youtube

1 June 2013

ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்


நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர்.  இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தனர்.  ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம்.  தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை.  நேரமும் இல்லை.
இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய  சூழ்நிலையில் உள்ளோம்.  இதனால் நோயின் பிடியில்  சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம்.   காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.
இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை.  இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.
புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.
புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.
இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.
போகம் விளையும் பொருந்தி வளருமையாம்
ஆகமதிற் பித்த மணுக்குங்காண்-மேக
புடலங் கவியளகப் பாவாய் கேணாளும்
புடலங் காய்க்குள்ள புகழ்
-அகத்தியர் குணவாகடம்
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல.  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும்.  அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
புடலங்காயின் பயன்கள்
* உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.
* குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்.  உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..
இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே

ஆண்மை.. வெண்டைக்காய்

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது

28 May 2013

ஹோம மந்திரங்களும் – ஹோமத்தின் பலன்களும்:

ஹோம மந்திரங்களும் – ஹோமத்தின் பலன்களும்:





1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்

பேரண்டத்தின் உண்மை

விண்ணில் தன் எண்ணங்களைப் பாய்ச்சி, பேரண்டத்தின் உண்மையின் நிலைகளை தனக்குள் செலுத்தி, அந்த ஆற்றல்களை, தன் உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் இயக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து, மனிதனாகப் பிறந்தபின், உணர்வின் எண்ண அலைகளாக வெளிப்படுத்தும், அந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தினார்.
அவ்வாறு வெளிப்படுத்திய சக்திகளை, சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தங்கள் அதை ஈர்த்து, அழியாத தன்மையாக, இன்றும் நமது பூமிக்குள் படர்ந்து பரவிக் கொண்டிருக்கின்றது.
அகஸ்தியர் தனக்குள் எத்தகைய தன்மை பெற்றாரோ, அந்த பேரண்டத்தின் உண்மை நிலையை, ஒவ்வொன்றும் பேரண்டத்தில் நிகழும் சக்திகள் அனைத்துமே, தனக்குள் உணர்ந்து அறிந்து, ஒளியாக ஒலி பரப்புகின்றார்.
இப்பொழுது மனிதனான பின், நாம் எந்தெந்த குணங்களின் தன்மையை எண்ணிப் பேசுகின்றோமோ, அதையே ஞாபகப்படுத்தி பேசுகின்றோம். இதை போல, அகஸ்திய மாமகரிஷி விண்ணின் ஆற்றலின் தன்மையைத் தனக்குள் பெருக்கி, அந்த உணர்வின் ஆற்றலை உணர்ந்தறிந்து, இந்த உடலிலிருந்தே உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும், அந்த நிலையைப் பெற்றார்.
அவர் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த உண்மையின் நிலைகள் தான், இன்று அதன்பின் வந்த, மனித வர்க்கங்கள் அனைத்துமே, சந்தர்ப்பத்தால் அவர்களுக்குள் சிக்கப்பட்டு, மனிதரின் வளர்ச்சியின் தன்மை பெறப்படுகின்றது.
அவ்வாறு பேரண்டத்தில் விளைந்த, பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய சூரிய குடும்பத்திற்குள், நம் பூமிக்குள் இருந்து மனிதனாக தோன்றினாலும்,
இந்த பிரபஞ்சத்திலிருக்கக் கூடிய உண்மை நிலைகளையறிந்து,
நம் பிரபஞ்சத்தைத் தாண்டி, மற்ற கோள்கள், மற்ற சூரிய குடும்பத்திலிருக்கக் கூடிய ஆற்றல்களையும் அறிந்துணர்ந்து, தன் உணர்வுக்குள் சேர்த்துக் கொண்டார்.
அதைச் சேர்த்து, உணர்ந்து, தனக்குள் ஞானச் சுடராக வளர்த்துக் கொண்டு, தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினார். அவ்வாறு ஒளியாக மாற்றப்படும் போது, தன் உடலில் உருபெற்ற எண்ண ஒலிகளை, ஒலி பரப்பிக் கொண்டேயிருக்கின்றார்..
இப்பொழுது நாம் டேப்ரிக்கார்டரில் பதிவு செய்த பிறகு, எப்படி மறுபடியும் ஒலி பரப்புகின்றோமோ, அதை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து கொள்கின்றது. இதெல்லாம் சக்தியற்றது, சீக்கிரம் அழிந்து போகக் கூடிய நிலைகள் பெற்றது.
ஆனால், அகஸ்தியர் ஒலி பரப்பிய உணர்வுகளும் சரி, மற்ற மெய்ஞானிகள் வெளிப்படுத்திய ஆற்றல் மிக்க சக்திகளும் சரி, அழிவதே இல்லை. இந்த காற்று மண்டலத்திலே தான், சுழன்று கொண்டு உள்ளது.
இன்று கோளாக இருந்த சக்தி, தனக்குள் வெப்பத்தின் ஆற்றலை , அதிகமாகக் கூட்டப்படும் பொழுது அந்த வெப்பத்தின் ஆற்றலால், கோளுக்குள் இருக்கக் கூடிய உணர்வின் தன்மையும் பாறைகளும் உருகி, பல புது பொருள்களாக உருவாகி, ஆற்றல் மிக்க சக்திகளாக பெருகி, அது நட்சத்திரமாக, கதிரியக்க சக்தியாக மாறுகின்றதோ, இதை போன்று தான், அகஸ்திய மாமகரிஷி தன் சந்தர்ப்பத்தாலே, தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டார்.
தெற்கே தோன்றிய, தென்பகுதியிலே வெப்பத்தினாலான அந்த உணர்வின் தன்மை, அதாவது அந்த புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெறும்பொழுது, இப்பொழுது, எப்படி வெப்பங்கள், கோள்களுக்குள் வெப்பத்தை அதிகமாக கூட்டுகின்றதோ, அது கூடக்கூட நட்சத்திரமாக வளர்கின்றதோ, இதை போன்றுதான், தென்பகுதியில் தோன்றிய அந்த மனிதனாக உரு பெற்றபின்,
தன் உணர்வின் ஆற்றலை,
தனக்குள் அந்த உணர்வின் ஆற்றல் பெருகிப் பெருகி,
தனக்குள் சூரியனின் காந்த சக்தியை அதிகமாகப் பெற்ற
அந்த மனித உணர்வின் சக்திதான்,
விண்ணிலே பிரபஞ்சத்திலிருக்க கூடிய
அனைத்து ஆற்றலையும் தனக்குள் கவர்ந்து,
அந்த உணர்வின் ஆற்றலை அறிந்து உணரக்கூடிய சக்தி பெற்று,
அதை தன் உடலுக்குள் விளையச் செய்து,
அதையும் ஆற்றல் மிக்கதாக மாற்றி,
பேரண்டத்துக்குள் எண்ணத்தைப் பாய்ச்சி,
எண்ணத்தாலே, மற்ற சூரிய குடும்பங்களில் இருந்தும், மற்ற உணர்வின் எண்ண ஒலிகளை, தனக்குள் பெருக்கி, தன் உணர்வின் சத்து அனைத்தையும், ஒளியாக மாற்றிச் சென்றார், தெற்கிலே தோன்றிய, அந்த அகஸ்திய மாமகரிஷி.
இதைத் தான் அன்று சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகும் பொழுது, பூமியின் நிலைகள் ஒரு பக்கம் சாயப்படும் போது, பூமி நிலைகுலைந்து போகும். அதனால், அகஸ்தியனை தெற்கே அனுப்பினார் என்று கதைகள் சொன்னார்கள். தெற்கே தோன்றிய, அந்த அணுவின் தன்மைதான்,
வெப்பத்தினாலான அந்த உணர்வின் சக்தி,
தன் வெப்பத்தின் ஆற்றல் தனக்குள் கூடி,
இந்த பூமிக்கே வெப்பத்தின் தன்மை கூடி,
அது பனிப்பாறைகளை உருக்கி கடலாகப் பெருகியது போன்று, உயிரணுவாக தோன்றி, உணர்வின் சக்தியை தனக்குள் வளர்த்துக் கொண்ட, அது மனிதனாக வளர்ந்த பின், தன் உணர்வின் ஆற்றல் கொண்டு, இந்த பிரபஞ்சத்திலும், பேரண்டத்திலும் இருக்கக் கூடிய பேருண்மைகளை அறியும் சந்தர்ப்பம், முதன் முதலில் மனிதனின் உணர்வு பெற்றதன், இந்த உணர்வின் தன்மை வளர்ந்தபின், அந்த மனிதனில் விளையப் பெற்றது தான் அகஸ்தியர், அதாவது, அன்று அகத்துக்குள் அளந்தறிந்து, தான் வெளிப்படுத்திய அந்த உணர்வுகள்.
அவ்வாறு, அன்று மனித உணர்வுக்குள் சிவசக்தியின் தன்மை பெற்றுதான், அகஸ்தியரும் வளர்ச்சி பெறுகின்றார். ஆக, சிவனுக்கும் பார்வதிக்கும் எப்படி சிவத்தின் தன்மையும், சக்தியும், இரண்டும் இணைந்து ஒரு சிவ பொருள் ஆன பிற்பாடுதான், அது உரு பெறுகின்றது.
அதைப் போல, அந்த உரு பெறும் சக்தி தாய்மைக்குள் இருப்பதினால், அந்த தாய்மையின் சக்தியை தனக்குள் இணைத்து, தனக்குள் உருவின் தன்மை பெற்று, தன் உரு சக்தியைப் பெற்றபின், இந்த பூமிக்குள் வளர்ந்த நிலையை, தென் பகுதியிலிருந்துதான், விண்ணின் வெப்பத்தின் ஆற்றலை தனக்குள் எடுத்து, சிவ சக்தியாக இயக்கப்படும் பூமியாக உருப்பெறுகின்றது.
அந்த உருபெறும் தன்மையைப் போல இந்த மனிதன் ஆகி, ஆக, அந்த அகஸ்தியன் என்ற நிலைகள் தான், துருவ மகரிஷியாகின்றார். அதாவது சிருஷ்டிக்கும் தன்மையாக, "என்றும் 16" என்ற நிலையை அடைகின்றார். ஆக, இந்த மனித உடலை விட்டு, தனக்குள் ஒளி சரீரம் பெறப்போகும் பொழுது, என்றும் இளமை பருவமாக வளரும் சக்தியாக, துருவ நட்சத்திரமாக, இந்த உடலை விட்டுப் பிரிந்தபின், அந்த அகஸ்திய மாமகரிஷி, அந்த உணர்வின் சத்தான உயிரான்மா, துருவ நட்சத்திரமாகச் சென்று,
இந்த பூமியின் வடபகுதியிலே,
இன்று பூமி எவ்வாறு பிரபஞ்சத்திலிருந்து
தனக்குள் பூமியின் சுழற்சியின் ஈர்ப்புக்குள்
பல சக்திகளை பூமிக்குள் ஈர்த்து எடுத்துக் கொள்கின்றதோ,
அப்பகுதியில் தான் இன்றும் நிலைகொண்டு,
விண்வெளியிலிருந்து, பூமி இருக்கும் பகுதியிலே நின்றுதான், தனக்குள் ஆற்றல் மிக்க சக்தியை தனக்குள் வளர்த்து, துருவ நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்.
ஆகவே, நாம் அனைவரும் அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் சக்திகளை நுகர்ந்து, அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து, உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி, அவன் சென்ற எல்லையை நாமும் அடைவோம், எமது அருளாசிகள்.

(பக்கம் 82-85)
தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்ற பாடலின் உண்மை தத்துவம்
தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மகரிஷி, பேரண்டத்தின் உண்மை நிலைகளை, அதாவது, ஆதிசக்தியின் ஆற்றல்கள் கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாகி, சூரிய குடும்பத்திற்குள் கோள்களாகி, கோள்கள் நட்சத்திரமாகி, பிரபஞ்சமாகி, அந்த பிரபஞ்சத்திற்குள் தோன்றிய கோள்களுக்கு, தாவர இனச் சத்தாகி, நம் பூமிக்குள் தாவர இன சத்தை, ஒரு உயிரணு, அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து, புழுவின் தன்மை அடைந்து, புழுவிலிருந்து மனிதன் வரை தோன்றியது.
ஆக, இவ்வாறு தோன்றியது அனைத்தும் ஆரம்பக் காலங்களிலிருந்து, சந்தர்ப்பத்தின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொன்றும் உருபெறுகின்றது.
ஒன்றுக்கு ஒன்று சந்தர்ப்பத்தால் மோதும் நிகழ்ச்சிகளில் தான், ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி, ஒன்றின் சக்தி ஒன்றுக்குள் பெருகி, ஒன்றின் நிலைகள் வளர்ந்தது.
அவ்வாறு வளர்ந்து வந்த அந்த சக்தி, பூமிக்குள் வந்த உயிரணு, புழுவிலிருந்து மனிதனாக பல உயிரினங்களின் தோற்றமாக ஆனாலும், அதிலே, முன்னனியிலே மனிதனாக உருவாக்கிய அவருடைய சந்தர்ப்பம், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் அறிந்துணர்ந்து எடுக்கும் ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்றார், அகஸ்திய மாமகரிஷி.
தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை, மனித உடலான பின், மனித உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்துமே ஒளியாக மாற்றி, விண்ணின் ஆற்றல் எவ்வாறு தனக்குள் பெற்றதோ சூரியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலை தனக்குள் ஒளியாகப் பெற்றதோ ஒளி சரீரமாக மனிதனாகி, ஒரு உயிரணு, அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகப் பெற்றபின், தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி, தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளை,
இந்த உலகம், இந்த பூமி, இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது?
எவ்வாறு ஒளியானது?, வெளியானது?
என்பதை வெளிப்படுத்திய ஒலி அலைகள், நம் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதும், அதே சமயம் அந்த உயிரின் ஆத்மா, ஒளி சரீரமாக நின்று, துருவ நட்சத்திரமாக நின்று, வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் அலைகளைத் தான், தென்னாடுடைய சிவனே போற்றி என்று உணர்த்தப்பட்டது.
ஆக, தென்னாட்டுக்குள் இந்த மனித உடலான சிவத்துக்குள், பேரண்டத்தின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய, அந்த உணர்வின் தன்மை தான், அகஸ்திய மாமகரிஷி காட்டிய வழிப்படி, அவர் அருள் நெறிப்படி, அவர் வழிகளிலே சென்று, அவர்கள் வெளிப்படுத்தி உபதேசித்து உணர்த்திய அந்த அருள் சக்தியை, எந்நாட்டவரும் நுகர்ந்து, தாம் சுவாசிக்கும் போது, அந்த சுவாசித்த உணர்வின் சக்தி, அவர்களுக்குள் இறையாகி, இந்த இறையின் சக்தியின் உணர்வின் ஆற்றலை, பேரண்டத்தின் உண்மையைப் பெறும் பாக்கியமாக, அது பெறமுடியும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்கள், அதன் உட்பொருளே இதுதான்.
ஆக தென்னாட்டிலே தோன்றிய காரணம்,
தென்னாட்டிலே வெப்பம் அதிகம்.
அந்த உணர்வின் தன்மையிலே, தான் வளர்ந்து, இந்த பூமிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் உணர்வின் ஆற்றல், தென்னாட்டிலே தோன்றியது, என்று காட்டுவதற்குத் தான் அதை உணர்த்தினார்கள்.
எந்நாட்டவரும் அவர்கள் எடுக்கப்படும் பொழுது, அது இறையாக அமைந்து, உணர்வின் சக்தியாக வளர்க்கப்படுகிறது. அந்த நிலைகளுக்கு அனைவரும் செல்லலாம். அந்த உணர்வை, தென்னாட்டிலே உள்ள நாம் அனைவரும் பெறத் தகுதி பெற்றவர்கள்தான்.
ஆக, தென்னாடான இந்நாட்டில் அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஆற்றல் படர்ந்து கொண்டிருப்பதும், அவர் வாழ்ந்த காலத்தில், இந்நாட்டில் அவருடைய பாத அலைகள், அவர் உடலின் உணர்வலைகள் படர்ந்துள்ளது.
ஆங்காங்கு, எங்கெங்கெல்லாம் அவர் சென்று தங்கி, மெய்யுணர்வின் தன்மையை தான் பெறவேண்டுமென்று இந்த பூமி முழுவதற்கும் சென்றவர்தான். இந்த பூமிக்குள் அனைத்து இடங்களிலும், தென்துருவம் வடதுருவம் அனைத்தும் சென்று வந்தவர்தான்.
அதிலே தென்னாட்டிலே தோன்றிய இந்த மனிதன் தான், தனக்குள் உணரும் ஆற்றலைப் பெருக்கி, அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர் உணர்வின் ஆற்றலை பரப்பினார்.
ஆரம்பத்தில், இந்த பூமியின் தன்மை, பிரபஞ்சத்திலிருந்து தான் ஈர்க்கும் அனைத்து சக்திகளும், வடதுருவத்தில் குவியப்படும்போது, அது குவிந்து, பூமியின் தன்மை சிவ சக்தியாக, பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் என்று
இரண்டும் இணைந்து சக்தியாக,
பல உணர்வின் சக்தி, ஒன்று சேர்த்து
ஒரு சிவமாக இருக்கக் கூடிய அந்த நிலையைத் தான்
கல்யாணமாகும் போது, தெற்கே அகஸ்தியரை
சிவன் அனுப்பினான் என்று
தெற்கே தோன்றிய, அந்த அணுவின் வெப்ப அணுக்கள் தான், இந்த பூமிக்குள் வெப்பமாகி - வடதுருவத்துக்குள் பூமிக்குள் வெப்பத்தை அதிகமாகக் கூட்டி வளர்ந்து அந்த அணுவின் தன்மை, அந்த வடதுருவத்தின் தன்மையை நீராக மாற்றியது.
அதே போன்று, அந்த தென் பகுதியிலே தோன்றிய அந்த அணுவான அந்த சக்தி, அது உயிரணுவாகத் தோன்றி, அது வளர்ச்சி பெறும் தகுதியைப் பெற்றபின், எப்படி நீர் சக்தி இந்த பூமிக்கு முக்கியமாக அமைந்ததோ, அதைப் போன்று, அகஸ்திய மாமகரிஷி பேரண்டத்தின் உணர்வின் சக்தியை, தமக்குள் வளர்த்து இந்த பூமியின் அனைத்து இடங்களிலும் மனிதன் என்ற உணர்வின் ஆற்றலை, அதாவது, மெய் ஒளியாகப் பெறும் ஞானத்தின் ஒளிச் சுடராக, இந்த பூமி முழுவதற்கும் படரச் செய்து, இந்த பூமிக்குள் மனித உருவின் நிலையும், மனிதனுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கும் தன்மையை, அது வெளிப்படுத்தி, அந்த உணர்வின் அலைகள் இருப்பதனால்தான், இன்று பூமிக்குள் மற்ற மனிதர்கள் சிந்தித்து, அதனதன் வழிகளில் செல்லப்படும் பொழுது,
ஆதிமுதல்,
ஆதி மனிதனாக,
ஆற்றல்மிக்க மனிதனாக,
ஆதிசக்தியாக,
ஆதிசக்தியின் உணர்வாக வளர்ந்தவர், அகஸ்திய மாமகரிஷி.
ஒரு அணுவுக்குள் இயக்கும், உணர்வின் ஆற்றலின் தன்மையை வெளிபடுத்திய, அந்த உணர்வின் ஆற்றலைத்தான் அகஸ்தியன் என்றது.
அதனால்தான், அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை மிகக் குறுகிய உடலாகப் போட்டு, உடல் குறுகி இருந்தாலும், உணர்வின் ஆற்றல், பேரண்டத்தில் எட்டித் தாவும் நிலைகள்.

ஒரு அணுவின் தன்மை சிறியதாக இருந்தாலும், யானை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது சுவாசிக்கும் உணர்வின் அணு சிறியது தான். ஆனால், சுவாசித்த உணர்வின் அணுவின் தன்மை, பெரிய யானையின் உடலையும், அது இயக்குகின்றது.
இதை போலத்தான், அகஸ்தியருடைய ஆற்றல், அவருடைய எண்ணத்தின் அலைகள். அவருடைய உடலின் தன்மைகள் குறுகியிருந்தாலும், பேரண்டத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்கி, ஒளியின் சரீரமாக, அதைப் பெருக்கிய நிலைகள் கொண்டுதான், அன்று அந்த அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை அமைத்து, பின்னால் வந்த ஞானியர்கள் அதை உணர்த்தி சென்றார்கள்.
ஆகவே, நாம் அனைவரும், அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோமாக, எமது அருளாசிகள்.
(பக்கம் 78-80)
அகஸ்திய மாமகரிஷி, தனக்குள் தன் உணர்வின் ஆற்றல் பெற்று, விண்ணிலே சென்றபின், அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது. பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தி, அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில், அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள், எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருக்கின்றது, அதை நாம் அனைவரும் பெற முடியும்.
இப்பொழுது நாம் எந்த குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ, இதைப் போன்று,
அகஸ்திய மாமகரிஷி தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை,
வெளிப்படுத்திய நிலையும்,
வளர்ந்த நிலையும்,
தான் வளர்ந்து கொண்ட நிலையும்,
வளரவேண்டிய நிலையும்,
தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள், இங்கே பரவிக் கொண்டிருக்கின்றது.
அந்த வளர்ந்த நிலை, வளரவேண்டிய நிலை, இவை அனைத்துமே எவ்வாறு? என்ற நிலைகளைத் தான், விநாயக தத்துவத்தில், கேள்விக் குறியாக விநாயகனை வைத்துச் சென்றார்கள்.
விநாயகனைப் பார்க்கும் பொழுது, மேற்கே பார்த்து, இந்த விநாயகனை வைத்திருக்கும் - நீர் நிலை இருக்கும் பக்கம்தான், ஏனென்றால், அது ஜீவநீர், ஆக அந்த ஜீவநீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி, நாம் நீரிலே மூழ்கி வந்தபின், இந்த விநாயகரைப் பார்த்ததும், நம் கண்ணுக்குள், இந்த கதையாக உணர்த்திய, நினைவலைகள் வருகின்றது.
நாம் இந்த உடலை, மிருகத்திலிருந்து மனிதனாகப் பெற்றோம், என்ற உண்மையை உணர்த்திய அந்த மகரிஷி, துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி, வானை நோக்கி எண்ணும் பொழுது, அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகி, அந்த சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின், அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு, எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றல் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.
அப்பொழுது, அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய அந்த உணர்வின் ஆற்றல், அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள், இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால், அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது. அப்பொழுது அந்த சந்தர்ப்பம், நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையை நாம் பெறக்கூடிய நிலையை, அங்கே பெற முடிகின்றது.

ஆக, எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே சென்றானோ, அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான்.