youtube

7 April 2016

ஆலயத்தில் எட்டு இடங்களில் இறை சக்தி அதிகமாக உணரலாம்

ஆலயத்தில்  எட்டு இடங்களில் இறை சக்தி அதிகமாக உணரலாம்

ஆலயம் முழுவதுமே பரம்பொருளின் ஆற்றல் நிறைந்திருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. இவற்றில் எட்டு இடங்களில் இறை சக்தி அதிகமாக உணரலாம் என்று கூறி நாம் ஆலயம் செல்லும்போது இவ்வெட்டு இடங்களையும், இறை சக்தியின் ஊற்றுகளையும் கண்டிப்பாக, வரிசையாக தரிசனம் செய்யவேண்டும் என பணித்திருக்கிறது. கோபுரம், விமானம், த்வாரம், பிராகாரம், பலிபீடம், அர்ச்சகர், மூலவர் மற்றும் சண்டேசர் ஆகியவைதான் இந்த எட்டு. இவற்றை தரிசனம் செய்வது நமக்கு மிக உயர்ந்த பலன்களை அளிக்கும். எனவே, தாங்கள் பிராகாரத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த முடிவாகிய பரம்பொருளை கடைசியில் வழிபட்டுவிட்டு, சிவபக்தர்களில் முதல்வரான சண்டேசரிடத்தில் வழிபாட்டினை முடித்தல் வேண்டும்.

6 April 2016

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் !!

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.

  • இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
#இந்துசாஸ்திரம்-#அவசியம்படியுங்கள்

இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.


நண்பர்களே_அவசியம்_கடைபிடியுங்கள்

உங்களிடம் மிகவும் வயதான கூன் வளைந்த முதியவர்கள் ஆணோ, பெண்ணோ யாராவது உதவி அல்லது பிச்சை கேட்டால் இல்லை என்று மட்டும் சொல்லாமல் உங்கள் மீது என்ன முடியுமோ ஒரு ருபாய் இருந்தாலும் தானமாக தந்து விடுங்கள்.. நாம் வணங்கும் இறைவன் இந்த ரூபத்தில் தான் வந்து பிச்சை கேட்டு பார்ப்பார்களாம். நாம் தரும் தானம் அவர்களிடம் சேர்ந்த அடுத்த நிமிடமே உங்கள் கர்மவினைகள் குறைந்து உங்கள் தலையெழுத்தே மாற்ற கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்ததாக சித்தர்கள் அகராதியில் கூறப்படுகின்றது..மற்றவர்களுக்கும் இதை  தெரிவியுங்கள்..ஒம் நமசிவாய


காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக உடல் தளர்ச்சி பெற்ற நிலையில் ஒருநாள் மாலையில் தனது சிஷ்யர்களை அழைத்து தான் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் ஸ்ரீ குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன் மோட்சம் கிடைக்கும்.
இதைக்கேட்ட சிஷ்யர்களுக்கு கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர்.மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும் அவருக்கும் பேரானந்தம்.தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து பிரசாதத்தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து தலையில் வைத்துக்கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.தேடி வந்த சிதம்பரம் படத்தை நாமும் வணங்கி நற்பலன் பெறுவோம்.
இன்று ஸர்வ அமாவாசை!

பித்ரு தோஷம் நீங்க...!

இன்று சிவன் கோவில் சென்று அபிஷேகம்
செய்து  உள்ளன்புடன் வழிபடுவது மிகுந்த சிறப்பு. அப்படி செய்ய முடியாதவர்கள், பச்சரிசி, அகத்திக்கீரை, கருப்பு எள், வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினமான இன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய.

அனைவருக்கும் குரு அம்ச வியாழகிழமை ரேவதி நட்சதிர

அனைவருக்கும் குரு அம்ச வியாழகிழமை ரேவதி நட்சதிர அமாவாசை தின அதிகாலை வணக்கம். பித்திருக்கள் சக்தி பெறுகின்ற நாளான இன்று நம் முன்னோர்கள் அனைவரையும் நினைத்து நன்றி கூறி கோவிலில் அர்ச்சனை தீபம் ஏற்றி வழிபடுவோம், இயன்ற அளவு எரும்பிர்க்காவது அன்னம் இட்டு புண்ணியம் பெற்று நம் விதியயை மாற்றி அமைப்போம்.

கடனாக குடுக்க நல்லது இல்லை, கடனை திருப்பி குடுக்கலாம். லாப காரியம் முதலீடுகள் வேண்டாம். தோச பரிகாரங்கள் செய்யலாம்.

சனீஸ்வரர் குருவான காலபைரவரை குரு அம்ச பைரவரை மனமார வணங்குவோம் வர இருக்கும் தீமையும் நன்மை ஆகட்டும்

5 April 2016

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்தவாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும்,உற்சாகத்துடனும்இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவைஅகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும்இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்.
மஹா பெரியவா அற்புதங்கள் - 28

ஆடம்பரம் நமக்கு எதுக்கு?

சுமங்கலி பூஜை
(பெரியவாளின் அற்புத பரிகாரம்)

கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை.

இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.
தம்பதிகள் இருவரும்,”"ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.

பெரியவர் அடுத்த கேள்வியாக,”"மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.

“”வருவா” என்றனர் அவர்கள்.

“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.

“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,”"சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலிபிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம்.

இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.

சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானதுகிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு?

குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ.
அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.

 “”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார். தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது

ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!
ராம நாம மஹிமை - 6

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி ஆவார். ராம நாம மகிமையை விளக்கும் நூல்களை உலகுக்குத் தந்தவர் இவர்.

இப்படிப்பட்ட மகானான ஸ்ரீபோதேந்திரரின் வாழ்வில் சுவையான சம்பவம் ஒன்று நடந்தது. அவர் ஒரு முறை தீர்த்த யாத்திரை புறப்பட்டார். காசியிலிருந்து திரும்பும் வழியில் ஜகந்நாதர் கோயில் உள்ள புரியை அடைந்தபோது இருட்டிவிட்டது. ஸ்வாமிகள், தம் குருவான கவிஞர் லட்சுமிதரரின் வீட்டுக்குச் சென்றார். இரவில் எவரையும் தொந்தரவு செய்ய விரும்பாத ஸ்ரீபோதேந்திரர், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். அப்போது அந்தணர் ஒருவர் பதற்றமாக வந்து லட்சுமிதரரது வீட்டுக் கதவைத் தட்டினார். லட்சுமிதரரின் மகன் லட்சுமிகாந்தன் கதவைத் திறந்து, அந்த அந்தணரை உள்ளே அழைத்து பாய் விரித்து அமரச் செய்தார்.

‘‘இரவில் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். எனக்கு ஒரு பிரச்னை!'' என்ற அந்தணர் தொடர்ந்து பேசினார்: ‘‘பல மாதங்களுக்கு முன் என் மனைவியுடன் காசி யாத்திரை போனேன். காசிக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் விடுதி ஒன்றில் தங்கினோம். காலையில் எழுந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை. அவள் இல்லாமலேயே காசி யாத்திரையை முடித்துக் கொண்டு, அதே விடுதியில் வந்து தங்கினேன். அவள் நினைவு என்னை வாட்டி எடுத்தது. மறு நாள் நதியில் குளிக்கும்போது ‘ஸ்வாமி’ என்று என் மனைவியின் குரல். நிமிர்ந்து பார்த்தால், பயங்கரத் தோற்றத்துடன் ஒரு கரிய உருவம். அந்த உருவம், ‘ஸ்வாமி! விடுதியில் சில கயவர்கள் என்னைக் கடத்திச் சென்று நாசம் செய்து விட்டனர். உண்ணாமல், உறங்காமல் உடல் நலம் கெட்டு இந்த உருவில் வாழ்ந்து வருகிறேன். இன்று தங்களைக் காணும் பாக்கியம் பெற்றேன். என்னை அழைத்துச் செல்லுங்கள். இனி, தங்கள் அருகிலேயே இருந்து தாங்கள் இடும் பணிகளை செய்ய ஆசைப்படுகிறேன்!' என்றாள். இரக்கமாக இருந்தது. அவள் மீது தவறு இல்லை என்று அழைத்து வந்து விட்டேன். இதற்குப் பரிகாரம் சொல்லுங்கள்!'' என்றார்.

லட்சுமிகாந்தன், ‘‘அந்தணரே... ராமா என்று மூன்று முறை தங்கள் மனைவியைச் சொல்லச் சொல்லுங்கள். சரியாகிவிடும்!'' என்றார்.

லட்சுமிகாந்தன் சொன்னதைக் கேட்டு அறைக்குள் இருந்த அவர் தாயார், ‘‘ராம நாமத்தை பக்தியுடன் ஒரு முறை சொன்னாலே குறை நீங்கிவிடும் என்று உன் தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீ ஏன் மூன்று முறை கூறச் சொல்கிறாய்?'' என்றார்.

இந்த உரையாடலைச் செவிமடுத்தவாறே ஸ்ரீபோதேந்திரர் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட லட்சுமிகாந்தன் அவர் காலில் விழுந்து வணங்கினார். ஸ்வாமிகள் லட்சுமிகாந்தனிடம், ‘‘அந்தணருக்குத் தாங்கள் கூறிய பரிகாரத்துக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?'' என்று கேட்டார்.

உடனே லட்சுமிகாந்தன் தன் தகப்பனாரால் எழுதப்பட்ட, நாம கௌமுதி என்ற நூலை ஸ்வாமிகளிடம் தந்தார். ஸ்வாமிகள் அதைப் படித்துப் பரவசம் அடைந்தார். ‘‘இந்த நூலில் ராம நாம மகிமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட இந்தப் பரிகாரம் ஒரு சோதனையாக இருக்கட்டும். இந்த அந்தணரின் மனைவி இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, ராம நாமத்தைக் கூறி பழைய உருவத்தை அடையட்டும்!'' என்றார்.

அதன்படி மறு நாள் காலையில் அந்தப் பெண் புஷ்கரணியில் மூழ்கி எழுந்து, ‘‘ராமா’’ என்று ஒரு முறை கூறியதும், பழைய உருவம் பெற்றாள். அவள் முகத்தில் மங்களகரமான குங்குமப் பொட்டு பிரகாசித்தது. அனைவரும் இந்த அதிசயம் கண்டு மகிழ்ந்தனர். ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் அந்தப் பெண்ணின் கையால் பிட்சை பெற்று, தம்பதியை ஆசீர்வதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!

ராம நாம மஹிமை தொடரும்...

ஜெய் ஸ்ரீ ராம் !!
என்றும் தெய்வீக பணியில்,
தெய்வீகம் ஸ்ரீஹரி மணிகண்டன்.
தெய்வீகம் ஸ்ரீனிவாசன்
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்

இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை  வேண்டுவதாக அமைந்துள்ளது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll

சொற்பொருள்:-
ஓம் = ஓம்; த்ரயம்பகம் = முக்கண்ணுடையவரே; யஜாமஹே = நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம்; சுகந்திம் = நறுமணமும் (எல்லா வளமும்); புஷ்டி = ஊட்டமும் (எல்லா நலமும்); வர்த்தனம் = பெருகும்படியாகச் செய்பவரே; உர்வாருகம் = வெள்ளரிப்பழம்; இவ = போல; ம்ருத்யோர் = (என்னை) இறப்பின்; பந்தனாத் = பிடியிலிருந்து; முக்ஷீய = விடுவித்து; மா = எனக்கு; அம்ருதாத் = இறவாமையை அருளும்.

மந்திரத்தின் பொருள்:-
ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

விளக்கவுரை:-
ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.

சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது. நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது  உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன. வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.

மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது?  அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது. வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.

இறவாமை என்றால் என்ன? பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது. இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.

எந்த மந்திரத்தை உச்சரித்தாலும்,  அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை. ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.

இந்த மந்திரத்தை நெற்றியில் திருநீறு அணியும் போது சொல்வது மிகவும் விசேஷம்.
பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர...

(share) செய்யுங்கள்)

கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பொய் சொல்லுதல்,ஏமாற்றுதல்-இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்யாமல் வாழ முடியாத அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது.

இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும் சிவ மகாமந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷநாளில்-பிரதோஷ நேரத்தில்- கோவிலுக்கு உள்ளே-கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து-108 முறை மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஓம் ஆம் கவும் சொளம்

(Ohm aam howm sowm )-உச்சரிப்பு ஆங்கிலத்தில்
இதே மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில் ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில்-ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும் நீங்கும்.நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.

4 April 2016

தானம், தர்மம் என்கிறார்களே?
அப்படியென்றால் என்ன?
இந்த இறை கதையை படியுங்கள்.
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க
பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன்,
அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.
பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.
பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.
புண்ணியக் கணக்கில் சேராது.
ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,
ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.
நாமும் புரிந்துகொள்வோம்.
கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !
ஓம் நமசிவாய.
-சிவம்

3 April 2016

தேவ் சார ஜோதிடம் வழங்கும் அடிப்படை #பாரம்பரியம் ஜோதிடம்;-

ஜோதிடம் கற்க்கும் நண்பருகளுக்கு,
எந்ந ஜோதிடமாக இருந்தாலும்
#மூலம் இதுவே.

#பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.

#ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு

12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?

அட்டவனை உள்ளது பார்க்கவும்

#லக்கினம் என்பது என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய
லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும்
அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

#சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது #வாகனம்,
தசாபுத்தி என்பது #ரோடு,
கோள்சாரம் என்பது #டிரைவர்.

லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய
வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

கோச்சாரம் (கோள் சாரம் - #Transit of #planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள்.

ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும்.

அதற்கு புத்தி என்று பெயர் (Sub period).

ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.