youtube

13 February 2016

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய

சிவமந்திரம் ஓம் ஒங்கராய நமசிவாய ,,ஒம்நகாராயநமசிவாய ,,ஒம்மகாராய நமசிவாய ,,,ஒம்சிகாராய நமசிவா,,ய ,,,,ஓம்வகாராய நமசிவாய ,ஒம்யகாராய நமசிவாய ஒம்நம ,ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய
சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா ......இந்த மந்திரம் மிகசக்தி வாய்ந்தது ,எல்லா தெய்வங்களும் நமக்கு வசமாகும் ,சகல துன்பங்களும் இல்லமல் போகும் ,பிறர் செய்யும் கெட்ட மந்திரங்கல் நில்லாது ஓடும் ..சொல்லிபாருங்கள் பலன் உண்டு
நலமே பெற்று ,,,வளமாய் வாழ்க

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல;

உங்கள் ஊர் அல்லது அருகாமையில்  பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.

"ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்டராய தீமஹி
தந்நோ லக்ஷ்மிநரசிம்ம ஹ ப்ரசோதயாத்...!

12 February 2016

அமெரிக்காவில் திருவண்ணாமலை

அமெரிக்காவில் திருவண்ணாமலை

அமெரிக்காவில் திருவண்ணாமலை

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன. தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பை காட்டி திருத்தினார். பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம். இவர் தனக்கு வந்த புற்று நோயை குனப்படுத்த இவர் தனது தபோ வலிமையை பயன்படுத்த வில்லை. எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.

இந்த துறவியின் உத்தரவை தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல் தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள். அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை. இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கபோவதும் இல்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை. மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்த துறவி இருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.

இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும். தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல் வாதி இவரை அண்ணா ந்து பார்த்து கேலி செய்தார். அந்த அரசியல் வாதி ஒண்டரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனி கதை.

நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னை பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள். அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

ரமண மஹ ரிஷிக்கு எதனால் புற்று நோய் வந்தது என்பதை பற்றி ஓஷோ ரஜனீஷ் என்ன சொல்கிறார் என்றால்.
ஒரு ஞானிக்கு ஏற்படும் துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது உடலுக்கே ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்கு முன் துலங்கிய கர்ம பலன்களின் தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின் இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன். நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால் அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன் விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ இந்தப் பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன் அல்லவா ? அந்தக் கனவுக் கனிகள் பழுத்து உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம பலங்களின் தொடர்ச்சி என்கிறார் ஓஷோ.

பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தை பற்றியும் ரமணருக்கு தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார். இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்று கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர். திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர். ரமணர் சில நொடிகள் கண் மூடி பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார்.

திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது. தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano. திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை முதற்கொண்டு அந்த அமெரிக்க தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான் அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தமிழ் நாட்டை தாண்டாத இவருக்கு கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது.

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள். மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா. இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு வர காரணம் அது தான். புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னிய

முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் முருகனின் திருவுருவங்கள்:

முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள் முருகனின் திருவுருவங்கள்:

முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்
முருகனின் திருவுருவங்கள்:

1. சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,

11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:

1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.

10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

18. “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

21. முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

27. பிரம்மசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல் ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

49. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று சொல்லப்படுகின்றது.

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்

பழ‌னி முரு க‌ன் அவதார‌ம் உண‌ர்‌த்துவது எ‌ன்ன

பழ‌னி முரு க‌ன் அவதார‌ம் உண‌ர்‌த்துவது எ‌ன்ன

பழ‌னி முரு
க‌ன் அவதார‌ம் உண‌ர்‌த்துவது எ‌ன்ன
அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்? அப்பா, அம்மா என்பது கூட மாயைதான் என்பதை உணர்த்தக்கூடிய இடம் அது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம் அல்லவா. அந்த மாதா, பிதா என்பது கூட பொய்தான். அது கூட ஒரு மாயைதான் என்பதை உணர்த்துவதற்காக உருவான அவதாரம்தான் பழனி அவதாரம்.

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை. தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம். தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.

அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி

அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி

* சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை  நல்லெண்ணெய்   விட்டுச்சாப்பிட்டால்   நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர்  இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே  பதிவாகிவிடும்.

• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.  எனவே,  குடும்பத்தில் கடலை எண்ணெயைப்  பயன்படுத்துவதை   பெருமளவு  குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே  பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால்  துர்தேவதைகள் உடலுக்குள்  புகுந்துவிடும்.  தொடர்ந்து பாமாயில்  பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்)  தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.  குடலிலும், வாயிலும்  உள்ள புண்களை ஆற்றும்.

• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான  அன்ன தானம் ஆகும்.

• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை  சேர்க்கையால் செய்யப்பட்ட  மூலிகைப்புகை   போடுவது நல்லது.

•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.

மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை  நீக்கும்.

• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய்  சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம்  கொசு அண்டுவதில்லை.

•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித்  தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும்.

ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச்  செழிப்பை அடைவீர்கள்.

• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி,  கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக்  கூடாது.  அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர்   வளமடைவார்.

. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது  ஐதீகம்.

•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின்
இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை  எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால்  பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி  இருக்கிறது.

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை  போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை  பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு  தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செ

சங்க தாரணி யட்சிணி தேவி மூல மந்தரம்

ரீ சங்க தாரணி யட்சிணி தேவி மூல மந்தரம்
    ஸ்ரீ சங்க தாரணி யட்சிணி தேவி   மூல  மந்தரம்       ஓம் க்லீம்    நமோ பகவதே அரவிந்தேஸ்ரீ சங்க தாரணி திரீகாலம் வசம்  மமவசம் குருகுரு சுவாஹா 

மகான் ஸ்ரீராகவேந்திரரின் மகிமை!

மகான் ஸ்ரீராகவேந்திரரின் மகிமை!
ஒரு முறை, தஞ்சாவூரில் கடுமையான வறட்சி ஏற்பட, மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளை வேண்டி நின்றார் தஞ்சை மன்னர். தனக்கு சந்நியாசம் தந்த நகரமான தஞ்சையில் எழுந்தருளினார் ஸ்ரீராகவேந்திரர்.
மகானின் திருப்பாதங்கள் பட்டதுமே மண்ணும் வளமாகும்; அவர் விரும்பினால் இயற்கையும் வளைந்து கொடுக்கும் என்பதற்குச் சான்றாக... மழை பொத்துக்கொண்டு ஊற்றியது, வறண்டிருந்த மண் வளமானது. பஞ்சம் நீங்கிட ஸ்ரீராகவேந்திரர் செய்த யாகத்தால், காய்ந்து கிடந்த உணவுக் கிடங்கும் நிரம்பத் தொடங்கியது.
மழை தருவித்து, மக்களைக் காத்த மகானுக்கு சிறப்பான பரிசு தர விரும்பினான், தஞ்சை மன்னன். குரு ஸ்ரீராகவேந்திரரின் பாதம் பணிந்து வணங்கி, விலை உயர்ந்த நவரத்தின மாலை ஒன்றைச் சமர்ப்பித்தான். மகான்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் என்றுமே மதிப்பளிப்பதில்லை அல்லவா? மகான் ஸ்ரீராகவேந்திரர
ும் அந்த மாலையை, தனக்கு முன்பிருந்த அக்னி குண்டத்தில் சேர்த்தார்.
இதனைக் கண்டு பதறிய மன்னன், ''குருவே, அது விலை மதிப்புமிக்க நவரத்தின மாலை... அதனை இப்படி அக்னியில் போட்டுவிட்டீரே" என்று கேட்டான். புன்னகைத்த மகான், அக்னி பகவானை வேண்டினார். நவரத்தின மாலை தீயிலிருந்து புதுப் பொலிவுடன் மீண்டும் அவர் கைகளுக்கு வந்தது.
''இந்தா வைத்துக்கொள்" என குரு ஸ்ரீராகவேந்திரர், மாலையினை மன்னனிடம் அளித்தார். தனது தவறை உணர்ந்த மன்னன் குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி, தன் அறியாமையை மன்னிக்கும்படி வேண்டினான். மன்னிப்புக் கேட்பவர்களை மன்னிப்பது தான், மகான்களின் இயல்பு அல்லவா? மகான் ஸ்ரீராகவேந்திரரும் மன்னனை மன்னித்தார். அந்த நவரத்ன மாலையினை, மூலராமருக்கு அணிவித்து பூஜைகளைத் தொடர்ந்தாராம்.

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம்

கருவறையில் அமைக்கப்படும் மூலவர் பற்றி காணலாம். மனிதனை இறைவனோடு தொடர்பு கொள்ளச் செய்வதே மூலவர் தான். மூலவருக்குரிய சிலையை விஞ்ஞான அடிப்படையில் வடிவமைக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
இது தொடர்பான குறிப்புகளை அவர்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆலயங்களில் உள்ள மூலமூர்த்தி சிலா விக்கிரகம், சுதை மூர்த்தி, தாருக மூர்த்தி என்று மூன்று வகைப்படும், சிலா விக்கிரகங்கள் என்பவை கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கும். சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகை கலவைகளை சேர்த்து, அதனுடன் தேன், சுண்ணாம்பு கலந்து உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
தாருக மூர்த்தி என்பது மரத்தினால் செய்யப்பட்ட மூல அமைப்பாக இருக்கும். இத்தகைய மூலவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான ஆலயங்களில் காணலாம். ஆனால் 99 சதவீத மூலவர் சிலைகள் கருங்கல்லில்தான் இருக்கும். ஆதிகாலத்தில் ஆலயங்கள் தோன்றும் முன்பே மூலவர்களை வடிவமைக்கும் கலையை தமிழர்கள் கற்றுக் கொண்டு விட்டனர்.
மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த அவர்களுக்கு எங்கு பார்த்தாலும் கருங்கற்களைத் தான் காண முடிந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அந்த கற்களையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அந்த கற்களில் இறை வடிவங்களை செதுக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு தான் கருங்கல்லில் பஞ்சபூதங்களும் இருக்கும் அறிவியல் உண்மையை அறிந்தனர்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று – இந்த ஐந்தும் தான் பஞ்சபூதங்கள். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உராய்ந்தால் தீ வரும். எனவே தீ கருங்கல்லில் உள்ளது. கருங்கற்கள் பொடி, பொடியாக நொறுங்கும் போது மண்ணாக மாறுகிறது. இது நிலத்தை காட்டுகிறது. மலைக்காடுகளில் பார்த்தால் கல்லுக்குள் இருந்து தான் தண்ணீர் ஈரமாக கசிந்து வெளியில் வரும்.
ஆக கல்லுக்குள் தண்ணீரும் இருக்கிறது. கல்லுக்குள் தேரை உள்ளிட்ட உயிரினங்கள் வாழும். இதன் மூலம் கருங்கல்லில் ஆகாயமான வெற்றிடமும், சுவாசிக்க காற்றும் இருப்பது உறுதியாகிறது. இப்பிரபஞ்சத்தை காக்கும் கடவுளுக்குரிய மூலவர் சிலை, பஞ்சபூத சேர்க்கையோடு தொடர்பு கொண்டதாக இருத்தல் வேண்டும் என்று சிந்தித்த தமிழர்களுக்கு கருங்கல் ஒன்றே அவர்களின் தேர்வாக இருந்தது.
எனவே கருங்கற்களில் மூலவர் விக்கிரங்களை செய்தால், அவற்றில் மிக எளிதாக இறை சக்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் அலைகளை பெருக்க செய்து பயன்பெற முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தான் கருவறைகளில் மூலவர் விக்கிரகங்கள் கல்லால் வடிவமைக்கப்பட்டவைகளாக அமைந்தன. அதே சமயத்தில் வீதி உலா செல்லும் உற்சவர் மூர்த்தியை பஞ்சலோகங்களால் செய்தனர்.
வெளி இடங்களில் உள்ள சக்தியை கிரஹித்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உற்சவர் சிலைகள் உலோகத்தில் செய்யப்பட்டன. நாளடைவில் மூல விக்கிரகங்களுக் குரிய கற்களை கண்டுபிடித்து தேர்வு செய்து, அதில் சிலை செய்து, அதற்கு இறை சக்தி ஏற்படுத்தும் நுட்பத்தையும், சூட்சமத்தையும் தமிழர்கள் தெரிந்து கொண்டனர்.
எனவே, ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்கள், சிற்ப சிறப்புகள் மட்டுமின்றி, அதன் பின்னணியில் இறை ஆற்றலை வாரி வழங்கும் தன்மைகளை நிரம்ப கொண்டுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா கருங்கல்லும் இறை ஆற்றலை வெளிப்படுத்தாது.
கருங்கல்லில் சூரிய காந்தக்கல், சந்திர காந்த கல், அலிக்கல் என்று மூன்று வகைகள் உள்ளன. சூரிய காந்த கற்கள் எப்போதும் சூடாக இருக்கும். இந்த வகை கல்லில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கடவுள்களான சிவன், வீரபத்திரர், துர்க்கை, காளி போன்ற இறை வடிவங்களை செதுக்குவார்கள். சந்திரகாந்த கல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
எனவே இந்த வகைக் கல்லில் பெருமாள், புத்தர், தட்சிணாமூர்த்தி போன்ற கடவுள்களின் வடிவங்களை செய்வார்கள். அலிக்கல் என்பது சூடாகவும் இருக்காது. குளிர்ச்சியாகவும் இருக்காது. கல்லைத் தட்டும் போது ஓசையும் வெளியில் வராது. இத்தகைய கற்களில் எந்த மூலவர் சிலையையும் செய்ய மாட்டார்கள். மூலவர்கள் சிலைகள் பொதுவாக நிற்கும் நிலை (ஸ்தானகம்) அமர்ந்திருப்பது (ஆசனம்) படுத்து இருப்பது (சயனக் கோலம்) என்று மூன்று வகையாக தயாரிப்பார்கள்.
இந்த மூவகை மூலவர்களை எவ்வளவு உயரம், எவ்வளவு அகலத்தில் படைக்க வேண்டும் என்பதற்கு சிற்ப சாஸ்திர விதிகள் உள்ளன. சிற்ப கலையில் நவதாலம் என்று ஒரு அமைப்பு உண்டு. இதன்படி மூலவர் சிலை முகத்தின் நீளத்தை போல 9 மடங்கு சிலையின் மொத்த உயரம் இருக்க வேண்டும் என்பது அந்த அமைப்புக்குரிய விதியாகும்.
இப்படி அனைத்து விதிகளுடன், சிற்பி தன் கைத் திறமையையும் காட்டும் போது தான் பிரமாதமான மூலவர் சிலை கிடைக்கும். அதற்காக கல்லே கடவுள் ஆகிவிடாது. கல்லிலும் கடவுள் இருக்கிறார் என்பதையே பிரபஞ்ச உண்மை நமக்கு காட்டுகிறது. பிறகு எப்படி கல் முழுமையான இறை சக்தியை பெறுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.
சிற்பி செதுக்கும் மூலவர் சிலையை பல வகையான தானியங்கள் ஒவ்வொன்றிலும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வைப்பார்கள். தண்ணீருக்குள்ளும் அந்த சிலை ஒரு மண்டலம் வைக்கப்படும். இதன் மூலம் அந்த சிலை, காஸ்மிக் கதிர் சக்தி கொண்ட பிரபஞ்ச சக்தியை மிக, மிக எளிதாக பெற்று விடும்.
இதையடுத்து சிலைக்கு கண் திறக்கப்படும். இதற்கு சில நியதி உள்ளது. கண் திறக்க முதலில் ‘ரத்ன நியாசம்’ எனப்படும் ஆராதனை செய்வார்கள். பிறகு சிலையின் தலை, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்களில் நவரத்தினங்களை வைத்து பூஜை செய்வார்கள். பால் நிவேதனம் செய்து தூப, தீப ஆராதனை காட்டுவார்கள்.
பின்னர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து கலச பூஜை நடத்துவார்கள். கருவறையில் எந்த மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளாரே அதற்கான மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்வார்கள். பின்னர் ஸ்தபதி விராட் விஸ்வ பிரம்மனை நினைத்துக் கொண்டு, தங்க ஊசி மூலம் சிலை கண்ணைத் திறப்பார்கள்.
முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறக்க வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்படும் போது ஸ்தபதியை தவிர வேறு யாரும் அருகில் இருக்கக் கூடாது. நான்கு புறமும் திரையிட்டு, திரை உள்ளேயே தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். சிலைக்கு கண்கள் திறக்கப்பட்டதும், முதலில் கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், சன்னியாசி, வேதவிற்பனர் என்ற வரிசையில் மூலவர் பார்வைபடும்படி செய்ய வேண்டும்.
இறுதியில் தான் பக்தர்கள் மூலவர் பார்வையில் படுதல் வேண்டும். ஆக கருவறையில் மூலவர் சிலையை நிலை நிறுத்துவதில் இவ்வளவு நியதிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை நம் முன்னோர்கள் 4 வகையாக பிரித்து வைத்துள்ளனர். தேவர்கள் செய்யும் பிரதிஷ்டைக்கு தைவீகம் என்று பெயர்.
அசுரர்கள் பிரதிஷ்டை செய்தால் அதை அசுரம் என்பார்கள். ராஜாக்களும், பக்தர்களும் முயன்று மூலவரை பிரதிஷ்டை செய்தால் அதற்கு மானுஷம் என்று பெயர். ரிஷிகள் செய்யும் பிரதிஷ்டைக்கு ஆர்ஷம் என்று பெயர். இவற்றின் தத்தவத்தை உணர்ந்ததால்தான் ஆதிசங்கரர், ராமானுஜர், நால்வர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வாரியார் போன்ற ஞானிகள் மூலவர் சிலையை கண்டதும் பரவசமாகி அங்கு இறை ஒளியை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது புரியாமல் கல்லை வழிபடுபவர்கள் மூடர்கள் என்று நாத்திகவாதிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். ‘‘பஞ்ச சுத்தி செய்து நின்னை விளங்கும் பராபரமே...’’–என்ற நம் முன்னோர் வாக்குக்கு ஏற்ப கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட மூலவரை நாம் மனம் ஒன்றி வழிபட, வழிபட நமக்குள் ஞானம் விஞ்சும் என்பதை மறந்து விடக்கூடாது.

நெற்றிக் கண்

நெற்றிக் கண் என்று ஒன்று உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன் என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை சோதிப்பதற்காக வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும், இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட் புராணக்கதை என்றும் கூறும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம் நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று கூறினால் அதற்கும் ஏதாவது வாதம் வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே விளங்கிக் கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்) பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி மிகவும் வெப்பமான காலத்திலும் கருப்புச்சட்டையை அணிவது எந்த பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன் சிறப்பை மெல்ல மெல்ல இப்போது தான் சில மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள் ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில கொள்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள் உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய் என்றோ மூட நம்பிக்கை என்றோ கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம் பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும் கடவுளை அடையும் வழியயும்தான் கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின் திர�

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் சீடகளுக்கு

ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் சீடகளுக்கு பாஷ்ய பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ சங்கரரின் தாயார் சிவலோக ப்ராப்தி அடைந்த சமாசாரம் அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது. அவர் கண்களிலிருந்து தாமாகவே கண்ணீர் சொரிந்தது. கண்ணீர் தாரை தானாகவே வழிந்ததாகச் சொல்வார்கள்.

அதுபோல் ஸ்ரீ பெரியவாளுக்கு பைங்கனாடு ப்ரும்மஸ்ரீ கணபதி ஸாஸ்த்ரிகள் சிறு வயதில் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸாஸ்த்ரிகள்விண்ணுலகம் ஏகிய செய்தி ஸ்ரீமடத்துக்குத் தெரிய வந்தது. அதைக் கேட்டதும் பெரியவா கண்களிலிருந்து தாரையாக கண்ணீர் வழிந்தது.

ஸ்ரீபெரியவாளுக்கு பண்டிதர்களிடம் அசாத்யமான ப்ரியம் இருந்ததுடன் , தன் குருவிடம் அளவில்லாத பக்தி இருந்தது தான் அதன் காரணம். அதனால்தான் சன்னியாசிகள் எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படக்கூடாது என்ற விதியை அந்த ஒரு சில நொடிகள் ஒதுக்கி வைத்தார் போலும்.

ஸ்ரீபெரியவாளை ஈன்றெடுத்த அன்னை மறைந்தபோது கூட நீராடல், சில மணித்துளிகள் மௌனம், உபவாசம் நிகழ்ந்ததே அன்றி கண்ணீர் தோன்றவில்லை!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு சமம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது. ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

மாசி மகத்திற்கு சக்தி அதிகம்

மாசி மகத்திற்கு சக்தி அதிகம்


மாசி மகத்திற்கு சக்தி அதிகம் என்பதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே புண்ணிய நதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, காவேரி, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் உணர்ந்தார்கள்.

ஒருவருடைய கஷ்டத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் கேட்பவர்களுக்கும் அந்த கஷ்டம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள் கூறுவார்கள், “ஒருவரை பார்த்து “ஐயோ பாவம்” என்றால், சொல்பவர்களுக்கு ஈரேழு ஜென்மபாவங்கள் தேடி வரும்.  அந்த அளவில் சக்திபடைத்து துஷ்ட தேவதை. துஷ்டதேவதைதான் கஷ்டத்தை தருவது. இந்த துஷ்ட தேவதை மனிதர்களிடம் மட்டும் தன் வேலையை காட்டுவதில்லை. பலருடைய பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதிகளிடத்திலும் தன் வேலையை காட்டியது. ஆம். பலருடைய கர்மாக்களை புண்ணிய நதிகள் நீக்கியதால், நதி தேவதைகளின் உடல் கருமையாக மாறி கஷ்டத்திற்கு ஆளானார்கள். இந்த நிலை தீர என்ன செய்ய வேண்டும்? என்று சிவபெருமானிடம் கேட்டார்கள்.

அதற்கு இறைவன், “நீங்கள் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கும்பகோணம் மகா மகக்குளத்தில் நீராடினால், உங்கள் பாவங்கள் நீங்கும்.” என்றார்.

சர்வேஸ்வரன் கூறியது போல், மகாமககுளத்தில் நீராடி தங்களுடைய பாவத்தை போக்கிகொண்டார்கள் அந்த புண்ணியநதி தேவதைகள்.

பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான், “எந்த புண்ணிய நதிகரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்.” என்கிறது சாஸ்திரம்.

புண்ணிய நதியில் நீராடினால் கர்மபயன் நீங�

11 February 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12

மேற்கண்ட தெய்வங்களில் ஸ்ரீ வாராஹி அன்னையையே யாம் உபசிக்கும்படி தெரிவித்துகொள்கிறோம். காரணம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பெண் குணம் கொண்டவர். யட்சணி அன்னையும் பெண் குணம் கொண்டவள், ஸ்ரீ வாராஹி அன்னையும் பென்மையானவர் இவர்கள் மூவருமே சம்சார பிராப்ததை கொடுத்து, சந்தோசங்களையும் கொடுத்து தெய்வ வாக்கையும் கொடுத்து அருள்புரிவார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ கால பைரவரும் அவ்வாறு இல்லை சன்யாசம் இருப்பவருக்கே கெடுதல் இல்லாமல் உதவுவார்கள். எனவே மேற்கண்ட பெண் தத்துவ தெய்வங்களையே உபாசியுங்கள் இதில் நிலைகளே முக்கியம். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி உபாசனை முதல்நிலை, ஸ்ரீ வாரஹி இரண்டாம் நிலை, ஸ்ரீ யட்சணி மூன்றாம் நிலை இந்த நிலைமைகளை மாற்றக்கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக உபாசனை செய்யுங்கள்.
ஒன்றை மட்டும் தான் உபாசனை செய்வதாக இருந்தால் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசியுங்கள். ஆனால் இவரிடம் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருக்க மட்டுமே வேண்டுங்கள். நேர்மையான மனிதருக்கு மட்டுமே இவர் உதவுவார். இதை மறக்காதீர்கள். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்யும்போது பல் தேய்க்க வேண்டும். குளிக்க வேண்டும், சுத்தபத்தமாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சமாக பூசையிட்டு வாசனையுடன் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை இவருக்கு. ஆனால் மனசுத்தம் மிக மிக முக்கியம். அது போன்று மனிதருக்குத்தான் இவர் சக்தியை பயன்படுத்த வேண்டும். எனவே தான் இவரிடம் முன்பே பிரார்த்தனையை வலுவாக கூற வேண்டும். இறைவா ஏன் கோரிக்கைகளையும் என் வாழ்வை முன்னேற்றத்திற்கும், என் அடுத்தடுத்த உபாசனைக்கும் உறுதுணையாய் இருந்து வெற்றியையும், பாதுகாப்பையும், நல்லோர் சேர்ப்பை மட்டுமே தாருங்கள் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.
என் தனிப்பட்ட கருத்தையும் சற்று கவனியுங்கள் இக்கால கட்டத்தில் நல மனிதரை காண வேண்டுமானால் நாம் காட்டுக்கு தான் செல்ல வேண்டும். அங்கு மிருகங்களே தேவலாம் என்ற நினைப்பே வரும். இதை தவறாக நினைக்க வேண்டாம்.  உங்களிடம் ஒரு சக்தி வந்தஉடன் நாம் அருள் வாக்காக வெளிபடுத்த முயற்ச்சிப்போம். அப்போது நம்மை சுலக்கொடியவர்களில் நல்ல தர்ம ஆத்ம ஆயிரத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கும். பாவ ஆத்மாக்கள் தன் நிம்மதிக்காக உங்களை சூழ்ந்தே இருப்பார்கள். நிம்மதி பரிகாரம் கேட்பார்கள். அந்த அன்பு அழகையை தவிர்க்க முடியாமல் அவர்கள் கட்டுபாட்டில் அகப்பட்டு கொள்வீர்கள். நம்மையும் பாவ பங்கு சூழும். இது போன்ற ஜனங்களே இன்று அருளாளர்களை சந்திக்க வருகின்றனர். எனவே தங்கள் ஒரு உபாசனையோடு இல்லாமல் யாம் முன்பு கூறிய மூன்று உபாசனையும் கடைபிடியுங்கள். பாவிகளையும் வாழ வையுங்கள் தர்மத்தையும் கடைபிடியுங்கள்.
இனி முதல் நிலையான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பூஜையை காண்க.
இவருக்கான பூஜையை சதுர்த்தி அன்று ஆரம்ப்பித்து மறு சதுர்த்தி திதியில் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 16 நாள் பூஜை செய்தால் போதும். துவங்கும் நாள் வளர்பிறையாகவும் இருக்கலாம் தெயபிரையாகவும் இருக்கலாம் நல்லதே. வளர்பிறை சதுர்த்தி திதியில் ஆரம்பித்தால் தேய்பிறை சதுர்த்தியில் முடிக்க வேண்டும். இது பூஜா விதி. இவரின் மூல மந்திரத்தை ஒரு தடைவைக்கு 444 தடவை ஜெபிக்க வேண்டும். காலை மதியம்  மாலை அல்லது இரவு இந்த மூன்று வேலையும் மந்திரம் ஒரு வேலைக்கு 444  தடவை கூறி பூஜிக்கலாம்.
படையல்கள்
இவருக்கு நெய்வேத்தியம் முதல் நாளும் இறுதி நாளும் மிக விமரிசையாக இவருக்க பிடித்தமானதை எல்லாம் வைத்து படிக்கலாம். முடிந்தவர்கள் அன்றாடம் கூட படைக்கலாம். முடியாதவராக இருந்தாலும் அன்றாடம் வெற்றிலை பாகு வாழை பழமாவது வைத்து வணங்க வேண்டும். என்னென வைவேத்தியமாக வைக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
மாதுளம் பலம் முத்துக்களில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்கலாம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு எலுமிச்சை பழம் மிகவும் பிடித்தமானது அதையும் வைத்து படிக்கவும்.
மேலும் இவருக்கு பிடித்தமானது அருகம்புல், எருக்கம்பூ, வெற்றிலை மாலை, தாமரை பூ, வன்னி இல்லை, வேப்ப இல்லை, வில்வ இல்லை, செம்பருத்தி பூ, அரளி பூ, நந்திய வட்டை பூ இந்த புஷ்பங்களை சூட்டவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம்.
உணவு வகையில் தயிர் சாதம், எள் சாதம், மிளகு சாதம், அத்தி பழம், உளுந்து வடை. தேங்காய், வெண்ணை, தேன், கொழுக்கட்டை, சுண்டல், அவல்,பொறி, இவைகளும், மஞ்சள் குங்குமமும் இவருக்கு பிடித்தமான பொருட்கள்.
இதில் உங்களால் என்ன முடிகிறதோ அதை வைத்து செய்யுங்கள். சிறிய தம்ப்ளேரில் பசும் பால் வைத்து பூஜிப்பதும் சிறந்ததே. முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து பூசித்தல் போதும்.
இங்கு ஒரு ரகசியத்தை கவனிக்க வேண்டும்
ஸ்ரீ விநாயகரை முதலில் வழிபட சில காரணங்கள் உண்டு அறிவீராக. பிராப்தம் என்ற ஒரு பெயரை நாம் அதிஷ்டம் என்றும் கூறலாம். ஒருவருக்கு ஒரு செயல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விட்டாலும், பலரும் முயன்று அவர்களுக்கு கிடைக்கமால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே கிடைத்தாலும் தன்னால் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தாலும் அதை நாம் பிராப்தம் என்று கூறுவோம் அல்லது அவருக்கு அதிஷ்டம் என்று கூறுவோம். ஆன்மிக குருக்கள் சீடர்களுக்கு அடிக்கடி கூறும் வார்த்தை பிராப்தம் இருந்தால் தான் தெய்வ அருள் கிட்டும் என்றும் கூறுவார்கள். இந்த பிராப்தம் ஏன் ஒருவருக்கு ஏற்பட்டு அதிஷ்ட வாய்ப்புகளை தருகிறது என்றால் முற்பிறவி மற்றும் இப்பிறவி தர்மம், நன்மைகள், இறைவழிபாடு, ஒழுக்கம் இவைகள் அளிப்பது தான். மேலும் பலருக்கும் இந்த பிராப்தம் கிடைக்காமல் போவதற்கு காரணம் கண் திருஷ்டியினால் ஏற்படக் கூடிய தோஷங்கள், செய்வினையால் ஏற்படக்கூடிய வினைகள், குடியிருக்கும் வீட்டின் சல்லிய தோஷங்கள், எதிர்படும் போட்டி, பொறாமை, பிணிகள், குடும்பத்தில் சர்ச்சை சச்சரவு, பொருளாதார கஷ்டத்தால் தரித்திரம், தர்மம் செய்யாது போதல், பித்ரு குல தெய்வங்களை மதியாமல் போதல், பெற்றோர் சாபம், முன்வினை கோளாறு, அறியாமல் செய்த தவறுகள், துரோகம், பொய்பேசி மற்றவரை புண்படுத்துதல், இது போன்ற பல காரணங்களால் பிராப்தமும் அதிஷ்டமும் ஒருவருக்கு கிடைக்காமலேயே போகிறது. குறிப்பாக தெய்வ அனுகிரகம் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் மேற்கண்ட குறைகளில் இன்றைய கால கட்டத்தில் ஒன்றாவது குறை இருக்க தான் செய்கிறது.

இவைகளில் இருந்து தப்பித்து இறை பிராப்தம் பெறவே முதலில் ஸ்ரீ கணபதியை வழிபட வேண்டும். இவரே வினைகளை களைய கூடியவர். விக்னேஸ்வரர் என்று பெயர் கொண்டு அழைக்க காரணமும் அது தான். எனவே ஆன்மிக சக்தி பெற விரும்புவர்கள் முதலில் கணபதியை வழிபட்டே தன் வினைகளை போக்கி மேற்படி அடுத்த பயிற்சிகளை கடக்க வேண்டும். தன்னால் சித்துகள் வரவும். ஸ்ரீ விநாயகரே உதவுவார். எனவே முதலில் வழிபடும் முக்கியத்துவத்தை யாம் உணர்ந்த காரணமும் இதற்க்குத்தான்.         ஸ்ரீ விநாயகர் மூலகடவுள் எனபது உங்கள் அனைவருக்கும் தெரியும். மூலகடவுள் என்றால் என்ன? என்ற கேள்வியும் எழுப்பும். இதை மூன்று விதமாக சித்த ஞானிகள் கூறுகிறோம். ஒன்று எட்டு முளைக்கும் (திக்கு) என்ன தத்துவமோ அவை இவரால் மட்டும் காபந்து செய்யபடுகிறது எனவே மூலகடவுள் என்று பெயர் வைத்தனர். அடுத்து மூலாதாரம் முதல் உச்சி சக்கரம் வரை உள்ள முக்கிய எட்டு சக்கரங்களை இயக்க கூடியவர் இவர் என்பதாலும் இப்பெயர் அழைக்கபடுகிறது,

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 5

தொடங்கும் நாள்

முகூர்த்த நாள்
அமாவசை, பௌர்ணமி, அல்லது வளர் பிறை வெள்ளிக்கிழமை இதில் எதாவது ஒரு முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்து அதி காலையில் குளித்து ஆடையில் சிறிது மஞ்சள் வைத்து அணிந்து கொள்ளவும். அடுத்து
தெய்வ மாலை சுத்தம்
கழுத்தில் அணிய வேண்டிய ருத்ராட்ச மலையை பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கண் மந்திரம் ௯ முறை கீழ் உள்ளவாறு கூறவும். ருத்ராட்சமாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்.
ஓம் ஐயும் கிலியும் சவும் சரியும்
ஹரிஓம் நமசிவாய ஓம் சிவநேதிரையா
ருத்ராட்சாய நம:
ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தன மதிப்பவரிடம் கொடுத்து அணிந்து கொள்ளவும். அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வங்கிக் கொள்ளவும்.
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் கழட்டக் கூடாது. சுய கட்டுபாடுகளுக்கு அடங்கி நடப்பதாக கருதி பூணுல் அணிவார்கள். அதைவிட பல மடங்கு கட்டுபாடுள்ளது ருத்ராட்ச மாலை எனவே இந்த மகா மாலை எல்லா சக்திகளையும் ஒருங்கிணைக்க கூடியது. எனவே அதற்கு தனி மரியாதையை கொடுக்கவும்.உடல் சுத்தி-ஜென்ம சுத்தி பூஜை
இதே முகூர்த்த நாளில் மேற்கண்ட முறை முடித்து அடுத்து
ஸ்ரீ விநாயகர் ஆலயம் சென்று இரு புது அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அங்கேயே சாதாரணமாக வெறும் தரையில் உட்கார்ந்து நிமிர்ந்து கண்களை மூடிக் கீழ்காணும் மந்திரங்களை 108 முறை கூறவும். மூன்று தினங்கள் தொடர்ந்து விடியற்காலை வேலை மேற்கண்டவாறு செய்யவும். உதட்டை மூடிக் கொண்டு வெளியில் சத்தம் வராமல் நக்கு மட்டும் மந்திரங்களை கூற வேண்டும். அடி வயிற்றில் மந்திரம் கூருவத நினைத்து கொள்ளவும். அப்போது வயிறு உள்ளிளுப்பதாக தோன்றும். இந்த பயிற்சி உடலில் உள்ள மூலாதார சக்கரம் சுத்தப்படுத்தவும். விழிப்படையவும் செய்யவும் முதல் பயிற்சியாகும். அடி சக்தியை உண்டாக்கும் ஆரம்பத்தில் இது அத்தியாவசியமான பயிற்சியாகும். இனி இதற்க்கான மந்திரங்களை காண்க
ஓம் ஹ்றாம் ஹ்ஹீம் ஹ்றோம்
கங் கணபதயே நன்மை;
(முறை கூறவும்)
ஒவ்வொரு தடவி மந்திரம் சொல்லும் போடும் ஒரே மூச்சில் முழு மந்திரமும் கூற வேண்டும், விட்டு விட்டு கூறக்கூடாது. இதை மூன்று தினங்கள் செய்தல் போடும், பத்மாசனம் இட்டு சொல்ல முடியுமானால் சொல்லலாம் நல்லதே . எந்த மந்திரம் சொன்னாலும் நிமிர்ந்து உட்கார்ந்து சொல்ல வேண்டும், கூனி குறுகி உட்கார்ந்து சொல்லக் கூடாது.
இன்று மாலை நட்சத்திர பூஜை செய்யவும்
மேற்கண்ட பயிற்சி செய்யும் மூன்று நாட்களிலும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளவும். இது மிக அவசியமான பூஜையாகும்.
ஆலயம் செல்லும் போது மேல் ஆடை அணியாமல் தன உள்ளே செல்ல வேண்டும், ஆலயம் விட்டு வெளியே வரும் முன் ஆகாயத்தை பார்த்து வழிபட்டு பின்பு வெளி வரவும்.
தேக பயிற்சி, மூச்சு பயிற்சி (பிராணாயமம்)
முன்பு கடைபிடித்து எல்லாம் முதற்கட்ட மரியாதையை பூஜையாகும். அவைகள் பூர்த்தியானது. இனி இதன் பின்பு உடற் பூஜையுடன் உங்கள் அன்றாட பூஜையில் அடுத்தடுத்து என சியா வேண்டும் என்பதை கடைபிடியுங்கள்.
தேகம் சுருசுர்ப்படைந்து ரத்தம் உடல் முழுக்க சீராக பாய்ந்து உடலில் உள்ள சக்கரங்கள் இயங்க கற்று இரு நாசி வழியாக சமமாக ஓடவும், கீழ்க்காணும் பயிற்சியை அன்றாடம் கடைபிடிக்கவும். உடல் பக்குவபட்டால் மனம் பக்குவபடும் எனவே தேக ஆரோக்கியம் மிக முக்கியம். தேகத்தில் இயங்க கூடியது சக்கரம். சக்கரம் இயங்கினால் மனம் நினைத்ததில் வெற்றி அடையும் மந்திரமும் சித்தி அடையும். எனவே கடைபிடிக்கவும்.
தினமும் அலாரம் வைத்தாவது அதிகாலை நான்கு மணிக்கெலாம் சுறுசுறுப்பான மனதோடு எழுந்திருக்கவும். புரண்டு புரண்டு படுப்பது இன்னும் ஐந்து நிமிடம் களைத்து எழுந்திருக்கலாம் என நினைப்பது சோம்பேறித்தனமான செயலாகும். இந்த குணம் தன ஆன்மீகத்திற்கு முதல் விரோதி எனவே இக்குணத்தை விடுத்தது நம் இலட்சியத்தை அடைய தூக்கம் ஒன்றும் முக்கியமில்லை எடுத் காரியத்தை வெற்றியுடன் கடைபிடிப்பதே நம் லட்சியம் என நினைத்து எழுந்திருக்கவும். மனம் தன்னால் சுறுசுறுப்படையும். இந்த சுறுசுறுப்பு தான் வெற்றியின் ரகசியம். ஏனெனில் காலை சீக்கிரம் எழுந்திருக்க, சிறு வாசியோக பிரணயாம பயிற்சி செய்ய, பூஜைகளை பூரிப்போடு செய்ய, அமர்ந்த நிலையில் பல தடவை மந்திர உரு ஏற்ற, கைகால் முதுகு தண்டு, கழுத்து வலி தெரியாமல் இருக்க இந்த மன சுறுசுறுப்பே மிக மிக முக்கியமானதாகும். பலர் ஆன்மீக பயிற்சி தொடங்கி பாதியிலேயே விட்டுவிட சோம்பலே பெரிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வெற்றி பெற மன உறுதியும், சுருசுருப்புமே வெற்றியின் ரகசியமாக உதவுகிறது. சுறுசுறுப்பின் முக்கிய பங்களிப்பு என்ன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எனவே காலை எழுந்த்திருகும் போது மேற்கண்ட விஷயத்தை ஒரு கணம் கவனத்தில் கொண்டு வாருங்கள். தன்னால் மனம் சுறுசுறுப்படையும். ஒரு வாரத்தில் தன்னால் பழகி விடும். இந்த சுறுசுறுப்பு குறையாமல் பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்பு. இதற்காக பிரத்யேக யோகாசனங்கள், உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் செய்யல்லாம். உடல் ஒத்துழைக்காத போது மனதிற்கு தன்னன்ம்பிகை ஊட்டி சுறுசுறுப்படையச் செய்யலாம். மனம் வலிமையானால் உடல் தன்னால் வலிமையாகும்.
எனவே அனைவருக்கும் பொதுவான உடற்பயிற்சி அடுத்து உள்ளவாறு செய்தால் போடும். இந்த பயிற்சி மன உடல் சுறுசுறுப்புக்காக மட்டும் கிடையாது. சுழிமுனை ஓடவும் அந்த பயிற்சியே முக்கியமானதாகும். சுழிமுனை என்பது இரு மூக்கு துவாரத்திலும் தங்கு தடையின்றி கற்று வர வேண்டும். அப்போது ஆன்மீக பயிற்ச்சியில் ஈடுபட்டால் ஒரு மந்திரம் கூறினாலும் பல மந்திரம் கூறிய சக்தி கிடைக்கும். உடல் சீதோஷ்ணம் சீராக இருக்கும் நேரத்திலும், மலை ஏற்றத்தின் போடும், கடல் ஆறு போன்ற இடத்தை காணுகின்ற போடும், தனி அறையில் ஒரே சிந்தனையாக இருக்கும் போடும், ஆலயம் சுற்றும் போடும் தன்னால் சுழிமுனை ஓடும். அதனால் தான் அனுபவசாலிகள் இது போன்ற இடத்தில் ஆன்மீக பயிற்சி செய்தல் நன்றாக இருக்கும் என கூறினார்கள். உடல் நிலையும் கேட்டுப் போனால் மனம் வலுவிழக்கும். காற்றும் எதாவது ஒரு துவாரத்தில் தன ஓடும். எனவே உடல் நலன் மிக முக்கியம். சிலருக்கு புதிதாக தலையில் தண்ணீர் ஊற்றுவதாலும், அதிகாலை விழிப்பதாலும் உடல் நிலை பாதிப்பு அடைய வாய்ப்புண்டு. எனவே அதற்கும் சேர்த்தே கீழ்க்காணும் பயிற்சியை செய்தால் கேட்ட நீரும் வெளியேறும். சுழிமுனையும் ஓடும், உடலும் பலப்படும். எனவே இப்பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கூட கடைபிடிக்கலாம். அவ்வளவும் நன்மையே இனி பயிற்சியை காண்க. நமக்கு தெரியாத விஷயமா இதெல்லாம் என உதாசீனமாக தயவு செய்து நினைக்க வேண்டாம். இதன் அத்தியாவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவது யாம் கடமை. எனவே இந்த விஷயத்தை வலியுறுத்தவே விரிவாக கூறினேன். குருகுல படத்தில் மிக முக்கிய பங்கு இந்த பயிற்சிக்கு உண்டு. அனைத்தையும் கடைபிடியுங்கள்.
ஒரு தேவ ரகசியத்தை அறியுங்கள் வாசி எனும் கற்று மற்ற செயல்களை செய்யும் போது சுழிமுனை ஓடக்கூடாது. பூஜை செய்யும் நேரத்தில் மட்டுமே சுழிமுனை ஓட வேண்டும். மற்ற நேரத்தில் சுழிமுனை ஓடும் போது எச்செயலிலும் ஈடுபடக்கூடாது. இதை பற்றி விரிவாகக் காணலாம். அதை பற்றி இவ்விடத்தில் விளக்கினால் குழ்பபம் உண்டாகும்.
தும்பினால் சக்க்ரகளின் இயக்கம் மாறும் எனவே தன உடல்நிலை சீராக இருக்க வேண்டும் எஎன கூறினார்கள். ஜலத்தால் ஜலதோஷமும், உஷ்ணத்தால் கமதொஷமும் உண்டாகும். இவைகளை கட்டுபடுத்தவும் வேண்டியே உடல் நிலை படுகப்பு அவசியமாகிறது.
தும்பல் வந்தால் அதை தடுக்க சிவ சிவ என்று இடைவிடாமல் கூறவும் அல்லது வாசி  வாசி என்று வேகமாக கூறவும் தும்பலினால் பாதித்த சக்கரக்களின் இயக்கம் சீராகும்.
உடலின் உஷ்ணம் குறைய இரவில் நிம்மதியாக துங்கும் மன சுழலை வளர்த்துக் கொள்ளவும் கிடைக்கும் நேரம் கொஞ்ச நேரமானாலும் மனம் சரியாய் இருந்தால் நிம்மதியாக துங்கலாம். தூக்கம்  உடல் சீதோஷ்ண கட்டுபாட்டுக்கு மிக அத்தியாவசியமானது.

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6

முன்பக்க தொடர்ச்சி
இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் முதல் வேலையாக வாய் கொப்பளித்து விட்டு நான்கு வாய் பச்சை தண்ணீர் குடியுங்கள். பிறகு மலம், ஜாலம் கழிக்கவும். (அதிகாலை மலம் வராதவர்களுக்கு மதிய உணவுகளுக்கு பின் ஒன்றோ இரண்டோ மஞ்சள் வாழைப்பழம் சாப்பிட்டால் மலம் நேரத்திற்கு வரும்) பிறகு சுத்தமான நீரில் குளிக்கவும். சுடுநீரை தவிர்க்கவும். உடல் நிலை பாதிப்பின் போது வேண்டுமானால் பயன்படுத்தலாம். சாதாரண பச்சை தண்ணீரே போதுமானது. தங்களுக்காக பயன்படுத்தும் சோப்பு, ஷம்பூயே பயன்படுத்தவும். குளிக்கும் முன் பற்களை சுத்தப்படுத்தவும். அதற்கும் தனித்த ப்ருஷையே பயன்படுத்தவும். தலையுடன் சேர்த்து குளிப்பதே முழு குளியல் எனவே தலையுடன் குளிக்கவும். பிறகு சுத்த விபூதியை வலது கையில் எடுத்து கற்று எனும் ஆள்காட்டி விரலும் ஆகாயம் எனும் நாடு விரலும் பூமி எனும் மோதிர விரலாலும் விபூதியை நெருப்பு எனும் கட்டை விரலால் மூன்று முறை வலச் சுற்றாக ஒன்பது அங்குலத்திலும், படும்படியாக குழைத்து நெற்றியில் ஒரே முறை மட்டும் பூசவும். (இடப்பக்கம் இருந்து வலப்பக்கமாக மூன்று விரலாலும் ஒரே தடவி இழாத்தால் போடும்) சிலர் சரசர வென்று நெற்றியில் முன்னும் பின்னும் போட்டு தீட்டுவார்கள். அவ்வாறு கூடாது. மேலும் விபூதி, பூசும் போது முகம் பார்க்கும் கண்ணாடி பார்த்து பூசக்கூடாது. பூமியை பார்த்து குனிந்து பூசக்கூடாது. விபூதி கண்ணில் படாமல் இருக்க சாதாரணமாக கண்களை மூடி ஆகாயத்தை பார்த்தார் போல் லேசாக அண்ணாந்து வடகிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு விபூதி பூசி கொள்ளவும்.

விஷ்ணு கோத்ரக்கரர்கள் அவர்கள் குல வழக்கப்படி திரு நாமம் அணிந்து கொள்ளலாம். பிறகு யாம் கொடுத்துள்ள மூலிகை திலகம் சிறிது வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றிக்கண்ணில் வைத்து மீதத்தை கண் புரவ முடியில் பூசிக்கொல்ள்ளவும். தனியாக சிறிது எடுத்து புருவத்தில் பூச தேவை இல்லை. நெற்றிக்கு இட்டு மீதம் விரலில் ஒட்டிருந்தால்அதை மட்டுமே `புருவத்தில் பூசினால் போடும். மூலிகை திலகத்தை நெற்றியில் வைத்து போக மீதத்தை சுவற்றில் பூசக்கூடாது. கவனம்.

பிறகு இடைவெளி,உள்ள இடத்தில் அது மாடியாகவும் இருக்கலாம். பூஜை அறையாகவும் இருக்கலாம். மைதானமாகும் இருக்கலாம். கோவிலாகவும் இருக்கலாம். ஆக சற்று இடம் உள்ள இடத்தில் 21தோப்பு கரணம் வடகிழக்கு திசை நோக்கி போடவும். பிள்ளையார் கோயிலில் போடுவது போல நன்றாக இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது கையையும் பிடித்து நன்றாக உடகர்ந்த்து எழுந்தது வேகமாக இடைவெளியில்லாமல் தோப்பு கரணம் மூச்சு வாங்கும் அளவிற்கு 21 முறை போடவும். பிறகு இரு நெற்றி பொட்டிலும் லேசாக ஐந்து முறை கொட்டிக்கொள்ளவும். பிறகு பத்து நிமிடம் சற்று வேகமான நடையுடன் எட்டு போட்டார் போல உடல் தளர்வாக நடக்கவும். (சிலர் நடக்கும் போதேஉடலை இறுக்கி நிமிர்ந்து தலையை சாய்க்காமல் ராணுவ வீர போல் நடப்பார்கள் அது போல் நடக்க கூடாது) எந்த பக்கம் திரும்புகிறீர்களோ அந்த பக்கம் லேசாக தலை சாய்த்து எட்டு போட்டார் போல் நடக்கவும். மிக நீண்ட தொலைவு சென்று திரும்பி எட்டு போட்டார் போல் நடந்து பலன் இல்லை. 15 அடி தொலைவு மட்டுமே நீலம் இருக்க வேண்டும், இந்த அடி நீளத்திலேயே எட்டு போட்டார் போலவே நடக்க வேண்டும். பிறகு உங்களுக்கு சௌகர்யமான ஒரு இடத்திலோ தங்கள் தனி பூஜை அறையிலோ மூச்சிறைப்பு தீரும் வரை அமைதியாக அமரவும். கண்டிப்பாக ஏசியிலோ பேன் காற்றிலோ அமர்ந்து இளைப்பரக் கூடாது. இயற்கை காற்றில் தான் சற்று இளைப்பாற வேண்டும். இல்லைப்பர ஐந்து நிமிடத்திற்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். பிறகு வெறும் தரையில் வடகிழக்கு பார்த்து அமர்ந்து பிரணயாமம் பழக வேண்டும். (கால்கள் ஒத்துழைக்கத போது மேற்கண்டதை கடைபிடிக்க கடினமானதாக இருக்கும். அந்த சூழலில் இந்த மூச்சு பயிற்சியை செய்தாக வேண்டும். பழகிவிட்டால் நிச்சயம் நான்கு தினத்தில் கஷ்டம் இருக்காது. இந்த பிரணயாமம் பயிற்சி தங்களுக்கு ஆரம்ப நிலையில் வெறும் தரையில் இருந்து செய்யலாம். இதற்கு ஓம் என்று மந்திரம் மட்டுமே ஓத வேண்டும். எவ்வாறு எனில் வாடா கிழக்கு திசை பார்த்து நல்ல சமமான இடத்தில் அமர்ந்து முதுகை நிமிர்த்தி வலது கையின் சுண்டு விரல் மோதிர விரல் இவை இரண்டு விரல்களாலும் மூக்கின் இடது துவரதினையும், கட்டை விரலால் மூக்கின் வலது துவாரத்தினையும் பொத்திக் கொள்ள வேண்டும். மீதமுள்ள நடுவிரல் ஆள்காட்டி விரல்களை உள்ளங்கை தொடுவது போல் உட்புறமாக மடக்கி கொள்ள வேண்டும். இப்போது மெல்ல ஒரே சீராக எட்டு முறை ஓம் என்று மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டு வலது மூக்கு துவாரத்தின் வழியாக கற்றை மெல்ல உள்ளிழுக்கவும். அப்பொழுது கட்டை விரலை லேசாக துக்கிக் கொள்ளவும். எட்டு முறை ஓம் என்ற ஒளியோடு உள்ளே கற்றை இழுத்தவுடன் கத்தை விரலை பழையபடி மூக்கை பொத்தி கொள்ளவும். பிறகு மனதிற்கு உள்ளே 16முறை ஓம் என்று கூறிக்கொள்ளவும். காற்றை இழுக்கும் போது எந்த வேகத்தில் எட்டு முறை கூறினீர்களோ அதே வேகம் மாறாமல் 16 முறை ஓம் என்று கூறி வயிற்றில் காற்றை அடக்கி பிறகு அடக்கிய காற்றை இடது துவாரத்தின் வழியாக அதே வேகத்துடன் 16 முறை ஓம் என்று மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே கற்றை வெளிவிடவும். இடது மூக்கு துவாரத்தின் வழியாக காற்றை வெளி விடும் போது சுண்டு விரலையும் மோதிர விரலையும் லேசாக தூகிக் கொள்ளவும். பிறகு இதே இடது நாசி வழியாக எட்டு முறை ஓம் என்று கூறிக்கொண்டே காற்றை உள்ளே இழுத்து இரு விரல்களால் மூக்கை பொத்தி கொண்டு முறை ஓம் என்று கூறி கற்றை உள்ளடக்கி பிறகு வலது துவார வழியாக எட்டு முறை ஓம் என்று கூறிக் கொண்டே கற்றை வெளி விடவும். இவ்வாறு செய்வது ஒரு பிரணயாமம். இது போல் மூன்று முறை செய்யுங்கள் போடும். (பழக பழக 16 முறை 32 முறை என கூட்டிக் கொண்டே இருக்கலாம்).
ஆரம்பத்தில் மூச்சு திணறுவது போல் இருக்கும். சற்று கஷ்டமாக இருக்கும். ஒருமுறை செய்து மறுமுறை செய்ய முடியாமல் போடும். இந்த சிறு விஷயத்திற்கு நீங்கள் மனம் தளர வேண்டாம். வெறும் வயிற்ரோடு செய்யும் போது சீக்கிரமாக பிரணயாமம் வெகு எளிதாக இரு தினங்களிலே பழகி விடும். இந்த பயிற்சியின் முக்கிய நுகம் அறிந்தால் இதை கஷ்டப்பட்டாவது பயிற்சியை மேற்கொள்வீர்கள். ஏற்கனவே சில காரணங்களை கூறி இருந்தேன். இருப்பினும் சில தேவ ரகசியம் இதில் உள்ளது. என்னவெனில் நம் அடி வயிற்ருக்கும் உச்சந்தலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. எந்த ஒளியையும், அடி வயிற்றில் இருந்து மேலேளும்பினால் சக்கரங்கள் செயல்படும். அப்படி ஒவ்வொரு சக்கரமாக செயல்பட்டி மேலே உள்ள இறுதி சக்கரம் ஆக்ஞா சக்கரத்தில் அந்த கற்று ஒழி தொடர்ந்து மோதினால் ஞான கதுவு திறக்கும். (இதை பற்றி விரிவாக சொன்னால் பல பக்கங்கள் தேவை படும். உங்களுக்கு புரிந்து கொள்ள தேவையானதை மட்டுமே தெரிவிக்கிறேன்.) இதற்கு சர்வ ஒலியன ஓம் என்ற மந்திரத்தை பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். காரணம் ஓம் என்பது ஓங்காரம் என்ற கேள்விப்படிருப்பீர்கள் உலகம், பிரபஞ்சம் இவைகள் அனைத்திலும் எழும்பும் ஒலி அம் என்ற ஓசையாகும். (வை திறந்தால் எ என்ற ஓசையும் வாயை ம் என்ற ஓசையும் உண்டாகும். இவை இரண்டும் சேர்ந்தால் ஓம் ஆகும்) (அ-அகரம் ம்+ம=மகாரம்) இந்த ஓசை பிரபஞ்சத்தில் நிலையாக உள்ளது. நம் உடலில் அவ்வாறு இல்லாமல் ஒரே சீராக இயக்கம் மாறிமாறி செயல்படும், அவ்வாறு செயல்படும் பட்சத்தில் உடலில் உள்ள சக்கரங்களின் இயக்கம மாறி மாறி செயல்படும்.. இவ்வாறு செயல்பட்டால் நம்முடைய எந்த கோரிக்கையும் நடக்காது நிராசையதான் இருக்கும். (சில மனிதருக்கு எதிர்பாராமல் சில கோரிக்கைகள் பட்டேன் நடந்து விடும். அதற்கு கரணம் அவர் அறியாமலேயே சுழிமுனை ஓடி சக்கரங்கள் சீரான இயக்கத்தில் இருக்கும் அந்த நேர எண்ணம் எதுவோ அது அப்படியே நடந்து விடும்.)
சக்கரங்கள் சீரான இயக்கத்திற்கும், அண்டத்தில் உள்ள ஒலி பிண்டத்திலும் ஒலிக்க ஓம் என்ற மூச்சு பயிற்சி அத்தியாவசியமாகிறது. அப்போது தான் இந்த அண்டத்தில் நாம் ஒரே தொர்பாக இருக்க முடியும். மேலும் மந்திர ஒழி அடி வயிறு என்னும் மூலாதார சக்கரத்தில் இருந்து நெற்றி கண் எனும் ஆஞஞா சக்கரத்தோடு தொடர்பு கொள்ள மூல மந்திரத்தை ஒரே மூச்சில் சொல்ல வேண்டும். எத்தனை ஆயிரம் முறை மூளை மந்திரம் கூர்ணலும் நன் சுவாச கற்று ஒரே சீராக இயங்க வேண்டும். மூச்சு வாங்க கூடாது. மந்திரத்தை விட்டு விட்டு பிரித்து கூற கூடாது. ஒலிகள் மாறி மாறி அமையக் கூடாது. அதற்காக நம் மூச்சுக் காற்றோடு மந்திரத்தை கலந்து விட்டால் ஒரே சீராக இயங்கும் என்பதை கண்டுணர்ந்து நம் முன்னோர்கள் கற்று முலமே மந்திர ஒலிகளை நெற்றிகன்னுக்குகொண்டு செல்லும் கலையான வாசியை கண்டுனர்ந்தார்கள். அதனால் தன பல மடங்கு சக்தி அதிகம் என்றும் மறைபொருளாக கூறிச் சென்றார்கள். இந்த வாசியின் அடிப்படை பயிற்சியை தன பிரணயாமம். அதில் ஓம் என்ற ஒலியை பலக்கபடுத்தினாலே போடும். ஓம் என்று கூறும் போது வரும் கழுத்தில் இருந்து ஒழி எழுப்பி புண்ணியமில்லை. ஓம்ம்ம் என்று அடிவயிற்றில் இருந்து ஒலி வர வேண்டும். மௌனமாக சொன்னாலும் அடிவாயிற்றை அழுத்தினர் போல ஒரு கற்று மேலே எழுப்பி கழுத்தில் மோதுவது போல செய்ய வேண்டும். சாதரணமாக ஓம் என்று வயிற்று கற்றை இல்லார் போல் நிகழ வேண்டும். அப்போது தன மந்திரமும் எளிமையாக சித்திக்கும். சித்தித்த பின் எட்டு வகையான செயல்களை செய்யச் சொல்லி மக்கள் கூறினாலும் அனைத்தையம் செய்யவும் முடியும். இல்லையேல் ஒரு சில வேலைகளை செய்ய முடியும பல வேலைகளை செய்ய முடியாது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் பிரணயாமத்தின் மகத்துவம். இதற்க்காக மட்டும் இந்த பயிற்சி அல்ல. தெய்வத்திற்கும் தேவதைகளுக்கும் பிடித்தமன் சரேரம், ஒரு நிலை பாடான மனமும் ஒரு நிலையான கற்று புகும் உடலும் தான். அதில் . எந்த தேவதையே நினது கொண்டுயிருகிறோமோ அந்த தேவதை காற்றோடு கதறக நம்மோடு உறவாடும் அதற்கும், இந்த சித்தர்கள் கூறியதும் இதைத்தான். (இதில் உள்ள முக்கிய விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ள இரத்தின சுருக்கமாக கூறியுள்ளேன். குழப்பி கொள்ள வேண்டாம். பின்னல் இதன் மகத்துவம் புரியும்.) இதையெல்லாம் செய்தல் தன தெய்வம் வருமா என மலைக்க வேண்டாம். மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நிமிடத்தில் முடிக்கக் கூடிய ஒரு எளிமையான பயிற்சி அவ்வளவே. அவைகளை பற்றிய மகத்துவத்தை விளக்கினால் பயிற்சி செய்ய ஆர்வம் மிகுதியாகும் என்ற நல்லெண்ணத்தில் பால் மாறாமல் மறைவில்லாமல் தெரிவிக்கிறேன். அனுபவ பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் இவைகளை விளக்கமாக அறிய முடியது என்பதை நினைவுபடுதிகிறேன். பின் வரும் காலங்களில் உயர்ந்த சித்துக்களை பெற இப்பயிற்ச்சிகள் அப்போது கை கொடுக்கும்.
மேற்கண்ட ஒழுக்கமுறையும், விரத முறையும், பிரணயாமும் இறைவனுக்கு உங்களிடம் ஒரு இடம் கொடுக்கத்தான். இடம் கொடுத்தால் தான் நிரந்திரமாக உங்களிடம் தங்குவர். இல்லையேல் வந்த வழியே உடனே சென்று விடுவர். (உள்ளே வந்த கற்று வெளியே செல்வது போல்) இறைவன் மனதிற்கு பின் நெற்றில் கண்ணில் தங்குவர். அதற்கான பயிற்சியும் உண்டு. (மனமும் கற்றும் நெற்றி கண்ணும் இனைய வேண்டும். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். இது ஆன்மீக ரகசியம். இதற்கு தான் இந்த எல்லா பயிற்சியும்.
மேற்கண்ட பயிற்சிகள் எதுவுமே இல்லாமலும் தெய்வம் சித்திக்கும். அதற்கு பரம்பரையில் யாராவது இந்த தொழில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது இறந்த முன்னோர்கள் நம் உடலில் இறங்க வேண்டும். இல்லையேல் சித்தி ஆகாது. தெய்வமே நம்மேல் இறங்கினாலும் ஒரு சில நிமிடங்கள் இருந்து விட்டு பின்பு விலகி விடுவார்கள். எனவே முறையாக தொழில் செய்யவோ, தன் தேவையை மட்டுமாவது பூர்த்தி செய்து கொள்ளவோ மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதே சிறந்த எளிய வழியாகும்.
இதுவரை கண்டதை சுருக்கமாக கூறுகிறேன்
அதிகாலை எழுந்திருப்பது, மலம், ஜாலம் கழிப்பது, குளிப்பது, ஆடை அணிவது, விபூதி தறிப்பது, மூலிகை திலகம் இட்டுக்கொள்வது, தோப்பு கரணம் போட்டு பிறகு எட்டு போட்டார் போல் நடப்பது, பிறகு பிரணயாமம் பயிற்சி செய்வது, இவ்வளவு தான் விஷயம். இவைகளை விரிவாக விளக்கியதால் எதோ கடின பயிற்சி போல் மலைப்பு உண்டாகி இரூக்கும். எல்லாம் மிக எளிமையானது அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் செய்து விடலாம்.
மேற்கண்ட பயிற்சி கலை வேளையில் செய்தல் போடும்.இந்த நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதாகும், இந்த முறைக்கு காலைகடன் என்று பெயர். நித்தியா கடமைகள் என்றும் கூறலாம்.
இனி மேல் வருவது தான் உங்கள் முதல் துவக்க பூஜையாகும்
மன ஈடுபாட்டை அதிகரிக்கவேண்டிய தருணமாகும்.
உங்கள் தளராத உறுதியையும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
குரு பூஜை
முன்பு ஆரம்பித்ட முகூர்த்த நாளில் இருந்து தொடர்ந்து பூஜையை செய்து வரும் குரு பூஜைக்கென்று தனியாக முகுர்த்தம் பர்க்கத்தேவை இல்லை. நேரம் தான் முக்கியம்
இனி குரு பூஜை: யாருக்குமே குரு இல்லாத வித்தை உருவாகாது. மானசீகமாக குருவாக முன்வைத்து பூஜிபதே எக்காலத்திலும் சிறந்த வழி. சித்தர்களும் அவ்வாறு செய்வார்கள். பின்னல் விஷயம் அறிந்தவர்கள். யார் கற்பிக்கின்றாரோ. அவரே எல்லாம் குரு என்று தம்பட்டம் அடித்து கொண்டார்கள். எங்களுக்குத்தான் முதல் பூஜையே வேண்டும்.


இவரை மதியாத கலை நம்மையே பெரும் பவம் சூழ்ந்து அளித்து விடும். பாவங்களை அளிக்கக்கூடிய ஸ்ரீ சூரியன். எனவே இவரை குருவாக பாவித்து எப்போதுமே குரு மரியாதையாக இவரை முதலில் வணங்க வேண்டும். இந்த கலையை கற்க தூண்டுதலே நாம் மற்றவர் பிரச்சனைகளை கூற வேண்டும். அதை போக்கும் சக்தியும் வேண்டும் என்பதே. அவ்வாறு மற்றவர் பிரச்சனைகளை போக்கும் போது அவர் அனுபவிக்க வேண்டிய பாவ தண்டனையில் இருந்து நாம் காப்பதால் அந்த பாவ தண்டனையில் ஒரு பகுதி நம்மையும் வந்தடையும் அதில் இருந்து நம்மை காத்து கொள்ள பாவத்தை அளிக்கும் ஆற்றல் உள்ள ஸ்ரீ சூரிய பகவானையே குருவாக வைத்து முதலில் பூசிக வேண்டும். இந்த அடிப்படை விஷய நுணுக்கங்களை அறிந்து மகத்துவம் புரிந்து கொண்டு பூஜிக்கும் போது உண்மையான மரியாதையை கலந்த அன்போடு பூஜிக்க வழி கிடைக்கும். இல்லையெனில் எதோ முறை என்று ஏனோ தானோ என்று பூஜை செய்ய தோன்றும் அவ்வாறு செய்தால் எதுவுமே கிடைக்காது. ஆகையால் தான் எல்லாவற்றையும் விளக்கமாக கூறியுள்ளேன்.
எனவே பிரணயாமத்திற்கு பின் எழுந்து கிழக்கு பார்த்து நின்று ஸ்ரீ சூரிய குரு பகவனை வணங்க வேண்டும். இந்த குரு வணக்கத்தை கலை மணி முதல் மணிக்குள் செய்ய வேண்டும். தினம் செய்ய வேண்டும். இந்த ஸ்ரீ சூரிய குருவே எல்லாவற்றையும் உங்களுக்கு கற்பிப்பார். வழிநடத்தியும் செல்வார். சிறந்த மெய்ஞானி என்று மக்கள் புகல வேண்டுமானாலும் இவர் அருளால் தான் கிடைக்கும். இவரே முப்பெரும் சக்திகளையும், பஞ்ச பூத அஷ்ட திக்குகளையும் வசியம் செய்து கொடுப்பார். எனவே இவரிடம் தான் நாம் பிச்சை கேட்க வேண்டும். பிச்சை போட்டால் உடனே கொடுப்பார். ஸ்ரீ விநாயக பெருமானை மனதில் நினைத்து பின்னரே இவரை வாங்க வேண்டும். இல்லையேல் அருள் கொடுக்க மாட்டார். அகரத்திற்கும், அருகம்புல் மூலிகைக்கும், மண்ணுக்கும் முதன்மையானவர் ஸ்ரீ விநாயக பெருமான். மண்ணில் வாழ்கின்ற நம் மன்னேனும் தாய்க்கு மூலமாக உள்ள ஸ்ரீ கனப்திஏய் மரியாதையுடன் வணகி பின்பு தான் மற்ற செயல்களை செய்ய வேண்டும். மூலிகைக்கும், மந்திர எழுத்துகளுக்கும் முதலானவர் ஸ்ரீ கணபதி, அ என்று மந்திர அட்சரமும், அருகம்புல் மூலிகையும் இவை இரண்டும் சாபமற்றது. எந்த கட்டுக்கும் அடங்காதது, எந்த கிரகத்திற்கும் அகப்படாதது கரணம் இவைகளுக்கு ஸ்ரீ விநாயக ஏறுமனே காப்பாளராக உள்ளதே கரணம். எனவே அகாரத்தில் (மண்) வாழும் நம் அதற்கு உரிய தேவதையான ஸ்ரீ விநாயக பெருமானை மனதில் நினைத்து வேண்டி பின்பு ஆகாய லோக குருவை பூஜிக்க வேண்டும்.
இவருக்கான பூஜையை தினம் மட்டும் செய்தல் போடும். இதன் பின்பு நாம் மானசீகமாக எப்போது நினைத்தாலும் உதவுவர். ஒரு விஷயம் நமக்கு தெரியவில்லை புரியவில்லை எனில் ஸ்ரீ சூரிய குருவையையோ, ஸ்ரீ விநாய்கரையோ நினைத்தல் போதும் யார் மூலமாவது நம் கேள்விக்கு பதில் கிடைத்து விடும். இது அனுபவ உண்மை.
குருவின் மகத்துவம் ஆன்மீகவாதிகளுக்கு இன்றியமையதாதது. மனித குருவால் எல்லா சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடியாது. சர்குருவால் மட்டுமே முடியும். ஆகையால் தான் இந்த குரு பூஜை.

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், ஜின் சிய பூஜா

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், ஜின் சிய பூஜா

7இந்த ஸ்ரீ சூரிய குரு பூஜையை வெறும் தரையில் இருந்து செய்யக்கூடாது
ஒரு தொட்டியோ, அல்லது ஒரு பேஷனோ, பதம் முழுகும் அளவு உள்ள அகண்ட பாத்திரமோ எது தங்களிடம் உள்ளதோ அதை சுத்தபடுத்தி அதில் சுத்தமான நீர் பாதம் அல்லது முட்டி வரை மூழ்கும் அளவு நீரை கொட்டி அதில் கல் உப்பு ஒரு கை பிடி அளவு குறையாமல் போட்டு (மேற்கொண்டு எவ்வளவு உப்பு வேண்டுமானாலும் போடலாம்) கலக்கி சிறிது மஞ்சள் தூளும் போட்டு அதில் ஏறி நின்று கிழக்கு பார்த்து வணங்க வேண்டும். வீட்டிற்குள் செய்ய கூடாது. வெளிக்காற்று படும்படியான இடமாக இருக்க வேண்டும். வாசல், மொட்டை மாடியகவும் இருக்கலாம். தங்கள் பகுதியில் கடல், குளம், ஆறு, எரி போன்ற நீர் உள்ள இடங்கள் இருந்தால் தான் தண்ணிரில் உப்ப்பு, மஞ்சள் தூள் போட வேண்டும். வெளியிட நீர் நிலைகளில் எதுவும் வேண்டாம். அப்படியே பூஜை செய்யலாம். எங்கு செய்வதாக இருந்தாலும் தினமும் ஒரே இடமாகத்தான் செய்ய வேண்டும். இடம் மாற்றி மாற்றி செய்ய கூடாது. கிழக்கு பார்த்தார் போல் நின்று தான் பூஜை செய்ய வேண்டும். தண்ணிரை தொட்டு வணங்கிய பின்னரே அதில் இறங்கி நின்று வணங்க வேண்டும். எதற்குமே மரியாதையை கொடுக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அப்போது தான் ஸ்ரீ சூரிய பகவன்  உங்களுக்கு குருவாக சம்மதிப்பார். ஸ்ரீ சூரிய பகவானுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மிகவும்  பிடித்தமானது தர்மம். எனவே உங்களால் இயன்ற தர்மங்களை வாய்ப்பு கிடைக்கும் போது செய்ய வேண்டும். அவ்வாறு செய்தல் நீங்கள் செய்ததை விட ஆயிரம் மடங்கு உங்களுக்கு குருவாக இருந்த திருப்பி செய்வர். எந்த தர்மத்தையும் உங்களுக்காக பயன்படுத்த கூடாது. உதரணமாக நாம் தர்மம் செய்தால் நான் செய்த தர்மம் என் தலை காக்கும். என் பிள்ளை குட்டிகளை காக்கும் என வேண்டி கொள்வோம். அனால் அவ்வாறு வேண்டி கொள்ளக் கூடாது.. இறைவா எனக்கு மேலும் மேலும் தர்மம் செய்ய வைப்பு தாருங்கள் என வேண்டவும். வாய்ப்பு தந்தமைக்கு என்றும் தங்கள் பாதங்களை வணங்குகிறேன் என கூறவும். மற்றவரையும் தர்மம் செய்ய தூண்டுவதும் தர்மமே. எனவே எந்த தர்மத்தையும் நாம் கொண்டாடாமல் இறைவனுக்கே அணைத்து தர்மத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன் என வேண்டிக் கொள்ளவும். அவ்வாறு வேண்டினால் தான் இறைவன் நம் தர்மத்தை பெற்று நம் பாவங்களை போக்கி ஆசைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்.
தர்மம் மட்டும் கிடையாது நாம் எந்த தெய்வ மந்திரம் பூஜைகள் செய்தலும் இறுதியில் தங்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். நான் கேட்கும் வரம் இது தான் தாருங்கள் என கேட்க வேண்டும். (இதுவும் தேவ ரகசியமே) அப்போது தான் அருள் புரிவார்கள்.
ஆக மேற்கண்ட செயல்களை ஸ்ரீ சூரிய குருவானவர் குரு தட்சணையாக பெற்று நமக்கு சித்திகளை பிச்சை இடுவார். (இந்த லோகத்தில் வாழும் ஏட்டு கல்வி, செயல்முறை குருவை இதில் சம்பந்த படுத்த கூடாது. இல்லையேல் யாருக்கும் சித்தி கிடைக்காது. இது அனுபவத்தில் வெற்றி கண்டவர்கள் ரகசியமாக வைத்து வழிபடும் குருமுறையாகும். வெற்றி கண்டவர்கள் மற்றவரை வெற்றி அடையவிடுவதில்லை. எனவே இந்த சூட்சும குருவை மறைத்து விட்டார்கள். உங்களுக்கு இனி அந்த குறையில்லை என்பதை நினைத்து சந்தொஷபடுங்கள்)
ஆக மேற்கண்ட வழிமுறைகள் மிக முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி பயிற்சியைக் தொடருங்கள். உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இடையில் வந்து விடக்குடதே என்பதற்காக தான் விளக்கமாக கூறியுள்ளேன். ஏன் எதற்காக என்ற சந்தேகம் நம் முதல் விரோதியாகும். நமக்கு விளக்கம் கிடைத்து விட்டால் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே தான் எந்த பயிற்சியும் விளக்கமாக கூறுகிறேன்.
இனி தொடர்ந்து பயிற்சியை காணுங்கள். தண்ணீரில் கிழக்கு பார்த்து நின்று முதல் நாள் மட்டும் வெற்றிலை பக்கு, வாழை பழம், வைத்து ஊதுவத்தி ஏற்றி தேங்காய் ஒடித்து வைத்து கற்பூரம் ஏற்றி தீபத்தை வணங்கி நிமிர்ந்து நின்று இரு கைகளையும் ஒன்றாக இணைத்து தலைக்கு மேல் கைகளை தூக்கி வணங்கவும்.

ஓம் நமோ ஆதித்யாய நம:

(இம்மந்திரத்தை ஒன்பது முறை கூறவும்)
பிறகு உயர்த்திய கைகைகளை இறக்கி, இரு கைகளையும் பிச்சை கேட்பது போல் ஒன்றாக வைத்து (இஸ்லாமியர்கள் தொழுகையின் போது இரு கையை இணைத்து வைத்திருப்பார்கள் அதை போல வைக்கவும்) மார்புக்கு நேராக கை மரபில் ஒட்டாமல் சற்று தள்ளி வைத்துக் கொண்டு சூரிய திசை பார்த்து (கிழக்கு) அண்ணாந்து கீழ்காணும் அற்புத மந்திரத்தை கூறவும். கூறும் போது உதடு பிரிய கூடாது. அதாவது வாய் திறந்து செல்லக்கூடாது. உங்கள் நெற்றிக்கண் தான் வாய் என்று கற்பனை செய்து நெற்றிக்கண் தான் மந்திரம் செபிக்க்றது என்ற உணர்வோடு மந்திரம் கூறவும். (எந்த மந்திரத்தையும் அப்படிதான் கூறவும், தன்னால் மனம் நிலைப்படும். யாரை பார்த்தாலும் நெற்றிகன்னால் பார்ப்பதாக உணருங்கள். எதை கேட்டாலும் நெற்றி கண் தான் காது என நினைத்து கேளுங்கள். அவ்வாறு செய்தல் ஞானக்கண், எப்பொழுதும் திறந்தே இருக்கும். ஞானக்கண் ஐந்து நிமிடத்தில் இவ்வாறு செயல்பட்டால் விழித்து கொள்ளும்.
எதோ ஒன்றும் நெற்றிக்கண்ணில் ஒட்டிக் கொண்டு உறுத்துவது போல தோன்றும். அதுவே ஞானக்கண் தோன்ற ஆரம்பிகிறது என்பதை அறியலாம். (இதுவும் தேவ ரகசியமே) பூஜை அல்லாத நேரத்திலும், இவ்வாறு செயல்படுங்கள் வெகுவிரைவில் காற்றும், மனமும் வசப்படும் கூடவே தெய்வமும் வசப்படும்.
ஆக கீழ்காணும் மந்திரம் நெற்றிக்கண்ணே கூறுகிறது என்பதை கவனித்து மந்திரம் மனதிற்குள் கூறுங்கள். முறையோ அல்லது அதற்கு மேலோ இந்த மந்திரத்தை கூறவும். இந்த எண்ணிக்கைக்கு ஜபமாலை எதுவும் கூடாது. எல்லாம் மன கணக்கில் தான் எண்ண வேண்டும். இரு கைகளையும் ஒன்றாக சேர்த்துள்ளதால் கைகளை வேறு எந்த செயலுக்கும் பயன்படுத்த கூடாது. மனக்கணக்கில் எண்ணிக்கை வைத்து கொள்ள முடியவில்லை என்றால் எவ்வளவு மந்திரம் சொல்ல முடியுமோ அவ்வளவு மந்திரம் கூறுங்கள். அதிகப்படியாக கூறினாலும் தவறில்லை. இதில் ஒரே ஒரு நிபந்தனை உண்டு. அதாவது இந்த கைகூப்பி மந்திரம் கூறும் போது யாராவது பார்த்து ஏளனமாக நினைபர்களா என கூச்சபடகூடாது. எப்படா பூஜை முடியும் என்று என்ன கூடாது. தண்ணிரை விட்டு எப்போது வெளியேறுவோம் என்றும், எண்ணக்கூடாது முழுமையாக மனம் லயித்து உங்கள் குருவை சரணாகதி அடைந்து அவரை வாழ்நாள் முழுவதும் குருவாக அடைய செய்யும் பிரார்த்தனை இது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சலிப்பு வராது மாறாக பிரார்த்தனை பாசத்தோடு அதிகரிக்கும் முதல் நாள் மட்டும் தேங்காய் உடைத்து வைத்து படிக்கவும். 11 நாளும் தேவை இல்லை. அனால் அவசியம் தாம்ப்பூலம் வைத்து ஊதுவத்தி ஏற்றியே மந்திரம் கூறவும். இந்த 11 தினமும் இடத்தையும், நேரத்தையும் மாற்ற வேண்டாம். மந்திரமும் வேக வேகமாகக் கூறக்கூடாது. ஒரே மூச்சில் மந்திரம் கூற வேண்டும். ஒரே சீராக முதல் தடவை ஆரம்பித்த வேகம் தோனி கடைசி வரை மாறாமல் பார்த்துக் கொள்ளவும். சீக்கிரமாக 108 எண்ணிக்கையை முடித்து விட வேண்டும் என வேகமெல்லாம் மந்திர ஜெபத்தின் போது பயன்படுத்த கூடாது.