youtube

15 September 2012

தேள் விஷம் நீங்க

தேள் விஷம் நீங்க இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

யட்சிணி வசியம்

சீரடி சாய்பாபா . விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல்வித்தை                                        வெள்ளிகிழமை காலை ஸ்னானம் செய்து மஞ்சள் நூலினால் கிருஸ்ணதுளசிக்கு காப்புகட்டி பொங்கலிட்டு சாம்பார்பூசணிகாய் பலியிட்டு தூபம் காட்டி துளசியின் வடக்கே போகும் வேரை கொண்டுவந்து பட்டு நூலினால் சுற்றி கீழ்க்காணும் மந்திரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் 1008 உரு கொடுக்க வேண்டும். -மூல மந்திரம்- ஒம் ஸ்ரீம் ஆகாஸலெஸி பூலோகலெஸி பாதாளலெஸி ஸ்ரீம் றீம் கிலிம் அவ்வும் உவ்வும் செளவும் நமசிவாய. சீரடி சாய்பாபா

குறி சொல்லும் கர்ண எட்சிணி

குறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ
ம். கர்ண எட்சிணி மந்திரம் 'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா" - இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும். பூஜை முறை: நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

உருமறைப்பு ஜாலம்

உருமறைப்பு ஜாலம் அமாவாசை ஆதிவாரம் அனுச நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் கருங்கழுதையை கொன்று தலையை உடைத்துப்பார்த்தால் கோமேதகம் போன்றதொரு கல் இறுக்கும். அதை எடுத்து தாம்பிர டப்பியில் பத்திரப்படுத்தவும். இதை வேறு விதமாக வைத்தால் காணமுடியாது மறைந்து விடும். இதை வாயில் அடக்கிக் கொண்டால் நமது உருவம் யாருக்கும் தெரியாது. பேசினால் சப்தம் கேட்கும். இது உருமறைப்பு என்னும் ஜாலமாகும். ஆனால் மேற்கண்ட நாள், நட்சத்திரம் கூடிய தினத்தில்தான் இதை எடுக்க முடியும். மற்ற நாளில் கிடைக்காது.

அனுமார் மந்திரம்

அனுமார் மந்திரம் ஓம் அனுமந்தா, ஆஞ்சனேயா, நமோ நாராயணாய, சிரஞ்சீவியாகக் காத்து ரக்ஷித்து வா கிளியும், ஸவ்வும், என் எதிரிகளை வென்று என்னைக் கா, கா, கா, ஸ்வாஹா! என்று 1008 உரு செபிக்கவும்.

மூலிகை சாபநிவர்த்தி

மூலிகை சாபநிவர்த்தி மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அதன் முன் வாழை இழையில் தேங்காய், பழம், வெற்றிலை பக்கு,ஊதுவர்த்தி - இவைகளை வைத்து தூபதீபம் காட்டி வணங்கி கிழக்கு முகமாய் அமர்ந்து சாபநிவர்த்தி மந்திரத்தை 15-உரு செபித்து மஞ்சள் நூலால் காப்பு கட்ட வேண்டும்.காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்து அதை முன்று சுற்று சுற்றி வீசி எறிந்துவிட்டு வேர் எடுக்கவேண்டும்.வேர் எடுக்கும் போது ஆணிவேர் அறாமல் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைதான் மூலிகை எடுக்க உரிய நாள்.இவ்விதம் காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து எடுத்தால்தான் மூலிகை நூலில் சொல்லிய பலன் தரும் என்பதை உணர வேண்டும். மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்-அகத்தியர் சித்தியாம் மூலிகையைப் பறிக்கும் முன்னே சிறப்பாகச் செடிமுன்னே நின்றுகொண்டு பக்தியுடன் ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகாவென்று நத்தியே பதினைந்து உருவே போட நலமான சாபவிமோட்சனைந்தானாகும். விளக்கம்: மூலிகையை பறிக்கும் முன்னே செடியின் முன் நின்று கொண்டு "ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகா- என்று 15-உரு போட நலமாக சாபநிவர்த்தி ஆகும் என்கிறார் அகத்தியர்.

நாய் கடிக்காதிருக்க ஜாலம்

நாய் கடிக்காதிருக்க ஜாலம் நாயுருவி இலை, எருக்கன் இலை, எருக்கன் மொக்கு - இம்மூன்றையும் கசக்கி உன்னை கடிக்கவரும் நாய் முகத்தில் எரிந்தால் அதை முகர்ந்தவுடன் அந்நாய் மயக்கம் கொள்ளும். இதைக் கண்டவர்கள் நாயின் வாயை கட்டிவிட்டார் என எண்ணுவார்கள்.

10 September 2012

சின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள்!!!

சின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள்!!! நாம் பயன்படுத்தும் சின்னம்/சின்னங்கள் நமது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன;அல்லது நமது லட்சியத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கின்றன;தகுந்த ஆன்மீக/ஜோதிட குருவின் மூலமாக இதைத் தேர்ந்தெடுப்பதால் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும்.நமது வலதுபக்கமூளையானது கற்பனை,படைப்பாற்றலைக் கொண்டது;இதை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களே தமது துறையில் சாதனையாளராகிறார்கள். தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமே சிவகாசி ஆகும்.கொல்கத்தாவில் 1910களில் தீப்பெட்டித் தொழிலின் ரகசியத்தைக் கற்றுக்கொண்டு வந்த ஒருவர்,சிவகாசியில் முதன்முதலில் தீப்பெட்டித் தொழிலை ஆரம்பித்தார்.அவரைத் தொடர்ந்தே இன்று இந்தியா மொத்தத்திற்குமே தீப்பெட்டியை அனுப்பிவைக்கும் தொழிலாக வளர்ந்திருக்கிறது.காகா தீப்பெட்டி என்று ஒன்று இன்றும் இருக்கிறது.இந்த நிறுவனர் காகா சண்முகநாடார்,அவரது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது தீப்பெட்டித் தயாரிப்புக்கான அடையாளச்சின்னமாக காகாவை வைத்தார்.அவரது ஜாதகப்படி,அவரது பிறந்த நட்சத்திரத்துக்குரிய பஞ்ச பட்சியாக காகா வருகிறது.அதையே தனது தொழிலின் சின்னமாக வைத்தபடியால்,தீப்பெட்டியில் கோடிகளை சம்பாதித்தார்.இதே போல சுமார் 4000 சின்னங்களில் சிவகாசி முழுவதுமே தீப்பெட்டிகள் தயாராகிவருகின்றன.ஆனால்,ஒருசில சின்னங்களில் தயாராகும் தீப்பெட்டிகளை கோடி ரூபாய்களை சம்பாதித்து தந்துகொண்டிருக்கிறது. பஞ்சபட்சி என்பது ஜோதிடக்கலையில் ஒரு சூட்சுமமான அதே சமயம் அதிசக்திவாய்ந்த பிரிவு ஆகும்.நாம் வளர்பிறையில் பிறந்திருக்கிறோமா? அல்லது தேய்பிறையில் பிறந்திருக்கிறோமா? என்பதை நமது பிறந்த ஜாதகப்படி அறிந்து,அந்த வளர்பிறை அல்லது தேய்பிறை நட்சத்திரப்படி ஐந்து(பஞ்ச) பட்சிகளில் ஒன்று நமது பட்சியாக(பறவையாக) வரும்.அதையே நமது தொழிலின் சின்னமாக வைத்து,தொழிலைத் துவக்கினால்,நமது தொழிலில் நம்மை எந்தக் கொம்பனாலும் போட்டிபோட்டு நம்மை ஜெயிக்க முடியாது. உதாரணமாக வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் எனில்,அவரது பஞ்ச பட்சியானது ஆந்தையாக வரும்;(உதாரணம் தான்;நிஜமான பட்சியைச் சொல்லவில்லை);இந்த வளர்பிறை ரோகிணியில் பிறந்தவர்,ஒரு தமிழ் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது தொழிலை ஆரம்பிக்க வேண்டும்;அந்த குறிப்பிட்ட நேரமானது ராகு காலமாகவோ அல்லது எமகண்டமாகவோ கூட வரலாம்;ஆனால்,அந்த ராகு காலமோ/எம கண்டமோ அவருக்கு கெடுதல் செய்யாது;ஏனெனில்,அவர் தனது பிறந்த பட்சியின் அடிப்படையில் ஒரு தொழிலை அந்த நேரத்தில் ஆரம்பித்துவைக்கிறார். ஒரு தனிமனிதனுக்கே இப்படி எனில்,ஒரு நாட்டுக்கு? ஆமாம்,1940களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் சிலர் நமது இந்தியாவுக்கு வந்தார்கள்.மிகச் சிறந்த ஞானி ஒருவரை நமது இந்தியர் மூலமாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.அப்படிக் கண்டு கொண்டு,அந்த ஞானியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர்; “உலக நாடுகள் அனைத்தும் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும்;அதற்கு ஏற்றாற்போல ஒரு சின்னத்தை எங்களுக்கு தாங்கள் அருள வேண்டும்”என்று வேண்டி நின்றார்கள். அந்த ஞானிக்கு அமெரிக்காவுடைய எதிர்காலம் முழுமையாகத் தெரிந்திருக்கிறது.இந்த பதிவின் முகப்பில் நாம் கொடுத்திருக்கும் சின்னத்தை அந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வரைந்தே காட்டியிருக்கிறார்.இதன்படி,கழுகுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி உண்டு;அதையே அந்த அமெரிக்கர்கள் தமது நாட்டின் முக்கியமான சின்னமாக வைத்துக்கொண்டனர்.அந்த கழுகின் ஒரு கையில் வில்லும் அம்பும் இருக்கிறது;மறு கையில் சமாதானத்தை காட்டும் ஆலிவ் இலை இருக்கிறது.(இதன் அர்த்தம் என்னவெனில்,போரையும்,அமைதியையும் யுக்திகளாகக்கொண்டு,இந்த பூமியையே ஆட்சி செய்வோம்)கடந்த எழுபது ஆண்டுகளாக இதுதானே உலக அரசியலில் அமெரிக்கா செய்கிறது. இந்த சின்னத்தைப் போல,நமது நாட்டுக்கும்,நாட்டு அரசாங்கத்துக்கும் என்று ஒரு தீரம் மிக்க சின்னத்தை நமது ஆளும் வர்க்கம் தேர்ந்தெடுத்தார்களா? அப்படி தேர்ந்தெடுத்திருந்தால் நாம் ஏன் இப்போதைய இழிவான நிலையை எட்டியிருக்கப் போகிறோம்? உலகத்துக்கே நாம் தான் வழிகாட்டியாக இருப்போமாம்;ஆனால்,நமது நாட்டு மக்கள் மட்டும் பல்வேறு விதங்களில் கஷ்டப்பட வேண்டுமாம்;எனது வாசக,வாசகிகளே, எப்போது நமது இந்தியா இந்த உலகத்தையே ஆளும்?