youtube

31 December 2012

பரசுராம அவதாரம்

Picture
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.


பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

22 December 2012

 ஓம்  ஐம்  ஹீ ரீம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் ஹீ ரீம்  சர்வ கர்யா விக்ன ப்ர ஸ்  மன் னா ய சர்வ    ராஜ  வசீகரய  சர்வ பூருஷ கார்ஸ்  னாய    சர்வலோக வசீகரய  ஆம்ஹீ ரீம்  க்ரோ ம் கூ ம்ப  ட்  சுவாக ஸ்ரீ சித்த கணபதி பாதுகம் பூஜயாமி நாமாக  த்ர்பயமி நாமாக 

18 December 2012

 


தத்தாத்திரேயரும்  பரசுராமரும்
பரசுராமரைப் பற்றிய  கதையைப் படிக்கும் முன் அவருடைய தந்தையின் பிறப்பையும் அறிந்து கொள்வது அவசியம். அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டை சேர்ந்தவர் புருவன் என்ற மன்னன். அவருக்கு காதி என்ற மகன் இருந்தார். குசும்பா மன்னனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களின் வம்சத்தில் சிலர் ரிஷி முனிவர்களாக இருந்தார்கள். காத்தியும் ஒரு முனிவர் என்பதினால் ஒரு காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யாவதி என்பது. அவள் நல்ல அழகும் நற்பண்புகளும் பெற்றவளாக இருந்தாள். அதே காட்டில் பிருகு முனிவரும் இருந்தார். அவருக்கு ரீக்கா என்ற மகன் இருந்தார். ரீக்கா என்ற அந்த மகன் சத்யாவதி மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். சாதாரணமாக திருமணம் நடந்தால் பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை வீட்டினருக்கு நிறைய சீதனம் தருவார்கள். ஆனால் அதற்கு மாறாக பிருகு முனிவரின் மகனான ரீக்காவோ ஒரு பக்கம் காது கருப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை சீதனமாக தந்து சத்யாவதியை மணந்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்து சில காலம் ஆகியது. சத்யவதி கர்பமுற்றாள். அதைக் கண்ட சத்யாவதியின் தாயாருக்கு தானும் கர்பவதி ஆகி ஒரு குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளும் கர்ப்பம் அடைந்தாள். தனது ஆசையை சத்யாவதிக்கும் கூறி இருந்தாள்.
சத்யாவதிக்கு திருமணம் ஆகி சில காலம் பொறுத்து அங்கு வந்த பிருகு முனிவரிடம் தனது தாயாரின் ஆசையும் கூறி இருவருக்கும் நல்ல குழந்தைப் பிறக்க அவருடைய அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் . அதைக் கேட்டு மகிழ்ந்த மாமனாரும் இரண்டு பாத்திரங்களில் சிறிது பாயசத்தை ஊற்றி அதை அவளிடம் தந்து விட்டுக் கூறினார் 'இதில் 1 என எழுதி உள்ள பாத்திரம் உனக்கு. 2 என எழுதி உள்ள பாத்திரம் உன் தாயாருக்கு. உங்கள் இருவருக்கும் நல்லபடியாக நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அதற்கேற்ற மந்திரத்தை ஓதி வைத்து உள்ளேன். இதை நாளை குளித்து விட்டு நீயும் உன் தாயாரும் சாப்பிட வேண்டும். ஆனால் ஒன்றை கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தை மாற்றி விடாதே. அதில் கவனமாக இரு'. 
சத்யாவதியும் தன்  தாயாரிடம் சென்று அதைக் கூறினாள் . மறு நாள் காலை சத்யாவதி எழுந்திருக்கும் முன்பே அவளுடைய தாயார் எழுந்து விட்டாள். பாயசத்தைக் குடிக்க பாத்திரத்தை எடுத்தவளின் மனதில் சிறு சலனம். பிருகு முனிவர் தனது மருமகளுக்கு தனக்கு பிறக்க உள்ள குழந்தையை விட அதிக அழகான, அறிவுள்ள பிள்ளை பிறக்க வைக்க மந்திரம் ஓதி இருப்பாரோ என நினைத்தாள் . ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் தனது மகளுக்கு வைத்து இருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தை எடுத்துக் குடித்து விட்டாள். அதன்பின் குளித்துவிட்டு வந்த சத்யாவாதி தன்னுடைய தாயார் தனக்கு வைத்திருந்த பாத்திரத்தில் இருந்த பாயசத்தைக் குடித்து விட்டாளே   எனப் பதறியவாறு அவளிடம் அது பற்றிக் கேட்டதற்கு தான் தவறுதலாக அதை மாற்றிக் குடித்து விட்டேன் என அவளுடைய தாயார் கூறி விட்டாள்.  ஆகவே வேறு வழி இன்றி இன்னொரு பாத்திரத்தில் இருந்த பாயசத்தை சத்யாவதி குடித்தாள். மறுநாள் அங்கு வந்த பிருகு முனிவரிடம் சத்யாவதி  நடந்ததைக் கூறி அழுதாள். அவரும் அதைக் கேட்டு வருந்தினார். நடக்கக் கூடாதது நடந்து விட்டது. ஆனால் என்ன செய்ய முடியும், சரி நடப்பது நடக்கட்டும் என கூறி விட்டு சத்யாவதிக்கு பிறக்க இருந்த குழந்தையின் குணங்கள் அவளது பேரனுக்கு போகட்டும் என்று ஆசிர்வதித்து விட்டு சென்று விட்டார். சில நாட்களில் மகளும் தாயாரும் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தார்கள். சத்யாவதிக்கு  ஜமதக்னி முனிவரும் அவளுடைய தாயாருக்கு விஸ்வாமித்திரரும் பிறந்தார்கள். அதனால்தான் சாத்வீக குணம் கொண்ட சத்யாவதிக்கு அவளுடைய சாந்த குணத்தைக் கொண்ட ஜமதக்னி பிறந்ததினால் அவரால் காத்தவீர்யனை எதிர்த்து போராட முடியவில்லை.
காலம் ஓடியது. ஜமதக்னி முனிவர் வளர்ந்து பெரியவர் ஆனார். காலாகாலத்தில் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது. ரேணுகா தேவி ஒரு முனிவரின் பெண்ணாக காட்சி தந்தார். அவர்களுக்கு சில குழந்தைகள் பிறந்தன. அதில் பரசுராமரும் ஒருவர். பிறந்த குழந்தைகளில் முதல்வர் பரசுராமர்.  பிருகு முனிவர் சத்யாவதிக்கு முன்னர் ஆசிர்வதித்ததைப் போல அவளுடைய பேரன் (சத்யாவதியின் மகனான ஜமதக்னிக்கு பிறந்தக் குழந்தை என்பதினால்) பரசுராமர் அதி பராக்கிரமசாலியும், புத்தி கூர்மையும் கொண்டவராக விளங்கினார். அவர்கள் அனைவரும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஆனாலும் விதி சில சம்பவங்களை நிறைவேற்றியது.
ஒரு நாள் ரேணுகா தேவி குளிப்பதற்காக நதிக்கரைக்கு சென்று இருந்தாள். அப்போது எதேற்சையாக சற்று தொலைவில் அதே  நதியில் மற்றொரு நாட்டின் மன்னன் தனது மனைவியுடன் நீந்தி  விளையாடிக் கொண்டு இருந்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி காமத்துடன் சல்லாபம் செய்வதைக் கண்டவளின் மனம் ஒரு கணம் காம உணர்வால் தகித்தது. அடுத்த கணமே தனது கணவன் நினைவுக்கு வர அவசரம் அவசரமாக அங்கிருந்துக் கிளம்பிச் சென்றாள். வீடு வந்தவளின் முகத்தை நோக்கினார் முனிவர். அவள் முகத்தில் கற்பு களங்கப்பட்டு இருந்தது தெரிந்தது. தனது ஞான திருஷ்டியினால் நடந்ததை அறிந்து கொண்டார். உடனே சற்றும் காத்திருக்காமல் தனது அனைத்து பிள்ளைகளையும் அழைத்தார். ' கற்பை இழந்துவிட்ட இவள தலையை வெட்டி எறியுங்கள்' என ஆணையிட்டார். பரசுராமரைத் தவிர மற்றவர்கள் தமது தாயின் தலையை வெட்ட தயங்கினார்கள் என்பதினால் தந்தையிடம் இருந்து சாபத்தைப் பெற்றார்கள். ரேணுகா தேவி தலையை குனிந்தபடி நின்று இருந்தாள். பரசுராமர் வந்தார். அவரிடமும் தந்தை அதே செயலை செய்யுமாறு கூற சற்றும் தயங்காமல் தாயாரின் தலையை துண்டித்து எறிந்தார் பரசுராமர்.
அதைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜமதக்னி 'அன்பு மகனே....என் சொல்லை தட்டாமல் நான் கூறிய காரியத்தை உடனேயே செய்தவனே...உனக்கு என்ன வேண்டும்...கேள் தருகிறேன்' என்றார். அதுவே தருணம் என்று காத்திருந்த பரசுராமர் தனது தாயாரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க வேண்டும், மற்றும் சகோதரர்களின் சாபத்தையும் விலக்க வேண்டுமென வேண்டுகோள் விட்டார். முனிவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 'எத்தனை உன்னதமான பிள்ளை இவன். என் சொல்லையும் தட்டவில்லை. தாயார் மீதும் குடும்பத்தின் மீதும் எத்தனை பாசம் வைத்து உள்ளான்' என நினைத்தவர் 'ததாஸ்து' எனக் கூறி ரேணுகாவை பிழைக்க வைத்தார். பரசுராமரின் சகோதரர்களின் சாபத்தையும் விலக்கினார். உயிர் பிழைத்து எழுந்த ரேணுகா கணவனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டாள். ஆமாம் அந்த நாடகம் எதற்காக நடந்தது. ரேணுகா அப்படிப்பட்டவளா? இல்லை...இல்லை... ரேணுகா அப்படி ஒரு நாடகத்தை நடத்திக் காட்டி இருக்காவிடில்  பரசுராமரின் நல்ல குணம் வெளியில் தெரிந்து இருக்காது. மேலும் ரேணுகா தேவி முன்னோர் காலத்தில் தனக்கு  இரண்டாவது பிறவி வேண்டும் எனவும் அதில்தான் தான் யார் என்பதை பரசுராமர் மூலம் உலகிற்கு உணர்த்த வேண்டும் எனவும் முடிவு செய்து இருந்தாள். அதை நடத்திக் காட்ட  இதைவிட வேறு என்ன சந்தர்ப்பம் கிடைக்கும்?
இவர்கள் இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான் காத்தவீர்யன் கதையில் கூறியது போல காத்தவீர்யன் வந்து ஜமதக்னியின் பசுவை கவர்ந்து கொண்டு போனதும் பரசுராமர் அவனைக் கொன்றதுமா காட்சிகள் நடந்தேறின. காத்தவீர்யன் அழிக்கப்பட்டப் பின் அவனுடைய ஆட்கள் ஆத்திரத்துடன் இருந்தார்கள். தம்மால் பரசுராமருடன் நேரிடையாக மோத முடியாது என்பது அவர்களூக்குத் தெரியும். ஆகவே அவர் இல்லாத தருணத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். பேடித்தனமாகவே அவரை பழி வாங்க வேண்டும் என காத்திருந்தார்கள் . காலம் ஓடியது. ஒரு நாள் பரசுராமர் வீட்டில் இல்லை. அவர் வருவதற்கு நேரம் ஆகும் என்பதை தெரிந்து கொண்ட காத்தவீர்யனின் சேனையினர்  ஜமதக்னியின் ஆசிரமத்தில் நுழைந்தார்கள். அனைத்துப் பொருட்களையும் நாசப்படுத்தினார்கள். அவரை இழுத்துப் போட்டு சித்திரவதை செய்து கொன்றார்கள். ரேணுகா தேவி அலறினாள். அவரை விட்டு விடுமாறு எத்தனைக் கெஞ்சியும் கிராதகர்கள் அவரை விடவில்லை. கெஞ்சிய அவளையும் அவமானப்படுத்திவிட்டு ஓடினார்கள்.
ரேணுகா ;பரசுராமா...பரசுராமா; என இருபத்தி ஒரு முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். அவள் அலறல் தூரத்தில் இருந்த பரசுராமரின் காதுகளில் ஈட்டிப் போல வந்து துளைத்தன. ஓடோடி வந்தார் பரசுராமர். நடந்து முடிந்திருந்த அலங்கோலங்களைக் கண்டார். பிரமை பிடித்துப் போய்  அமர்ந்து இருந்த தாயாரைக் கண்டார். மடிந்துக் கிடந்த தந்தையைப் பார்த்துக் கதறினார் ' தந்தையே என்னால்தானே உங்களுக்கு இப்படி நடந்தது. இனி அவர்கள் ஒருவரையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டேன்' என வெறி பிடித்துக் கத்தியவர் வீட்டில் கிடந்த அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டார். தனது கோடாலியை தோளிலே வைத்துக் கொண்டு 'அந்த ஷத்ரியர்களை வேட்டை ஆடிவிட்டு வருகிறேன்....அதுவரை இவை இப்படியே இருக்கட்டும்' என வெறியோடு கிளம்பிச் சென்றார்.
வெற்றி மிதப்பிலே சென்று கொண்டு இருந்த ஷத்ரிய சேனயினரை கண்டு பிடித்தார். அவர்களை துரத்தலானார். ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவரையும் தேடித் தேடி பிடித்துக் கொன்றார். ஷத்ரிய வேட்டை தொடர்ந்தது. அப்படியும் அவர் வெறி அடங்கவில்லை. கண்களில் தெரிந்த ஒரு ஷத்ரியனையும் விட்டு வைக்கவில்லை. வெறி பிடித்த வேங்கைப் போல அனைவரையும் வெட்டி சாய்த்தப்  பின் வீடு திரும்பினார். தந்தையின்  உடலை  மடி மீது கிடத்திக் கொண்டு புலம்பினார் ' தந்தையே எத்தனை பராக்கிரமசாலியாக இருந்தும் உங்களைக் காக்க முடியவில்லையே... என் வாழ்கையில் இனி எனக்கு என்ன இருக்கின்றது?...' என அழுது புலம்பிய மகனை துக்கத்தில் மிதந்து கொண்டு இருந்த தாயார் ரேணுகா சாந்தப்படுத்தினாள் . ' ஆனது ஆகி விட்டது மகனே...இனி அடுத்ததாக இறுதிக் காரியத்தை நடத்தி முடி' என்றாள்.
சரி என எழுந்தவனிடம் தீர்மானமாக ரேணுகா கூறினாள்  ' பரசுராமா...உன் தந்தையின் இறுதி காரியத்தை இங்கு செய்யக் கூடாது. போ...போய் ஒரு காவடியை தயார் செய்து கொண்டு வா... ஒரு புறம் உன் தந்தையையும், மறுபுறம் என்னையும் வைத்துக் கொண்டு நடந்து செல். எந்த இடத்தில் ஆசரி 'நில்' என்று கூறுகின்றதோ அங்கு உன் தந்தைக்கு வேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடி. நானும் அவர் சிதையிலே வீழ்ந்து மடிந்துபோக  உள்ளேன். ஆகவே இருவருக்கும் சேர்த்து அங்கேயே ஈமக் கடன்களை முடித்து விடு இதுவே  என் ஆணை' என்றவளின் கட்டளையை ஏற்று ஒரு காவடியை தயார் செய்து கொண்டு வந்தார் பரசுராமர்.
தனது தாயாரின் கட்டளைப்படி அவர்கள் இருவரையும் அதில் வைத்துக் கொண்டு காடுகளில் பல பகுதிகளிலும் நடந்து சென்று கொண்டே இருந்தார். அவர் பல மைல் தொலைவு தூரம் சென்றும் நில் என்றக் கட்டளை வரவில்லை. ஆனால் பரசுராமரும் சோர்வு அடையவில்லை. பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தார். அந்த நிலையில் அவர் மலைப் பகுதியில் சென்றபோது  தத்தாத்திரேயர் இருந்த பகுதியை அடைந்தார். அப்போது  'நில் மேலும் போகாதே' என்றக் குரல் ஒலித்தது. யார் குரல் கொடுத்தார்கள் என்று திரும்பிப் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அவர் யாராக இருக்கும் என யோசனை செய்தவர் தாயாரையே கேட்கலாம் என எண்ணி தாயாரின் முகத்தை நோக்கினார். அவள் வாயில் இருந்து மெல்லிய சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தது. காவடியை கீழே வைத்து விட்டு அவள் அருகில் சென்று பார்த்தார். அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வந்து கொண்டு இருந்தன. 'மகனே...உனக்கு அடிக்கடி உன் தந்தை போதிப்பாரே தத்தரைப் போய் பார்....தத்தரைப் போய் பார் என்று...அவருடைய ஆசிரமம்தான் அருகில் உள்ளது....போ..உள்ளே போய் அவரை தரிசித்து எங்களுக்கு எப்படி இறுதிக் கடன்களை செய்ய வேண்டும் எனக் கேட்டு அவர் கூறுமாறு கிரியைகளை  செய். அவர் கிடைக்கவில்லை என்றாள் அங்குள்ள நெல்லி மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை தியானம் செய். அவர் எங்கு இருந்தாலும் உடனே ஓடி வருவார் ' என்றாள்.
தாயாரின் சொல்லை ஏற்று பரசுராமர் ஆசிரமத்திற்குள் சென்று தத்தாத்திரேயரை தேடினார். ஆனால் அதற்கு மாறாக அலங்கோலமான நிலையில், பெண்களுடன் சல்லாபம் செய்து கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். உள்ளே சுருட்டு வாசனை....சாராய நெடி மூக்கை துளைத்தது'. ஆனால் பரசுராமரா சளைத்தவர். அவருக்கு  தத்தரைப் பற்றி ஏற்கனவே பலரும் கூறி இருந்ததினால் தனது எதிரில் அந்த நிலையில் காட்சி தருபவர் தத்தாத்திரேயராகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீர்மானமாக இருந்தது. அவர் அருகில் சென்று அவரை சேவித்தப் பின்னர் தனது தந்தையின் இறுதிக் கடனை எப்படி செய்வது என அவரிடம் அறிவுரைக் கேட்கவே தான் அங்கு வந்துள்ளதாக பரசுராமர் கூற அந்த அலங்கோல மனிதர் கூறினார் 'இறுதிக் கடனைப் பற்றி எனக்கு என்னடா தெரியும்...வேண்டுமானால்  நீயும் இரண்டு மொந்தைக் கள்ளைக்  குடித்துவிட்டு என்னுடன் இங்கு அமர்ந்து கொள் . அதை விடுத்து இறுதிக் கடன்...காரியம் என என்னிடம் வந்தால் நான் என்னடா செய்வது' என ஏளனமாக பேசினார். பரசுராமருக்கு வைராக்கியம் அதிகம். அசைந்து கொடுக்கவில்லை. அவர் கூறினார் 'ஸ்வாமி தயவு செய்து நாடகத்தை தொடராதீர்கள்...உங்களை கேட்டு நீங்கள் கூறியபடித்தான் என் தந்தையின் இறுதிக் காரியத்தை செய்ய வேண்டும் என என்னுடைய தாயார் கூறி உள்ளார். அதனால் அவளையும் இங்கே அழைத்து வந்துள்ளேன்' என்றார்.
அதைக் கேட்ட தத்தாத்திரேயர் கேட்டார் 'என்ன கூறினாய்...என்னைக் கேட்டு இறுதிக் கடனை செய்யுமாறு உன் தாயார் கூறினாளா...அவளும் இங்கு வந்து இருக்கிறாளா  ...யாரடா உன் தாயார்.. அவளை நானும் பார்க்கிறேன்' என ஆச்சர்யத்துடன் கூறியபடி தனது உண்மை உருவிலே எழுந்தார் தத்தர் . அவரை சுற்றி பெரிய ஒளி  வெள்ளம். அனைத்து நாடகக் காட்சிகளும் மறைந்து இருந்தன. ஜ்யோதிஸ்வரூபமாக பரசுராமர் எதிரில் தத்தர் நின்று கொண்டு இருந்தார். 'வா...சென்று உன் தாயாரைப் பார்க்கலாம்' என பரசுராமரை அழைத்துக் கொண்டு சென்றவர் ரேணுகா மாதாவைக் கண்டார். அவ்வளவுதான் ' ஹே ஜகன்மாதா' எனக் கூறியவாறு தத்தாத்திரேயர் அவளை சென்று வணங்கினார்...தாயே ஜகன்மாதா...என் அன்னையே...எனப் பலவாறாகக் கூறி அவளை தோத்திரம் செய்யலானார். அவர் முன்னால் அமைதியாக சலனம் இன்றி கண்களை மூடியபடி ரேணுகா அமர்ந்து இருந்தாள். நடந்து கொண்டு இருந்ததைக் கண்ட பரசுராமர் அதிர்ந்துபோய், வாயடைத்து நின்றார்.
பரசுராமரை அழைத்த தத்தாத்திரேயர் அவரை அனைத்து தீர்த்தங்களிலும் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அதன் பின் அவருக்கு அவர் தந்தைக்கு இறுதிக் கடன்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறிவிட்டு சிதைக்கு தீ மூட்டச் சொன்னார். காவடியில் இருந்து இறங்கிய ரேணுகா தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டாள். சிதையில் தீ எரிந்து கொண்டு இருந்தபோதே அவள் அதில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். மறைந்து விட்டாள். தத்தாத்திரேயர் அமைதியாக நடந்த அனைத்தையும் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். ரேணுகா தேவி தான் இன்னொரு பிறவி எடுத்து இந்த இடத்தில் முடித்துக் கொண்டது ஏன்?  காரணம் என்ன?
  • தத்தாத்திரேயர் வரம் பெற்ற காத்தவீர்யனை அழிக்க வேண்டுமானால் அவரே வணங்கும் பராசக்தி மூலமே அது நடக்க இயலும் என்பதினால் மாயையாக அவள் தன்னை ஜமதக்னியின் மனைவியாக காட்டியவாறு இருக்க வேண்டும்.
  • ஜமதக்னியின் உண்மையான மனைவியாக இருந்தது அவள் அனுப்பிய ஒரு பூத கணமே. அப்போதுதான் காத்தவீர்யனைக் கொல்ல வேண்டிய நாடகத்தை நடத்தி முடிக்க முடியும்.
  • ஜமதக்னி யார்? பிறப்பால் மனித உடலை எடுத்து இருந்தாலும் அவரும் சிவபெருமானின் ஒரு பூதகணமே.
  • மும்மூர்த்திகள் வணங்கும் அவள் பராசக்தி என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். அதை மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் மூலமே அதையும் தெரியப்படுத்த வேண்டும். 
  •  அவளது தலையை ஏன் ஜமதக்னி முனிவர் வெட்டுமாறு கூறினார்? அதற்குக் காரணம் அப்போதுதானே அந்த உடலில் உள்ள பூதகணம் மடியும், தானும் ஒரு மனித உருவில் அங்கு இருந்து நாடகத்தை நடத்த முடியும்.
நாடகம் நடந்து முடிந்தது. தத்தாத்திரேயர் அறிவுரைப்படி அனைத்து காரியங்களையும் செய்து முடித்தப் பின் பரசுராமர் காத்தவீர்யனின் ஆட்கள் ஜமதக்னியைக் கொன்றபோது இருபத்தி ஒருமுறை மார்பில் அடித்துக் கொண்டு தன்னை அழைத்த தாயாரின் நினைவாக பூமியின் இருபத்தி ஒரு பகுதிகளிலும் சென்று ஷத்ரியர்களை வதம் செய்தார். இருபத்தி ஒரு முறை முடிந்ததும் அவர் மனதில் துயரம் தோன்றியது. இது என்ன வாழ்கை. எத்தனை மனிதர்களைத்தான் அடுக்கடுக்காய் கொன்று தீர்ப்பது என மனதில் வெறுப்பு ஏற்பட மீண்டும் தத்தாத்திரேயரிடம் வந்து சரணடைந்தார். வழியில் ரேணுகா தேவியும் ஜமதக்னி முனிவரும் அவர் முன் தோன்றி அவர் செய்த கொலைகளின் பாவத்தை அழிக்க தத்தாத்திரேயரிடம் சென்று அவருடைய அறிவுரை பெற்று ஒரு யாகத்தை செய்யுமாறு கூறி விட்டு மறைந்தார்கள். அந்த யாகம் என்ன, எப்படி செய்வது எனப் புரியாமல் தத்தரிடம் சென்றார்.
தத்தாத்திரேயரிடம் சென்று நடந்தவற்றைக் கூறி விளக்கம் கேட்க தத்தர் கூறினார் ' பரசுராமா, கவலைப் படாதே. எந்த ஒரு செயலுக்கும் மாற்று மார்க்கம் உண்டு. அவர்கள் உன்னை செய்யச் சொன்ன யாகத்தின் பெயர் ரேணுகா யாகம். அதை நீ செய்து முடிக்கும்வரை உனக்கு நானே துணையாக இருந்து உனக்கு வழி காட்டுவேன்' எனக் கூறினார். அந்த யாகம் செய்ய வேண்டுமானால் பக்கத்தில் மனைவி அமர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பரசுராமரோ மனம் ஆகாதவர் . ஆகவே மனைவிக்கு பதில்  மனைவி ஸ்தானத்துக்கு இணையாக ஒரு  தங்கத்திலான ஒரு பெண் பொம்மையை பரசுராமர் பக்கத்தில் வைத்துக் கொண்டு யாகத்தை வேறு சிறப்பாக செய்து முடிக்க வைத்தார். யாகத்தில் தத்தாத்திரேயரே ஒரு ருத்வியாக வந்து அமர்ந்து கொண்டு பங்கேற்க  காஷ்யப முனிவர் முன்னிலையில் அனைத்தும் நன்றாக நடந்து முடிந்தது. அதில் பங்கேற்ற ரிஷி முனிவர்களுக்கு ஒரே குழப்பம். தத்தர் ஏன் அடிக்கடி ரேணுகா...ரேணுகா என முணுமுணுக்கின்றார்?...அவருக்கும் ரேணுகாவிற்கும் என்ன சம்மந்தம்? அதற்கு மேல் யாகத்தில் பரசுராமரிடம் அதை செய்...........இதை செய் எனக் கூறி வழி காட்டியவண்ணம்  உள்ளாரே...பரசுராமர் மீது இவருக்கு  என்ன அக்கறை? கேள்விகள் அவர்களை குடைந்து எடுத்தன. ஆனால் பதில்தான் தெரியவில்லை. யாகத்தில் வந்த ருத்விகளுக்கும் நிறைய தானங்கள் கிடைத்தன. ஆகவே அனைவரின் சார்பாகவும் தத்தாத்திரேயரிடம் பரசுராமரே அவர்களது சந்தேகத்திற்கான விடையைக் கேட்டார். பரசுராமர் தத்தரிடம் கேட்டார் ' ஸ்வாமி, என் பெற்றோர்கள் சொர்கத்துக்குப் போகும் முன் என்னை வழியிலே சந்தித்து தத்தாத்திரேயரிடம் இறுதிக் காரியங்களை செய்ய அறிவுரைக் கேட்டு அவர் கூறுவது போல செய் என்றார்கள். மேலும் என்னை உங்களிடம் தீட்ஷை பெற்று உங்களுடைய சிஷ்யராகவே ஆகுமாறு கூறினார்கள். என் தாயாரின் பெயரைக் கேட்ட உடனேயே நீங்கள் உடனே எழுந்து வந்து அவளை வணங்கித் துதித்தீர்கள். அப்போதே நினைத்தேன் எத்தனை பெரிய யோகா புருஷர் நீங்கள் ஏன் அவளை வணங்க வேண்டும்? அதற்கான காரணங்களை எங்களுக்கு விளக்கினால் நாங்கள் மன அமைதி பெறுவோம் ' . அவர் கேட்டதைக் கண்ட தத்தரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அமைதியாக அவர்களுக்கு விளக்கினார்.
'பரசுராமா, உங்களுக்கும் என்னுடைய தாயாருக்கும் என்ன பந்தம் என்று கேட்டாய் அல்லவா...கூறுகிறேன் கேள். உன்னுடைய தாயாரான ரேணுகா ஸ்தூல சரீரமும் நிராகாரம் என்ற ஜேஷ்ட சரீரத்தையும் கொண்டவள். அவளுக்கு இரண்டு உருவங்கள் உள்ளன. அவளே  உலகு அனைத்தையும் ஆளும் லோகமாதா. அவளுக்கு  எல்லாமே அவளேதான்.  தாய், தந்தை, கணவன் , மனைவி, சொந்த பந்தம் என அனைத்துமே அவளுக்கு அவளேதான். அதில் ஒரு உருவமாக உன்னுடைய தாயார் இந்தப் பிறவியில் உனக்கு தாயாக பிறக்கக் காரணம் லோகத்தின் நன்மையைக் கருதி அனைவரையும் நல்வழிப்படுத்தவே. காத்தவீர்யன் முன் பிறவியில் விஷ்ணுவிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஜென்மத்தில் பிறக்க உன்னையே விஷ்ணு தனது அவதாரமாக ஜமதக்கினிக்கு பிறக்க வைத்து அவனை அழித்தார்.
உன் அன்னை ரேணுகா ஒரு ஏக மாதா ...அவளே சந்தியா தேவி எனும் காயத்ரியும் ஆவாள்...காலமற்ற காலத்தில் வாழ்பவளான  அவளை வணங்குவதற்கு காலமோ நேரமோ எதுவுமே தேவை இல்லை. அவளை மூன்று வேளைகளிலும் வணங்குபவர்கள் எண்ணற்ற ஆனந்தத்தை அடைவார்கள். எல்லா காலத்திலும் நிறைந்து இருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் சந்தி என்பதின் மூலம் சந்தியாவந்தனம் செய்யலாம். சந்தி என்றால் காலம். ஆனால் அதற்காக அவளை மூன்று வேளை மட்டும் வணங்க வேண்டும் என்பது அல்ல சாரம். அத்தனை உயர்வானவள் அவள். அதனால்தான் மானிட உருவில் வந்துள்ள நான் கூட அவளை வணங்குகின்றேன். என்னையும் படைத்தவளே அந்த மாகா சக்தியான பராசக்தி. அவளின் ரூபமே காயத்ரியும். அவளே உன் அன்னையாக காட்சி தந்த ரேணுகா தேவியும். அதோ  தெரிகிறதே ஒரு குளம்,  அதில்தான் உன் தாயார் நீராடுவாள். அதனால்தான் அதை ரேணுகா தீர்த்தம் என்கிறோம். இதோ தெரிகின்றதே நெல்லி மரம், அதன் அடியில்தான் உன் தாயார் அமர்ந்து இருப்பாள். நீ எங்கு சென்று ஒய்வு எடுத்தாலும் கிடைக்காத மன நிம்மதி அந்த மரத்தடியில் நின்றாலே கிடைக்கும். உனக்கு நினைவு இருக்கின்றதா? உன் தாயார் உனக்குக் கூறினாளே, யாகம் முடிந்ததும் அந்த நெல்லி மரத்தடியில் சென்று அமர்ந்து கொள் என்று. அதற்குக் காரணம் இதனால்தானப்பா ' எனப் பலவாறு ரேணுகா எனும் ஆதி பராசக்தியின் பெருமைகளை கூறிக் கொண்டே இருந்தார். அப்படி அவர் கூறிக் கொண்டே இருக்கையில் அந்த நெல்லி மரத்தடியில் ரேணுகாதேவி ஜகத்ஜோதியாகத் தோன்றினார். தத்தாத்திரேயர் 'அன்னையே...பராசக்தி.....ஜகன்மாதா.........எனக் கூறியவாறு அவளை தோத்திரம் செய்யத் துவங்க சுற்றிலும் இருந்த ரிஷி முனிவர்கள் மெய் மறந்து நின்று அந்த அற்புதமான காட்சியைக் கண்டு களித்தார்கள். அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது தத்தாத்திரேயர் யார் என்பதும் அவருக்கும் ரேணுகா தேவிக்கும் என்ன சம்மந்தம் என்பதும்.
யாகம் முடிந்து அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் தத்தாத்திரேயரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பரசுராமரும் அங்கேயே தங்கி இருந்தவாறு தத்தாத்திரேயைன் அறிவுரைப்படி தியானங்களை செய்து கொண்டும் அந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டும் காலத்தைக் கழித்தார். ஆனாலும் அவர் முழுமையாக தத்தரிடம் அடைக்கலம் அடையவில்லை என்பது அவருக்கே தெரியவில்லை. அவர் மனதில் மீண்டும் அமைதி இன்மை தோன்றியது. காடுகளில் அலைந்து திரிந்து கொண்டு இருந்தவர் வெகு அபூர்வமாகவே மற்றவர்கள் கண்கள் முன் தோன்றும் சம்வார்த்தா என்ற முனிவரிடம் சென்று தனது மனத் துயரைக் கூறினார். அந்த முனிவர் அவரைப் பார்த்து சிரித்தபடிக் கூறினார் 'பரசுராமா...உன் நிலையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். கையிலே விளக்கை வைத்துக் கொண்டே வெளிச்சத்தைத் தேடி அலைகிறாயே' எனக் கூறி விட்டுச் சென்றார். அப்போதுதான் பரசுராமருக்கு யாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. ஆகா...என்ன தவறு செய்துவிட்டேன். என் தாய் தந்தைக் கூறியும் தத்தரிடம் முழுமையாக நான் அடைக்கலம் ஆகவில்லையே என்பதை உணர்ந்தவர் விரைவாக தத்தரிடம் சென்று அவள் கால்களில் விழுந்தார். தனக்கு மன அமைதியே இல்லை என்றும் அவர்தான் தனக்கு மன அமைதிக்கு வழி காட்ட வேண்டும் எனவும் கூறி ஒரு குழந்தைப் போல கண்ணீர் விட்டு அழுதார். தத்தர் அவரை தேற்றி எழுப்பினார்.
'கவலைப்படாதே பரசுராமா...நீ இங்கேயே ஒரு குடிலை அமைத்துக் கொண்டு தியானத்தை செய்' எனக்  கூறி அவருக்கு சில மந்திரங்களை உபதேசித்தார். அவரும் தத்தர் கூறியபடியே அந்த மலைப் பிரதேசத்தில் பல காலம் தங்கி இருந்தவாறு  தவம் செய்யலானார். அவருக்கு தத்தாத்திரேயேர் செய்த உபதேசமே திருபுரா ரகசியம் என்பது என்று கூறுகிறார்கள். திருபுரா ரகசியம் என்பது திருபுரசுந்தரியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்கர, யந்திர வழிபாடு செய்வதே. அந்த திருபுர சுந்தரி யந்திரம் மிக சக்தி வாய்ந்தது. அதை செய்தவாறு பல காலம் அங்கிருந்து மன அமைதி பெற்றார் பரசுராமர்

16 December 2012

சிதம்பர ரகசியம்

பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் வியாக்ரபாத மகரிஷியும் ( புலிக்கால் முனிவர் ) , பதஞ்சலி மகரிஷியும் ( ஆதிசேஷன் ) இறைவனுடைய தாண்டவத்தைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் . அவர்களுக்கு ஆடிக் காண்பிப்பதற்காக ஈசுவரன் 3,000 முனிவர்களோடு வந்தார் . சிதம்பரத்தில்தான் அப்போது மகரிஷிகளுக்காக தாண்டவம் ஆடிக் காட்டினார் ஈசன் . மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோயில் கொண்டு விட்டார் . கூட வந்த 3,000 முனிவர்களும் அங்கேயே தங்கிவிட்டார்கள் . அவர்கள்தாம் 'தில்லை மூவாயிரம் ' பொது தீட்சிதர்கள் .

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

" சிதம்பர ரகசியம் என்றால் என்ன ?"

" புராணங்கள் அதைத் ' தஹ்ரம் ' என்கின்றன . உருவமின்றி இருப்பதால் ' அரூபம் ' என்றும் சொல்வார்கள் . இந்த ரகசிய ஸ்தானம் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும் , ஸ்ரீ நடராஜ மூர்த்திக்குப் பின்புறத்திலும் உள்ளது .

இது எப்பொழுதும் ' திரஸ்க்ரிணீ ' என்கிற நீல வஸ்திரத்தால் மூடியிருக்கும் . நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் சதா காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் . இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால் , நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும் . எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜன்ம விமோசனம் சித்திக்கும் .எளிமையாகச் சொன்னால் , சிதம்பர ரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

சிதம்பரம் - சிதம்பர ரகசியம் - சிதம்பரம் அனந்தீஸ்வரர் - சிதம்பரம் ஆத்மநாதசுவாமி - சிதம்பரம் ஆலயம் - சிதம்பரம் இளமையாக்கினார் - சிதம்பரம் காயத்ரி அம்மன் - சிதம்பரம் கோயில் சிறப்பு - சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் - சிதம்பரம் தேவாரம் - சிதம்பரம் நடராசர் நாட்டியம் - சிதம்பரம் வரலாறு - தில்லை காளி

வாஸ்து என்பது அறிவியலா ?

ஆமாம் வாஸ்து என்பது முழுமையான அறிவியலே,
வாஸ்து பகவான் எனும் உருவகம் கூட முழுமையான அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது  வாஸ்து என்பது ஒரு வடமொழி சொல் நாம் வசிக்கும் இடம் வாஸஸ்தலம் எனப்படும் இந்த வார்த்தையில் இருந்து உருவானதாக சிலர் கூறுகிறார்கள், வேறு சிலரோ வாஸ்தவம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக கூறுவார் காரணம் வாஸ்தவம் உண்மை என்று பொருள்படும் . ஆக நம் முன்னோர்கள் தான் உணர்ந்ததை உதாரணத்துடன் சொல்ல வார்த்தை கிடைக்காமல் கூறியிருக்கலாம்.
வாஸ்து என்பது எதை அடிப்படையாக கொண்டது என ஆராய்ந்தால் காந்த அலைகளின் அடிப்படையே என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தில் இருந்து வரும் காந்த அலைகள் பூமியின்  மீது நம் கண்களுக்கு புலப்படாத வகையில்  மழை போன்று பெய்து கொண்டே உள்ளது.இந்த காந்த அலைகள் வெவ்வேறு கோள்கள் ,நட்சத்திரங்கள் மற்றும் சூரியன்கள் போன்றவைகள் பிரபஞ்சத்தில் சுழலும் போது வெளிப்படும் காந்த அலைகளே பூமியின் மீது பெய்து கொண்டே உள்ளது. இந்த காந்த அலைகள் பிரபஞ்சத்தில் இருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் அவை சுழன்று ,பயணித்து ,கரைந்துகொண்டே தென் துருவத்தில் இருந்து வடதுருவத்தை நோக்கி பயணிக்கிறது. நாசா வும் பூமியின் மீது தென் துருவத்தில் இருந்து வடக்கு நோக்கி பரவும் காந்த அலையின் படத்தை வெளியிட்டு உள்ளது.
 
அது போல் இந்த காந்த ஓட்டத்தில் தடை வரும்போது நாம் செய்யும் செயலில் தடை ,உடல்நலம் பாதிப்பு பொருள் வரவு தடை போன்றவைகள் வருகின்றன

வாஸ்து பகவானின் உருவத்தின் காரணம் 


வாஸ்து பகவானை மனித உருவமாக சித்தரித்து இருப்பதற்கு காரணத்தை ஆராயிந்து பாரத்தால் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் நாம் வசிக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை ஆராய்ந்தோமானால் ஒரு மனிதனை வாஸ்து பகவான் போல குப்புற படுத்து இருப்பதாக பார்த்தோமானால் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ள இடம் அந்த பகுதியில் வரும் மனித உறுப்போடு தொடர்பு உள்ளதாக இருக்கிறது. எனவே இந்த ஒப்பீடு படிதான் வாஸ்து பகவானை அமைத்தனர் .
காரணம் ஆரோக்கியம் தான் மிகபெரிய செல்வம், ஆரோக்கியம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை ,ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக சிந்திக்க முடியும்,நல்லவற்றை செய்யமுடியும் .தவறு செய்தால் அது ஆரோக்கிய குறைபாடே ,சரியான வைட்டமின் மூளைக்கு செல்லாததால் அவன் தவறு செய்வான் தண்டனை பெறுவான்

வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?

சாஸ்திரத்தில் கூறுவது 

சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அவர் உடலில் இருந்து விழுந்த வியர்வை துளி பூமியில் பெரிய மனித உருவம் கொண்ட உடலாக தோன்றியது எனவும் அவனுக்கு தங்க முடியாத பசி ஏற்ப்படதாகவும் , அவன் தேவர், மனிதர், அசுரர் என அனைவரையும் மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் பிடித்து உண்ண ஆரம்பித்தான்.
உடனே அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

ஈசன் அனைவரின் விருப்பபடி அந்த மனித உருவத்தை பூமியின் மேல் குப்புற தள்ளி மண்ணை பார்த்து அந்த மனித உருவம் படுத்திருகுமாறு தூங்க வைத்து அவன் மீது 45 தேவதைகளையும் காவலுக்கு வைத்து வருடத்தின் நான்கு பருவகாலத்திலும் ஒரு பருவத்திற்கு மூன்று முறை (மாதத்திற்கு ஒரு முறை ) விழிக்கும் போது வீடு,மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மனை பூஜை செய்வதின் மூலம் அதை கட்டுபவர்கள் தரும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பசியை போக்கி கொள்ளும் படி ஈசன் பணித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வாஸம் செய்ய இடம் தருவதால் அவனை வாஸ்து புருஷன் (மனையின் தலைவன் )என்று பிரம்மாவால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

13 December 2012

BRIET EXPLANTION OF THE TELE THERAPY TREATMENT

BRIET     EXPLANTION   OF THE TELE THERAPY TREATMENT  
SIR 
the person   who desir to take teatment from the tele theraphy has  to come over here and brief us about the patlent  
the required information  about the the patient  to be given us below
1   nature of lliness and age
2    drief  history  of the case given by the doctor
3 diagnostoc report
4    x ray report
 5  blod report stating minimum maximum and normal etc
  6   religion of the patient     
   we   are praying to shree vinyaka  ambal and navagrahas  to normalize the units of sufferer  and well request to recify that defect  affected  portins of the  body
    ultra  violet  rays laser beams cosmic rays radio active waves and infra red were  used by the supernatural forces strengthening  the weak damaged neves  blppd vessels portions etc and remove the blockage entire blood vessels   in the circulation 
 in the course of 3months duration of the treatment the body will gradually  develop and reach the point of sound healyh        
    the above detalls are the brief explanation of the treatment and our treatment only   by praying methnod
     THE   treatment  is littie costly but recovery is assured the patient once treated at teletheraphy will never get again  and we wil assure you if the diseases  occurs again will trewt them free of our cost
             any about detalls   contact 
 DR.P. SUNDARESAN      RIMP                             
   NO.39   /15    BROBITY S    ELITE F3
 CITY LIMIY ROAD  SECRETARIAT  COLONY
 ADAMBAKKAM    . CHENNAI    600088
 CELL   NOMBER   9884131548

12 December 2012

மாசி மகத்தின் விசேஷம் என்ன?

பௌர்ணமி அன்று மாலை மேற்கே சூரியன் அஸ்தமிக்க, கிழக்குத் திசையில் முழு நிலவு அதுவும் கடலிலிருந்து எழும்போது பார்த்தால் தங்கத் தகடு மாதிரி ஜொலிக்கிறது. மேற்கே சூரியன். கிழக்கே முழு நிலவு. நடுவே பூமி. வானவியலின்படி அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் இருக்கின்றன. எல்லா பௌர்ணமிகளிலும் இப்படித்தான். ஓர் ஆண்டில் மொத்தம் 12 பௌர்ணமிகள் உண்டு. சில ஆண்டுகளில் 13 பௌர்ணமிகள் வருவது உண்டு.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றையும் சேர்க்கின்ற நேர்கோட்டை, சந்திரனைத் தாண்டி மேலும் இழுத்துக் கொண்டே போனால் அது வானில் ஏதோ ஒரு ராசியில் போய் முடியும். வானை நமது சௌகரியத்துக்காக மேற்கிலிருந்து கிழக்காக 12 ராசிகளாக - பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நாம் மேற்படி நேர்கோட்டை நீட்டித்தால் அந்தக் கோடு ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு ராசியில் போய் முடியும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி வருகிற பௌர்ணமியன்று அந்த நேர் கோடு சிம்ம ராசியில் போய் முடியும். சிம்ம ராசியில்தான் மக நட்சத்திரம் இருக்கிறது. அன்றைய தினம்தான் மாசி மகம்.இதையே வேறு விதமாகச் சொன்னால் தமிழ் மாதமாகிய மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி அன்று சூரியன், பூமி, சந்திரன், மக நட்சத்திரம் ஆகிய நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். நாம் ஆண்டுதோறும் அந்த நாளில்தான் மாசி மகம் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அந்த அளவில் வானவியல் ரீதியிலான ஒரு நிகழ்ச்சியைத்தான் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். மாசி மகம் பண்டிகை பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிற பண்டிகை. ஆகவே மிக நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழர்கள் வானவியல் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்தனர் என்று கூறலாம்.மக நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் Regulus என்று பெயர். இரவு வானில் இதை நன்கு காணலாம். வானவியலின்படி சூரியன் ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதங்களில் சிம்ம ராசியில் இருக்கும். ஆகவே அந்த மாதங்களில் இரவு வானில் மக நட்சத்திரத்தைக் காண இயலாது. மற்ற மாதங்களில் காணலாம். மார்ச் மாதம் 15-ம் தேதி இரவு எட்டு மணி வாக்கில் அதை கிழக்கு திசையில் அடிவானத்துக்குச் சற்று மேலே தெளிவாகக் காணலாம்.மக நட்சத்திரம் சூரியனை விட மூன்றரை மடங்கு பெரியது. அது பிரகாசமாகத் தெரிந்தாலும் பூமியிலிருந்து 77 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது ஒளி வேகத்தில் சென்றால் மக நட்சத்திரத்துக்குப் போய்ச் சேர 77 ஆண்டுகள் ஆகும். அது நடக்காத விஷயம்.மாசி மகம் ஒவ்வோர் ஆண்டும் வருவது. இது அல்லாமல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மகம் வரும். மகா மகத்தின்போது வானவியல் ரீதியில் ஒரு விசேஷம் உண்டு. அதாவது சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகிய அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதாவது ஆண்டுதோறும் வருகிற மாசி மகத்தில் காணப்படும் அணி வகுப்பில் வியாழன் கிரகமும் சேர்ந்து கொள்வதுதான் மகா மகம்.
சூரிய மண்டலத்தில் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவை அனைத்துமே சூரியனை வெவ்வேறு வட்டங்களில் சுற்றி வருகின்றன. இவற்றில் குறிப்பாக வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வகையில் அது ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசியில் இருக்கும்.(மொத்தம் 12 ராசிகள்). இப்படிச் சுற்றி வரும்போது அது சிம்ம ராசியில் ஓராண்டு இருக்கும். வியாழன் அப்படிச் சிம்ம ராசியில் இருக்கிற ஆண்டில் வரும் மாசி மகமே மகா மகம் எனக் கொண்டாடப்படுகிறது. அதாவது 2016-ம் ஆண்டு மாசி மகத்தின்போது மேலே குறிப்பிட்டபடி சூரியன், பூமி, சந்திரன், வியாழன், மக நட்சத்திரம் ஆகியவை ஒரே வரிசையில் அணிவகுத்து நிற்கும்.இதற்கு முன்னர் 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் மகா மகம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல பண்டிகைகள் இப்படி வானவியல் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கார்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சூரியன், பூமி, சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருவாதிரை பண்டிகை ஆகியவற்றுக்கும் வானவியல் அடிப்படை உண்டு. 

செ‌வ்வா‌ய் தோஷ‌ம்! சரியான விளக்கம்!நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்
சுக,போகங்களை வாரி வழங்கும் சுக்கிரதிசை யாருக்கு ...

 
பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர். சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!
பக்கத்து வீட்டு புதன் - விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய் - சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேகமும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வாயுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலைதூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும். சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம் ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!
மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒரு சேரக் கிடைப்பது அரிது ! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார் - மருமகளைப்போல.. ஒன்று சேராது ! லட்சுமியும் சரஸ்வதியும் மாமியார் - மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு ! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞான விருத்தா; வயோவிருத்தா...) இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.
அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும். செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்! மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக... நற்பலனாக சித்தரித்து விளக்கமளிக்கும் ஜோதிடம். கன்னியில் நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது ! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டியுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீசசேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
களத்திரகாரகனாகவும் விவாககாரனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்;. அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன். கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தானமாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4லும் 8லும் பாப கிரகம் இருக்க.. சதுரச்ர தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.
விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். காரகன் என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்குவான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10 ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்களோடும். அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்பமயமாக வாழலாம். கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன், ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால் சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான்.  இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால் புனர்பூவாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் செல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை; விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். புனர் பூ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.
தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2,7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன். ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு சுக்கிரம் எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத்தமே ! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக்காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண).... சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.

ஸ்ரீ ஸ்வர்ணகௌரி

ஸ்ரீ ஸ்வர்ணகௌரி


ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம்
ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம்
காமகோடீம் அஹம் வந்தே காமிதார்த்தப்ரதாயினீம்
திருவிளையாடற்புராணத்தில் கௌரி என்ற சிவபக்தைக்கு சிவபெருமான் அருளிய வரலாறு கூறப்படுகிறது. கௌரி என்ற பெண் சிவனடி யார் குடும்பத்தில் பிறந்தவள். ஆனால் அவள் ஒரு வைணவ பிரம்மாச்சாரியை மணக்க நேரி டுகிறது. எனவே புகுந்த வீட்டாரால் இவளது சிவவழிபாட்டிற்குத் தடை உண்டாகிறது. சிவனடியார்க்கு அமுது செய்வித்தலில் கௌரி மிகவும் விருப்பம் மிக்கவள். மகேசனுக்கு இது மிகவும் இன்பம் பயக்குமாதலின் இது ‘மஹேச்வர பூஜை’ எனப்படும் இதனையும் கௌரி சரிவர செய்ய முடியாமல் தவித்தாள்.
கௌரியின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவள் மட்டும் வீட்டில் தனி யாக இருந்த நேரத்தில் வயதான சிவனடி யாராக வந்து உணவு வேண்டினார். கௌரியும் தலைவாழை இலை விரித்து உணவு பரிமாறி அடிகளாரை உணவு அருந்த அழைத்தாள். சிவ னடியார் இவ்விதம் உணவருந்திக் கொண்டி ருக்கையில் கௌரியின் கணவன், அவனது தாய் தந்தையர் வருவது தூரத்தில் தெரிந்தது. உடனே கிழவரான சிவனடியார் கட்டிளம் குமரனாக மாறினார். கௌரி மேலும் பயந்தாள்.
உற்றார் அனைவரும் வீட்டினுள் நுழைந்த வுடன் கட்டிளம் குமரனாயிருந்த சிவனடியார் மிகவும் சிறிய குழந்தையாக மாறினார். உணவு உண்ட இலை, மற்றைய உணவுகள், பாத்தி ரங்கள் யாவுமே மாயமாய் மறைந்தன.
கௌரியின் புகுந்த வீட்டினர் குழந்தையைக் கண்டு ஐயுற்று கௌரியை ஏசினர். உண்மையை உணர்த்த வேண்டி சிவபெருமானும், உமை யம்மையுடன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து, கௌரியையும் ஒளி வடிவாய் ஏற்று முக்தி வழங்கினார். இது திருவிளையாடற்புராணம் கூறும் கதை.
இதே வரலாறே காசிபுராணம் போன்றவற் றில் சில மாறுதல்களுடன் காணப்படுகிறது. சிவ பெருமான் வேதங்களின் தத்துவத்தை தேவிக்கு உபதேசிக்கையில் கவனக்குறைவாக தேவி நடந்து கொண்டதால் ஈசனின் சாபத்திற்கு ஆளாகி கௌரி என்ற பெயரில் மனித வடிவமெடுத்து தவம் புரிந்து ஈசனை அடைந்ததாக வட மொழிப் புராணங்கள் கூறும்.
கௌரி என்றாலே தங்கநிறமுள்ளவள் என்று பொருள். பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும் அளிப்பவளாதலின் ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகிறாள். ஆடி மாதம் சுக்லபட்ச திருதியை ஸம்பத்கௌரி அல்லது ஸ்வர்ணகௌரி விரதநாள் ஆகும்.
இதேபோல ஆவணி சுக்லபட்ச சஷ்டீ தினம் மங்கள கௌரி விரததினமாகவும், புரட்டாசி கிருஷ்ணபட்ச ஸப்தமியும், சுக்ல பட்ச பஞ்சமி யும் கஜகௌரி விரததினமாகவும், புரட்டாசி அமாவாசை விருத்தி கௌரிக்கு உரியதாக வும், புரட்டாசி சுக்லபட்ச தசமி என்றும் விஜயதசமி தசரத லலிதா கௌரி விரதமாகவும், புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசியன்று துளசி கௌரி விரதமாகவும், ஐப்பசி அமாவாசையன்று கேதார ஈச்வரரை மகிழ்விக்கும் கேதார கௌரி விரதமாகவும், கார்த்திகை சுக்லபட்ச சதுர்த்தி பதரீகௌரி விரதமாகவும், பங்குனி சுக்ல பட்ச திருதியை ஸௌபாக்ய கௌரியை வழிபடுவதாகவும், சித்திரை சுக்லபட்ச சதுர்த்தி வரதாகவுரி விரதமாகவும், சித்திரை வளர்பிறை பஞ்சமி லாவண்ய கௌரிக்குரியதாயும், வைகாசிசுக்ல பட்ச பிரதமை புன்னாக கௌரி விரமாகவும், ஆனி சுக்லபட்ச திருதியை ரம்பா கௌரியை அனுஷ்டிக்கும் தினமாகவும் ஆவணி சுக்லபட்ச பஞ்சமி சமீப கௌரி விரதமாகவும் கொண் டாடப்படுதல் வேண்டும்.
ஸம்பத் கௌரி செல்வத்தை அளிப்பாள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்ய மும் அருள்வாள். கஜகவுரி வலிமையையும், விருத்தி கவுரி மக்கட்பேற்றையும், துளசி கௌரி விஷ்ணுவின் அருளையும், கேதார கௌரி ப்ரமேச்வரனின் அருளையும், லாவண்யகௌரி அழகையும், ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும், புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷங் களை நீக்குதலையும், சமீப கௌரியம்மை தன் ஸாமீப்யமான மோட்சத்தையும் அருளுவார்கள்.
வரதம் என்னும் அம்பாள் காட்டும் முத்திரை எல்லா அபீஷ்டமும் (வேண்டுவன எல்லாம்) தரும் அபயமுத்திரை தன்னை அண்டியவர்கட்கு சரணாகதி அளித்து பயம் ஆபத்து இவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கிறேன். நீ அஞ்ச வேண்டாம் என்று அம்பாள் அருளுவது ஆகும்.
எனவே, வரதா கௌரி பக்தர்கட்கு கேட்ட வரங்களை அளித்து அபயம் அளிப்பாள். ரம்பையினால் துதிக்கப் பெற்றவள் ரம்பாகவுரி. ‘ரம்பாதி வந்திதா’ என்று லலிதா சகஸ்ரம் கூறும், ரம்பா ஸேவித பாதுகா என்று பிரத்யங்கிரா ஸஹஸ்ர மும் இதை வலியுறுத்தும்.
ஸ்வர்ணகௌரி என்னும் ஸம்பத் கௌரியின் மூல மந்திரத்தை 16 பௌர்ணமி
16 அமாவாசை பன்னீராயிரம் முறை உணவில் உப்பு எதுவும் சேர்க்காமல் அலவணாமாக (லவணம் என்றால் உப்பு. அல வணம் என்றால் உப்பு இன்றி என்று பொருள்) ஜபித்தால் கோரிய பலன் கிட்டும்.
ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூலமந்திரத்திற்கு உரிய ரிஷி ஆனந்த பைரவர். அனுஷ்டுப் சந்தஸ், ஸம்பத் கௌரி தேவதை, ஹ்ராம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி, ஹ்ரூம்-கீலகம் (ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர-அங்கன்யாச கரநியாசங்கள்) மூல மந்திரம் பின் வருமாறு.
ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா
மேற்படி மூலமந்திரத்தை வில்வதளங்களால் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் ஹோமம் செய்யின் எல்லையற்ற செல்வமும், மஞ்சள் தூயப்பட்டால் செய்தால் தங்கம், நகைகள் சேர்க்கையும், ரோஜா மலரால் ஹோமம் செய்தால் கல்வியில் தேர்ச்சியும், சிவந்த புஷ்பங்களால் செய்தால் மக்கள் கவர்ச்சியும், வேம்பு எண்ணையால் செய்யின் சத்ருநாசமும், தேனில் எள் கலந்து ஹோமம் செய்தால் பித்ருதோஷம் நீங்குதலும், சந்தனக்கட்டையால் செய்ய வியாபார அபிவிருத்தியும் ஏற்படும். (ஹோமம் ரட்சை விவரங்களுக்கு எனக்கு போன் செய்க-9443175671).
சதாசிவசக்தி மனோன்மணி என்றும் மாஹேச்வர சக்தி கௌரி என்றும், ருத்ரசக்தி பவானி என்றும் மூவகையாக அழைக்கப்படு கிறது. இவையே யோகசக்தி, போகசக்தி, வீரசக்தி என்றும் மூவகையாகும். அம்பாள் அமர்ந்துள்ள பீடம் யோகசக்தி, அர்த்த மண்டபத்தில் அமைவது போகசக்தி. ஆலயத்தின் வெளியே மஹாமண்டபம் மற்றும் திருச்சுற்றில் (பிரகாரம்) அமைவது வீரசக்தி. முதலாம் ராஜராஜனின் தமக்கை குந்தவையின் கணவர் வந்திய தேவன் வாழ்ந்த இடம் தஞ்சை வல்லம். இங்கிருந்து ஆலக்குடி சாலையில் அழகிய பொழிலில் (பை-பாஸ் சமீபம்) ஏகவுரி அம்மன் அருள்பாலிக்கிறார். நேயர்கள் கண்டு அருள் பெற்று வருக.

ஸ்ரீ ரேணுகாதேவி வாழ்வியல் ஆராச்சி மையம் : ஆழ்மன சக்திகள்

ஸ்ரீ ரேணுகாதேவி வாழ்வியல் ஆராச்சி மையம் : ஆழ்மன சக்திகள்: ஆழ்மன சக்திகள் நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் ...

11 December 2012

சூரிய பகவான்

சூரிய பகவான்(செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன். கச்யபரின் புதல்வன், மிகவும் பிரகாசம் உடையவன், இருட்டின் பகைவன் எல்லாப் பாவங்களையும் அளிப்பவன், அப்பகலவனைப் பணிகிறேன்.)
பிரமன் – விஷ்ணு-சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும், கண்ணாரக் காணக் கொடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன்.
ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் எவன்? என்ற கேள்விக்கு யட்சப்பிரச்சன்த்தில் விடை தரப்படுகிறது. அவன் சூரியனே என்று.
கதிரவன் நிலைபெறும் இடம் எது? என்பது மற்றொரு கேள்வி. அதற்கு விடை- சத்யம் எனும் பிரமாதம் ரூபத்தில் கதிரவன் நிலைபெறுவான் என்பது.
ஆன்மான்வைப் பிரதிபலிப்பவன் சூரியன், ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்களில் சூரியனே அரசன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.
ஆதித்ய ஹிருதய மந்திரத்தால் இராமன், இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயணத்தின் கூற்று.
வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம், காயத்ரி, காயத்திரிக்கு உரியவன் கதிரவன்
சூரிய நமஸ்காரம் என்று ஒரு விசேட வழிபாடு முறை உண்டு. இதைச் செய்வதன் மூலம் சரீர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை.
ஜனன லக்னம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல்பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குக்காரகன் சூரியன், சுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்ரமாமா, சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒழி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியன்.
சூரியனே பிதுர்காரகன் என்பதை நாம் அறிவோம்.
சூரியனது குணம்சாத்வீக குணம் தாமிர உலோகத்திற்கு உரியவன். இருண்ட சிவப்பு அவனது நிறம். உடல் எலும்புக்கு உரியவன் கதிரோன் உடல்கார்ப்புச் சுவைக்குச் சூரியனது நிலையே உரைகல்.
கீழ்த்திசை கதிரவன் திக்கு ஆகும். சமஸ்கிருத மொழியில் திரந்த அறிவு சூரிய பலத்தால் உண்டாகும். இந்தச் சூரியன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் ராஜரீக வாழ்வு உண்டாகும். க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் சூரியன் என்பது ஜோதிடசாஸ்திர முடிவு.
சாம, தான, பேத, தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது. அக்னியை அதிதேவதையாகக் கொண்டவன் ஆதவன்.
ஆண்-பெண்-அலி என முப்பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ‘ஆதித்தன். ஓர் ஆண்மகனது ஜாதகத்தில் சுரியபலம் ஒங்கியிருந்தால் ஆண்மை என்னும் ஆற்றலில் அவன் சிறந்து விளங்கத் தடையிராது. ஒரு பெண்மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன சக்தி ஏற்படும். சிறந்த கற்புடையவளாகத் திகழ்வாள்.
சூரியனது சொந்த வீடு சிம்மம், உச்ச வீடு மேஷம், நீச வீடு துலாம், ரிஷபம், மகரம், கும்பம் மூன்றும் பகை வீடுகள்.
சூரியனுக்குச் சந்திரன், செவ்வாய், குறு மூவரும் நண்பர்கள் ஜாதகத்தில் தான் இருக்குமிடத்திலிருந்து 7-ம் இடத்தை முழுப்பார்வையாகப் பார்க்கும் ஆற்றல் கதிரவனுக்குண்டு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் என்று மூன்று நக்ஷத்திரங்களுக்கும் நாயகன் சூரியன்.
பாபக் கிரகங்களை ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்த சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பும் உண்டு என்பது நிச்சயம்.
தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்துக் கணிக்கப்படுகிற கணிதமுரைக்குச் சூரிய சித்தாந்தம் என்று பெயர். செளரமானம் என்பது இவ்வகைக் கணித அடிப்படையைக் கொண்டது.
வேதத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக் இருக்கின்ற நீ மகான! வெற்றியுடையவன் என்கிறது யஜீர் வேதம். எங்களைத் தீ வினைகளிலிருந்து மீட்பாயாக் என்று வேண்டுகோள் விடுக்கிறது சாமவேதம்.
நவக்கிரக் கீர்த்தனங்களை இயற்றிய தீக்ஷிதர். சூரியமூர்த்தே நமேச்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனே கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுய ஒழி படைத்தோன் என்றும் போற்றுகிறார் இவர்.
ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் எழு சந்தங்களை ஏழு குதிரைகாகக் கொண்டு பூட்டிப் பவனி வருகிறான் இந்த பகலவன்.
ஞாயிறு போற்றும்! என்று நாவார முழக்கி, அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டிபிரார்த்தனை செய்வோம். சூரியனார் கோவிலில் மூலவர் ஒளிவீசுகிறார். உஷாதேவி, சாயாதேவி ஆகிய தேவியருடன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதிதேவதை ருத்ரன் இவருக்குப் பிரத்யாதி தேவதை வாகனம் ஏழு குதிரைகள் பூட்டிய இரத்தத்தில் காணப்படுகிறார். இவரது ராசி சிம்மம்


சித்தர்கள், தேவர்கள், அசுரர்கள் வணங்கும் பரம்பொருள் (லிங்காஷ்டகம் 3)


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Friday, April 25, 2008

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2)


மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
மூட - ஏ மூடனே

ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் - அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு

வித்ருஷ்ணாம் மனஸி ஸத் புத்திம் குரு - சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.

யத் லபஸே நிஜ கர்ம உபாத்தம் வித்தம் - நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான்.

தேன வினோதய சித்தம் - அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

25 ஏப்ரல் 2008 அன்று சேர்த்த பகுதி:

பஜகோவிந்தம் பாடல்கள் எல்லாம் இல்லறத்தாரை விட துறவறத்தாருக்கே இன்னும் ஏற்றது என்பதோர் கருத்து எனக்கும் உண்டு. பல பாடல்களில் தெளிவாக அந்த அறிவுரை துறவிகளுக்கே என்று தெரியும். இந்தப் பாடலில் கருத்தோ எல்லோருக்கும் உரியதாகத் தெரிகிறது.

இந்தப் பாடலில் எடுத்தவுடனேயே மூடனே என்று தான் தொடங்குகிறார். அழியாத செல்வத்தை அடைய நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்க அழியும் செல்வத்தில் மனத்தைச் செலுத்துகிறாயே என்று கேட்கிறார். செய்யும் செயல்களுக்கு ஏற்ப பயன் கிடைக்கும். இங்கே கர்ம என்ற சொல்லுக்கு செயல்கள் என்றும் பொருள் கொள்ளலாம்; வினைப்பயன்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு வகையிலும் கிடைக்க வேண்டிய செல்வம் கிடைத்தே தீரும். கிடைப்பதை வைத்து மனத்தைத் திருப்தி படுத்திக் கொண்டு நிலையான செல்வத்தை அடைவதில் மனத்தைச் செலுத்து என்று சொல்கிறார் இந்த சுலோகத்தில்.

Tuesday, April 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 2


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் முதல் ஐந்து சுலோகங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆறாவது சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் 6

rasmimantham samudyantham dEvAsura namaskrutham
puujayasva vivasvantham bhAskaram bhuvanEsvaram 6


ரஸ்மிமந்தம் - இதமான பொன்னிறக் கதிர்களை உடையவன். ரஸ்மி என்றால் பொன்னிறக் கதிர்கள். ரஸ்மிமந்தம் என்றால் பொன்னிறக் கதிர்களை உடையவன்.

ஸமுத்யந்தம் - தினந்தோறும் தவறாமல் உதிப்பவன்; எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்.

தேவாசுர நமஸ்க்ருதம் - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருவதால் தேவர்களும் அசுரர்களும் இவனை வணங்குகிறார்கள். (தேவர்களும் அசுரர்களும் இரு வேறு இனத்தவர்கள் என்றொரு கருத்தாக்கம் இப்போது வழங்கி வருகிறது. அந்தக் கருத்தாக்கம் உண்மையெனில் இந்த சொற்றொடர் இரு இனத்தவர்களும் சூரியனை வணங்கிவந்தார்கள் என்பதைச் சுட்டுகிறது. உலகில் எல்லா இனங்களும் பகலவனைப் போற்றியிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவதும் அந்த எண்ணத்திற்குத் துணை செய்கிறது).

பூஜயஸ்வ - வணங்கத் தகுந்தவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்; கடமைக்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பவன். அதனால் எல்லோராலும் வணங்கப்படுபவன்; அப்படி வணங்கத் தகுந்தவன்.

விவஸ்வந்தம் - தன்னுடைய ஒளியால் சூரிய மண்டலத்தை வலம் வருபவன். பகலவனின் ஒளி வெகு தூரம் பாய்கிறது. அங்கெல்லாம் அவன் வலம் வருகிறான். அதனால் அவனுக்கு விவஸ்வான் என்று பெயர்.

பாஸ்கரம் - ஒளியை உண்டு பண்ணுபவன். உலகத்தில் தோன்றும் எல்லா சோதிகளும் இவனை அடிப்படையாகக் கொண்டவையே. பகலவனாகத் தானே ஒளிர்கிறான்; சந்திரனுக்குத் தன் ஒளியைத் தந்து ஒளிர வைக்கிறான். இவன் ஒளியால் தோன்றிய பொருட்களில் தீயை உண்டு பண்ணி தீயை ஒளிர வைக்கிறான்.அதனால் இவனே எல்லா ஒளிகளையும் உண்டுபண்ணுபவன். பாஸ்கரன்.

புவனேஸ்வரம் - இப்படி எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பதால் இவனே உலகங்களுக்கெல்லாம் தலைவன்.

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச தேஜஸ்வீ ரஸ்மிபாவன:
ஏச தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி: 7

sarva dEvAthmakO hyEsa tEjasvee rasmibhavana:
yEsa dEvAsura ganAn lOkAn pAti gabhastibhi: 7

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச - இவனே எல்லா தேவர்களாகவும் இருக்கிறான். ஸர்வ தேவ ஆத்மக: என்றால் 'எல்லா தேவர்களின் உருவமாக' என்று பொருள். ஹி என்றால் 'உறுதியாக இருக்கிறான்' என்று பொருள். ஏச என்றால் இவன்; இந்த புருஷன் என்று பொருள்.

தேஜஸ்வீ - ஒளிமயமானவன்; வீரன்.

ரஸ்மிபாவன: - தன்னுடைய இதமானப் பொன்னிறக் கதிர்களால் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.

ஏச - இவனே

தேவாசுர கணான் - தேவர்களின் கூட்டத்தையும் அசுரர்களின் கூட்டத்தையும்

லோகான் - எல்லா உலகங்களையும்

பாதி கபஸ்திபி: - தன்னுடைய கதிர்களால் பாதுகாக்கிறான்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: 8

yEsa brahmAcha vishnusca siva: skanda: prajApathi:
mahEndrO dhanada: kAlO yama: sOmO hyapAmpati: 8

ஏச - இவனே

ப்ரஹ்மா ச - படைக்கும் கடவுளாகிய பிரம்மனும், பெரிதிலும் பெரிதானவனும் (ப்ரஹம என்றால் பெரியது என்று பொருள்)

விஷ்ணுச்ச - காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும், எங்கும் நிறைந்திருப்பவனும் (விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்)

சிவ: - அழிக்கும் கடவுளாகிய சிவனும், மங்கல உருவானவனும் (சிவ என்றால் மங்கலம் என்று பொருள்)

ஸ்கந்த: - தேவ சேனையின் தலைவனான முருகனும், அனைத்தையும் இணைப்பவனும் (ஸ்கந்த என்றால் இணைப்பு என்று ஒரு பொருள்), அன்பிற்கும் அறிவிற்கும் அனைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும் (ஸ்கந்த என்றால் ஊறவைப்பவன் என்றும் ஒரு பொருள்)

ப்ரஜாபதி: - மக்களின் தலைவனும்

மஹேந்த்ரோ - தலைவர்களுக்கெல்லாம் தலைவனான தேவேந்திரனும்

தனத: - செல்வத்தை அருளும் குபேரனும்

காலோ - காலமும்

யம: - யமனும், தண்டித்து நல்வழிப்படுத்துபவனும் (யம என்றால் தண்டிப்பவன், நல்வழிப்படுத்துபவன் என்று பொருள்)

ஸோமோ - சந்திரனும்

ஹி - உறுதியாக

அபாம்பதி: - நீரின் தலைவனான வருணனும்

முதலில் மும்மூர்த்திகளாக இருப்பவன் சூரியன் என்று சொல்லிவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை எல்லாம் சொல்லி வருகிறார். மும்மூர்த்திகளுக்கு அடுத்து முருகனை முதலில் சொன்னதைப் பார்த்தால் வைதீக தெய்வங்களில் முருகனின் முதன்மை தெரியும். அகத்தியர் தன் குருவான முருகனை முதலில் சொன்னார் என்றாலும் சரியே.

பிரஜாபதி என்று பிரம்ம தேவரைத் தான் சொல்வார்கள். மும்மூர்த்திகளைச் சொல்லும் போதே பிரம்ம தேவரைச் சொல்லிவிட்டார் ஆகையால் மீண்டும் ப்ரஜாபதி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கணபதியை ப்ரம்மணஸ்பதி என்று தொடக்கக் கால மந்திரங்கள் சொல்வதால் இங்கே கணபதியைக் குறிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஸ்கந்தனைச் சொன்னவுடனே ப்ரஜாபதியைச் சொன்னதால் அது ப்ரம்மணஸ்பதியாகிய கணபதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதற்கடுத்து முறையே தேவர்களில் முதன்மையானவர்களான இந்திரன், குபேரன், காலன், யமன், யமன், ஸோமன், வருணன் ஆகியோர் கூறப்படுகிறார்கள்.

பிதரோ வஸவ: சாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மநு:
வாயு: வஹ்னி: ப்ரஜா ப்ராண: ருது கர்தா ப்ரபாகர: 9

pitarO vasava: sAdhyaa hyasvinau maruthO manu:
vAyu: vahni: prajA prAna: rutu karthA prabhAkara: 9

பிதரோ - பித்ரு தேவதைகளும், முன்னோர்களும்

வஸவ: - உலகத்தின் எல்லா இயற்கை செல்வங்களும் ஆன எட்டு வசுக்களும் (அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா என்ற இவர்களே எட்டு வசுக்கள்)

சாத்யா - என்றுமே கருமவசப்படாத நித்யர்களும் (அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்)

ஹி - உறுதியாக

அஸ்வினௌ - தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்களும்

மருதோ - காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்

மநு: - வைவஸ்வத மனுவும்

வாயு: - காற்று தேவனும்

அஹ்னி: - தீக்கடவுளும்

ப்ரஜா ப்ராண: - மக்களின் உயிர்க்காற்றும்

ருது கர்தா - பருவங்களை உண்டாக்குபவனும்

ப்ரபாகர: - ஒளியை உண்டாக்குபவனும், புகழைத்தருபவனும்

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸ்வர்ண சத்ருசோ பானு: ஹிரண்யரேதோ திவாகர: 10

Aditya: SavithA: Suurya: kaga: puushA gabhasthimAn
Suvarna sadrusO bAnu: hiranyarEtO divAkara: 10


ஆதித்ய: - அதிதியின் மகனும்

ஸவிதா - அறிவானவனும், அனைவருக்கும் தந்தையும்

ஸூர்ய: - புலன்களைச் செயலாற்றத் தூண்டுபவனும்

கக: - வானவெளியில் நடமாடுபவனும்

பூஷா - அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்

கபஸ்திமான் - ஒளிச்சுடர்களை உடையவனும்

ஸ்வர்ண சத்ருசோ - பொன்னிறத்தை உடையவனும்

பானு: - வட்டவடிவமானவனும்

ஹிரண்யரேதோ - அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்

திவாகர: - பகலொளியை உண்டாக்குபனும்

இவனே உறுதியாக பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தனும், பிரஜாபதியும், இந்திரனும், குபேரனும், காலமும், யமனும், ஸோமனும், வருணனும், பித்ரு தேவர்களும், வசுக்களும், சாத்யர்களும், அஸ்வினி தேவர்களும், மருத் தேவர்களும், மனுவும், வாயுவும், அக்னியும், பிராணனும் ஆக இருக்கிறான். இவனே பருவங்களையும், பகலொளியையும் உண்டாக்குபவன். இவன் பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, சூரியன், ககன், பூஷா, கபஸ்திமான், பானு என்று பலவாறானவை.
அடுத்த பகுதியில் பதினொன்றாம் சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

Saturday, April 19, 2008

ராவண தர்ப விநாசன லிங்கம் (லிங்காஷ்டகம் 2)தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

இந்தப் பகுதி வரை 8 அக்டோபர் 2006 அன்று லிங்காஷ்டகம் பதிவில் இடப்பட்டது. மேல் விளக்கங்களாக கீழே உள்ள பகுதி இன்று எழுதப்பட்டது.

***

ப்ரவர என்றால் மூத்தவர், முதன்மையானவர், தலைவர், சிறந்தவர் என்று ஒருவரைக் குறிக்கும் பல பொருளும் சில இடங்களில் பரம்பரை என்ற பொருளும் இருக்கின்றன. இங்கே இந்த பொருட்களில் (அர்த்தங்களில்) எதனை எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே. தேவர்களிலும் ரிஷிகளிலும் முதன்மையானவர்கள், மூத்தவர்கள், தலைவர்கள், சிறந்தவர்களால் வணங்கப்படும், தொழப்படும், அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே. தேவர்கள், ரிஷிகள் பரம்பரையினரால் அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே.

Friday, April 18, 2008

மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம் 1)


பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே - ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே - நாம் போகும் காலம் வரும் போது

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே - நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

18 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:

வயதில் மிகவும் மூத்த ஒரு முதியவர் 'டுக்ருங்கரணே' என்ற இலக்கணப்பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்ததை ஆதிசங்கரர் கண்டார். அதனைக் கண்ட போது 'மரண வாயிலில் இருக்கும் இவருக்கு இந்த இலக்கணப் பாடமா வந்து உதவப் போகிறது?' என்ற எண்ணம் தோன்றி ஆதிசங்கரர் இந்த 'பஜகோவிந்தம்' பனுவலைப் பாடினார் என்பது வரலாற்றுத் தொன்மம்.

Thursday, April 17, 2008

லிங்காஷ்டகம் - 1


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அடையாளம் என்று பொருள். சிவலிங்கம் என்றால் சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் என்று பொருள். ஆனால் பழம் என்றாலே வாழைப்பழம், பூ என்றாலே தாமரைப்பூ, ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. அதனால் இந்தப் பாடல் முழுவதும் சிவலிங்கம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.

Friday, April 11, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 1


உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை சேரலமாம் கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான வடமொழிப் பனுவல் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. அடியேன் தினந்தோறும் காலையில் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரம் இது. (இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லாவிட்டாலும் நினைவிற்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்). ஒன்பது முறை தொடர்ந்து சொல்லி நினைத்த காரியங்களில் வெற்றி பெற்றதும் உண்டு.

பகலவன் இராசிச் சக்கரத்தின் கடைசி இராசியான மீனராசியிலிருந்து (பங்குனி) முதல் இராசியான மேஷராசிக்குச் (சித்திரை) செல்லும் இந்த நேரத்தில், இராமபிரானின் திருவவதார நன்னாள் வருகின்ற இந்த நேரத்தில் இருவர் தொடர்பும் உடைய இந்த வடமொழிப் பனுவலைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடுகை தொடங்கி இனி வரும் இடுகைகளில் சூரிய தேவனை முழுமுதற்கடவுளாகப் போற்றும் இந்தப் பனுவலைப் பொருளுடன் பார்ப்போம்.

இராம இராவண யுத்தத்தின் தொடக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இது. முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1

tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1


ததோ - அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் - போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் - போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா - முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் - போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா - இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்

போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.

தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2

daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2

த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் - போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச - தேவர்களுடனே
சம ஆகம்ய - வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: - ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்

தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3

rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3


ராம ராம மஹாபாஹோ - பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் - எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி - போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் - காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் - (அந்த) இரகசியத்தை
ச்ருணு - கேள்
வத்ஸ - குழந்தாய்

தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4

Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4


ஆதித்ய ஹ்ருதயம் - (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் - எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் - வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது

புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5

sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5


ஸர்வ மங்கள் மாங்கல்யம் - மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் - எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் - கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் - வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் - சிறந்தது

இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.

அடுத்த சுலோகத்திலிருந்து சூரியனைப் போற்றத் தொடங்குகிறார்.

Tuesday, April 8, 2008

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்...


ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே


shadAnanam chandana libitha ghAthram
mahOrasam dhivya mayuura vAhanam
rudhrasya suunum suralOka nAtham
brahmanya dEvam saranam prabhathyE
அண்ணனை வணங்கியபிறகு தம்பியை வணங்குவது தானே முறை. அதற்குப் பின்னர் யாரை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம். அதனால் தான் ஆனைமுகனை வணங்கிவிட்டு இப்போது ஆறுமுகனை வணங்குகிறோம்.

ஷடானனம் - ஷட் + ஆனனம் - ஆறு முகங்கள் கொண்டவரும்

சந்தன லிபித காத்ரம் - சந்தனம் பூசிய திருமேனியைக் கொண்டவரும்

மஹோரசம் - பெரும் இரசிகரும் (கலைகளை எல்லாம் இரசிப்பவரும் வளர்ப்பவரும் அருள்பவரும்)

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீக மயில் வாகனம் கொண்டவரும்

ருத்ரஸ்ய ஸூனும் - ருத்ரனாகிய சிவபெருமானின் திருமகனும்

சுரலோக நாதம் - தேவலோகத்தின் தலைவனும் (தேவசேனாபதியும்)

ப்ரம்ஹண்ய தேவம் - பரம்பொருள் ஆனவரும் ஆன சுப்ரமண்ய தேவரின்

சரணம் ப்ரபத்யே - திருவடிகளைத் தஞ்சமடைகிறேன்

எடுத்தவுடனேயே திருமுருகனின் தனிச்சிறப்பான ஆறுமுகங்களைக் கூறுகிறது இந்த சுலோகம். ஆனைமுகனை கஜானனம் என்றும் ஐந்துமுகனான சிவபெருமானை பஞ்சானனம் என்றும் நான்முகனைச் சதுரானனம் என்றும் சொல்லிக் கேட்டிருப்போம். அவற்றை நினைவில் கொண்டால் ஷட் + ஆனனம் என்ற இந்தச் சொல்லையும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

இன்றைக்கும் ஆறுமுகனடியார்கள் காவடி எடுக்கும் போதும் முடிகாணிக்கை செலுத்திய பின்னரும் தங்கள் மேனிகளில் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். சேந்தனின் திருமேனியிலும் அதே சந்தனம் இருக்கின்றது போலும். அதனால் அதனை அடுத்தாகச் சொல்கிறது சுலோகம். ஷடானனம் சந்தன லிபித காத்ரம். நோயற்ற உடலைக் கொண்டவர்களை திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்களே - அதனை நினைவில் கொண்டால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் காத்ரம் என்ற சொல்லின் பொருள் மனத்தில் நிற்கும். லிபி என்றால் எழுத்து என்று பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தனம் எழுதிய திருமேனி என்பதற்கு இங்கே லிபித காத்ரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலைகளை அருள்பவனும் அவற்றைக் காப்பவனும் ஆன திருமுருகன் மஹா ரசிகனாகவும் இருக்கத் தானே வேண்டும். அதனால் அவனை மஹோரசம் என்று போற்றுகிறது இந்த சுலோகம்.

கலைகளைச் சொன்னவுடனே நாதத்தையும் விந்துவையும் சொல்ல வேண்டுமே? நாத தத்துவமான மயிலை வாகனமாகக் கொண்டவன் என்று உடனே போற்றுகிறது இந்த சுலோகம்.

ருத்திரனின் நெற்றிக்கண்களிலிருந்து தோன்றிய திருமுருகனை திருக்குமரன் என்று அழைக்கும் விதமான ருத்ரஸ்ய ஸூனும் என்கிறது அடுத்த வரி.

தேவர்களின் படைகளுக்குத் தளபதியான தேவசேனாபதியே தேவலோகத்தைக் காத்து அருள்பவன் என்பதால் தேவலோகத்தின் தலைவன் என்கிறது அடுத்த பதம். தேவசேனாபதி என்பது இரண்டு விதமாகப் பிரிந்து அழகான பொருளைத் தருவதைக் காணலாம். தேவசேனாவின் பதி என்று ஒரு பொருளும் தேவர்களின் சேனாபதி என்று ஒரு பொருளும் அமைவது அழகு.

இப்படியெல்லாம் போற்றப்படும் சுப்ரமண்ய தேவரை அடியேன் தஞ்சமாக அடைகிறேன் என்று இறுதியில் சரணாகதி செய்யப்படுகிறது. தஞ்சம் அவனன்றிப் பிறிதில்லை.

Wednesday, April 2, 2008

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே


suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyAyEth sarva viknObha saanthayE
கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. பொதுவாக இந்தச் சுலோகம் விநாயகரை வணங்கும் சுலோகமாகக் கருதப்படுகின்றது.

சுக்லாம் பரதரம் என்று இந்த சுலோகத்தின் தொடக்கத்தில் இருக்கும் சொற்றொடரை இரு சொற்களாகப் பிரித்து உச்சரிப்பது பொருளினை உணர்வதற்குத் தடையாக அமைகிறதோ என்றொரு எண்ணம் உண்டு. சுக்ல அம்பர தரம் என்ற மூன்று சொற்களின் கூட்டுச் சொல் சுக்லாம்பரதரம் என்பது. சுக்லாம் என்பதற்கும் பரதரம் என்பதற்கும் இடையில் இடைவெளி விடாமல் பலுக்கினால் (உச்சரித்தால்) பொருள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சுலோகம் விஷ்ணுவிற்கான சுலோகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஷ்ணும் என்றும் ப்ரசன்ன வதனம் என்றும் இருப்பதால் யானை முகனான கணேசனுக்கு உரிய சுலோகம் இல்லை இது என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இந்த சுலோகத்தில் எப்படி கணேசனுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதே போல் விஷ்ணுவிற்கும் பொருந்தாதது என்று சொல்லத் தக்க சில சொற்களும் இருக்கின்றன. இங்கே இந்த சுலோகத்திற்கு இரண்டு வகையிலும் பொருள் தருகிறேன். எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகர்:சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

விஷ்ணு:

சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

Tuesday, April 1, 2008

ஸ்தோத்ரமாலா - முதல் வணக்கம்பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக இருந்து வரும் ஆசை இது. வடமொழிப் பனுவல்களுக்காக ஒரு தனிப்பதிவு தொடங்கி இயன்ற போதெல்லாம் வடமொழிப் பனுவல்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும் என்று. ஆனைமுகனை வணங்கி இன்று தொடங்கிவிட்டேன். இனி அவன் செயல்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே


muushika vaakana mOthaka hastha
saamara karna vilambitha suuthra
vaamana ruupa mahEsvara puthra
vigna vinaasaka paatha namasthE

மூஷிக வாகன - மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த - கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண - விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர - கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப - குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர - மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக - தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே - திருப்பாதங்களை வணங்குகிறேன்.