youtube

31 July 2012

கிரகங்களின் பலன்கள் பலன்கள் லக்கினம் 1 மேஷ லக்கினம் யோககாரகர்கள்: குரு, சூரியன் யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி, **** குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர் களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர் களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க! சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம் இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு அதையும் மனதில் கொள்க! மாரக அதிபதி: (killer) சுக்கிரன் ================================================== 2 ரிஷப லக்கினம் யோககாரகர்கள்: சூரியன், சனி யோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன் நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன், சனி ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) குரு, சந்திரன் ================================================== 3 மிதுன லக்கினம் யோககாரகர்கள்: சுக்கிரன் யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு நல்ல பலன்களைக் கொடுப்பவர்: சனி, குரு ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்:சனியுடன் குரு ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) சந்திரன், சனி ==================================================== 4. கடக லக்கினம் யோககாரகர்கள்: குரு, செவ்வாய், சந்திரன் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன், பதன் நல்ல பலன்களைக் கொடுப்பவர்:குரு, செவ்வாய், சந்திரன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: செவ்வாய் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம் மாரக அதிபதி: (killer) சனி ======================================================= 5 சிம்ம லக்கினம் யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய் யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி நல்ல பலன்கள்: சந்திரன் சேர்க்கையை வைத்து நல்ல பலன்களைக் கொடுப்பார் ராஜயோகத்தைக் கொடுப்பவர்: செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகம் மாரக அதிபதி: (killer) சனி ======================================================= 6 கன்னி லக்கினம்: யோககாரகர்கள்: சுக்கிரன் யோகமில்லாதவர்கள்: செவ்வாய், சந்திரன், குரு மாரக அதிபதி: (killer) செவ்வாய் ======================================================= 7. துலா லக்கினம் யோககாரகர்கள்: சனி, புதன் யோகமில்லாதவர்கள்: சூரியன், செவ்வாய், குரு நல்ல பலன்களைக் கொடுப்பவர்:சுக்கிரன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) செவ்வாய் ======================================================== 8 விருச்சிக லக்கினம் யோககாரகர்கள்: குரு, சந்திரன் யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) குரு (Jupiter if illrelated will become a Maraka) ======================================================== 9 தனுசு லக்கினம்: யோககாரகர்கள்: புதன், செவ்வாய், சூரியன் யோகமில்லாதவன்: சுக்கிரன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: புதனும், சூரியனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு அந்தக் கூட்டணி ராஜ யோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) சனீஷ்வரன். ======================================================== 10 மகர லக்கினம்: யோககாரகர்கள்: புதன், சுக்கிரன் யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) செவ்வாய் ======================================================== 11 கும்ப லக்கினம் யோககாரகர்கள்:சுக்கிரன் யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும் மாரக அதிபதி: (killer) குரு, செவ்வாய் ====================================================== 12 மீன லக்கினம். யோககாரகர்கள்: செவ்வாய், குரு யோகமில்லாதவர்கள்: சனி, சுக்கிரன், சூரியன், புதன் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை மாரக அதிபதி: (killer) சனி, புதன் _______________________________________________________________________________ குரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள் நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார். குரு தனுசு மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். குருவிற்கு சூரியன், சந்திரன் செவ்வாய் நண்பர்கள், புதன் சுக்கிரன் பகைவர். சனி,ராகு, கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்கள் குரு கிரக சேர்க்கை போது உண்டாக்குவார். ஜென்மத்தில் குரு குரு ஜென்ம லக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பு, நல்ல பழக்க வழக்கம், சிறப்பான பேச்சாற்றல், பரந்த மனப்பான்மை, நீண்ட ஆயுள், சிறப்பான நட்புக்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். குரு பலம் இழந்து இருந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற இடையூறு உண்டாகும். குரு 2ல் இருந்தால் தன ஸ்தானமான 2ல் குரு சுபர் சேர்க்கையும் இருந்தால் தாராள தன வரவு, நல்ல பேச்சு ஆற்றல், வசதி, வாய்ப்பு, குடும்ப வாழ்வில் ஒற்றுமை,நல்ல கண் பார்வை உண்டாகும். குரு தனித்து இருந்தால் பொருளாதார ரீதியாக சில சங்கடம் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் பண கஷ்டம், குடும்ப வாழ்வில் பிரச்சனை உண்டாகும். குரு 3ல் இருந்தால் குரு 3ல் இருந்தால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம், எதிலும் தனித்து செயல்படும் நிலை ஏற்றம் உயர்வு உண்டாகும். தனித்து குரு இருந்தால் இளைய சகோதர தோஷம் ஆகும். ஆண் கிரக சேர்க்கை உடன் இருந்தால் சேர்க்கை உடன் பிறப்பில் அனுகூலம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும். குரு 4ல் இருந்தால் கேந்திர ஸ்தானமான 4ல் குரு இருந்தால் வசதி வாய்ப்பு, செல்வம், செல்வாக்கு, அசையா சொத்து யோகம், நல்ல பழக்க வழக்கம், நல்ல கல்வி ஆற்றல், சுக வாழ்வு உண்டாகும். தனித்து இல்லாமல் கிரக சேர்க்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தனித்து பலம் இழந்தால் சுக வாழ்வு பாதிப்பு, அசையா சொத்து அமைய தடை உண்டாகும். குரு 5ல் இருந்தால் 5ல் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, பொது காரியம், சமூக நல பணியில் ஈடுபாடு, சிறப்பான குடும்ப வாழ்வு, பெரியோர் ஆசி உண்டாகும். தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும். சுப கிரக சேர்க்கையுடன் இருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் வசதி வாய்ப்பு உண்டாகும். குரு 6ல் இருந்தால் குரு 6ல் இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு, நல்ல ஆரோக்கியம், சிறப்பான குடும்ப வாழ்வு, பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும். குரு பலம் இழந்தால் வயிறு கோளாறு, பெரியவர்கள் சாபத்தால் வாழ்வில் மன குறை உண்டாகும். குரு 7ல் இருந்தால் குரு ஜென்ம லக்கினத்திற்கு 7ல் இருந்தால் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். நல்ல அழகான மனைவி, சிறப்பான குடும்ப வாழ்வு, வசதியான பெண் மனைவியாக வரும் யோகம் உண்டாகும். 7ல் தனித்து இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் (கேந்திராதிபதி தோஷம்) தோஷத்தை உண்டாக்கும் பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். 8ல் இருந்தால் குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும். 9ல் இருந்தால் குரு பகவான் 9ல் இருந்தால் தாராள தன சேர்க்கை, பூர்வீகத்தால் அனுகூலம், பெற்றோர் மூலம் அனுகூலம், தந்தைக்கு நீண்ட ஆயுள், பொது பணி, தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நல்ல பழக்க வழக்கம், பெரியோர்கள் ஆசி உண்டாகும். 10ல் இருந்தால் குரு பகவான் 10ம் வீட்டில் இருந்தால் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு பண நடமாட்டம் கொடுக்கல் வாங்கல் தொடர்புள்ள தொழில், அல்லது துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நேர்மையான வழியில் செல்லும் நிலை, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கிரக சேர்க்கையுடன் பலம் இழக்காமல் இருப்பது நல்லது. தனித்து இருந்தால் நிறைய தடைகள் உண்டு. 11ல் இருந்தால் குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும். குரு 12ல் இருந்தால் குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் பார்வை உண்டாகும். _________________________________________________________________________ ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள் ஜென்ம லக்கினத்தில் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல. 2ல் இருந்தால் சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும். 3ல் சுக்கிரன் சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும். சுக்கிரன் 4ல் சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள். 5ம் வீடு சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும். 6ல் இருந்தால் சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும். 7ல் இருந்தால் சுக்கிரன் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும். 8ல் இருந்தால் சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும். 9ல் இருந்தால் சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும். 10ல் இருந்தால் சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். 11ல் இருந்தால் சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும். 12ல் இருந்தால் சுக்கிரன் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும். ___________________________________________________________________________ 1ல் அதாவது லக்கினத்தில் சனி லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர் குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர் நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர் சமூகத்தோடு ஒத்துப்போகாதவர் கடின மனதை உடையவர். தந்திரமானவர் கஞ்சத்தனம் மிக்கவர் சுத்தமில்லாதவர் குறுகுறுப்பானவர் உடற்குறைபாடுடையவர் கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) ----------------------------------------------------------------------------------------------- 2ல் Saturn in the Second House Saturn makes one not above want and prone to lying. Will live in foreign lands. Will be a lover of justice. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம் பிரபலமில்லாமை தடைப்பட்ட கல்வி கண்பார்வைக் குறைபாடு சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர் அதிரடியாகப் பேசுபவர் சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும் போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) ----------------------------------------------------------------------------------------------- 3ல் ++++Saturn in the Third House Saturn in the 3rd makes one very intelligent & liberal minded. Will have strength of character and will be adventurous. Will have subordinates and all the comforts of life. துணிச்சல் மிக்கவர் தைரியம் மிக்கவர் விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்) புத்திசாலித்தனம் மிக்கவர் செல்வந்தர் சாதனைகள் படைப்பவர் சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும் அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) -------------------------------------------------------------------------------------------------- 4ல் Saturn in the Fourth House Affliction to the heart. Will lack happiness and mental peace. Will be crooked and will be a violator of social norms. Will live in foreign lands. மகிழ்ச்சி இல்லாதவர் திடீர் இழப்புக்களை உடையவர் குறுகிய மனப்பான்மை உடையவர் நல்ல சிந்தனையாளர் அரசியல் ஆதாயம் இல்லாதவர் சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும் இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள் தாய்க்குக் கண்டம் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) --------------------------------------------------------------------------------------------------- 5ல் Saturn in the Fifth House Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth. Will lack intelligence and will be fickle minded. Will have high longevity. குறுகிய மனதை உடையவர் சகஜமாகப் பழகாதவர் சிலருக்குக் குழந்தைகள் இருக்காது விநோதமான கண்ணோட்டங்களை உடையவர் எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர் அரசுக்கு எதிராக நடப்பவர் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) ----------------------------------------------------------------------------------------------------- 6ல் Saturn in the Sixth House Saturn in the sixth is the destroyer of enemies. Will love all the pleasures of the mundane. Will be a voracious eater. Wealth will grace the native in no uncertain measure. பிடிவாதமான ஆசாமி ஆரோக்கியம் இல்லாதவர் சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும் வாக்குவாதம் செய்பவர்கள் சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும் புத்திசாலி சுறுசுறுப்பானவர் சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) ---------------------------------------------------------------------- 7ல் ++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும் உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார். அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா? அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின். ஜாலியான ஆசாமி. சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும் சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும் (இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்) நளினமானவர் மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?) ஆர்வமுள்ளவர் அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார். சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும் ----------------------------------------------------------------------- 8ல் இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள் உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும். சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள் ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை குடிப்பழக்கம் இருக்கும். பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும் கண் பார்வைக் கோளாறு இருக்கும். தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும் ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும் சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால் ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான், விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான். கொடூரமான சிந்தனைகள் உடையவன் நீண்ட ஆயுளை உடையவன் (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) ------------------------------------------------------------------------- 9ல் ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும் அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும். சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள் வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன் கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும். சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது. சாமியாவது, பூதமாவது போடா என்பான். ---------------------------------------------------------------------- 10ல் ++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம் கிடைக்கும். Saturn makes one have scholarship புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள். சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் எல்லா வசதிகளும் தேடிவரும். ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள் நல்ல உழைப்பாளி சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும். தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும் ------------------------------------------------------------------------------- 11ல் +++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம். This is the best postion for Saturn. Saturn well posited in the eleventh makes one highly determined, healthy, wealthy and wise. Will have royal favour. Will be a good sculptor. Will have a lot of subordinates. சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும் சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள் சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள் சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும் வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்! --------------------------------------------------------------------------------- 12ல் இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம் சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப் பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம் ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி! எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி! ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான். "போனால் போகட்டும் போடா" என்று பாடுவான் ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும் மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும் Saturn makes one devoid of happiness & wealth. Will be tormented by many an illness ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான் தனிமைப்பட்டு விடுவான். (இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள், லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள் மாறுபடும்) _______________________________________________________________________________________ 1. லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்! 2. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில் சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம் வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான். 3. ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான் தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?) தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான் உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் செலவு செய்வான். பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று செலவு செய்வர் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் ஆகும். 4. ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப் போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும். 5. ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை இருக்காது. 6. ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான். அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான். 7. ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் திட்டு வாங்க நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும். 8. ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும் வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும். முன் கர்ம வினை தொடர்கிறது என்று பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச் செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும். 9. ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்! 10. ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்! 11. ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக இருப்பான். செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும் தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு செயல்படுபவனாக இருப்பான். வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும் அல்லது அமையும். அத்தனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன் இருப்பான் 12. ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள் உண்டாகலாம். சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன். பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும் இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்) சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி நிச்சயமாக உண்டு. _______________________________________________________________________________ பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் 1ல் லக்கினத்தில் கேது ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும் மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள் சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும் ----------------------------------------------------------------------------------------- 2ல் இரண்டில் கேது! ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான். குறுகிய கண்ணோட்டம் உடையவனாக இருப்பான். குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும் சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள். ------------------------------------------------------------------------------------- 3ல் மூன்றில் கேது. ஜாதகன் உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன். சாதனைகளைச் செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன். செல்வத்தை அனுபவிக்கக் கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன். ஜீனியசாக (genius) இருப்பான். ----------------------------------------------------------------------------------- 4ல் நான்கில் கேது இந்த இடம் கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல! நான்காம் வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு இதய நோய்கள் (heart) வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம் என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது. ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் என்று எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும். சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும். --------------------------------------------------------------------------------------- 5 ஐந்தில் கேது ஜாதகன் கடினமான ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன் இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். அஜீரணக்கோளாறுகள் இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு இருக்கும். மகிழ்ச்சி இருக்காது. இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக மாறிவிடும். ---------------------------------------------------------------------------------------- 6 ஆறில் கேது ஜாதகன் அவன் இடத்தில், அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில் தலைவனாக இருப்பான். உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக இருப்பான். சொந்த பந்தங்களை நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும் உகந்ததாகும். வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும் ---------------------------------------------------------------------------------------- 7 ஏழில் கேது ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில் வளமை இருக்காது. மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன் இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது கணவன் அமையக்கூடும் ------------------------------------------------------------------------------------ 8 எட்டில் கேது ஜாதகன் அதீத புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன் சிலருக்கு ஆயுதங்களால் விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்வார்கள். பொதுவாக எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம் சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது மையல் இருக்கும். அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக இருப்பார்கள். சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும். ---------------------------------------------------------------------------------- 9 ஒன்பதில் கேது ஜாதகன் பல பாவச்செயல்களைச் செய்யகூடியவன், பெற்றவர்களின் அன்பு, பாசம், பரிவு போன்றவைகள் கிடைக்காது. காம இச்சைகள் மிகுந்தவன். சிலர் ஆன்மிகம், மத உணர்வு, தர்ம நியாயங்கள் இவற்றை எல்லாம் உதறி விடுவார்கள். அப்படி உயர்ந்த சிந்தனைகள் உடையவர்களைக் குறை கூறுவதில் ஜாதகன் ஆர்வமுடையவனாக செயல்படுபவனாக ஜாதகன் இருப்பான். சிலர் தங்களுடைய பாவச் செயல்களினால் தாழ்ந்து போய்விடுவார்கள் -------------------------------------------------------------------------------- 10 பத்தில் கேது மக்கள் அனைவரையும் நேசிக்கும் மனது அல்லது பக்குவம் ஜாதகனுக்கு இருக்கும். சமூகக் காவலனாக ஜாதகன் இருப்பான். அல்லது அந்த நிலைக்குச் ஜாதகன் உயர்வான். He will engage himself in the act of donating money, goods, services, time and/or effort to support a socially beneficial cause, with a defined objective and with no financial or material reward to the donor. In a more general sense, activity intended to promote good or improve human quality of life. ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வாழ்க்கை முறைகள், வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகியவற்றை அறிந்தவனாக இருப்பான். திறமைசாலியாக இருப்பான். செய்யும் தொழிகளில் நுட்பம் அறிந்தவனாக இருப்பான். கேது இந்த இடத்தில் இருப்பது ஒருவனின் தொழில் மேன்மைக்கு உகந்ததாகும். This is the best place for professional enhancement. --------------------------------------------------------------------------------------- 11 பதினொன்றில் கேது ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது அந்த நிலைக்கு உயர்வான். அதிகம் படித்தவனாக இருப்பான். கல்வியாளர்கள் மத்தியில் பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாகத் திகள்வான். மகிழ்ச்சியில் திளைப்பான் பல நல்ல குணாம்சங்கள் இருக்கும். பெருந்தன்மையும், நல்ல நோக்கங்களும் உடையவனாக ஜாதகன் இருப்பான். அவன் தன்னுடைய செயல்களால் பலரிடமும் நல்ல மதிப்பைபயும் மரியாதையையும் பெறுவான் --------------------------------------------------------------------------------------- 12 பன்னிரெண்டில் கேது இந்த இடத்தில் கேது இருந்தால் ஜாதகனுக்கு அடுத்த பிறவி கிடையாது. வீடு பேற்றை அடைந்து விடுவான் என்று நூல்கள் கூறுகின்றன. சரியாகத் தெரியவில்லை பல் ஜோதிட நூல்கள் இதை வலியுறுத்திக் கூறுவதால் நம்புவோம். ஜாதகன் அடிக்கடி மாறக்கூடியவன். காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்றிருக்கும். நிலையில்லாதவன்ஊர்சுற்றி, சிலருக்கு, கண்கள் பாதிப்பிற்குள்ளாகும் பாவங்களைச் செய்துவிட்டு மறைக்கக் கூடியவன். துன்பங்களில் உழல்பவன். சிலர் மாய, ஜால வேலைகளில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் சிலர் தனிமையை விருபுவார்கள். தனிமைப்பட்டும் வாழ்வார்கள் --------------------------------------------------------------------------------------- லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர். செந்நிற மேனி உடையவர். தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும். இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும் நல்ல உழைப்பாளி. ஜாதகருக்குப் பொருள் சேரும். மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type அல்லது Don't care type. பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர் நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும். அரசியல் செல்வாக்கு இருக்கும் ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்; வாழ்க்கை வளமாக இருக்கும். தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார் ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள் ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும். ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர். பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர் மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர். எதையும் சரிவரச் செய்யாதவர். எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். எவருக்கும் பணிந்து போகாதவர் இரக்கமற்ற குணத்தை உடையவர் சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும் ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும் ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும் உறவினர்களுடன் விரோதம் ஏற்படும் சுய முற்சியால் செல்வம் சேரும் பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும் ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும் அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும் உடல் நலம் சீராக இருக்கும் தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர் பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர். நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும் பன்னிரெண்டில் சூரியன் இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. அதிகமான செலவுகள் ஏற்படும் ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார். சந்ததிக் குறைபாடுகள் இருக்கும். உழைத்து முன்னேற்றம் காண்பவர். ========================================== ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்! 1 லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள். --------------------------------------------------------------------------------------- 2 இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது! --------------------------------------------------------------------------------------- 3 ******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள். --------------------------------------------------------------------------------------- 4 நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும் ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். (பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-)))) -------------------------------------------------------------------------------------- 5 ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில் குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும். சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள், நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும். சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக இருப்பார்கள். ------------------------------------------------------------------------------------- 6 ********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும் ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான். மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும் அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள் ======================================================= 7 ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும். சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும், அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும் அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால் பாதிக்கப்படுவாள். சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள். -------------------------------------------------------------------------------------- 8 எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம் எட்டிபார்க்காது. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள் நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான். தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான். -------------------------------------------------------------------------------------- 9 ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம் இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள் ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான். -------------------------------------------------------------------------------------- 10 *******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம். ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன் ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன். மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும் ஜாதகன் தேடிப்பிடிப்பான். ---------------------------------------------------------------------------------------- 11 ********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும் வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும் மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?) நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான். ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான் ======================================================= 12 பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள் ஏற்படலாம். ஜாதகன் சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-))) பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான் துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால் கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள் =========================================================== சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி பெறுவார் திடீர் பணவரவு இருக்கும். 2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறையில் நல்லது செய்வார். 3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயண செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும். 5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும். 6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார். 9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும். 10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார். வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். 11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும். 12-ல் உள்ள சந்திரன் பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும். ______________________________________________________________ குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்: In the first house.: Magnetic personality, good grammarian, majestic appearance, highly educated, many children, learned, dexterous, long-lived, respected by rulers, philologist political success, sagacious, stout body, able, influential leader. Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune, witty, good wife and family, eloquent, humorous, and dexterous. Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family, miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good success, energetic, bold, taste for fine arts and literature, lived by relatives. Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy, founder of charitable institutions, comfortable, good inheritance, good mother, well read, contented life. Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight, high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted, a leader. Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons, dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless. Seventh house.: Educated, proud, good wife and gains through her, diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture, virtuous wife, pilgrimage to distant places. Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long life, mean, degraded, thrown with widows, colic pains, pretending to be charitable, dirty habits. Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful, pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative, generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured, famous, high position. Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth, conveyances, children, determined, highly principled, accumulated wealth, founder of institutions, good agriculturist, non-violent, ambitious, scrupulous. Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability, good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat dependent, influential, many friends, philanthropic. Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character, unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste, pious in after-life. மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின் சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை. ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-)))) ================= Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
அஷ்டலக்ஷ்மி யோகம் யோகங்களில் சிறப்பான யோகமாக இந்த அஷ்டலக்ஷ்மி யோகத்தை கொள்ளலாம். ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற இயற்கை பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் நிற்பது நன்மையே செய்யும். ருண ரோக சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் நிற்பது அந்த இடத்தை நசிந்து போக செய்யும். அதனால் எதிர்ப்பு இல்லாத ஒரு வாழ்கையை அவர் அனுபவிப்பார், அதையும் மீறி எதிரிகள் வருவாரானால் அவர்களுக்கு அது சற்றேறக்குறைய அது அந்திம காலமாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல. குரு பகவானானவர் கேந்திரத்தில் நிற்பது தனித்த குருவாக இல்லாமல் இருப்பதே நல்லதாகும். குரு தனித்து இருந்தால் கிரந்தங்கள் கூறுவது அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு " என்பதேயாகும். இதிலிருந்து குரு தனித்து நிற்பது என்பது சுபமல்ல என்பது விளங்கும். இந்த குருவும் கேந்திரத்தில் நின்று ஆறாமிடத்தில் ராகு நிற்பது அஷ்டலஷ்மி யோகம் என்பதே!! இதன் பலன் மிகுந்த தனப்ரப்தம் உண்டு என்பது வெள்ளிடை. ஒருவன் தனம் பெற்றாலே மற்ற அனைத்துமே அவன் கைவரப்பெறும். இதனால் புகழ், சொத்து, செல்வாக்கு, சம்பத்து, ஆயுள், தோட்டம், வீடுகள் நில புலன்கள் போன்றவை கிடைக்கும். இதனால் இம்மாதிரியான ஜாதகர்கள் பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரியுமளவுக்கு செல்வாக்கான வாழ்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு வெகுஜன தொடர்பு, தேக காந்தி ஆகியவைகள் தானாகவே வரும். சுப கத்திரி யோகம் லக்னத்திற்கு இருபுறமும் அதாவது பன்னிரெண்டாம் வீடு அல்லது இரண்டாவது வீட்டில் சுப கிரகமான குரு, வளர் பிறை சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன், போன்ற கிரகங்கள் இருந்தால் அது சுப கத்திரி யோகம் எனப்படும். இது மிகுந்த செல்வாக்கை தரக்கூடிய அமைப்பாகும். இந்த யோகமானது வாழ்வில் சிறிதளவேனும் சிரமம் இல்லாமல் வாழ்கையை அனுபவிக்ககூடிய அமைப்பாகும். ஒரு சிலர் தமது கடுமையான உடல் உழைப்பால் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவர். ஆனால் சிலர் தனது புத்திசாலித்தனத்தால் உடல் உழைப்பு இல்லாமலே புத்தியால் தனத்தை இயற்றுவர். இதையே கிராமப்புறங்களில் " வாயிலேயே அபிஷேகம் செய்கிறான் " என்று கூறுவதுண்டு. இதையே புத்திமான் பலவான் என்றும் அழைப்பர் . சுப கத்திரி யோகம் பெற்றவர்கள் அடுத்தவருக்கு யோசனை சொல்வது மாதிரியான தொழில்களையே செய்வார்கள். கன்சல்டன்சி போன்ற வேலைகளிலேயே இவர்களால் நிலையாக இருக்க முடியும். மற்றபடி உழைப்பால் உடல் வருத்தும் தொழில்கள் இவர்களுக்கு அமையாது. படிப்பறிவு இல்லாவிட்டாலும் இவர்களுடைய திறமைகள் பல் துறைகளில் பளிச்சிடும். புதாத்திய யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது புதாத்திய யோகம் எனப்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பொதுவாக இந்த புதாத்திய யோகம் மற்ற பாப கிரகங்கள் பார்க்காவிட்டால் இந்த யோகமானது விரிவாக செயல்படும். புதன் கிரகமானது நவ கிரகங்களில் மிக வலிமை குன்றியது ஆகும். அதனால்தான் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும் பாபரோடு சேர்ந்தால் பாபராகவும் செயல்படும். எனவேதான் மற்ற பாப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் இந்த யோகம் முழுமையாக செயல்படும். புதன் மற்ற கிரகங்களின் பார்வையில் படும்போது அவர்களுடைய பலன்களை செய்யுமே தவிர தனது பலன்களை செய்ய முடியாமல் போய்விடும். மோப்ப குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்க குழையும் விருந்து. என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப புதன் மற்றெந்த கிரகங்களின் பார்வையை பெறாமல் இருந்தால் நல்ல பலன்களை செய்யும். பொதுவாக புதன் விதியா காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வித்யா காரகன் சூரியனுடன் சேரும்போது அதிபலம் பெற்று சிறந்த கல்வியையும், கல்வியால் சிறந்த முன்னேற்றத்தையும் கொடுத்துவிடும் என்றால் அது மிகையல்ல. பட்ட படிப்பு படிப்பதற்கும் பல்கலைகழகங்கள் செல்வதற்கும் இந்த புதாத்திய யோகம் மிக அவசியமான ஒன்று. இவர்கள் கல்விக்காக எவ்வளவு தூரமாகினும் சென்று கல்வி பெறுவர். சிறந்த நாவன்மையும் இவர்களிடம் ஒருங்கே அமையபெற்று இருக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது இதனால்தான். எதையும் ஆராய்ந்து அறிதுகொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த அமைப்பானது நிச்சயமாக இருக்கும், இந்த புதாத்திய யோகத்தில் புதனாவது சுரியனாவது உச்சமாகவோ அல்லது ஆச்சியாகவோ இருந்தால் அவர்களே பல நாடுகளும் அறியும் சிறந்த அறிவாளிகளாக வருவர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அமைப்பு உறுதியாக உண்டு. கஜகேசரியோகம் இந்த கஜகேசரியோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு சிறப்பான யோகமாகும். மற்ற யோகங்களில் தலையானது என்று கூட சொல்லலாம். இந்த ஒரு யோகம் இருந்தால் மற்ற எந்த யோகமும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். மேலும் ஒரு ஜாதகத்தில் இருக்கும் யோகத்திற்கு தகுந்தமாதிரி அந்த சாதகனின் யோகம் விளங்கும். இது அவ யோகமாக இருந்தாலும் பொருத்தும். ஆனால் இந்த யோகம் இருந்தால் மற்றெந்த தோஷங்களும் அந்த ஜாதகனை ஒன்றும் செய்வது இல்லை. மற்ற தோஷங்களையும் யோகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த யோகத்திற்கு உண்டு. இஃது எவ்வாறெனில் ஒரு ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருந்தால் மற்ற தோஷங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும். இந்த யோகத்தைப்பற்றி கீரனூர் நடராஜர் அருளிச்செய்த சாதக அலங்காரம் என்ற கிரந்தம் கூறும் கருத்தை பார்ப்போம். வருச்சி கேந்திரத்தில் மன்னவன் நிற்க அரசன் கேந்திரத்தில் அம்புலி தானும் நிற்க விரவு மற்றிடதின்மற்றோர் மருவிய தோசம் - யானை ஒரு சிங்கம் கண்டவாறு ஓடுமாம் கஜகேசரியாம் யோகம். _____ ஜாதக அலங்காரம் _____ சந்திரனின் கேந்திரத்தில் குரு பகவான் நிற்க, அந்த குருவினுடைய கேந்திரத்தில் சந்திரன் நிற்க அதாவது குருவும் சந்திரனும் கேந்திரத்தில் நின்றால் அது கஜ கேசரி யோகம் எனப்படும். இந்த கிரக அமைப்பானது ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த சாதகன் வேறு எந்த தோஷங்கள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை, ஏனெனில் கஜம் என்றால் யானை என்றும் கேசரி என்றால் சிங்கம் என்றும் பொருள்படும். ஒரு யானை கூட்டத்தில் ஒரே ஒரு சிங்கம் சென்றால் எவ்வாறு அந்த யானை கூட்டமே சிதறி ஓடுமோ அதுபோல இந்த கஜ கேசரி யோகம் என்ற ஒன்று மட்டும் இருந்தால் மற்ற தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். இந்த கிரக நிலை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் மற்றெந்த தோஷதிர்க்கும் பரிகாரம் செய்ய வேண்டியது இல்லை. இது செவ்வாய் தோஷதிர்க்கும் பொருந்தும். தர்மகர்மாதிபதி யோகம் இந்த யோகத்தின் பெயரிலேயே அதனுடைய கிரக அடைவு உள்ளது தர்ம ஸ்தானம் என்பது ஒன்பதாமிடமாகும், கர்ம ஸ்தானம் என்பது பத்தாமிடமாகும். ஜாதகருடைய பூர்வ புண்ணிய பலன்களை அறியும் இடமாக இருப்பது ஐந்தாமிடமாகும் இதனால்தான் புத்திரர்களை ஐந்தாமிடதைக்கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள். ஒருவர் பெரும் குழந்தை செல்வம் புத்திர பாக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்கியம் உண்டா இல்லையா என்பதை ஐந்தமிடதைக்கொண்டே நிர்ணயிக்க முடியும். இந்த ஐந்தாமிடத்தில் பாப கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் ஐந்தாமிடதிர்க்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தை கொண்டே ஒருவருடைய புத்திர பாக்கியத்தை அறிய முடியும். இந்த ஒன்பதாமிடமானது ஒருவர் வாழும் வாழ்கை வசதியானதா அல்லது வறுமையானதா என்பதை தீர்மானிக்கும். சாதகனின் வாகன வசதி சொந்த வீடு போன்றவற்றை இந்த ஒன்பதாமிடமே தீர்மானிக்கும். இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கைதரம் சமூகத்தில் அவர் பெற்றுள்ள அந்தஸ்து போன்றவற்றை கண்டுனறலாம். இந்த ஒன்பதாமிடத்ததிபதி கர்ம ஸ்தானம் என்னும் பத்தாமிடதோனுடன் கூடி இருப்பது தர்ம கர்மாதி யோகம் எனப்படும். இந்த யோகமானது அமைய பெற்றவர்கள் நிச்சியமாக ஒரு தொழில் அதிபராகவோ அல்லது மிக்க அதிகாரம் பெற்ற ஒரு பதவியிலோ இருப்பர். கஹல பரிவர்த்தனை: பரிவர்த்தனையாகும் கிரகங்கள் இருவரில் ஒருவர் 3ஆம் இடத்து அதிபதி என்னும் நிலைமையில் இது ஏற்படும். இந்த அமைப்பில் பரிவர்த்தனையாகும் மற்றொரு கிரகமும், தீய இடத்து அதிபதியாக இருக்க முடியாது. இருந்தால் அது தைன்ய பரிவர்த்தனைக் கணக்கில் வரும். அதை மனதில் வையுங்கள். ஆகவே, இந்த இடத்து அமைப்பில் வரும் மற்றொரு கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, or 11. ஆகிய இடங்களில் ஒன்றிற்கு அதிபதியாக மட்டுமே இருக்க முடியும். இந்த அமைப்பில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், மூன்றாம் இடத்திற்கு உரிய குணங்களான துணிச்சல், அதிரடி, போட்டிபோடும் தன்மை, ஆர்வம், குறுகுறுப்பு ஆகியவற்றைக் கொண்டுவிடுவார். ஜாதகனின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் அவைகள் உதவியாக இருக்கும். Kahala yoga will give abnormal strength to the native of the horoscope in talking, scheming and competing mind to go out and get stuff done. .................................................... மகா பரிவத்தனை யோகம்: 1, 2, 4, 5, 7, 9, 10, or 11ஆம் இடங்களின் அதிபதிகளில் இருவர் தங்களுக்குள் பரிவர்த்தனையாவது இந்த யோகத்தைக் கொடுக்கும். சொத்து.சுகம், அந்தஸ்து என ஜாதகன் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவான். அது தவிர சம்பந்தப்பட்ட வீடுகளுக்குரிய வேறு பலன்களும் அசத்தலாகக் கிடைக்கும் =================================================== An important difference: Parivarththanai vs. Paarvai (Mutual-Aspect) ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக நிகழ்த்தும் நிகழ்வுகள் அல்லது செயல்கள் அல்லது உதவிகள் பரஸ்பரம் (Mutual) என்பதற்கு ஒருவருக்கொருவர் என்று பொருள் கொள்ளூங்கள். எனக்கு நீ செய்; உனக்கு நான் செய்கிறேன். என் இடத்தையும் அதன் செயல்களையும் நீ பார்த்துக்கொள். உன் இடத்தையும் அதன் செயல்களையும் நான் பார்த்துக்கொள்கிறேன். 1 Reciprocally acting or related; reciprocally receiving and giving; reciprocally given and received; reciprocal; interchanged; as, a mutual love, advantage, assistance, aversion, etc. 2 Possessed, experienced, or done by two or more persons or things at the same time; common; joint; as, mutual happiness; a mutual effort. Parivarththanai strengthens both planets even if they are both malefics - possibly increasing their evil capacity, but always dignifying both. ++++++++++++++++++++++++++++++++++++++++ பரஸ்பர பார்வை: Mutual Aspect by contrast does not normally dignify the two planets. Any two planets in opposition, 180 degrees apart, will provide mutual aspect to each other. If those two planets are friendly, the mutual aspect is a good thing, but then they will need to both rule favorable houses and occupy good signs in order to really help each other. The mutual aspect of Saturn and Mars which can occur when those two grahas occupy at 180 deg or 90/270 deg (4/10) angle to each other, is nearly always a disaster, causing intensely repressed anger which consumes most of the person's life force, eventually blocking the very accomplishments this person works so hard for. +++++++++++++++++++++++++++++++++++++++++++ Parivarththanai between Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Shani and full productivity from Mangala. The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 1 6ஆம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: சொத்துக்கள் விரையமாகிக் கரைந்துபோகும். (அவற்றின் தசாபுத்திகளில்) ------------------------------------------------ 2 2ஆம் அதிபதியும் 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். பிறப்பில் ஏழையாக இருந்தாலும், அதீதமாகப் பொருள் ஈட்டி செல்வந்தனாக உயர்வான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். மகிழ்ச்சி உடையவனாக இருப்பான். ------------------------------------------------- 3 1ஆம் அதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: மகா ராஜயோகம்! அல்லது சூரியனும், குருவும் லக்கினத்தில் இருப்பது அல்லது ஐந்தாம் வீட்டில் இருப்பது அல்லது இருவரும் உச்சம் பெற்றிருப்பது அல்லது தங்களுடைய ஆட்சி வீட்டில் இருப்பது அல்லது தங்களுடைய சொந்த நவாம்சத்தில் இருவரும் இருப்பது ஆகிய நிலைகளில் ஒன்றுடன் சுக்கிரன் அல்லது சந்திரனின் சுபப்பார்வையை இருவரும் பெற்றிருந்தால் அதுவும் இந்த யோகத்தைத் தரும். ஜாதகன் அதிகமான பேரையும், புகழையும் பெறுவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். -------------------------------------------------- 4 1ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: ஜாதகன் ஆட்சியாளர்களுடன் அல்லது அரசுடன் நல்லதொடர்பு உடையவனாக இருப்பான். அல்லது அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்தில் இருப்பான். இந்த அமைப்பு ஜாதகனுக்கு நல்ல பதவி, அந்தஸ்து, புகழ், ஆற்றல், சக்தி என தொழில் அல்லது வேலை சம்பந்தமாக அனைத்தையும் கொடுக்கும்! ------------------------------------------------------- 5 9ஆம் அதிபதியும் 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்: இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் என்று பெயர். ஜாதகனுக்கு அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, புகழ், பதவி என்று அனைத்தும் தேடி வரும்! ........................................................................................... 6 நவாம்சத்தில் நவாம்ச செவ்வாயும், நவாம்ச சுக்கிரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்: இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்திற்கு நல்லதல்ல. இந்த அமைப்புள்ள பெண், ஆண்கள் மேல் அதிக மோகம் கொண்டவளாக இருப்பாள். இதே அமைப்பில் அந்தப் பெண்ணின் நவாம்சத்தில் 7ல் சந்திரன் இருந்தால், அவளுடைய கணவனும் ஒழுக்கமற்றவனாக ஸ்த்ரீலோலனாக இருப்பான். ------------------------------------------------------ 7 சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள் _________________________________________________________________________________________________________________________________ சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும். எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்? கீழே கொடுத்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம் திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம் செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம் புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம் வியாழக்கிழமை: சுவாதி, மூலம் வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம் சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம். அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். Posted by ஷண்முகவேள் at 9:38 AM 0 comments Links to this post சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும். எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்? கீழே கொடுத்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம் செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை புதன் கிழமை: ஹஸ்தம் வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம் சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம் மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். செய்தால் என்ன ஆகும்? ஊற்றிக்கொண்டு விடும்! அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது. உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம். பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும். மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும் ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது. சரி, அன்று என்னதான் செய்யலாம்? வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம். ___________________________________________________________________________ யோகம்: இரு வகையான யோகங்கள் உள்ளன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரத்தை வைத்துக் கணக்கிடப் படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் பாகைகளைக் கூட்டினால் வருவதே இந்த யோகம். அவைகள் மொத்தம் 27 ஆகும். கீழே கொடுக்கப்பெற்றுள்ளன: 1.விஷ்கும்பம், 2.ப்ரீத்தி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்யம், 5. சோபனம், 6.அதிகண்டம், 7. சுகர்மம், 8. திருதி, 9.சூலம், 10.கண்டம், 11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம், 4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான், 19.பரீகம், 20. சிவம், 21. சித்தம், 22. சாத்தீயம், 23. சுபம், 24.சுப்ரம், 25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி. மற்றைய யோகம் சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும். நட்சத்திரத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும். ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும். மரண யோகத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது. அதுபோல முதன் முதலாக சிகிச்சைக்குச் செல்பவர்களும் மரணயோகத்தில் செல்லக்கூடாது -------------------------------------------------------------------- 12 அசுபயோகம்-Asubhayoga: தீய கிரகம் அல்லது தீய கிரகங்களின் கூட்டால் ஏற்படும் தீமையான பலன்கள். A Combination caused by evil planets 13 அசுரயோகம்-Asurayoga: தீய கிரகங்கள் ஆட்சி, ஆதிபத்யம், காரகம் ஆகியவற்றால், ஜாதகனுக்குக் கொடுக்கும் நன்மையான பலன்கள் A Combination for tyrannical and demoniacal characteristics tyrannical - characteristic of an absolute ruler or absolute rule; having absolute sovereignty! --------------------------------------------------------- Loneliness yoga: கேமதுருமா யோகம்! "இளமைவரும் முதுமைவரும் உடலும் ஒன்றுதான் தனிமைவரும் துணையும்வரும் பயணம் ஒன்றுதான் விழியிரண்டு இருந்தபோதும் பார்வை ஒன்றுதான் வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்" -கவியரசர் கண்ணதாசன் -------------------------------------------------------- வாழ்க்கையில் இரண்டு நிலைப்பாடுகள் எப்போதும் உண்டு. இரவுபகல் போல துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை அதுபோல சுபயோகமும், அவயோகமும் கலந்ததுதான் ஜாதகம் ஆகவே அவை இரண்டையுமே சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நமக்கு வேண்டும்! ----------------------------------------------------------------- Loneliness yoga: கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்! If moon is alone, doesn't have any planet before and after and also in front then it is Kemadruma. For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty. Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga if they are in the above mentioned houses ---------------------------------------------------------------------- பலன் என்ன? சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும். Kemdruma gives trouble to mind. Since moon is mind and is alone it can be destructive. Many of the serial killers from the history have this yoga. It also makes the person very poor, mentally instable, gives inner fears, phobias, takes away happiness. It makes one do crimes இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட நேரிடும் உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும் If there is a planet in house opposite (7th house from moon), it not only cancels Kemadruma, but gives kalpadruma yoga (similar to neecha bhanga raja yoga.) குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் இந்த அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லலாம். மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்! -------------------------------------------------------------- திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra) அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்! ஓம் திரிபுரசுந்தரி போற்றி! ஓம் திரிபுரசுந்தரி போற்றி! இதே மந்திரம் வடமொழியில்: க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" Kleem Tripurasundarimoorthaye Namah Kleem Tripurasundarimoorthaye Namah +++++++++++++++++++++++++++++++++++++++++++ Lakshmi Yoga: லக்ஷ்மியோகம் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ Lakshmi Yoga: லக்ஷ்மியோகம் எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன் ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன? லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம் If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own or exaltation sign identical with a Kendra or Thrikona, Lakshmi Yoga is caused. ----------------------------------------------------------------- பலன் என்ன? பலன் 1 ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும் அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான். பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக் கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும் உதாரணமாகச் சொல்லவில்லை) 2 ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு! The person will be wealthy, noble, learned, a man of high integrity and reputation, handsome appearance, a good ruler, and enjoying all the pleasures and comforts of life. ----------------------------------------------------------------- பலன் எப்போது? லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும் மேலதிகத்தகவல்கள்: Different definitions of the Lakshmi Yoga. Lakshmi Yoga will arise by the mutual association of lords of Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra, Thrikona, or exaltation and the lord of Lagna being disposed powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited in own or exaltation places which should be Kendras or Trikonas. Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna, Venus, and the lord of the 9th. Lakshmi has predominantly to do with wealth and one born in this combination will be wealthy, the degree of wealth varying with regard to the degree of strength or weakness of the planets causing the Yoga. The most powerful type of Lakshmi Yoga will give immense wealth, while the mutual association of or aspect between the lords of Lagna and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence of other Dhana Yogas அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது! பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம். பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள் பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள் ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337 மட்டுமே. அதை மனதில் வையுங்கள் லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார் அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத் தெரியும். பொறுத்திருந்து படியுங்கள் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சகடயோகம்! சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் சகடயோகம் எப்போது ஏற்படும்? குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும் Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter. ------------------------------------------------------------- என்ன பலன்? 1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான். Person with sakata yoga in his horoscope has to keep moving from one place to another for some work or the other. எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்! People like to be working at the same city or town where they reside. Sakata yoga does not allow this. பலன் 2 சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் one born in Sakata will have his fortune obstructed now and then. The native loses fortune and may regain it. ---------------------------------------------------------------------------- The periods of misfortune will accord with the times of transits in malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the 6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised. ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்:-)))))) ------------------------------------------------------------------ பரிகாரம் உண்டா? சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள வேண்டும். Travelling agent, Travelling salesman, Medical representative, Railway Guards, Drivers ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம் இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-))) சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது. அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்! -------------------------------------------------------------------------------- சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும் சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும் கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே? ---------------------------------------------------------------------- ஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம் முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள் அறிதல் அவசியம். மேலே கொடுத்துள்ள அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் தலா ஒரு வீடுதான். மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும். உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள்.அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி!. 1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be fortunate. 2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால் அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம். வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும். இந்த விதி தலையான விதியாகும். இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக் குமே இது பொருந்தும். இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி, பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும். If the said house is surrounded by good planets, the results of the said house will be good and on the contrary, if it is surrounded by bad or melefic planets, the results of the said houses will be bad. ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில் கொண்டு அலச வேண்டும். அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம் 1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான். 2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான். 3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான். 4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான். ____________________________________________________________________________ 8.10.09 வஞ்சன சோர பீதி யோகம்! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ வஞ்சன சோர பீதி யோகம்! பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள். Vanchana Chora Bheethi Yoga vañchana — cheating chora' - thief bheethi - fear ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ யாருக்கு இது இருக்கும்? இன்றைய உலகத்தில் பாதிப்பேர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். வாய்ப்புக் கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யக்கூடியவர்கள். ஆள் கிடைத்தால் மொட்டை போடக்கூடியவர்கள். அதனால் அவர்களைத் தவிர்த்து, மற்றுள்ளவர் பலருக்கு இந்த அமைப்பு இருக்கும். அதே போல ஏமாற்றுப் பேர்வழிகள், அடுத்தவனை எப்போதுமே சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள். ஆகவே அவர்களுக்கும் இந்த அமைப்பு இருக்கும். The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients. ------------------------------------------------------------- லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம் உண்டு! உண்டு! உண்டு! அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன் கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும் பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான். -------------------------------------------------------- The Lagna lord is with Rahu, Saturn or Ketu Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed. அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான். In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses. +++++++++++++++++++++++++++++++++++++++++++++ குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும் பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட நேரிடும். கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும். பொதுவாகச் சொன்னால் ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும் Lacking something needed or expected! +++++++++++++++++++++++++++++++++++ அவயோகம் 4 துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும். +++++++++++++++++++++++++++++++++++ அவயோகங்கள் தொடரும். நிறைய உள்ளன. ஒரேயடியாகக் கொடுத்தால் ஓவர் டோஸாகிவிடும். அதனால் இன்று இரண்டு தேக்கரண்டி அளவு மருந்தைக் கொடுத்துள்ளேன். மருந்து இனிப்பாக உள்ளதா அல்லது கசக்கிறதா? என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். மிகவும் கசப்பாக இருந்தால் 337 காக்டெயிலில் இரண்டு லார்ஜ் அடித்துவிட்டு, சாதனா சர்க்கத்தின் பாடல் ஒன்றைக் கேளுங்கள். கசப்பு நீங்கிவிடும்!:-)))) அவயோகங்கள் - பகுதி 1 ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச் சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக மாற்றிவிடும். உதாரணம்: appear - disappear, allow - disallow, arm - disarm, connect - disconnect, continue - discontinue If you add the suffix 'dis' in front of a verb it will reverses the meaning of the verb! example: disappear, disallow, disarm, disconnect, discontinue அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின் முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும் உதாரணம் லட்சணம் - அவலட்சணம் மானம் - அவமானம் மதிப்பு - அவமதிப்பு யோகம் - அவயோகம் ----------------------------------------------------------------- ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே அவயோகங்களும் இருக்கும். இனி வரப்போவது, அவயோகங்களைப் பற்றிய பாடம். சார்’ எனக்கு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அதுபோல தங்கள் ஜாதகத்தை வைத்து, 30 வரிகள் பின்னூட்டம் போட்டு, கிரகங்களின் நிலையை வர்ணித்து, சார்’ எனக்கு இருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் கேட்க வேண்டாம். பாடங்கள் எளிமையாக இருக்கும். உங்களுக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் 4 வயதுக் குழந்தை என்றால் நாம் குளிக்க வைக்கலாம். 25 வயது ஆசாமி, அவனாகத்தானே குளிக்க வேண்டும். நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மேல் நிலைக் கல்வி. ஆகவே சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்:-)))) --------------------------------------------------------------- அவயோகம் 1 லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில் இருந்தால் அது அவயோகம் பலன்: ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான். அறியப்படாதவனாக இருப்பான். அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள். பல இடங்களில் அவமானப் பட நேரிடும். தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும். வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது. எச்சரிக்கை: இது பொதுப்பலன். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். -------------------------------------------------------------- அவயோகம் 2 மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8,12 ஆம் வீடுகளில் குடியேறி இருந்தால் அது இந்த அவயோகத்தைக் குறிக்கும் பலன்: ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு ஏராளமான எதிரிகள் இருப்பார்கள். அவர்களால் எல்லாத் துன்பங்களையும் எதிர் கொள்ள நேரிடும். இளைய உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் அல்லது அவர்களின் வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும். உடல்வலிமை, மனதைரியம், செல்வத்தை இழக்க நேரிடும். மறைமுக சேட்டைகளைச் செய்து அல்லது ரகசிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவதிப்பட நேரிடும் ------------------------------------------------------------- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ யோகங்கள் ஒரு விளக்கம்! யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும். ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன 1. தன ராஜயோகம் (yogas for wealth) 2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) 3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம் அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள் ------------------------------------------------------ 1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும் 2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும் 3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் பணம், புகழ், மதிப்பு, மரியாதை & செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள். Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart! அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல! லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும். குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். Lagna is deemed to be strong only when it is aspected or occupied by its own lord, Jupiter or Mercury and not by other planets +++++++++++++++++++++++++++++++++++++++++++++ கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இருந்தால் அது மாலையோகம் எனப்படும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான் --------------------------------------------------------------------- A planetary combination under which all planets occupy consecutive houses leaving the intervening cardinal houses vacant. The individual under this combination is happy, handsome, and is provided with much ornaments, gems and jewels. -------------------------------------------------------------- ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! Grahamalika "planetary garland" Yoga: All the nine planets consecutively in six or seven houses from the lagna. The native with a Grahamalika Yoga will be fortunate ------------------------------------------------ உபரிச் செய்திகள்: Pancha-grahamalika Yoga: This is another type of Malika Yoga that considers Rahu and Ketu along with the visible planets. It is impossible for all the nine planets to be in less than 7 houses, therefore with respect to all the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven visible planets and only one of Rahu or Ketu. Just like the first group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not dasa dependent, rather they indicate a foundation for success. The result of a Malika Yoga is dependent upon the house from which the yoga begins. The indications of that house will dictate the theme of the yoga. The Malika Yogas commencing from the dusthanas, therefore, have some undesirable effects, though all of them provide a foundation for success. If the Malika Yoga formed is also one of the troublesome house, though creating a foundation for success, the yoga will still indicate weaknesses in character that make it difficult for the native to really be happy and secure. ---------------------------------------------------- தேசத்தந்தை மகாத்மாகாந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று. அனவரும், தன் நாட்டு மக்களுக்கு அவர் செய்த அரிய சேவைகளுக்காக, அவரை இன்று நினைவு கூர்வோம்! +++++++++++++++++++++++++++++++++++++++++++++ அனபா யோகம்! அனபா யோகம் என்றால் என்ன? சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில், சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர். ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை. இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். +++++++++++++++++++++++++++++++++++ அதன் பலன் என்ன? 1 அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்: ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன். விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும் இருப்பான் .......................... 2 அந்த இடத்தில் புதன் இருந்தால்: ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும், மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான். யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப் பெற்றிருப்பான் ......................... 3. அந்த இடத்தில் குரு இருந்தால்: ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல! சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன் செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன். ............................. 4. அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்: ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer) ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன் ................................................... 5. அந்த இடத்தில் சனி இருந்தால்: ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன். மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன். மொத்தத்தில் முற்போக்குவாதி! ................................................ 6 ராகு அல்லது கேது இருந்தால்: ஆசாமி அதிரடியானவன். யாருக்கும் கட்டுப்படாதவன் எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான். மொத்ததில் அடங்காதவன்! .............................................. மொத்ததில் இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும், சுய மரியாதையையும் கொடுக்கும் ----------------------------------- வெற்றி தரும் விபரீத ராஜயோகம் என்னுள் நின்று சிந்திக்கவும் , எழுதவும் தூண்டும் அன்னை வீரபாண்டி கெளரிமாரியம்மனை வணங்கி , துவங்குகிறேன் . பன்னிரு ஸ்தானங்களின் வலிமையாக தீமை செய்யும் பாவங்கள் 6,8,12 என்பது நாம் அறிந்த ஒன்றே . இதன் ஸ்தான அதிபதிகளும் துஷ் ஸ்தான அதிபதிகளே . இந்த ஸ்தான அதிபதிகளுக்கும் , 5 ம் ஸ்தானம் மற்றும் ஒன்பதாம் ஸ்தானம் அதிபதிகளுக்கும் இடையே , தீய , நல்ல பலனைச் செய்வதில் அதிக வேறுபாடு உண்டு . பூர்வ புண்ய அதிபதி , பாக்யாதிபதி இவர்கள் குளத்தில் உள்ள மீனைப் போன்றவர்கள்! ஆகவே இவர்கள் எந்த பாவத்தில் அமர்ந்தாலும் , அந்த ஸ்தான பாவத்தில் உள்ள அழுக்குகளை அதை தூய்மை செய்து விடுவார்கள் ! 5 ம் அதிபதி 6 ம் ஸ்தானத்தில் அமர்ந்தால் , 6 ம் பாவக தீய பலன்கள் வெகுவாக குறையும் . நோய் உண்டானாலும் உடன் குணமாகும் . எதிர்ப்பு ஏற்பட்டாலும் அது உடனே மறையும் . கடன் இருப்பினும் அவை அதிகம் தொல்லை தராது எனலாம் . ஆனால் 6 , 8 , 12ம் அதிபதிகள் ஒரு அறையில் உள்ள மூட்டைப் பூச்சியைப் போன்றவர்கள் . இவர்கள் எங்கே அமர்ந்தாலும் அந்த ஸ்தானத்திற்கு கடும் தொல்லையைக் கொடுப்பவர்கள் எனலாம் . ஆக தொல்லையை கடுமையாக கொடுக்கும் இந்த துஷ் ஸ்தான அதிபதிகள் , தொல்லைகள் செய்யும் ஸ்தானங்களில் அமரும் நிலை உண்டானால் அதுவே வெற்றி தரும் விபரீத ராஜயோகமாகும் . இதையே தமிழ் சாஸ்திரம் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம் ' எனச் சொல்கிறது . உத்திரகாலாமிர்தம் சொல்வது என்னவெனில் : 8 ம் அதிபதி , 6 அல்லது 12 ல் ;6 ம் அதிபதி 8 அல்லது 12 ல் ; 12 ம் அதிபதி 6 அல்லது 8 ல் ; இவ்விதம் அமர்வது அல்லது பார்வை ,இணைவு ,பரிவர்த்தனை தொடர்புகள் மூலம் ஒன்றுபடுவது ஆகியவை ராஜயோகதிற்கு சமமான யோகம் செய்யும் . ஆனால் மற்ற பாவ அதிபதிகள் யாரும் இவ்வகை கிரக இணைவுடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ளவே கூடாது . 6,8,12 ம் அதிபதிகள் இணைவு மட்டுமே அமைய வேண்டும் .இந்த நிபந்தனைகளுக்கு உள்பட்டு இவ்வகை கிரக நிலை ஜெனன ஜாதகத்தில் அமைந்தால் இது அற்புதமான யோகம் . இனி பன்னிரண்டு லக்னங்களுக்கும் இந்த துஷ் ஸ்தான அதிபதிகள் அமையும் நிலையில் உண்டாகும் நல்ல ,தீய பலன்களை பார்வை செய்வோம். 1 . மேஷம் செவ்வாய் ( 8 ம் அதிபதி ), 6 ல் அமர்ந்தால் ,குறைந்த அளவே நல்ல பலன்களை உண்டாகும் .செவ்வாய் ,புதனோடு ( ஆறாம் அதிபதி ) 6,8 12 ல் அமர்ந்தால் மன அமைதியை கொஞ்சம் பாதிக்கும் . நோயைக் தரலாம் .குரு (பனிரெண்டாம் அதிபதி) மத்திம பலனை 12 ல் ஆட்சியில் அமர தரலாம் .12 ல் புதன் நல்ல பலன் செய்யும் .குரு ,செவ்வாய் 8 அல்லது 12 ல் அமர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .புதன் 6 ல் அமர குருவின் பார்வை பெற்றால் நல்ல ராஜயோகமே! 2 . ரிஷபம் சுக்கிரன் ( 6 ம் அதிபதி ) 8 அல்லது 12 ல் அமர நன்மை . 8 ல் குரு ( எட்டாம் அதிபதி ) அமர ராஜ யோகம் செய்தாலும் , புத்திரபாக்கியம் , குடும்ப சுகம் ,இவைகளை பங்கம் செய்யும் . குருவும் ,சுக்கிரனும் 6 ,8 ,12 ல் இணைந்து அமர்வது அதிகம் ரிஷப லக்னத்திற்கு நன்மையில்லை .செவ்வாய் திசைக்காலத்தில் கடன் தொல்லையை உண்டாக்கி விடும் . 3 . மிதுனம் சனி ( எட்டாம் அதிபதி ) தனித்து 6,8,12 ல் அமர்வது ,அதே போல் சனியும் ,சுக்கிரனும் (பனிரெண்டாம் அதிபதி) 6,8,12 ல் அமர்வது அதிகம் நன்மையில்லை .குறிப்பாக ஏட்டில் அமர்வது கடும் தீய பலன்களைச் செய்யும் . சுக்கிரன் தனித்து 8,12 ல் அமர்வது நன்மையே .செவ்வாய் (6 ம் அதிபதி) தனித்து 6,8,12 ல் அமர நன்மையே .எட்டாம் அதிபதி சனியுடன் இணைந்து அமர்வது மத்திம பலன் செய்யும் . செவ்வாயும் , சுக்கிரனும் 12 ல் அமர்ந்து சனியின் பார்வை பெறுவது நல்ல யோகமே ! எட்டில் சுக்கிரன் ,செவ்வாய் ,புதன் இணைவதும் பிரபல ராஜயோகம் செய்யும். 4 . கடகம் சனி( எட்டாம் அதிபதி ) 6 ல் அமர நன்மையில்லை .குரு (6 ம் அதிபதி ) மற்றும் புதன் ( 12 ம் அதிபதி ) இவர்களின் இணைவு 6,8,12 ல் அமர்வது நன்மையில்லை ! குரு + சனி இவர்கள் இணைவது நன்மையே ! அதே போல் புதன் 6,8,12 ல் அமர்வது நல்ல பலன் செய்யும் .குரு + சனி 6,8 ல் அமர்வது சில சமயம் நல்ல பலன் அமையும் . 5 . சிம்மம் சனி (ஆறாம் அதிபதி ) 6,8 ல் அமர்வது நன்மை அதிகம் இல்லை .குருவின் பார்வை பெற்றால் நல்ல பலன் உண்டு .குரு 6,8,12 ல் அமர்வது நன்மையே செய்யும் .சந்திரன் (பனிரெண்டாம் அதிபதி) 12 ல் ஆட்சி பெறுவதும் நன்மை செய்யும் . அதே போல் சனி , சந்திரன் இணைவு துஷ் ஸ்தானங்களில் உண்டாவது நன்மையே செய்யும் .சந்திரன் ( 6 ல் -மகரம் ) ,சனி பனிரெண்டில் (கடகம்) அமர பரிவர்த்தனை பெறும் யோகம் சனி மகா திசைக் காலத்தில் நன்மை செய்யும் 6 . கன்னி செவ்வாய் (8 ம் அதிபதி) 6,8 அமர்வது தீய பலன் செய்யும் . பனிரெண்டில் ,சிம்மத்தில் அமர ஏற்ற ,இறக்கமான வாழ்க்கை உண்டாகும் . சனி ( 6 ம் அதிபதி ) 12 ல் அமர மத்திம பலனைச் செய்யும் எனலாம் .சூரியன் ( 12 ம் அதிபதி ) ,செவ்வாய் பரிவர்த்தனை அல்லது 6 ல் சனி ,12 ல் சூரியன் ஆட்சி பெறுவதும் மத்திம பலன் செய்யும் .சனி , செவ்வாய் 12 ல் அமர்வது நல்ல யோகமே! 7 . துலாம் சுக்கிரன் (எட்டாம் அதிபதி) எந்த துஷ் ஸ்தானத்தில் (6,8,12 ல் ) அமர்ந்தாலும் நன்மை செய்யலாம் . இதேபோல் புதன் ( பனிரெண்டாம் அதிபதி )+ குரு ( ஆறாம் அதிபதி ) இவர்களும் 6,8,12 ல் அமர நன்மை அமையும் . இம் மூன்று துஷ் ஸ்தான அதிபதிகளுக்குள் உண்டாகும் பரிவர்த்தனை நிலையும் நல்ல யோகம் செய்யும் அமைப்பே! 8 . விருச்சிகம் செவ்வாய் (6 ம் அதிபதி ) 6,8 ல் நிற்பது மத்திம பலன் ! புதன் (எட்டாம் அதிபதி) 6 மற்றும் 12 ல் நிற்பது பலன் நன்மையாக இல்லை .அதே போல் செவ்வாயும் ,புதனும் இணைவு பெற்று 6,8,12 ல் நிற்பதும் நல்ல பலன் தராது எனலாம் .சுக்கிரன் (விரயாதிபதி) 6,12 ல் நிற்பது நல்ல பலன் செய்யும் .ஆனால் சுக்கிரன் ,புதன் இணைவு 6,8,12 ல் அமைவது தீமையே . புதன் தனித்து 12 ல் அமர நன்மையான யோகமே . சுக்கிரன் ,செவ்வாய் எட்டில் இணைய பொருளாதாரம் செழிப்பாக அமையும் .புதன் -செவ்வாய் பரிவர்த்தனையும் நன்மை செய்யும் . 9 . தனுசு 6 ம் அதிபதி சுக்கிரன் . 8 ம் அதிபதி சந்திரன் .12 ம் அதிபதி செவ்வாய்.இதில் செவ்வாய் அல்லது சுக்கிரன் 6,8,12 ல் அமர்வது நல்ல யோகம் செய்யும் .சந்திரன் 6,8 ல் நிற்பதை விட 12 ல் நீசமாகி அமர்வது நல்ல யோகம் செய்யும் .12 ல் செவ்வாய்+சந்திரன் இணைவும் நன்மை செய்யும் எனலாம் . இரண்டில் சந்திரன் (மகரம்) நிற்க , அதை செவ்வாய் எழில் நின்று பார்ப்பது நன்மையே . 10 . மகரம் 6 ம் அதிபதி புதன் . 8 ம் அதிபதி சூரியன் .12 ம் அதிபதி குரு ஆவார்கள் .இதில் சூரியன் தனித்து 6,8,12 ல் நிற்பது நன்மை செய்யாது.சுரியனுடன்,புதனும் இணைந்து இங்கே நிற்பது நல்ல யோகம் செய்யும் .புதன் தனித்து 6 ல் நிற்பதை விட 8,12 ல் நிற்பது நன்மை செய்யும் .குரு + புதன் இணைவு 6,12 ல் மட்டும் நன்மை ,8 ல் இணைவது சிறப்பல்ல ! சூரியன் ,புதன் ,குரு இணைவு 6 , 12 மட்டுமே நன்மை .செவ்வாய் 6 ல் நிற்க பனிரெண்டில் குரு நின்று பார்ப்பது நன்மை செய்யும் எனலாம். 11 . கும்பம் 6 ம் அதிபதி சந்திரன் . 8 ம் அதிபதி புதன் . பனிரெண்டாம் அதிபதி சனி .இதில் சந்திரன் 6,12 ல் நிற்பது தீமையே .8 ல் நிற்கலாம் . சனி ,சந்திரன் 6,8,12 ல் உண்டாவதும் நல்ல பலன்களைத் தடை செய்யும். சனி 6 ,12 ல் நிற்பது நன்மையே .புதன் 12 ல் நன்மை .புதன் இரண்டில் அமர எட்டில் சனி நின்று பார்ப்பது நன்மை . 12 . மீனம் சனி 12 ம் அதிபதி 6 , 12 ல் அமர உள்ள நிலை உன்னதமே .எட்டில் சனி தடை ,தாமதம் செய்யும் .சூரியன் 6 ல் நிற்பது நல்ல பலன் . 8,12 ல் நிற்பது மத்திம பலனே ! சுக்கிரன் 8 ல் நிற்பது சிறப்பு . 6 ,12 ல் நிற்பது நோய் ,தடை இவை உண்டாக்கும் . சனியும் ,சுக்கிரனும் இணைவது மிகவும் நன்மை செய்யும் . இவை எல்லாம் பன்னிரு லக்னங்களின் துஷ் ஸ்தான அதிபதிகளை தொடர்பைக் குறித்து சொல்லப்பட்டவை .இவ்வகை அமைப்பே விபரீத ராஜ யோகம் செய்யும் . இந்த துஷ் ஸ்தான அதிபதிகளின் 8,12 ம் அதிபதிகளை விட 6 ம் அதிபதி மிகவும் தீமை செய்பவர் அல்ல! இது உபஜெய ஸ்தானம் அல்லவா! ஆகவே 6 ம் அதிபதியும் ,பாக்கிய ஸ்தான அதிபதியான ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுவதும் நல்ல ராஜ யோகமே . ஒரு நன்மையான பாவாதிபதியும் ,ஒரு தீமையான பாவாதிபதியும் பரிவர்த்தனையில் அமையும் முதல் தர ராஜ யோகம் இது . ஆனாலும் 6 ம் அதிபதி ஒரு நல்ல கிரகம் அல்ல என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் . ஏழாம் அதிபதியுடன் இணைவு எனில் திருமணம் சம்பந்தமான சிக்கல்களை உண்டாக்கும் .நான்காம் அதிபதியுடன் இணைவு எனில் வண்டி,வாகனம் ,வீடு ,மனை இவைகளின் வில்லங்கம் உண்டு பண்ணும் .ஒன்பதாம் அதிபதியுடன் இணைந்தால் ( பரிவர்த்தனை அல்ல ) அயல்நாடு சம்பந்தமான விஷயங்களில் சிக்கல்களை உண்டு பண்ணும் . இந்த 6,8,12 ம் அதிபதிகளால் உண்டாகும் யோக நிலையை பலதீபிகை சாஸ்திரம் இன்னும் தெளிவாகச் சொல்கிறது . 6,8,12 ம் அதிபதிகள் பன்னிரண்டு பாவங்களில் எங்கே அமர்ந்தாலும் , அக்கிரகத்தை இயற்கை பாவக்கிரகங்கள் பார்க்கவே ,இணையவோ செய்தல் உண்டாகும் யோகங்களைச் சொல்கிறது .இவ்வகை கிரக நிலை 1. அவயோகம் , 2. நிஸ்வா யோகம் ,3. மிருத்யோகம் ,4. குகூ யோகம் ,5. பாமர யோகம் ,6. துர் யோகம் ,7. தரித்திர யோகம் ,8. ஹர்ஷ யோகம் ,9. துஷ் கீர்த்தி யோகம் ,10. சரள யோகம் ,11. நிர் பாக்ய யோகம் ,12. விமல யோகம் ,என வகைப்படுகிறது .இதில் (6) ஹர்ஷ யோகம் என்பது நன்மை செய்யும் யோகம் . இதன்படி 6 ம் அதிபதி 6,8,12 ஆகிய ஏதேனும் ஒரு துஷ் ஸ்தானத்தில் அமர ,6 ம் ஸ்தானத்தை இயற்கை பாவ கிரகம் பார்க்கவோ ,அமரவோ வேண்டும் .இதனால் ஜாதகர் வாழ்வில் மகிழ்ச்சி ,நல்ல எதிர்காலம் ,ஸ்திரமான தொழில் எதிரிகளை எளிதில் வெற்றி பெறல் ,பாவச் செயல் மனம் அச்சப்பட்டு நேர்மையான வாழ்வு அமையும். 8 ம் யோகமான சரள யோகம் ,8 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,எட்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக் கிரகம் பார்க்கவோ,இணையவோ வேண்டும் .இதன் படி ஜாதகருக்கு நீண்ட ஆயுள் ,தைரியம்,மரியாதை ,முன்னேற்றம் , கல்வி இவை உண்டு .வியாபார வெற்றி ,புத்திர மகிழ்வும் உண்டு . 12 ம் யோகமான விமல யோகம் 12 ம் அதிபதி ,துஷ் ஸ்தானங்களில் ஏதேனும் ஒன்றில் அமர ,பனிரெண்டாம் ஸ்தானத்தை இயற்கை பாவக்கிரகம் பார்க்க ,அமர வேண்டும் .இதன் படி ஜாதகர் சிக்கனமான செலவு செய்து அதிக சேமிப்பு செய்வார் எல்லோருக்கும் நல்லவராக அமைவார் .சுதந்திரமாக செயல்பட்டு எல்லோரின் மதிப்பை யும் பெறுவார் . பொதுவாக 6,8,12 ம் அதிபதிகள் துஷ் ஸ்தான அதிபதிகள் .ஆனாலும் அவர்கள் நிற்கும் ஸ்தான ,இணையும் கிரகம் ,இவற்றை பொறுத்து நன்மை,தீமை அமையும். ___________________________________________________________________________________________________________________________________________________________________________ இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய சில கிரக சேர்க்கைகள்: பல கிரக சேர்க்கைகள் உள்ளன. நான் மாதிரிக்கு ஐந்தை மட்டும் கொடுத்துள்ளேன் 1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள் 2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம் என்பார்கள் 3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால் புத-ஆதித்ய யோகம் என்பார்கள் 4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் நிபுனத்துவ யோகம் என்பார்கள் 5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனப்படும் ___________________________________________________________ நீசபங்க ராஜயோகம் - அமைப்பு: மேஷத்தில் சனியும், சூரியனும் சேர்ந்திருப்பது ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்திருப்பது கடகத்தில் செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பது கன்னியில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பது துலாத்தில் சூரியனும், சனியும் சேர்ந்திருப்பது மகரத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்திருப்பது மீனத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருப்பது நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள் சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து மிகப் பெரிய - அளவிடமுடியாத நன்மைகளைச் செய்துவிடும் அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும் தனித்தனியாக மாறுபடும். அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப் பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான பலன்களை அள்ளித்தந்துவிடும்! ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின் பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன் இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும் உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான் 10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன் உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ யோகத்தின் பலன் இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்! இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும் பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும் அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின் ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின் தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்! இந்த யோகங்களுக்குரிய பலன்களை பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம் 100ற்கும் மேற்ப்ட்ட முக்கியமான யோகங்கள் உள்ளன! _________________________________________________________________________ யோகங்கள் என்றவுடன் அதிர்ஷ்டமான அமைப்பு என்று கருதினால் அது தவறாகும். ஜோதிட பரிபாஷையில் யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும் குறியிட்டு வார்த்தை தான். இந்த வார்த்தை தனித்தனி கிரகங்களோடு சம்பந்தப்படும் போது பலவித அர்த்தங்களைத் தருகிறது. அப்படி அர்த்தங்களைத் தரும் ஜாதக யோகங்கள் 300க்கும் மேல் இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். ருச்சகா யோகம்: செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ------------------------------------------------------ வகுப்பறை புத்தி சிகாமணி!: ”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” ------------------------------------------------------- என்ன பலன்? ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள் சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்: முதலில் சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம். ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும். இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும். அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அநபா யோகம் எனப்படும். இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும். சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுநபா யோகம் எனப்படும். இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும். சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும். இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவன் கோடீஸ்வரனாகப் பிறந்தாலும் சாவதற்குள் அவனைப் பிச்சைக்காரனாக நடுவீதியில் நிறுத்திவிடும். சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேச யோகமாகும். இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும். ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும். இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும். அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தரும். சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும். அனபா யோகம்: சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம் ---------------------------------------------------------------- பொதுப்பலன்: ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான் சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான் --------------------------------------------------------------- Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body. ------------------------------------------------------------------- தனிப் பலன்கள் 1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன். 2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான். 3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான். 4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான் 5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்) எல்லாம் பொதுப்பலன்கள்! எல்லாக் கிரகங்களையும், தங்கள் ஜாதகத்துடன் சேர்த்துக் குழம்பு வைப்பதற்கு இதில் வேலை இல்லை. அதேபோல, நல்ல தோற்றம் என்று எழுதியுள்ளீர்களே? அரவிந்தசாமி மாதிரியா அல்லது அஜீத் மாதிரியா என்று யாரும் கேட்கவேண்டாம். அது அங்கே அமரும் கிரகத்தின் உச்சம், நீசம், பகை, பரல்கள் என்பது போன்ற மற்றவிஷயங்களுடன் சம்பந்தப்பட்டதாகும். சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்: சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும். இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள். சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும். இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும். சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும். இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும். ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும் குரு உச்சம் பெற்ற ஜாதகருக்கு மட்டுமே அமையும் இவைகள் தவிர பத்ரயோகம், ரூசக யோகம், கசயோகம், ஹம்ச யோகம், மாலவ்ய யோகம் என்று பஞ்சமகா புருஷ யோகங்கள் உள்ளன இந்த யோகங்கள் எல்லாமே ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமைந்திருந்தால் மட்டுமே முழுமையான பலன்களைத் தரும். இப்படி அமையாவிட்டால் அரைப்பாகம், கால்பாகம் என்று தான் பலன்களைத் தரும். யோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்” யோகங்களைப் பற்றிய பாடம். எண்.9 புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்! ------------------------------- பலன்: ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். This yoga will give lots of talent, success, honour and fame in society. ------------------------------- எல்லோருக்கும் கொடுக்குமா? கொடுக்காது. ஏன் கொடுக்காது? சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga. யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது. The Sun & Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart --------------------------------------------------------------------- சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு) மேஷம் (சூரியனின் உச்ச வீடு) மிதுனம் (புதனின் ஆட்சி வீடு) கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு) ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்! மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால் ------------------------------------------------------------------------ மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும் ------------------------------------------------------------------------ புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்! அடுத்த பாடம் நாளை! ++++++++++++++++++++++++++++++++++++++++++++ யோகங்கள்: ”சந்திரமங்கள’ யோகம்” ”சந்திரமங்கள’ யோகம்” ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது ’சந்திரமங்கள’ யோகம் எனப்படும். சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான் If Mars conjoins the Moon, this yoga is formed Sasi Mangala Yoga - When mars and moon placed in same house. The native's finance never gets drain. He will get finance help when ever he needs. -------------------------------------------------------------------------------- யோகத்தின் பலன் என்ன? இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு. பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு. ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு. That is called as the side effects of this yoga Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing one's financial worth and at the same time the native will suffer with mental worries The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house. ------------------------------------------------------------------------ இது உபரிச் செய்தி: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில் சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு! The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope! -------------------------------------------------------------------- சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான். சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்: 1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும். 2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும் Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self protective, desire to rule and influence others, irritated and aggressive 3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும். சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள். ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள். அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope! எப்போது வழங்குவார்கள்? இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள் ------------------------------------------------------------------ அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்? இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்! The main difference lies in the house where chandra and mangala are placed. There are different infleunces on the houses: 1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம் 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம் ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ, அந்த வீட்டை-அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின் அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும். இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-)))))) Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga) ----------------------------------------------------------------------- வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! --------------------------------------------------- 1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு. 2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான். 3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்! 4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது! 5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான். 6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். 7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம். 8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! 9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு! 10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது. 11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்! 12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை! திருவண்ணாமலைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஞானியாகிவிடலாம்!:-))))) ---------------------------------------------------------------------- வேண்டுகோள்: பாடத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள். யோகங்கள் பாடத்தைத் துவங்கியதில் இருந்து ஏராளமான பின்னூட்டங்கள் வருகின்றன. சிலர் யோகத்தில் குறிப்பிடாத நிலையில் உள்ள கிரகங்களைக் கொண்டு, தங்கள் ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்கின்றனர். அதைத் தவிருங்கள். மொத்தம் 300ற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. உங்களுக்கு உள்ள யோகங்கள் பின் பாடங்களில் வரும். பொறுத்திருந்து படியுங்கள். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்! மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும். This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them. மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த யோகம் எப்போது உண்டாகும்? குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other. இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? இல்லை! அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும். அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது. This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter. The yoga would also be best shown in life if both these planets are in their exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well. Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu and Saturn should not be associated with Moon. This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life. அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! எப்போது பலன் கிடைக்கும்? குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்! "Parivartthanai means Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A. Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house ++++++++++++++++++++++++++++++++++++++ இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும். Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two graha involved. Increasing the power of these two bhava and these two graha may be helpful for the success of the native. அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும் எப்படி? வாருங்கள். அதைப்பார்ப்போம். +++++++++++++++++++++++++++++++++++++++++ அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும் ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results. ++++++++++++++++++++++++++++++++++++++++++ பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும். பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும். If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned. If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce. ++++++++++++++++++++++++++++++++++++++++++++ இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள். 1.தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும். This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its interaction with the other non-dushthana partner. ________________________________________ 2. கஹல பரிவர்த்தனை! மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும். மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும். Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done. --------------------------------------------- 3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும். When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved. ++++++++++++++++++++++++++++++++++++++ பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு. தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும். உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம். இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும். ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும். --------------------------------------------------------------------- 2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். 6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும். 2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான் 1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். 1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான். 9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு! This type of parivarththanai yoga will confer high position, reputation, fameand power. Shukra-Kuja exchange If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. (எச்சரிக்கை: இது பொது விதி) அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா? எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-))))) பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும். ________________________________________ இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது. அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார். இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை Indira GANDHI, born on November 19, 1917 at 11:11 PM in Allahabad 1 & 7ஆம் வீடுகளில் சந்திரனும், சனியும் பரிவர்த்தனை. 2 & 5ஆம் வீடுகளில் சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை. 6 & 11ஆம் வீடுகளில் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சிறந்த தன யோகங்கள் கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும். 1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும். 2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும். 3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌ தன யோக அமைப்பு. 4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் . 5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம். (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் ) 6. பாரிஜாத யோகம் : லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும். 7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும். 8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம். 9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும். மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது. _________________________________________________________________________________ சஷ்ய யோகம்: சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ------------------------------------------------------ வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சனி நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” ------------------------------------------------------- என்ன பலன்? ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன் Shasya yoga: Saturn in its own sign or in exaltation, and in a kendra house - powerful, strict, position of authority. மாளவ்ய யோகம்: சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ------------------------------------------------------ வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” ------------------------------------------------------- என்ன பலன்? ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன். நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான். செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான். Marriage is only a part of the life.Not the whole life Please keep that in your mind! மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன். அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்! ஹம்ஸ யோகம்: குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ------------------------------------------------------ வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” ------------------------------------------------------- என்ன பலன்? ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house - religious, very fortunate. பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ------------------------------------------------------ வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” ------------------------------------------------------- என்ன பலன்? ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான். அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்! அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்! வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான். செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான். கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house - intellectual, learned, rich. --------------------------------------------------------------- பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன. ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும். சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும். உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அதற்கடுத்தபடியாக 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். _______________________________________________________________________________ கோடீஸ்வர யோகங்கள்‍ ஜோதிடக்குறிப்பு | 1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும். மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும். 2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும். 3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும். ________________________________________________________________________________ கால சர்ப்ப தோஷம் cum யோகம்! "காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?" போன்ற உபரிக் கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். ஆயிரத்தெட்டு உபரிக் கேள்விகள் மனதில் வந்தாலும், அதை எல்லாம் கடாசி விட்டுப் படித்ததனால் ஜோதிடம் எனக்கு ஓரளவிற்குப் பிடிபட்டது. கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல் போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும். ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள் களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக் காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள் அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள் ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்! Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu) இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத் தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்! ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும். சாயா கிரகங்களான ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால் பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது. அந்த அமைப்புள்ள ஜாதகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமான தாகும். சோகமானதாகும். அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும். லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர் களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியும் மோசமானதாக இருக்கும். இந்த மோசமான என்ற சொல்லுக்குள் எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்! இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில், வேறு நல்ல யோகங்கள் எதுவும் இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை இருக்காது.பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும் நிலையில் வாழ்வான். ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும். இறைவன் கருணை மிக்கவன். தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை! He will give you withstanding power in any miserable situation! அதை மனதில் கொள்க! உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சரி, இந்தத் தோஷம் எத்தனை ஆண்டுகளுக்கு? இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம் உண்டு என்பார்கள். சிலர் அஷ்டகவர்க்கத்தில் லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு என்பார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல் கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு பிறகு தோஷம் விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர் விற்குக் கொண்டு போகும். இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள். நாம் சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு கூட்டல் அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு தான் நாம் அசுர வேகத்தில் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக் கின்றோம். எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பொதுப் பலன்கள் 1 இந்த தோஷம் லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems) ஏற்படும்! 2 இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப் பிரச்சினைகள் ஏற்படும்! 3 இந்த தோஷம் மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன் சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும். 4 இந்த தோஷம் நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும். வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும். 5 இந்த தோஷம் ஐந்தாம் வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும். 6. இந்த தோஷம் ஆறாம் வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள் விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும் 7. இந்த தோஷம் ஏழாம் வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில், வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும். 8. இந்த தோஷம் எட்டாம் வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன் சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும். 9 இந்த தோஷம் ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும் (இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால் என்ன பாக்கியம் கிடைக்கும்? சொல்லுங்கள்) 10. இந்த தோஷம் பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில், வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது. அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது. 11. இந்த தோஷம் பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள் பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும். 12 இந்த தோஷம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத் தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மேலும் சில விவரங்கள்: 1 கால சர்ப்ப தோஷ ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம் முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய முடியாது. 2 லக்கினத்தில் ராகு இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம் துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும், சோதனைகளும் உண்டாகும். 3 நான்காம் வீடு அசுபர் வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர் வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும். 4 ஐந்தாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும். 5 ஆறாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை பாதிப்பு போன்றவைகள் உண்டாகும். 6. ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன் கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன் சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும். நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால் ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும் குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்! 7. ராகு-சனி' அல்லது ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை! 8. கால சார்ப்ப தோஷம் cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும் செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப் பலன். அல்லது எப்பொதும் நான் சொல்வதைப்பொல வாங்கி வந்த வரம்!:-))) +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல் வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு. ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-)))) சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில் (திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும். அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த பிறகே திருமணம் நடைபெறும். அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள். இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு, பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின் திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள். ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக் கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள். கால சர்ப்ப தோஷம் உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம் உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை இருவரும் தவிர்க்கலாம். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பரிகாரங்கள்: ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும். கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது அதி முக்கியம். அதையும் மனதில் கொள்க! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உதாரணத்திற்கு கால சர்ப்ப தோஷ ஜாதகம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்: இசையில் ஞானி அவர். அவருடைய ஜாதகம்தான் இது. 1943 ல் பிறந்த அவர். 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் எவ்வளவு சிரமப் பட்டார் என்பதும், அதற்குப் பிறகு அந்த தோஷமே அவருக்கு யோகமாக மாற, தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கி, லட்சக்கணக்கான அபிமானி களைப் பெற்று ஒரு உன்னத நிலையை அடைந்தார் என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தன் நினைவில் வைத்திருக்கும்படியான அற்புதமான மனிதர் அவர்!