youtube

17 February 2017

சித்தத்தில் சிவனை எண்ணியே வாழ்ந்து இறவா நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்!

சித்தத்தில் சிவனை எண்ணியே வாழ்ந்து இறவா நிலையை அடைந்தவர்கள் சித்தர்கள்!
அதே போல மஹாகால பைரவப் பெருமானை எண்ணியே சித்தரானவர் தான் ஸ்ரீவாரதாரகர் சித்தர்! இவர் தேவலோகத்தில் வசித்து வருகின்றார்;
ஜோதிடர்களால் தினமும் வழிபடவேண்டிய கால தேவலோக சித்தரே ஸ்ரீவாரதாரகர் சித்தர்!
இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஏழு கிழமைகள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று காலத்தை வகுத்துக் கொடுத்தவர்;
ஓம் வாரதாரகசித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஸ்வர்ணாகர்ஷண பைரவ மந்திரம்ஸ்வர்ணாகர்ஷண பைரவ மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ

மகா மந்த்ரஸ்ய பிரும்மா ருஷி: பங்திஸ் சந்தஹ:

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதா:

ஸ்வர்ணாகர்ஷண பைரவ பிரசாத சித்யர்த்தே

ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோக:


தியானம்


காங்கேய பாத்ரம் டமருகம் த்ரிசூலம்

வரம் கரை: ஸமசந்ததம் த்ரிநேத்ரம்

தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்

ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்

ஸ்வர்ணகர்ஷணபைரவர் காயத்ரி


ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி

தந்தோ ஸ்வர்ணகர்ஷணபைரவ: ப்ரசோதயாத்


ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு பைரவர் பொற்குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர்.


ஸ்வர்ணகர்ஷணபைரவர் பன்னிரண்டு நாமாக்கள்


ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ

ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ

ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ

ஓம் பக்தப்ரிய நமஹ

ஓம் பக்த வச்ய நமஹ

ஓம் பக்தா பீஷ்ட பலப்ரத நமஹ

ஓம் ஸித்தித நமஹ

ஓம் கருணாமூர்த்தி நமஹ

ஓம் பக்தபீஷ்ட ப்ரபூரக நமஹ

ஓம் நிதிஸித்திப்ரத நமஹ

ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ

ஓம் ரசஸித்தித நமஹ.


பய நிவர்த்தி பைரவ மந்த்ரம்


ஓம் ஆபதூதாரணாய

அஜாமில பந்தனாய

துஷ்ட்ட நிக்ரஹாய

சிஷ்ட்ட பரிபால ஸ்வரூபாய

மம-தாரித்ரய-துக்கதகனாய

மம-சாப சோ பாப சல்லிய தோஷ நிவர்த்திகராய

தனாகர்ஷணாய

ஸ்வர்ணாகர்ஷணாய

சகல கார்ய அனுகூல சித்திகராய

சகல சத்ரு தோஷ நிவர்த்திகராய

சகல வியாதி பீடா நிவர்த்திகராய

ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:


16 February 2017

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!
உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.
அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.
மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.
இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!
நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்;அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும்,வலிமையோடும்,சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;
இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது;ஆண்கள் எனில்,மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது;எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ,அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;
எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ,அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்;கடன்கள் தீரும்;அரசு வேலை கிடைக்கும்;நிறுவனம் வளர்ச்சியடையும்;வராக்கடன் வசூலாகும்;ஆரோக்கியம் மேம்படும்;தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்;கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்;பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்;அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது;குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்;சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்;கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்;அவ்வாறு தொடர்ந்து வீட்டில் வழிபட்டதால்,ஒவ்வொருவருக்குமே மேற்கூறிய பலன்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன;கிடைத்து வருகின்றன;
18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்;தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்;சாதி,சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் இந்த வழிபாட்டைப் பின்பற்றலாம்;
கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு;
மஞ்சள் துண்டு,(வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு),மண் அகல்விளக்கு ஒன்று,சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி,சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு,அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு,எவர்சில்வர் கிண்ணம் ஒன்று,காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)
தினமும் காலை 4.30 மணி முதல் காலை 6 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்;அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப்பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்;செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்;(தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது).கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்;சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்;பிறகு அவரது பாதத்திலும்,பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,சூலாயுதம்,அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கக் கூடாது;பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்;பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)
இவ்வாறு பாடுவதற்கு முன்பே,வீட்டில் சமையல் முடிந்திருந்தால்,நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்;அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்;இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்;எனவே,இந்த வழிபாடு முடித்துவிட்டு,எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு(வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு) படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி,வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்;அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.
இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில்(ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;
பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது;அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று;ஏனெனில்,மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு(மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது,ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும்,நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்;அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;
தொலைதூர மாநிலங்கள்,அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்;அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும்;காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது.கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!
ஓம் வாரதாரகர் சித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!
ஓம் ஹ்ரீம் சொர்ண ஆகர்ஷண பைரவாய நமஹ

15 February 2017

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்

நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி..
அகத்தியர் சித்தரின் மெய்பொருள் - விளக்கம்:

"தோணிபோல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும்"

அதாவது இறைவன் நம் உடலில் இருக்கும் இடம் தோணிபோல் காணும் என்கிறார்.

நம் உடலில் கண் தோணிபோல் தானே இருக்கிறது?

இந்த தோணியே தான் இறைவன்-ஜீவன் குடியிருக்கும் வீடு.

சீர்காழி ஊரில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் இதனால்தான் வழங்கப்படுகிறது.

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்"

நமது கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்கிறார்.

அங்கே ஜீவ ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தி, சாதனை புரிந்தால் கனல் எழும்பும். அப்போது கண்ணில் கடுப்பு தோன்றும் என்று தனது அனுபவ நிலை பற்றி எந்த மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.

பற்றுங்கள், பற்றிக்கொள்ளும்! பெரும் நெருப்பாகும்!

அந்த சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் வியாபித்து ஒளி உடலாகும்.

மேலும் "தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி " என்கிறார்.

அதாவது நமது தேகமதில் நாம் காண வேண்டியது உள்ளே உறைந்திருக்கும் இறைவனை.

அவர் ஒளியாக உள்ளார்.

 ந - ம - சி - வ - ய என்ற பஞ்ச பூதத்தில் ஒரு எழுத்தாகிய 'சி' என்ற அக்னி கலையை யார் காண்கிறார்களோ அவர்களே ஞானி எனக் கூறுகிறார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

13 February 2017

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் !!!

பைரவர் வழிபாடு - கை மேல் பலன்  !!!

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து ,துர்மரணம், ஜாதக தோஷங்கள் , மாந்திரீக பாதிப்புகள்  இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6  மணி முதல்  கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும்  ஒரே சக்திதான் .

இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம்.
எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி  தெரியாமல் தடுமாறுபவர்கள் ,

பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய
முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள்

ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என

எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்

ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்
இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம்

1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு சிதறு தேங்காய் உடைத்து  விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம்

தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வணங்கி  விட்டு பிறகு உள்ளே செல்லவும்
 விநாயகர் இல்லையென்றால் ஆன்மிகமே இல்லை , எந்த வழிபாடும் முழுமையடையாது ( எவ்வளவு சிறப்பாக நாம் செய்தாலும் )

2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்

3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் . மத்த நாளிலும் ஏற்றலாம்

4) வெளிநாட்டில்  இருப்பவர்களுக்கு  அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம்

விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்

பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் ,

ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன

எனவே  7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்

( ராகு , கேது  கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென  நேரம் மட்டும்  ஒதுக்கப்பட்டுள்ளது  )

அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .

ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால் ),  வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்


விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை

அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும்

வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும்

தெரியும் .

நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும்/ நடக்கும்  )

நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற  பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

 கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள்  எல்லாமே  நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் ,  நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக  கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம்  எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .

இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி

உங்களுக்குள்ளான ,உங்களுக்கே  தெரியாத  உங்களுக்கு அத்தியாவசிய  தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும்

அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும் .

அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையோ அல்லது சிக்கலையோ கொடுப்பார் . அதை தீர்க்கும் வழிமுறையையும் அவரே வெளிகாட்டுவார் கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள் .

உதாரணத்துக்கு சொல்லனும்னா  நமக்கு வேண்டியவர்கள் நமக்கு  நீச்சல் கத்து கொடுக்கும் போது  நம்மை கிணத்துல தள்ளி விட்டு கூடவே இருந்து நீச்சல் கத்து கொடுப்பாங்க, நம்மள உள்ள முழுக விடாமலும்  பார்த்துக் கொள்வார்களே  அது போலதான் இருக்கும் பைரவர் ஸ்டைல் .

உங்களால தப்பி தவறி கூட தவறான வழியிலோ , குறுக்கு வழியிலோ  போக முடியாது .

இது தான் வாழ்க்கை , இப்படிதான் வாழணும் ன்னு தீர்க்கமாக  ஒரு நல்ல  முடிவு எடுக்க வைப்பார் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை அல்லது வருசத்துக்கு ஒரு முறை வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி  கூட்டிட்டு போவார்

சுருக்கமாக சொல்லனும்னா நம்ம வாழ்க்கையை பைரவர் கையில் எடுத்து கொள்வார் , அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் , பைரவரே  குருவாக இருந்து வழி நடத்த ஆரம்பிப்பார் . சூட்சம வடிவில் எப்போதும் கூடவே இருப்பார் , குருவாகவும் ( சூட்சம வடிவில்)  இருப்பார் , இதை உணர கொஞ்ச  காலம் ஆகும் , நிச்சயமாக இந்த வழிபாட்டை பின்பற்றும் அனைவராலும் இதை உணர முடியும்.

நம்முடைய கர்ம வினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ ) அனுமதிக்கவே அனுமதிக்காது , நிறைய தடைகளை ஏற்படுத்தும் , சோம்பேறிதனத்த உண்டு பண்ணும் , நாமே எதாவது காரணம் சொல்லிக்கிட்டு கொஞ்சநாளில்  அப்படியே விட்டு விடுவோம் . இந்த மாதிரி தடைகளையெல்லாம்  பொருட்படுத்தாமல் அலட்சியபடுத்தி விட்டு  நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும் . ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் , அப்பறம் சரியாகிவிடும் .

( இது நிறைய பேரோட அனுபவம் ).

ஆரம்பத்துல என் குருநாதர் இந்த தகவல  சொல்லும்போது  இதோட வலிமை தெரியாமல் ரொம்ப சர்வ சாதரணமாக நினைத்தேன் ,செய்துகொண்டே இருக்கும் போதுதான் வலிமையை உணர முடிகிறது .


ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து  இந்த வழிபாட்டை செய்து வாருங்கள் . அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வாருங்கள் .
தினமும் பசிக்கு சாப்பிடுவோமே அதை போல ஒரு அத்தியாவசிய தேவையாக இந்த வழிபாட்டை வாழ்க்கைக்கு மாற்றி  கொள்ளுங்கள் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஏற்படும் , வாழ்கையை உணர ஆரம்பிப்போம் நிறைய நல்ல ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் இதற்க்கு கொஞ்ச காலம் தேவைபடும்

  64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .

 காசியில் இருக்கும் பைரவரில் இருந்து நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் எல்லா பைரவருக்கும்  ஒரே சக்திதான்


நிபந்தனை :

 ஆரம்பிக்கற நாள்  வளர்பிறை நவமி , தேய்பிறை நவமி , பிரதமை திதி ஆக இருக்க கூடாது

அன்றைய தினம் உங்களுக்கோ , உங்க குடும்ப உருப்பினர்கள் நட்சத்திரத்திறத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது

மிகவும் பொருத்தமான நாள் தேய்பிறை அஷ்டமி

ரொம்ப முக்கியமான விசயமே இதுதான் ,வழிபாட்டுல அலட்சியம் கூடாது , ஏன்னா அலட்சியதிற்கு நான் தண்டனை அனுபவிச்சி இருக்கேன் , ரொம்பவே கடுமையாக  இருக்கும் .

 திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு  போடணும் .விளக்கு போடும் பொது பைரவர் சிலை மூடி இருக்க கூடாது

(எந்த கோவிலும் , அந்த கடவுள் சிலை மூடியிருக்கும் போதோ / திரையிட்டு மூடி இருக்கும் போதோ / எதாவது தடுப்பு வைத்து மறைத்திருந்தாலோ / கோவில் கதவு சாத்தி இருந்தாலோ - வழிபடுவும் கூடாது , விளக்கு போடவும் கூடாது ,அப்படி செய்வதால்  எந்தவித பலனும் இருக்காது -ன்னு குருநாதர் சொல்லியிருக்கார் )

அசைவமும் சாப்பிட்டுக்கிட்டு வழிபாட்டையும் தொடர்வது , தண்ணீர்  தொட்டியில் ஒரு பக்கம் தண்ணீரை சேமித்துகிட்டும் , மறுபக்கம் தொட்டியின் அடைப்பை திறந்து வைத்திருப்பதை போன்றது இந்த அசைவம் சாப்பிடும் பழக்கம் , கடைசி வரை தண்ணீரை எப்படி சேமிக்க முடியாதோ அது போலதான் இதுவும் ( இது எல்லா வழிபாட்டுக்கும் பொருந்தும் )​

 கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது  , பைரவரே  நிறுத்த வைப்பார்

பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு),சனிக்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர்

ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்

வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்

அர்ச்சனை

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்


இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.

ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.