youtube

12 November 2016

கண் திருஷ்டி மறைமுக எதிரிகள் தொல்லைகள் அகல

கண் திருஷ்டி மறைமுக எதிரிகள் தொல்லைகள் அகலபூண்டின் க்கான பட முடிவு
5 கிராம்புகளுடன் சிறிதளவு பூண்டின் உரித்த தோல்கள் சேர்த்து வீட்டில் வியாபாரம் செய்யும் இடத்தில் வாரம் ஒரு முறை தூபமிட்டு வர மறைமுக எதிரிகள் தொல்லை மற்றும் கண் திருஷ்டி அடியோடு அகலும்.

அகத்திய மாமுனிவரினால் உலகுக்கு அளிக்கப்பட மகத்தான ஹோமங்கள்

அகத்திய மாமுனிவரினால் உலகுக்கு
அளிக்கப்பட மகத்தான ஹோமங்கள் .ஹோமங்கள் . க்கான பட முடிவு


1.அகத்தியர் அருளிய “கிரக
தோஷம்” போக்கும் ஹோமம்!


நண்பர்களே, இனிவரும் நாட்களில் சித்தர்கள்
அருளிய ஹோமங்கள் சிலவற்றை பகிர்ந்து
கொள்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ
ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது
என்பதாகவே நம்மில் பலர் அறிந்து
வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை
சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.

குருவருளை வேண்டி வணங்கி இந்த
ஹோமங்களை யாரும் செய்திடலாம்.
தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம்
எதுவும் இதில் இல்லை. அந்த வகையில்
முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில்
இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி
பார்ப்போம்.

சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு
உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது.
இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து
நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு
பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய
பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள்
மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது
மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில்
பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே
நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான
ஒரு ஹோம முறையினை அகத்தியர்
பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே இன்னமொரு கருமானங்கேள்
கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
பிலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் எள்ப்பொரிகொண்
டோமாமம்பண்ணு
தோணவே கிரகமதில் நின்றதோஷந்
சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"
- அகத்தியர் -

என்கோண வடிவத்தில் ஹோம குண்டம்
ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம்
செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள
வேண்டும். பின்னர் குருவினையும்,
குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச
மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம
குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.
இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின்
மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை
உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின்
மூல மந்திரம் பின் வருமாறு.

"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே
அகோரா அங் உங் இங் வாவா லம் பட்
சுவாகா"

தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த
கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம்
ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும்
ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி
பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற
மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை
நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த
மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள்
பொரியினை நெருப்பில் போட
நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள்
யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.
எளிதாய் இருக்கிறதல்லவா...
ஆர்வமுள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

2.அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!
------------------------------------------------------------------------------------

திருமணமான பலர் தங்களுக்கு
புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு
மனம் வெதும்பி வாடுவதைப்
பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி
மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து
இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல
தீர்வுகளைத் தந்திருக்கிறது.

எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய
ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான
தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை
முன்வைக்கிறார். இதன் சாத்திய,
அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும்
உட்பட்டவை.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண
வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன்
படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர்
கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல்
வேண்டும். கணவணும், மனைவியும்
ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும்
சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு
செய்திட வேண்டுமென்பதை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.

சித்ததான சித்துகளுக் குறுதியான
சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.
- அகத்தியர் -

கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின்
குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில்
தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும்
போது அக்கினியின் மூலமந்திரத்தை
உச்சரித்து வரவேண்டும்.

அக்கினியின் மூலமந்திரம்...
"ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே
அகோரா அங் உங் இங் வாவா லம் பட்
சுவாகா"

தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின்
மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம்,
தேன் கலந்த கலவையினை நெருப்பில்
விடவேண்டும் என்கிறார். இந்த முறையில்
புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள்
சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல
மந்திரம்...

"ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும்
கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி
பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"
இப்படி செய்தால் புத்திரபாக்கியம்
இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும்
என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு
மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில்
மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார்.
இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில்
செய்யலாம் என்கிறார் அகத்தியர்.
சுவாரசியமான தகவல்தானே...

3.நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்!
---------------------------------------------------------

மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல
ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும்
வாழ விரும்புகின்றோம். நல்ல உடல்
ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு
ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே
வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம்
என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு
வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர்
ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட
ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும்
முன்னூறு ஆண்டுகள் வாழ
முடியுமென்கிறார்.
ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?,

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா
என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன்
பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள்
பொதிந்திருக்கிறதா என ஆராயலாம்.
அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி
பின்வருமாறு விளக்குகிறார்.

"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"
- அகத்தியர் -

முக்கோணம் வடிவத்தை உடைய ஓம
குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர்
ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து
கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில்
ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி
வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி
வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல
மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம்
அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம்
பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க
வேண்டும் என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும்
கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது
புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும்
கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும்
வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி
ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை
சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008
முறைகள் செய்திட வேண்டுமாம்.

இந்த ஹோமத்தை ஒரு மண்டல
காலத்திற்குள் நூறுமுறை செய்யும்
ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான
புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார்
அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும்
இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம்
என்கிறார் அகத்தியர்.

4.யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய
புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!
-------------------------------------------------------------------

புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம்
பற்றி பார்ப்போம்.
முந்தைய மூன்று பதிவுகளிலும்
புவனையின் மூல மந்திரங்களை
ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென
குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில்
பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான்
மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான்.

இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய
தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய
அறிமுகத்தை தந்து அவளின் அருளைப்
பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன்.
சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான
வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய
பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை
என்பவள் குழந்தை வடிவத்தையுடைய
தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே
இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப்
பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த
இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

புவனை அம்மன் என்பவள் இந்த
புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம்
குழந்தையின் அம்சமென்றால், புவனை
அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர்
பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா
உருவத்திற்கு சொந்தமானவள். இந்த
அன்னையின் அனுசரனையின்றி ஏதும்
நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த
மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம்
மூலம் பெற முடியுமானால் எத்தனை
ஆச்சர்யமான விஷயம்.

அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர்
பின்வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"
- அகத்தியர் -

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம
குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம்.
ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய்
அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில்
அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க
வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது
அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம்
கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங்
இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.

தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை
போட்டுக் கொண்டே புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா”
என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும்
என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம்
சொல்லி கோதுமையைப் போட புவனை
அம்மனின் அருள் கிட்டும் என்கிறார்.
அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும்
என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை
வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.
நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி
முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

5.பாவம் போக்கி, செல்வம் தரும்
ஹோமம்!
------------------------------------------------------

பாவச் செயல்களை செய்வதன் மூலமாய்
ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும்
பாவங்களின் வகைகளை அகத்தியர்
பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"
- அகத்தியர் -

வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும்
பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும்
பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற
செயல்களினால் உண்டாகும் பாவம்,
தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம்,
பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை
செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற
உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம்
என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார்.

இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான
பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக
அகத்தியர் கூறுகிறார்.

அதென்ன வழி... அதனை அகத்தியர்
மொழியிலேயே பார்ப்போம்.
"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"
- அகத்தியர் -

மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட,
ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம்
செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின்
குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட
வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின்
மூல மந்திரமான “ஓம் அரிஓம்
கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங்
இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம்
தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா”
என்ற மந்திரத்தை சொல்லியவாறு
நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த
முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி
நவதானியத்தை போட வேண்டும் என்கிறார்
அகத்தியர்.

"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"
- அகத்தியர் -

இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து
மூன்று நாட்கள் செய்து வர தீராத
பாவமெல்லாம் தீருமாம், அத்துடன்
மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம்.
இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து
முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ
மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த
ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும்
செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார்
அகத்தியர்.

6.300 வயதுவரை வாழவைக்கும்
ஹோமம்?
------------------------------------------------------

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன்
முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம்
சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே
நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர்
பெருமக்கள் பலநூறு வருடங்கள்
வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள்
கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம்
வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு
சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.
ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன்
முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார்
அகத்தியர். இதன் சாத்தியங்கள்
ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத்
தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை
அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின்
மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப்
பார்ப்போம்.

"அறிந்துகொண்டு புவனையுட
மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"
- அகத்தியர் -

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம்
செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக்
கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி
தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி
மூல மந்திரமான “ஓம் அரிஓம்
கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங்
இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட
வேண்டுமாம்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா”
என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே
அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட
வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை
செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு
மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள்
செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம்.
அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம்
அதாவது 96 நாட்கள் செய்து வர 300
வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார்
அகத்தியர்.

நம்ம்பிக்கையும், ஆர்வமும், அவசியமும்
உள்ளவர்கள் குருவருளை வேண்டி
முயற்சித்துப் பார்க்கலாமே!

7.அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!
----------------------------------------------------------------------------

நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை
அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த
மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம்
பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை.
எனினும் பொதுவான தேக ஆரோக்கியம்
வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம்
என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி
அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

"பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
நலமான அக்கினியை லரசால்செய்து
பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"
- அகத்தியர் -

அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம்
செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக்
கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை
போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம்
அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா
அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற
மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும்
என்கிறார்.

நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல
மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும்
சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை
பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா”
என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு
மரத்தின் குச்சிகளை போட வேண்டும்
என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற
வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி
எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக்
குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.

இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை
செய்தவரை பீடித்திருக்கும் நோய்
விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான
நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர்.
இந்த ஹோமத்தை எவரும் செய்து
பலனடையலாம்.

செய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது?

செய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது?செய்வினை க்கான பட முடிவுமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…!  நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும்.  ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே.  அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.  இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது.  இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை.  வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள்.  ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.  கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு
வெண்கடுகு 250 கிராம்
நாய்க்கடுகு 250 கிராம்
மருதாணி விதை 250 கிராம்
சாம்பிராணி 250 கிராம்
அருகம்புல் பொடி 50 கிராம்
வில்வ இலை பொடி 50 கிராம்
வேப்ப இலை பொடி 50 கிராம்மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.இப்பதிவினை எழுதத்தூண்டிய எல்லாம் வல்ல போகர் பெருமானின் பாதம் பணிந்து இப்பதிவினை அவர்தம் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை ..

ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை ..எலுமிச்சை விளக்கின் க்கான பட முடிவு

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.

 எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

 விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின் மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.

ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.
ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை ..

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.

 எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

 விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின் மகிமை

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.

ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

வராகி வசியம் யந்திரம்

வராகி வசியம் யந்திரம்
வராகி அன்னை உபாசனை மிக எளிதில் அடையும்.
அன்னை நாம்மை தன் குழந்தை போல பதுகப்பாள்
இந்த யந்திரத்தை நாம் வீட்டில் வைத்து பூஜைகள் செய்தால் எதிரிகள் தொல்லை நிச்சியமாக ஒழியும்.
எங்கள் குருநாதர் குமுக்கு சித்தர்அவர்கள் வராகி அன்னையுடன் தினம் பேசுவார்.
எங்களிடம் கூறுவர் எவ்வளவு பணம் செல்வம் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு பகைவர் எதிரிகள் இருந்தால் அவருக்கு  நிம்மதி என்பது இருக்காது
இந்த யந்திரம் மந்திரம்  நம்மிடம் இருந்தால் எதிரிகள் தொல்லை நிச்சயமாக
இருக்காது

எங்களிடம் அன்னையின் கோவில் வராகிபூஜைகள் செய்துயந்திர உரு ஜெபித்து உங்களுக்கு மிக குறைத்த விலையில்  வழங்கிறோம்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் மந்திரம் யந்திரம்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன்
மந்திரம் யந்திரம்குருவாயூர் நவநீத கிருஷ்ணன் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் க்கான பட முடிவு
திருமணம்மாகி வெகு நாட்கள் குழந்தை  இல்லாத ஆணும் பெண்ணும் இங்கு யந்திர  பூஜை முறைகள் கடைபிடித்தால் நவீத கிருஷ்ணன் அருளால் குருவாயூரப்பன் அருளால் மகப்பேறு கிடைகும்.
இந்த யந்திரத்தை பூஜை வைத்து ஒவ்வெரு கிழமையும் பால்,பாயசம் தயாரித்து அவல் பொரி,கடலை, நெய் விளக்கு கேற்றி கிழக்கு முகமாக அமர்த்து.
ஓம் நமோ நாராயண நமஹா
ஓம் நவநீதகிருஷ்ணன்  நமஹா
ஓம் நமோ குருவாயூரப்பனே நமஹா

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும், இதே போல் 10 வியாழக்கிழமை விரதம் இருந்து . பூஜை முடித்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைகும்

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா கண்பதி மூலமந்திரம்

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்கண்பதி க்கான பட முடிவு
மேற்கு முகமாகய் தர்ப்பை ஆசனந்திலிருந்து, தாமரை மணியால்

ஓம் ஸ்ரீ கிலி நடனசிங்கார கனபதி என்று தினந்தோறும் 10008 வீதம் 10 நாள் ஜெபித்து வர  பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினைமுதலியவைகள் ஒழியும். மற்றவர்களுக்கும் வீபூதியில் ஜெபித்து கொடுக்கலாம்  

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்குழந்தைகளுக்கு க்கான பட முடிவு
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்

இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள்  நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்

குழந்தைகளுக்குண்டாகும் கிரந்தி சிலந்தி கட்டிகளுக்கு மந்திரம்குழந்தைகளுக்கு க்கான பட முடிவு
மூலமந்திரம்
அகார உகார மாரக விந்தா ஆதாய பரப்பிரம்ம
மூர்த்தி என்னும் வந்த விஷங்களும் சர்வ கட்டிகளும்
சர்வ வைப்புகளும் இதுக எல்லாம்  தரி தரி முரி முரி
தாக்கு தாக்கு சர்வபேத பிசாசுகள் நான் கையில்
வேப்பிலை எடுத்தவுடன் பஞ்சா பறக்க சுவஹா
இந்த மந்திரத்தை மந்திரத்தை 108  முறை உபாசனை செய்து சித்தியாக்கி பின்பு

குழந்தையை தாயின் மடியில்மீது உட்கார வைத்து கிழக்கு முகமாக குத்தச் சொல்லி வேப்பிலையால் 10  முறை மந்திரித்து குழந்தை உச்சியில்லிருந்து மூன்று தடவை iபூமியில் இறக்கவும்.

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா
வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

கணவன் மனைவி ஒற்றுமையாக வழ ரதிமோகினி யந்திரம் தாயத்து

கணவன் மனைவி ஒற்றுமையாக  வழ ரதிமோகினி யந்திரம் தாயத்துதாயத்து க்கான பட முடிவு
கணவன் மனைவி ஒற்றுமையாக  வழ ரதிமோகினி உதவ கூடிய தேவதை ரதிமோகினி
இந்த யந்திரம் நாம் வீட்டில் வைத்து பூஜை செய்தால் சகல கணவன் – மனைவி  பிரச்சனைகள் தீரும்

இந்த யந்திரம் உடன் ரதிமோகினி தேவி பிரிதிஸ்ட செய்த தாயத்து அணிந்தல்  கணவன் மனைவி ஒற்றுமையுடன்  வாழ்வார்

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்

எடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்விபூதி க்கான பட முடிவு
நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை மலர் சாற்றி ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி  இவைகளுடன் ஒரு தகட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்
முதலில் முறைப்படி விநாயகர் பூஜை  முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து
வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும்.
பின்பு
ஓம் சிவாய நம ஓம்
ஓம் சர்வ சக்தி ஓம்
ஓம் ஓங்கார சக்தி ஓம்
 ஓம் பிரணவப் பொருளே ஓம்
ஓம் பஞ்சாட்சரமே ஓம்
ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்
 ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே  ஓம்
ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்
ஓம் மசி நசி அங் மங் சங் 
ஆதார சக்தியே ஓம்
இந்த மந்திரத்தை 11 நாள்  தினம்  108 விதம் செய்து வர சித்தியாகும் . சித்தியான பிறகு ஒரு முறை கூறி விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கினால் போதும்
இந்த விபூதியை எல்லா வகைக் காரியங்களும் நலம் பெற நெற்றியில் பூசினால் போதும், வசியம் வசீகரம், காரியசித்தி இவைகள் ஏற்படும்


உயிர்காக்கும் ரட்சைகள் உயர்வளிக்கும் ரட்சைகள்

உயிர்காக்கும் ரட்சைகள் உயர்வளிக்கும் ரட்சைகள்
இதில் வியாபாரம்,
தொழில் சிறந்து விளங்க
அரசியலில் பதவிகிடைக்க
எதிரிகளின் தொல்லைகள் வராமல் தடுக்க
காரிய சித்தி பெற
என்று பல வகைகள் உள்ளன. வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படமால் இருக்க இப்படி பல வகைகள் உண்டு. வீட்டில் வைத்த யந்திரத்தில் சக்தி அந்த வீட்டைச்சுற்றி சில அடிகள் தூரம் தான் இருக்கும்.நீங்கள் வெளியில் செல்லும் போது,நீங்கள் வைத்திருக்கும் ரட்சைகள் தான்  உங்களுக்கும் பாதுகாப்பைத் தரும்.  அதிலும் பாதுகாப்பு ரட்சைகள் வசியத்தை தராது. காரியதடை நீங்கும் ரட்சை பாதுகாப்பு தராது.
பாதுகாப்பு ரட்சை,பணவரவிற்கு பயன்படாது.
ஆகவே இதுவரை எவரும் செய்திராது, வேறு எங்கும் கிடைக்காத யந்திரத்தொகுப்பு,அதாவது ,
முகவசியம்
,தடைநீங்கி காரிய சித்தி பெற,
தொழில்முன்னேற்றம்
எதிரிகளின் வைஞ்சனை
பில்லி,சூனியங்கள் ஓட ஓட விரட்டி வெற்றி பெறக் கூடிய
மேலும் கணவன் மனைவி ஒற்றுமை
ஏற்பட இப்படி பல  வசிய ரட்சைளின் தாயத்து தொகுப்பு நாங்கள் ஒரு சிறிய
பிளாஸ்டிஸ் கவரில் வைத்து 21 நாட்கள் பூஜைகள் செய்து கொடுக்றோம்
இந்த ரட்சைகளின் தொகுப்பை சட்டைபையில் வைத்து கொள்ளலாம் அல்லது கைபையில் ஹேண்ட்பேக்கில் வைத்து கொள்ளலாம் .
மேலும் விபரங்களுக்கு
+91   9047899359
இவைகள் தவிர குழதைகள் கல்வி சிறந்க சரஸ்வதி ரட்சை,கணவன் மனைவி மோகினி ரட்சை ஆகிய ரட்சை தனி தனியாக கிடைக்கும்
மேலும் விபரங்களுக்கு

+91   9047899359

உயிர் காக்கும் யந்திரங்களும் உயர்வளிக்கும் யந்திரங்களும்


உயிர் காக்கும் யந்திரங்களும் உயர்வளிக்கும் யந்திரங்களும்சித்த யந்திரங்கள் க்கான பட முடிவு

ஆன்மிக அன்பர்களே
தெய்வீக யந்திரங்களைப் பற்றி சிறு குறிப்பு இது
சில யந்திரங்களை வரைத்து பிரேம்  செய்து  வீட்டில் மாட்டக் கூடியது.ஒரு சிலவற்றை  சிறிதாக வரைந்து, தாயத்தில் ரட்சையாக,நமது உடம்பில் கட்டி கொள்வது.வீட்டில் வைக்கும் யந்திரங்கள் பல வகைப்படும் வாஸ்து தோஷங்கள் நீங்கு வாஸ்து யந்திரம் வீட்டில் செய்வினை தோஷம் , ஏவல் கண்திருஷ்தீயசக்திகள்,  உள்ளே வராமல் தடுக்க ,பாதுகாப்பு யந்திரம்.செல்வம் செழித்து லட்சுமி காடாஸ்ம் ஏற்பட லட்சுமி இப்படி பல வகை யந்திரங்கள் உள்ளன. இவைகளை  தங்கம் ,வெள்ளி, காரியம் ,செம்பு போன்ற உலோகத் தகடுகளில் வரைய வேண்டும். வசியத்திற்கு கார்ஈயம்,மோகனத்திற்க்குவெள்ளி, ஸ்தம்பனத்திற்குசெம்பு, மற்றும் பனை ஓலை ,வெள்ளி காகிதத்திற்குசெம்பு,மற்றும் பனை ஓலை ,வெள்ளை காகிதத்தில் கூட எழுதவேண்டிய யந்திரங்கள் உண்டு.இப்படி எழுதப்பட்ட யந்திதகடுகளை,வீட்டில் எந்த திசையில் எவ்வளவு உயரத்தில் மாட்ட வேண்டும் என்ற விதிமுறைகளும் உண்டு.

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை

ஆடாத பேயும் ஒடும் மூலிகை புகை
பேயும் க்கான பட முடிவுபேய் மிரட்டி இலைத்துள்
தலைச் சுருளிக் கொடிதூள்

ஆகிய இரு தூள்களையும் சம அளவாக எடுத்துச் சம்பிராணித் தூளுடன் கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையைக் கரி நெருப்பில் போட புகை எழுப்பும். இவ்வாறு புகை போட பேய் பிசாசு வகைகள் அணைத்து ஒடும்