youtube

22 December 2016

தோஷங்களைத் தீர்க்கும் வன்னிமரம்

தோஷங்களைத் தீர்க்கும் வன்னிமரம்

தமிழ்நாட்டில் பல பழமையான சிவன்கோயில்களில் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலிலும், திருவான்மியூர், வியாசர்பாடி, மேலைத் திருக்காட்டுப் பள்ளி, திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி முதலிய இருபதிற்கும் மேற்பட்ட சிவன்கோயில்களிலும் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. வில்வத்திற்கு அடுத்தபடியாக அதிக கோயில்களில் தல மரமாக உள்ளது வன்னியே ஆகும்.

பெருமைகள் வாய்ந்த வன்னி மரத்தின் சிறப்புகள், மருத்துவ குணங்கள்: வன்னிமரம் என்றாலே விருத்தாசலம் என்ற ஞாபகம்தான் வரும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பழமையான வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளைப் பறித்துப் பங்கிட்டு தான் இந்த கோயிலையே கட்டி இருக்கிறார்கள்! எப்படி? முன்னொரு காலத்தில் விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர், தான் இருந்த இடத்திலேயே கோயிலைக் கட்டி விட்டு ஜீவ சமாதியும் அடைந்தார். அவர் கோயிலைக் கட்டும் வேலையாட்களுக்கு வேலை முடிந்த ஒவ்வொரு நாளின் மாலையிலும் வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துக் கூலியாக அளிப்பாராம். வியர்வை சிந்திக் கடுமையாக உழைத்தவர்களுக்கு முனிவர் அளித்த வன்னி இலைகள் பொன்னாக மாறுமாம். உழைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இலைகளாகத் தான் இருக்குமாம். இந்தச் செய்தி கல்வெட்டுக்களிலேயே உள்ளது.

இராமபிரான் இராவணனை நோக்கிப்ட போர் தொடுக்கப்போகும் முன்பாக வன்னி மரத்தைத் தொட்டு வணங்கிச் சென்றதாகவும், முருகப்பெருமான் வள்ளியை மணப்பதற்காக வன்னிமர வடிவில் காட்சி தந்ததாகவும் ஐதீகம். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் செல்வதற்கு முன்பாக தங்கள் அணிகலன்கள், ஆயுதங்களைப் பெரிய துணியில் கட்டி, வன்னி மரத்தில் மறைத்து வைத்ததாக மகாபாரதம் கூறுகிறது. விஜயதசமியில் துர்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில்தான் நடக்கும். மேற்கண்ட சிறப்புகளைக் கொண்ட வன்னிமரத்தடியில் அமரும் விநாயகப் பெருமானை வன்னி மரத்தடி விநாயகர் என்று சிறப்பாகக் கூறுவார்கள். இவர் இந்த மரத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி ஸ்வரூபமாக உள்ளார். வன்னி மரத்தின் இலைகள் விநாயகருக்கும், சனீஸ்வரருக்கும் உகந்ததாகக் கூறுவர்.

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

உடலில் உயிர் வாயுவான ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறதாம்.

கரிமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவும் இரத்தத்தில் லேக்டிக் ஆசிட்டின் அளவும் குறைகிறதாம்.

கல்கத்தாவை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அன்வெஷா  அங்கே நடந்த அறிவியில் கண்காட்சியில் நிரூபித்து, விஞ்ஞானிகளை வாயடைக்க செய்துள்ளார்.

"ஓம்" எனும் மந்திரத்தை 30 நிமிடங்கள் கேட்டாலே இத்தனை பயன்கள் என்றால்..

அதை தினமும் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் உச்சரித்தால் இன்னும் எத்தனை எத்தனை பயன்கள் தருமோ?? நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்.

ஓம் !! ஓம் !! ஓம் !!

அகத்தியர் அருளியது,

பாவங்கள் விலக மந்திரம்-
அகத்தியர் அருளியது,
காணவே யின்னமொரு
சூட்சங்ககேளுகருணையுட
னுலத்தோடிருக்கும்
போதுபூணவே கண்ணாரக்
கண்டபாவம்புத்தியுடன் மனதாரச்
செய்தபாவம்பேணவேகாதாரக்
கேட்டபாவம் பெண்வதைகள்
கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக்
கொன்றபாவம் ஒருகோடி
பாவமெல்லா
மொழியக்கேளகாரப்பா
கருணைவிழி
மனக்கண்ணாலேகாலறிந்து
யோகமதால் அங்லங்கென்றுநேரப்பா
நிலையறிந்து நிலையில்நின்றுநீ
மகனே நூற்றெட்டு
உருவேசெய்தால்வீரப்பா
கொண்டுயிரைக் கொண்டபாவம்வெகுகோடி
பாவமெல்லாம் விலகுந்தான
அகத்தியர் பரிபூரணம் 1200 நூலில்
இருந்துஉங்களின் பாவங்கள் நீங்க ஒரு
சூட்சமத்தை சொல்கிறேன் கேளுங்கள்,
நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் யாருக்கும் எந்த பாவமும்
செய்யாதிருந்தபோதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்து
கொண்டுதான் இருக்கிறது.
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும்
பாவச்செயலை கண்டும் அதை
தடுக்காமல் போவதும்( கண்ணாரக்
கண்டபாவம்),
தீய சொற்களையும், தீயவர்களின்
வஞ்சகப்பேச்சுகளை, அவச்சொற்களை
கேட்பது(காதாரக்கேட்டபாவம்) உங்கள்
மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்)
பெண்களை கொடுமைப்படுத்து,
பசுக்களை துன்புறுத்துவதுஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை
கொன்ற பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென
எத்தனை கோடிப்பாவங்கள் இருந்தாலும்
அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன்கேளுங்கள்.
உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில்
மான்தோல் விரித்து (இன்றைய நிலையில்
அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு
திசை நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக
இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள்
ஓம் அங் லங்"
என்ற மந்திரத்தை 108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும்விலகி விடும் என்கிறார் அகத்திய மாமுனிவர்.

குலதெய்வ வழிபாட்டை

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
 குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
இதில் நான் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து அவர்களும் தங்கள் வாழ்கையில் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன்,ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்க

21 December 2016

நீண்ட காலமாக தொழில் சரியாக ஓடவில்லையா?

நீண்ட காலமாக தொழில் சரியாக ஓடவில்லையா?
அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும்;தவிர்க்க இயலாவிட்டால்,எந்த ஒரு பரிகாரமும்,மந்திர ஜபமும்,வழிபாடும்,சிறப்பு பூஜைகள் செய்வதும் பலன் தராது;
உள்ளூர் சிவாலயத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் இறுதி பூஜையை தரிசிக்க வேண்டும்;இப்படி ஒரு மாதம் வரை தினமும் சென்று தரிசித்து வேண்டிக் கொண்டால்,மறு நாளில் இருந்தே தொழில் படிப்படியாக வளர்ச்சி அடைவதை உணரலாம்;
ஓம் அகத்தீசாய நமஹ

கர்த்தர் யார் ?- காஞ்சி மஹான்

கர்த்தர் யார் ?-
காஞ்சி மஹான்

ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்.

ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி
தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன்
வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

அவர் நிறைய படித்தவர்; அபரிமிதமான பேச்சாற்றலால், மதக் கொள்கைகளை
அடுக்கிக் கொண்டே போனார்.

தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள்
இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது......யாரிடம்?

"அன்புதான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும் வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர்
எங்கள் பிதா.." மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாக்ஷியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.

காரணம், எங்கள் பிதா...என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேஸாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது.

"ஹிந்து மதத்லேயும் அன்புக்கு ரொம்ப முக்யத்வம் உண்டு! "அன்பே சிவம்"...ங்கறது பெரியவால்லாம் சொன்ன வாக்கு!

திருமூலர்ன்னு ஒரு பெரியவர் திருமந்திரம்ன்னு ரொம்ப ஒசத்தியான புஸ்தகம் எழுதியிருக்கார்.

அதுல அன்பைப்பத்தி,
மனித நேயத்தைப் பத்தி ரொம்ப அழுத்தமா சொல்லியிருக்கார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம்...ன்னு மஹாபாரதத்ல வருது.

அதுல, "கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"ன்னு பகவானுக்கு பேர் சொல்லப்பட்டிருக்கு.


நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு
முன்னாடியிலிருந்தே....
நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்!

ஒங்களோட மதப்ரசாரங்கள் எல்லாத்துலயும், எங்களோட மதம், இதிஹாஸ புராணங்கள்,கடவுள்கள் எல்லாத்தையும் நிந்தை
பண்றேள்!

ஆனா, நாங்க எந்த மதத்தையோ, மதத் தலைவர்களையோ, தெய்வத்தையோ நிந்தனையாவோ, கொறையாவோ
பேசறதில்லை!

ஏன்னா ஹிந்து மதம்தான் மிச்ச எல்லா மதங்களுக்கும் தாயார் மாதிரி !

ஒரு தாயார், தன்னோட கொழந்தை
துஷ்டனா இருந்தாக் கூட திட்ட மாட்டா!.....

நீங்கள்ளாம் ஹிந்து சமயப் பண்டிதாளை மீட் பண்ணறதுக்கு விரும்பாம, எதுவுமே தெரியாத பாமர ஜனங்கள் கிட்டப் போய்
வாசாலகமா [வாய் ஜாலமாக] பேசறேள் !

எங்களுக்கு அனுஷ்டானம் முக்யம் ; ஒங்களுக்கு ப்ரசாரம் முக்யம்; அதோட பாமர ஜனங்கள் ..ட்ட போனதுமே ஒங்களோட
மதத் தத்துவத்தை சொல்றதில்லை;

பால் பவுடர், ரொட்டி, துணிமணி...ன்னு குடுத்து ஆசை காட்டி இழுத்துக்கறேள்!

மொதல்ல அவாளுக்கு காப்பு மாதிரி பணம் குடுக்கறேள்... அப்றமா மதத்தைப் பத்தி பேசறேள்...."

பாதிரியார் சங்கடமாக நெளிந்தார்!

உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.


ஆனாலும்
பெரியவாளுடைய ஒவ்வொரு
சொல்லும் அவரைக் கட்டிப் போட்டுவிட்டது!

"எங்கள் கர்த்தர்....தன் ரத்தத்தாலே பாவிகளின் பாவங்களைக் கழுவுகிறார்" கட்டக்கடைசியாக எதையோ சொல்ல வேண்டும்
என்று சொன்னார்.

பெரியவா மறுபடியும் புன்னகைத்தார்....

"கர்த்தர்...ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்!

ஆனா மத்தவாளை
நிந்திக்கக் கூடாதுங்கறதும் ஞாயந்தானே ?...."

பாதிரியார், "நிந்தனை பத்தி என்னை சிந்தனை செய்ய வெச்சிட்டீங்க!.." என்று முக மலர்ச்சியோடு கூறவும், ஒரு பழத்தை
ப்ரசாதமாக குடுத்தார் பெரியவா.

அவருக்கும் திருக்கரத்தை உயர்த்தி ஆசி வழங்கினார்.

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை!

ப்ரசாரம்
பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற
full stop ப்பை நம்முடைய
மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள்,
சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது.

சங்கரர், மத்வர், ராமானுஜர், ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் இன்னும் ஏகப்பட்ட பக்த சிரோன்மணிகள் கூட ப்ரசாரம் பண்ணாமல், சாஸ்த்ர சம்மதமான தங்கள்
அனுஷ்டானத்தில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனவே அவரவர் எந்தக் கடமையை செய்ய வேண்டுமோ, அதை ஒழுங்காக பண்ணிக் கொண்டிருந்தாலே, நம் மதத்துக்கு
எந்த ஹானியும் வராது என்பதே மஹான்களின் வாக்கு!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!

20 December 2016

துன்பம் தீர்க்கும் பைரவர் மந்திரங்கள்!

துன்பம் தீர்க்கும் பைரவர் மந்திரங்கள்!

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் பைரவரும் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், காலபைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், குரோதண பைரவர், சம்கார பைரவர் மற்றும் பீஷண பைரவர் என்று நவ பைரவர்களாக வழிபடுகின்றார்கள். (இவற்றில் கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

காலபைரவர் தோன்றிய கதை!

இறைவன் பிரபஞ்சத்தை படைத்த காலத்தில் பிரம்மா, விஷ்ணு முதலான தெய்வங்கள் தோன்றினார்கள். ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பேதம் உண்டாயிற்று. இவர்களின் பேதத்தை போக்குவதற்காக இறைவன் சிவபெருமான் ஆதி அந்தம் இல்லாத அக்னி ரூபத்தை காட்டி உங்களில் யார் என் அடி முடியை முதலில் காண்கிறீர்களோ அவர்களே பெரியவர் என்று கூறினார். பிரம்மாவும், விஷ்ணுவும் உடனே அடி முடியை காண்பதற்காக விரைந்தனர். பல யுகங்கள் கடந்து பயணித்தும் காணமுடியவில்லை, அந்த சமயம் இறைவனின் முடியில் இருந்து வந்த கங்கையை பிரம்மா கண்டார். உடனே நான் எம்பெருமானின் முடியை கண்டேன் என்று பொய் உரைத்தார். அந்த கனத்தில் அக்னி பிழம்பில் இருந்து கடும் உக்ரத்தோடு ஸ்ரீ கால பைரவர் தோன்றி, பிரம்மாவின் ஒரு சிரஸை கொய்தார். இவர் தான் ஸ்ரீ கால பைரவர் என புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்தை கடுமையான விரதத்தோடு பாராயணம் செய்து வந்தால் பில்லி, சூனியம், ஏவல் மற்றும் எப்பேற்பட்ட தீய சக்திகளிடம் இருந்தும் நம்மை துன்பம் அனுகாது. பைரவருக்குரிய மந்திரங்களில் மூன்று(3) மந்திரங்கள் வருமாறு.

“ஓம் பைரவாய நமஹ”

“ஓம் ப்ராம் பைரவாய நமஹ”

“ஓம் நமோ ருத்ராய கபாலியாய
பைரவாய த்ரைலோக் நாதாய
ஓம் ஹ்ரீம் பட் சுவஹா”

சனிக்கிழமைகளிலோ, பிரதோஷ தினங்களிலோ, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலோ, செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது மிக முக்கியமாக தேய்பிறை அஷ்டமி தினத்தன்றோ பைரவரின் சன்னிதியில் வெண்பூசணியில் நல்லெண்ணெய் விட்டு பஞ்சுத் திரியில் விளக்கேற்ற வேண்டும்.

தினமும் 48 முறை ஜபம் செய்து வந்தால் துன்பங்களுக்கு துன்பம் தரும் தூய சக்தியாகி விடுவோம். பைரவர் சன்னதிக்கு சென்றது முதல் வீடு திரும்பும் வரை யாரிடமும் பேசாமல், எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அசைவ உணவு பழக்கம் முழுவதுமாக தவிர்த்திட வேண்டும். சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஜபம் செய்து வருவது நல்ல பலன்களை உணரலாம்.

ஓம் பைரவாய நமஹ!

18 December 2016

சித்தர்கள் என்பர்வகள் யார்...? அவர்களுக்கு உரிய நட்சத்திரம் மற்றும் மந்திரம் யாது?

சித்தர்கள்  என்பர்வகள் யார்...?
அவர்களுக்கு உரிய நட்சத்திரம் மற்றும் மந்திரம் யாது?

யாருக்குத்தான் பிரச்சனைகள் இருக்காது. அனைவருக்கும் இருக்கும். எல்லோராலும் இறைவனிடம் நேரிடையாக நமது தேவைகள் பற்றி கூற முடியுமா? முடியாது.

அதனால். நமது கோரிக்கைகள் கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-

அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கரூவூரார் – கரூர்
திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்
இடைக்காடர் – திருவண்ணாமலை
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவரவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.

ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம்.

சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும்.

ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

அடுத்து ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

அடுத்து மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

அடுத்து திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

அடுத்து புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

அடுத்து பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

அடுத்து ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

அடுத்து மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

அடுத்து பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

அடுத்து உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

அடுத்து அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

அடுத்து சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

அடுத்து சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

அடுத்து விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

அடுத்து அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

அடுத்து கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

அடுத்து மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

அடுத்து பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

அடுத்து உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

அடுத்து திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அடுத்து அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

அடுத்து சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

அடுத்து பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

அடுத்து உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

அடுத்து ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது.

அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும்

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்
நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.
உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம்(விருச்சிகம்)=
ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர்
சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப இராசி :
ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன இராசி :
ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன இராசி :
ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக இராசி :
ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம் – நட்சத்திரம் கடக இராசி :
ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக இராசி :
ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம

18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி இராசி :
ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி இராசி :
ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி இராசி :
ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி இராசி :
ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் இராசி :
ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி நட்சத்திரம் – துலாம் இராசி :
ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் இராசி :
ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக இராசி :
ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக இராசி :
ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. பூராடம் நட்சத்திரம் – தனுசு இராசி :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :

31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு இராசி :
ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. திருவோணம் நட்சத்திரம் – மகர இராசி :
ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36. சதயம் நட்சத்திரம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40. ரேவதி நட்சத்திரம் – மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம

நமசிவாய மந்திரம் ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாயநமசிவாய மந்திரம்

ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய

நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய

ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய

நமசிவாய ஓம் யகாராய நமசிவாய

ஓம் நம ;

ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌

ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய

த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।

- இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவந்தால் அனைத்துசெல்வங்களும் கிடைக்கும்.ஈசன் அருளால் அனைத்தும் பெறலாம். தோல்வியே கிடையாது. புகழ், வசீகர சக்தி கிடைக்கும். துஷ்ட சக்திகள் ஆண்டாது...


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது....

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.


சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர்

சிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமயமலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்தபோது தான்.

அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிந்ததாகக் கூடத் தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க, மனமுவந்து சிவன் அவளை மணக்க சம்மதித்தார். திருமணத்தன்று என்ன நடந்தது..?

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நிச்சயமாகி, மண நாளும் வந்தது. சிவ-பார்வதி திருமணம், வரலாறு காணாத பெரும் விழாவாக அறியப்பட்டது. அன்று, யாரும் கனவில் கூட எண்ணியிராத அளவிற்கு தீவிர மனிதரான சிவன், தன் அங்கமாக மற்றொருவரை ஏற்கவிருந்தார். சமுதாயத்தில் 'இன்னார்' என்று அறியப்பட்ட எல்லோரும், அடையாளம் ஏதும் இல்லா எளியோரும், பாகுபாடின்றி திருமணத்திற்கு வந்திருந்தனர்.

தேவர்களும் தேவதைகளும் வந்தனர். அசுரர்களும் பூதங்களும் கூட வந்திருந்தனர். பொதுவாக, தேவர்கள் வந்தால் அசுரர்கள் வரமாட்டார்கள், அசுரர்கள் வருவதாய் இருந்தால் தேவர்கள் வர மறுத்துவிடுவர். அவர்களால் ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நடக்கப்போவது சிவனின் திருமணம் என்பதால், பகையை மறந்து, இம்முறை மட்டும் இருவரும் வருவதாக முடிவு செய்திருந்தனர்.

அதோடு, சிவன் பசுபதி அல்லவா? எல்லா உயிரினங்களுக்குமே கடவுளாயிற்றே - அதனால் எல்லா மிருகங்களும், புழுபூச்சிகளும், அத்தனை உயிரினங்களும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தன. அவை மட்டுமா, பேய்கள், பிசாசுகள் அவற்றை ஒத்த அனைத்துமே வந்தன.

இது ராஜவம்சத்துத் திருமணம் - ஆம், இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய் யார், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே.

அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படலாயிற்று. இது நடந்து முடிய சிறிது நேரம் ஆனது. ஒரு வழியாக, அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.

சிவனின் சார்பாக யாரேனும் எழுந்து, அவரின் குலப்பெருமையைப் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அப்படி யாரும் எழவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவுமில்லை. "சிவனின் சுற்றத்தாரில் இருந்து யாரேனும் ஒருவர் சிவனின் குலப் பெருமையை விவரிக்க மாட்டார்களா?" என்று பார்வதியின் குடும்பத்தினர் சுற்றும்முற்றும் பார்த்தனர்.

ஆனால் அப்படி யாருமே வந்திருக்கவில்லை. ஏனெனில், பெற்றவர்கள், உறவினர்கள், குடும்பம் என்று சிவனுக்கு சொந்த-பந்தங்கள் யாருமில்லை. எந்நேரமும் தன்னுடன் இருக்கும் பூதகணங்களை மட்டும்தான் அவர் அழைத்து வந்திருந்தார். அவையும் உருக்குலைந்த உருவத்துடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தன. அது போதாதென்று, அவற்றிற்கு மனித பாஷை வேறு பேசத் தெரியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த வகையில் ஏதோ இரைந்து கொண்டிருந்தன. பார்ப்பவர்களுக்கு அவை போதை மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

இந்நேரத்தில், பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார்.

சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தொலை தூரத்தில் ஏதோ ஒன்றை பார்த்திருப்பதுபோல், சும்மா உட்கார்ந்திருந்தார். அவர் மணப்பெண்ணையும் பார்க்கவில்லை, மணமுடிக்கும் சந்தோஷமும் அவரிடம் தென்படவில்லை. வெறுமையை வெறித்தவாறு, தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். அந்தக் கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டது.

முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்வதற்கே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர்.

அங்கு சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், பொறுமை இழந்து, "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டை செய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்னை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும் வண்ணம் ஒரே சப்தத்தை ஏன் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இல்லை... இதுதான் உங்கள் பதிலா?" என்று இரைந்தார்.

நாரதர், "அவரைப் பெற்றவர்கள் யாருமில்லை," என்றார். ராஜன் வினவினான், "அவரது தாய்-தந்தை யார் என்று அவருக்குத் தெரியாது என்கிறீர்களா?" நாரதர், "இல்லை. அவரை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவருக்கென்று பூர்வீகம் இல்லை. கோத்திரம் இல்லை. அவரிடம் எதுவுமில்லை. அவரிடம் இருப்பது அவர் மட்டும்தான்," என்று சொன்னார்.

இதனைக் கேட்ட அத்தனை பேரும் குழம்பிப் போயினர். பர்வதராஜ், "தனது தாய்-தந்தை யாரென அறியாதவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால் மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவன் வேறு யாருக்கேனும் பிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படித் தாயோ தந்தையோ இல்லாமல் ஒருவர் பிறக்க முடியும்?"

நாரதர் சொன்னார், "அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும் இல்லை. அவருக்கு கோத்திரமும் இல்லை, நட்சத்திரமும் இல்லை, எந்த அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்தவர். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவர். அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன்முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்பு நிகழ்ந்தது. அதேபோல் இவரும் ஒன்றுமற்ற வெறுமையில் இருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான், நான் மீண்டும் மீண்டும் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார்.
I