012
சகலத்திர்கும் கட்டு மந்திரம்.
சகலத்திர்கும் கட்டு மந்திரம்.
ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தை கட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம
இடுகையிட்டது ஸ்ரீ சக்தி நேரம் 10:38:00 pm கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்
செவ்வாய், 26 ஜூன், 2012
ஹோமங்களின் பயங்கள்
உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் எமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.
இங்கே, பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றித்தரும் 21 வகையான ஹோமங்கள் தரப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட உங்கள் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்ள இந்த ஹோமங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
1. ஸ்ரீ தரணி ஹோமம் தரணியந்திரம்
ஸ்ரீ தரணி யந்திரம் பூமியைப் பற்றியது. இந்த ஹோமமும், யந்திர பூஜையும் பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கு இன்றியமையாதது. ஸ்ரீ தரணிஹோமம் செய்து, பின் தரணி யந்திரத்தை வைத்து முருகப் பெருமான் படத்துடன் வைத்துப் பூஜைசெய்து வரவேண்டும்.
2. ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் மற்றும் நீலா சரஸ்வதி யந்திரம்
இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக் கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்த பின்னர், யந்திரத்தை வீணையுள்ள வித்யாவதி சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்ய கல்வியும் சிறப்புறும்.
3. ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் ஹரித்வி கணேசா மஹா யந்திரம்
இந்த ஹோமத்தையும், யந்திர பூஜையும் செய்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டுவதுடன் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் உதவும்.
4. ஸ்ரீ கருட பஞ்சக்ஷ ஹோமம் மற்றும் மஹா யந்திரம்
தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், ஞாபக மறதி, குழம்பிய மனநிலை, சர்ப்ப சம்பந்தப்பட்ட பீடைகள் இராகு தோஷங்கள் நீங்குவதற்கு இந்த ஹோமம் உறுதுணை புரியும்.
5. ஸ்ரீ தக்ஷண காளி மஹா யந்திரம் மற்றும் ஹோமம்
எதிரிகளை வெல்லவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை தண்டித்து தன்னை வணங்குபவருக்கு தக்க அபயமளித்து காத்து ரக்ஷிக்கச் செய்யும் உபாசகனுக்கு தரிசனம் தந்து காக்கும் தெய்வம் தக்ஷிண காளியைத் திருப்திப்படுத்தும் ஹோமம்.
6. ஸ்ரீமத் மஹா ஆஞ்சனேய யந்திரம் மற்றும் ஹோமம்
சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து நிவாரணம் அளிக்கும். இராமபிரான் சீதையுடன் கூடிய பட்டாபிஷேக படத்துக்கு சந்தன குங்குமம், செவ்வந்திப்பூச் சார்த்தி, இன்னும் சில கிரியைகள் செய்திட ஸ்ரீ ஆஞ்சனேயா அனுக்கிரகம் கிடைக்கும்.
7. மஹிஷ மர்தினி ஹோமம் மற்றும் மஹா யந்திரம்
வசியம், ஆரோக்கியம், சத்ரு ஜெயம், சாந்தி புஷ்டி, தானியவளம், சத்ரு நாசம், பூதாதிகளின் நாசம் இவற்றை அளிக்கவல்லது.
8. ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம்
பிள்ளைப் பேறு, சத்ரு நாசம், ஜகத்திலுள்ள உயிர்களின் வசியம், எப்பொழுதும் எதற்கும் அஞ்சாத திடமும், உடல் வலிவும் பெற இந்த ஹோமம் மற்றும் யந்திரம் உதவும்.
9. பாசுபதாஸ்தா ஹோமம் மற்றும் மஹா யந்திரம்
இதன் சாதனை ஹோமமும், யந்திரமும் கூடும்பொழுது எந்தப் பகையையும் விலகி ஒடவைக்கும். துன்பங்கள் அனைத்தையும் போக்கும். பகை எண்ணங் கொண்டவர்களை நட்புக்கொள்ள வைக்க வல்லது.
10. வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் மற்றும் யந்திரம்
வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும். ரத்தினங்கள், ஆபரணங்களின் சேர்க்கையைக் கூட்டுவிக்கும்.
11. ஸ்ரீ காயத்ரீ ஹோமமும் மஹா யந்திரமும்
மந்திரங்களின் மூலசக்தி ஸ்ரீ காயத்ரீ தேவியே. எந்த மந்திர உச்சாடனத்திற்கும் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பின்னரே உரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சர்வ காரிய சித்திகளுக்கும் துணை நிற்கக் கூடியவை இந்த ஹோமமும் யந்திரமும்.
12. ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமமும் யந்திரமும்
ஆறு முக்கோணங்களைத் தன்னுள்ளடக்கிய யந்திரத்தை உடையவள் வராஹி. வேண்டி வணங்குபவருக்கு வேண்டும் வரங்களைத் தருபவள். வேறு எந்த சக்தி எதிர்த்தாலும் தன்னைப் பூஜிப்பவருக்கு தங்குதடையின்றி வரம் தருபவள். அவளுக்கு உரியது இந்த ஹோமம்.
13. பூர்ணா தேவி ஹோமமும் யந்திரமும்
எதிலும் நிறைவான செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தருபவள் பூர்ணா மாதா. மனக் குறைபட்ட உள்ளங்களில் நிறைவை உண்டாக்கும் வல்லமை கொண்டது இந்த ஹோமமும் யந்திரமும்.
14. தன்வந்திரி ஹோமமும் யந்திரமும்
அனைத்து வியாதிகளையும் போக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது. நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்பட்டவர்களை நலம் பெற்று நடமாட வைக்கும். அமுத கலசத்தைக் காட்டும் சர்வரோக நிவாரணம் தருவது.
15. ஸ்ரீ குபேர ஹோமமும் மஹா யந்திரமும்
அபரிமிதமான செல்வச் சேர்க்கையைத் தரும். வறுமையைப் போக்குவது. கடன்களைத் தீர்த்து மனதிற்கு நிம்மதியைத் தருவது. கை நிறைய செல்வத்தை நாள் தோறும் வழங்கி வருவது இந்த குபேர யந்திரமும் ஹோமமும்.
16. ஸ்ரீ சக்தி ஹோமமும் மஹா யந்திரமும்
ஐஸ்வர்யம், பவிக்ரமம், சர்வஜன வசியம் அனைத்தும் அருள வல்லது இந்த ஹோமம்.
17. ஸ்ரீ வடுக பைரவ மஹா யந்திரமும் ஹோமமும்
அனைத்து பயங்களிலிருந்தும் காக்க வல்லது இந்த ஹோமம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் தெரிவது. பூஜிப்பவரைக் காக்கும் வல்லமை கொண்டது. பேய் பிசாசு தொல்லை நீக்கிடும். பில்லி சூனியத்தையும், மாந்திரீகங்களையும் தவிடு பொடி ஆக்குவது.
18. ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமமும் யந்திரமும்
தம்பதிகளின் கருத்தொருமித்த காமாக்கியங்களுக்கு வல்லமையைத் தருவது. ஸ்பரிச உணர்வில் காந்த சக்தியை வர்ஷிப்பதுடன் மனதில் நிறைவையும் தருவது இந்த ஹோமத்தின் மகிமை.
19. மகாலட்சுமி ஹோமமும் யந்திரமும்
லக்ஷ்மி நாராயணன் பூஜையுடன் கூடியது. இது சர்வ ஐஸ்வர்யமும் அருள்வது. லட்சுமியின் எட்டு குணபேதங்களை அஷ்டலக்ஷ்மியாகச் சித்தரிக்கிறது. அஷ்டலக்ஷ்மியின் அனைத்துச் சக்திகளையும் அருளவல்லது.
20. அஸ்வாரூட யந்திரமும் ஹோமமும்
கனவில் வந்து பலன் சொல்வது. வெளிநாடு செல்லத் தடை ஏற்பட்டால் அதை நீக்குவது, வெளிநாடு, கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க அருள்வது. வேலை விஷயமாகப் (இண்டர்வியூவ்) போகும்பொழுது ஏற்படும் பயத்தைப் போக்க வல்லது.
21. பாலமுருக ஹோமமும் யந்திரமும்
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பலனத் தருவது இந்த ஹோமம். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது.
No comments:
Post a Comment