youtube

3 November 2016

பகவதியட்சிணிதேவி மந்திரம்

பகவதியட்சிணிதேவி மந்திரம்
கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.

பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும்
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும்.
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும்
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.
எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க

பில்லி சூனியம் ஏவல் இவற்றில் இருந்து பாதுகாக்க
காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...

மாந்திரிகம் என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

                                                                                        - கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கேஎன்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்

சித்தர்கள் வணங்கிய குலதெய்வம்

சித்தர்கள் வணங்கிய  குலதெய்வம்

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

                                                                                                        - கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.


சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

1 November 2016

அஞ்சனை தேவி வாலைதேவி அகத்தியர் சித்தர் வழிபாடு முறை

அஞ்சனை தேவி வாலைதேவி அகத்தியர் சித்தர் வழிபாடு முறைஅகத்தியர் சித்தர் க்கான பட முடிவு  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.
சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.

மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.