youtube

8 November 2014

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 10

எனவே அந்த இரு விரலும் விலக்கியே வைத்து ஜபமணியை பயன்படுத்தவும். 108 வரை மந்திரம் சொல்ல வேண்டுமானால் மேரு என்னும் அதன் உச்சியை முதலாக கொண்டு உட்பக்கமாக மந்திரம் ஜெபித்து கொண்டே வந்தால் 108 கணக்குடன் மீண்டும் அதன் உச்சி வந்து விடும். பின்பு தொடர்ந்து மேருவை கடந்து அப்படியே மீதம் எண்ணக்கூடாது. பெரியவர்கள் மகாமேரு போன்றது உச்சி அதனை கடக்க கூடாது என்பார்கள். எனவே மீதம் எண்ணிக்கைக்கு மாலையை திருப்பி கொள்ள வேண்டும். பின்பக்கம் மாலையின் மணிகளை தள்ளக் கூடாது. ஏன் மாலையை திருப்ப வேண்டும். எல்லாம் ஒன்று தானே என நீங்கள் நினைக்கலாம். ஜபமாலையில் மேருவுக்கு அடுத்த மணி எப்பொழுதும் இரண்டாவதாக எண்ணிகையில் வரும் கடைசி மணி எப்பொழுதும் கடைசியாகவே இருக்கும். இது ஒரே பக்கமாக என்னும் பொது சக்தி குறையும் ஏன சித்தர்கள் கூறுகிறார்கள். திருப்பி திருப்பி பயன்படுத்தும் போது முதல் கடைசியும் கடைசி முதலும் மாறி மாறி வரும். அவ்வாறு அமையும் போது ஜப மணிகள் முழு சக்தியும் குறையாமல் இருக்கும் என குருமார்கள் கண்டுணர்ந்து கூறியுள்ளார்கள். எனவே எல்லாவற்றிற்கும் இவாறு பயன்படுத்துங்கள். ஜபமாலையை தரையில் வைக்க கூடாது. ஜப மாலையை பயன்படுத்தும் பொது இன்னொருவர் பார்க்க கூடாது. எனவே காவி துண்டை கையில் மூடி என்னலாம். யாரும் இல்லாத தனி அறையாக இருந்தால் மறைவு தேவை இல்லை. பொதுவாக வெளியிடங்கள் சென்று ஜபம் செய்யும் போது இந்த மறைவு தேவைப்படும். கரமாலையை பயன்படுத்தினாலும் வெளி நபர்கள் காண கூடாது. கரமாலை என்பது கைவிரல் அங்குலஸ்திகளை எண்ணிக்கைக்கு பயபடுத்துவர் அதற்கு கர மாலை என்று பெயர். கைவிரல்களையும் ஜெபத்திற்கு என்னும் பொது காவி துண்டை கொண்டு மறைத்தே எண்ணிகையை தொடர வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு ரகசியத்தை கடைபிடித்தால் தான் ஈடுபாடும், அக்கறையும் ஒரு நிலைப்பாடும் அதிகரிக்கும் இதுவும் தேவ ரகசியமே.
இவ்வாறாக அன்னை மகா சரஸ்வதியின் மந்திரம் கூற வேண்டும். கீழே உள்ள மந்திரத்தை தான் முறை ஜப மாலை உதவி உடன் முதன் முதலாக கூற வேண்டும். எந்த மந்திரமும் மனதிற்குள்ளேயே கூறவும். இனி மந்திரங்களை காண்க.
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி வித்யாரம்பம்
கரிஷ்யாமி சித்திற்பவதுமே ஸதா

(108முறை கூற வேண்டியது)
இது வரை செய்த பூஜை எல்லாம் பக்குவ பூஜை மரியாதையை பூஜையாகும் அடுத்து செய்ய போகும் பூஜையே சக்தி யுக்தி புக்தி பலம் கொண்ட கன்னி மூல (தந்குதல௦ பூஜையாகும். உச்சிஷ்ட பூஜையாகும். அசுத்தமே குடி கொண்டாலும், அநாகரிகமாய் நடந்து கொண்டாலும் பொருத்து திருத்தி காத்து வழி நடத்தும் மிக மிக அற்புதமான முதல் பூஜையாகும். எல்ல வெற்றிக்கும் வித்திடும் சக்தி பூஜை இதுவேயாகும்.

 
 





சக்தி உச்சிஷ்ட கணேச பூஜை
வயதை கடந்தவர்கள் மற்றும் ஏற்கனவே ஆன்மிக பூஜை கண்டவர்கள், தொழில் முறை ஜோதிடர்கள். ஆலய பனி செய்பர்கள் இந்த பயிற்சியை முதலிலேயே கடைபிடிக்கலாம் பலன் உண்டும் தினத்திலேயே ஜன வசியம் வாகு பலம் உண்டாகும், அதே நேரத்தில் மனப் பக்குவம் இல்லாதவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து துவங்குவது தான் நல்லது, ஒரு முழு பூஜை என்பது ஆரம்பத்தில் இருந்து செய்வது தான் சிறந்தது, முயற்சித்து ஆரம்பத்தில் இருந்து துவங்குங்கள். முழு வெற்றி கிட்டும், அவசர குணத்திற்கு இங்கு இடம் தராதீர்கள் பூஜை செய்வது இறைவனுக்காக அவர் திருப்தி பட வேண்டும் எனவே அவரை மதித்து முழுமையாய் கடைபிடியுங்கள், நீங்கள் விரும்பியதை கொடுக்க போவது அவர் தான் எனவே அவரை மனபூர்வமாக பற்றிகொல்லுங்கள், ஏன் இதை கூறுகிறேன் என்றால் பலரும் பயிற்சியின் நாட்களை என்னுகிரர்களே தவிர பக்தியின் தீவிரத்தை அதிகரிப்பதில்லை., இது பெரும் பிழையாகும், நாட்கள் நகர நகர பலருக்கும் ஆர்வம் குறைகிறது இது தவறு. நாட்கள் கடக்க கடக்க பக்தி மிகுதிபட்டுகொண்டே போக வேண்டும். இதுவே நாம் பரிபூரண மனதோடு பூஜிக்கிறோம் என்பதின் வெளிபாடகும். ஆர்வம் குறைய எது காரணமோ அதை கண்டு போக்க வேண்டும். மன சளிப்புக்கு இடம் கொடுக்க கூடாது. மனம் சோம்பலை நாடினால் அதை விரட்டி விட வேண்டும். தெய்வ சோதனைகள் நிறைய உண்டு அது இதுவாகவும் இருக்கலாம். இறைவன் சோதனையில் அவர் தோற்று நாம் வெற்றி பெறவே விரும்புவார் இதை உணர்ந்து நாம் இறை சோதனையில் வெற்றி பெற முயற்ச்சிக்க வேண்டும். செய்யாது கர்மாதான் பலன் கழிக்கும். பிறகு தெய்வம் பேசவில்ல என வருத்தப்பட்டு புண்ணியமில்லை. எனவே இந்த பயிற்சியை நாம் ஏன் செய்கிறோம், இதை கொண்டு என்ன அடைய திட்டமிட்டிருக்கிறோம் என்பதை தினம் இறைவனிடம் பிராத்தனை கவனம் செய்தால் ஆர்வம் குறையாது, இறைவனின் அளவறியா வலிமையை உணர்ந்து அவர் ஸ்தானத்தை உணர்ந்தால் ஆர்வம் அதிகமாகும், நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் இறைவன் சித்தமென நினைத்தால் பக்தி பெருகும். மூல பரம் பொருளே உலகின் வசியம், மூல பரம் பொருளே உலகின் வெற்றி, மூல பரம் பொருளே உலகின் உயிர் கரு, மூல பரம் பொருளே உலகின் அணைத்து தெய்வங்களின் முதல் இயக்கம் இவைகளை மட்டுமாவது பரிபூரணமாக உணர்ந்து பாருங்கள் பக்தி தன்னால் பெருகும். உணர்ந்த மாத்திரத்திலேயே அருளும் பொங்கும்.
நீங்கள் வெற்றி பெறுவதே இறைவனின் நோக்கம் எனவே வெற்றிக்கு பாடுபடுங்கள் பலன் உங்களுக்கு தான் என்பதை எண்ணி பாருங்கள். இந்த உலக சலனம் நம்மை திசை திருப்ப பார்க்கும் வெற்றி பெரும் வரை வீண் எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். கவனம்.

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 10 

 காவல் தெய்வ பூஜை

இந்த பூஜையை சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதியில் துவக்கவும்
இதில் துவக்குவதற்கு முன் காவல் தெய்வ பூஜை செய்ய வேண்டும். இது எதற்கு என்றால் வரு முன் காப்பது உடற்கட்டு பூஜை. இதையும் மீறி கர்ம வினையால் சிலருக்கு துன்பம் வரலாம். அவ்வாறு வந்தபின் காப்பது காவல் தெய்வ பூஜையாகும். காவல் தெய்வங்களாக பலரும் பல வழியில் வணங்குகிறார்கள். கருப்பண்ணசாமி, அய்யனாரப்பன், ஆஞ்சநேயர், சாஸ்தா, மதுரைவீரன், பெரியாண்டவர், முனீஸ்வரன், வீரபத்திரன், இடும்பன், சாத்தான், இன்னும் எத்தனையோ வகை தெய்வங்களை அவரவர் பகுதி வழக்கப்படி பூஜிக்கிறார்கள். எனினும் அத்தனைக்கும் தலைமையானவர் ஸ்ரீ கால பைரவர் தான் அக்காலம் முதல் இக்காலம் வரை சித்தர்களுக்கும் ஒரு சிவ ஆலயத்திற்கும் முகப்பிலேயே காவலாய் இருப்பவர் இவரே. எனவே காவல் தெய்வமான இவரை வழிபட்டால் மேற்சொன்ன தெய்வங்களின் சக்தி தன்னாலேயே வழித்துணையாக வரும். இந்த காவல் தெய்வ பூஜை மிக எளிமையானது. ஒரு தடவை செய்தாலும் பலன் உண்டு. நீங்கள் விருப்பட்டால் வாரா வாரம் சனிக்கிழமை செய்யலாம். காவல் தெய்வங்களுக்கு உகந்த நாள் எப்பொழுதுமே சனிக்கிழமை தான். ஆலகால விஷத்தில் இருந்து சிவ பெருமான் கக்கப்பட்டதும் சனிக்கிழமை தான். காக்கும் கடவுள் ஸ்ரீ ஹரிக்கு உகந்த நாளும் சனிக்கிழமை தான் ஸ்ரீ ஆஞ்சநேயர், சாஸ்த, கருப்பசாமி, சனிஸ்வரர், பைரவர் காலி, அய்யனாரப்பன் போன்ற இன்னும் ஏனைய தெய்வங்களுக்கும் உகந்த நாள் சனிக்கிழமை தான். ஓரளவு விஷயம் அறிந்தவர் கூட சனிக்கிழமை சிறப்பை தெரிந்து வைத்திருப்பர். அரச மரத்திற்கு லஷ்மி கடாட்சாரம் கிடைக்கும் நாளும் சனிகிழமை தான். எந்த ஆலயத்திலும் இன்று தீபம் ஏற்றினால் கடன் தொல்லை, தீராத வியாதி, இருந்தால் விலகும். விஷயம் உணர்ந்தவர் அசைவம் தவிர்ப்பர். சனி கிழமையின் பெருமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த யுகமே சனி யுகம் தான். இதற்கு குருவாக காவலாக இருப்பவர் கால் பைரவர் தான். தெய்வத்தில் உயர்வு தாழ்வு இல்லையென்றாலும் அவரவர்களும் ஒரு பொறுப்பு ஒப்படைகக பட்டிருகிறது. இது தேவ ரகசியம். அதில் காவல் தெய்வமாக இருப்பவர் ஸ்ரீ கால பைரவர் சாமி. இவருக்கு அஷ்டமி சனிகிழமை உகந்தது. மற்ற நித்ய பூஜை நியமனங்களை விடியற்காலை முதல் முறையாக முடித்து பின்பு சிவாலயம் சென்று ஸ்ரீ கால பைரவர் சன்னதில் தேங்காயில் மிளகு தீபம் ஏற்றவும். எவ்வாறெனில் ஒரு சுத்தமான வெள்ளை கலர் காட்டன் துணியில் 12 முழு மிளகு வைத்து கட்டிக்கொள்ளவும். இதுவே திரியாகும்.
இது போல் இரண்டு கட்டிக் கொள்ளவும். சுத்தமான நெய் 100 கிராம் போதுமானது. ஒரு தேங்காய் வாங்கி கொள்ளவும். கட்டிய மல்லிகை பூ சிறிது எடுத்து கொண்டு ஆலயம் செல்கிறீர்கள். அங்கு பைரவ சுவாமிக்கு புஷ்பம் சாற்றவும் பின்பு தேங்காயை இரண்டாக உடைக்கவும். (நிதானமாக வரன்பு பார்த்து தட்டி உடைக்கவும்) அதில் குடுமியை எடுத்து விட்டு சுவாமிக்கு இருபுறமும் தேங்காயை அகல் போல் நிறுத்தி அதில் மிளகு திரியை வைத்து நெய் விட்டு தீபம் ஏற்றவும். பிறகு அவரை வணங்கில் முதலில் பாவ மன்னிப்பு கேட்கவும் எவ்வாறெனில் இறைவ நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளும் ஏன் பெற்றோர் பரம்பரை செய்த பாவங்களனாலும், மண் சாபம், பெண் சாபம், மனை சாபமனாலும், பறப்பன நடப்பன, ஊர்வன சாபமனாலும் தெய்வ குற்றம் புரிந்திருந்தாலும், முன் ஹென்ம வினை சாபமானாலும், பிரம்மஹத்தி சாபமனாலும் அனைத்தும் என்னை தாக்காமல் இறைவ தாங்களே என்னை காத்தருள வஐண்டும் என மனப்பூர்வமாக பய பக்தியோடு வேண்டி கொள்ளவும். எவ்வித இடையூறும் இல்லாமல் தாங்களே காவல் தெய்வமாக என்னை காத்தருள வேண்டும். ஏன் பாவங்களையும் தவறுகளையும் நீக்கி காத்தருள வேண்டும் என வணங்கி கீழ்காணும் மூல மந்திரத்தை 108 தடவி கூறவும்.
பிறகு ஆலயத்தில் அணைத்து தெய்வங்களையும் நவ கிரக தேவர்களையும் நிதானமாக மனபூர்வமாக வழிபட்டு வரவும். ஒவ்வொரு இடத்திலும் தீபம் ஏற்ற சிரமமாக நினைக்கலாம் எனவே வாசனையான ஊதுவத்தி ஏற்றி கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு தெய்வங்களிடம் சென்று ஆராதனை காண்பித்து வணங்கி கொள்ளவும். (இறுதியாக ஊதுவத்தியை ஆலயத்திலோ பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்து விட்டு வரவும்) பிறகு இறுதியாகவும் கால பைரவ சுவமைடம் வந்து இறைவ தங்கள் கருணையால் அனைத்து தெய்வங்களின் அருளாசியும் பெற்றேன். அதையும் தாங்களே என்னன்னாலும் நீங்கமளிருக்க அருள் கூர்ந்து காத்தருள வேண்டும் என வணங்கி சிறிது நேரம் அமர்ந்து மனதை ஆசுவாசபடுத்தி பின்பு வீடு திரும்பவும்.
இந்த காவல் தெய்வ பூஜையை ஒரு தடவை செய்தாலும் போதும். விருப்பபட்டால் முன்பு கூறியபடி சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதியில் வழிபடலாம். ஒரு தடவை பூஜை செய்தாலும் மனப்பூர்வமாக பூஜிக்க வேண்டும்.
அடுத்து
இவ்விடம் ஒரு தகவலை அறியவும். குரு பூஜை, பூமி பூஜை, உடற்கட்டு பூஜை, காவல் பூஜை என வரிசையாக செய்தீர்கள். அதை ஏன் செய்ய வேண்டும் என்ற முக்கிய காரணத்தையும் மேற்கண்ட பாதுகாப்பு பூஜைகள் செய்யததே முக்கிய காரணம். மற்றவர் வினையை போக்க எத்தனிக்கிறோம் என்றால் மேற்கண்ட தெய்வங்களின் உதவி கண்டிப்பாக வேண்டும். எனவே மனம் சலிக்காமல் மனம் லயித்து பூஜைகளை வரிசையாக செய்து அடுத்த பூஜைக்கு வாருங்கள்.
நமக்கொரு பாதுகாப்பு ஏற்படுத்தி கொண்டே மற்றவர் பாதுகாப்பிற்கு செல்ல வேண்டும். அதுவே புத்திசாலிதனம். ஆன்மிகத்தில் பொறுமையும் கட்டுப்படும் மிக முக்கியம் அதுவே நம் மூலதனமாகும்.

 














காவல் தெய்வ பூஜைக்கு அடுத்த நாள் இந்த பூஜையை செய்யவும்
ஜப மாலை சுத்தம்- வாக்கு தேவதை பூஜை
ஸ்படிக ஜப மாலை ஏற்கனவே சுத்தபடுத்தி எண்ணிக்கையில் அனுப்பியுள்ளேன் எனினும் தங்கள் மன திருப்திக்கு முறையாக சுத்த படுத்தி பின்பு பயன்படுத்தவும்.

 



அடுத்து ஜப மாலை சுத்தம்  செய்து வாக்கு தேவதையை கொண்டு மந்திர உரு முதலில் செய்ய வேண்டும்.
விளக்கமாக அறியவும்
ஜபமாலை சுத்தம் செய்ய வேண்டும். இந்த ஜபமாலையை மூல மந்திரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பொதுவாக உருவேற்றக்கூடிய அணைத்து மந்திரங்களும் பயன்படுத்தலாம். பாதகமில்லை. பசும்பால் அதில் சிறுது உப்பு, சிறிது மஞ்சள் தூள் போட்டு கலந்து அதில் ஜப மாலையை சிறிது நேரம் வைத்து எடுத்து விட வேண்டும். (மந்திர உரு ஏற்ற பலவகையான மாலைகளை பயன்படுத்தினாலும் இக்காலத்தில் ஸ்படிக மாலையே அனைத்திலும் சிறந்தது. பிறகு சுத்த தண்ணீரில் கழுவி பூஜை அறையில் தயாராக வைத்து கணபதி பூஜை, செய்து பிறகு ஜப மாலையை வலது கை ஆகாய விரல் என்னும் நடு விரலில் மத்திய அன்குலாச்த்தியில் வைத்து அதன் உச்சியை கட்டை விரலால் தொட்டு
ஓம் கம் கணபதயே நம: என மூன்று முறை கூறி
ஓம் குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவ மகெஸ்வரஹ குரு சாட்சாத்
பரப் பிரம்மை தஸ்மை ஸ்ரீ குருவே நம:
என்று ஒரு முறை கூறி, பின்பு கட்டை விரலை எடுக்காமலே வெள்ளை தாமரையில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மஹா சரஸ்வதியை நினைத்து மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கல்விக்கும், ஞானத்திலும், ஜப மாலைக்கும், வாக்கு பலித்ததிற்கும், மந்திரங்களை பிழையில்லாமல் கூற அருளும் இவரே கொடுப்பார். எல்ல கல்விக்கும் அதிபதி இவரே. நீங்கள் கற்க இருப்பது தவக்களை இந்த கலை பிழையில்லாமல் கற்கவும், பிழையே செய்தாலும் திருத்தி தரவும். இவர்களே துணை புரிய வேண்டும். எனவே இந்த மகத்துவத்தை உணாந்து முறை உரு ஏற்றவும். ஜப மாலையை ஒவ்வொரு முறை மந்திரம் கூறி உட்பக்கமாக தள்ளவும். ஜபமாலையில் ஆள்காட்டி விரல், சுண்டு விரல் நுனி தொடக்கூடாது. கவனம்
அவசர அலைச்சல் உலகில் உஷ்ணத்தோடு வாழ்கிறோம். அன்னை மஹா சரஸ்வதி தாயை ஸ்படிக மாலையால் முதலில் மந்திர உரு செய்தால் சாந்தம். சீதோஷ்ண சம நிலை உடலில் உண்டாகும். எல்லா உடலுக்கும் ஸ்படிக ஏற்கும்.