youtube

26 September 2016

*தேனும் லவங்கப் பட்டையும்*

உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

தேனை சூடு படுத்தக்கூடாது
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

*தேன் எனும் அற்புத உணவு.*
தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது
அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

தேனும் லவங்கப் பட்டையும்
குணப்படுத்தும் நோய்கள்

*இதய நோய்*
இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

*அற்புத மருந்து இதோ!*
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு
பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த
உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.

அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

செலவு குறைச்சல் தானே!
முயற்சி செய்யுங்களேன்!

ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு
தித்திக்கும் தேன் போன்ற செய்தி.

தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்துச் சொல்கிறார்கள்
கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.

200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும்,
1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.

ஒரே வாரத்தில் 73நோயாளிகள் வலி
நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.

இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை
இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியைக் குறைத்துக் கொள்வோம்!

*சிறுநீர்க் குழாய் கிருமிகள்*
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில்
கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து.

கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

*ஜலதோஷம்*
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.

வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

*வாயு தொல்லை*
இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!

*எதிர்ப்பு சக்தி வளரும்*
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து
உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

*அஜீரணம்*
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில்
சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல்
ஜீரணமாகும்.

*நீண்ட ஆயுள்*
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.

வயதான தோற்றம் மறைந்தே
போகும்.  100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.

*தொண்டையில் கிச் கிச்!*
1 தேக்கரண்டி தேனை எடுத்து
மெதுவாக உண்ணுங்கள்.
3 மணிக்கு ஒரு தரம் இப்படி
செய்து வாருங்கள்.
தொண்டையில் கிச்கிச் முதல்
அல்லது 2 தேக்கரண்டியில்
போய்விடும்.

*முகப்பருக்கள் அடியோடு மறைய!*
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.

காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

*சரும நோய் தீர*
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

எடை குறைய வேண்டுமா?
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.

அதே போல இரவில் படுக்கப்
போகும் முன்னர் தேனையும்,
லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல்
எடை குறைவது உறுதி.

*அதிசயம்.ஆனால் உண்மை.*
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.

அதாவது நீங்கள் சாதாரண
உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

*புற்று நோய்க்கு அருமருந்து*
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து,
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

*அயர்ச்சி*
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள
சர்க்கரை அபாயகரமானது
இல்லை. உடலுக்கு உதவக்
கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப்
பெறுவார்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க!
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும்
வாய் மணக்கும்.
உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

a

உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

b

உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

c

உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

d

உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

e

உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

f

உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

g

உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

h

உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

i

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

j

 J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

k

உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

l

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

m

 M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.

n

 N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

o

அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

p

உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத— தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

q

 Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

r

உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

s

 S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

t

உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

u

உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.

v

உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

w

உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

x

உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.

y

சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

z

உங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால், இந்த எழுத்தை உடையip பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள்.