youtube

1 September 2012

இறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Sunday, July 29, 2012பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்! இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Posted by iyyappan selvam at 9:47 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Thursday, July 26, 2012சூலினி கவசம் - சிவ ரகசியம் சிவ ரகசியம் ஓம் அதவக்ஷ்யே மஹா குஹ்யம் கவசம் ஸர்வ ஸித்திதம் ஸமாஹிதேந மனஸா ஸ்ருணு கல்யாணி தாத்ருசம் சூலின்யா : கவசந் திவ்யம் ஜகத்ரக்ஷண காரணம் ஸர்வ ஸித்தி ப்ரதம ச்ரேஷ்டம் ஸர்வ பாப விநாசனம் ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வைஸ்வர்ய ப்ரதாயகம் பிரஹ்மக்ஞான கரம் ஹ்ருதயம் பீஷணம் ஜயவர்த்தனம் ஸர்வ ரோகஹரம் சாந்தம் ஸர்வ ரக்ஷõகரம் பரம் ருஷிர் தேவ்யா கவசஸ்ய ம்ருத்யஞ் சயமுதா ஹ்ருதம் உஷ்ணிக் சந்தஸ் ததா தேவீ தேவதா ஜகதம்பிகா தும்காரம் பீஜ மித்யுக்தம் ஸ்வாஹா சக்தி : ஸ்தத : பரம் ஸர்வாபீஷ்ட ஸித்தியார்த்த விநியோகோ வராணனே மாயா த்யைஸ்ச (ஹ்ரீம்) கரந்யாஸம் ஷடங்கம் ப்ரணவாந்விதம் தியானம் தாபிஞ்ச ஸ்நிக்த வர்ணாம் தஸ்ஸ்த வதனாம் சந்திரரேகா வதம் ஸாம், ஹர்யக்ஷ ஸ்கந்த ரூடாம், த்விதச சதபுஜாம் ஹாட வாஸோ வ்ருதாங்கீம் த்யாயேஹம் வைரி லோகத்ருதன பரீனதாம் க்ரீட தாலோ ஜிஹ்வாம் தேவீம் க்ரீடாம் ஸுமேதாம் ப்ரணத பயஹராம் ரக்ஷிதா சேஷ லோகாம். பஞ்ச பூஜை ஓம் ஜயேஸ்வர்ய க்ரத: பாது ப்ருஷ்டதோ விஜயேஸ்வரி அஜிதாவாத: பாயாத் தக்ஷிணாம்மே பராஜிதா அபர்ணா நயனம் பாது மான்தோ காக்ஷி தக்ஷிணா அம்பிகா மேளிகம்பாது முகம் ஹைமவதீ ததா ஜிஹ்வாம் பாது மஹா வித்யா லம்பிகாக்ரம் ஸரஸ்வதி ஸத்யம் பிகாம போர்த்வோஷ்டம் லக்ஷ்மீர் மேதர பல்லவம் த்ருந்யம்பிகா பாதுமே தந்தாந் கௌமாரி சிபுகம்ததா தாலும் பீமஸ்வநா பாது கபோலௌனே பயங்கரீ இந்திராணி பாதுமே கர்ணௌ இந்திரநாதா ஹநுர் மம க்ரீவா பார்ஸ்வம் மஹா சக்தி : க்ரீவாம்மே பரமேஸ்வரி கராளீ தக்ஷிண ஸ்கந்தம் வைஷ்ணவீ பாது வாமகம் அச்யுதா தக்ஷ தோர்தண்டான் அனந்தா பாது வாமகம் தக்ஷகூர்பர மீஸானி திரிசூலி பாதுவாமகம் ஜ்வாலா முகீபிர கோஷ்டம்மே பாது பத்ராச வாமகம் பைரவீ மணிபந்தௌமே வாமாங்குஷ்டம் மகேஸ்வரீ கரப்ருஷ்டேது வாராஹி விகடாங் மீது வாமகம் கரஸ்தலம் ஸஹஸ்ராக்ஷீ ரோக ஹந்த்ரீது வாமகம் அகோரா தக்ஷிணாங்குஷ்டம் கோர ரூபாது தர்ஜனீ மத்யமாம் முக்தகேசீச அநாமிகாந்து மஹாபலா மாயா கனிஷ்டிகாம் பாது பர்வாணீ விஷநாசினீ நகாரி மேகராளாஸ்ய வாமாங்குஷ்டம் மஹோதரீ தர்ஜனீம் ரக்த சாமுண்டி மேக நாதாது மத்யமாம் அனாமிகாம் ரௌத்ர முகீம் காளி பாது கணிஷ்டிகாம் பர்வாணீ காளராத்ரீமே நாரஸிம்ஹி நகாநிமே ஜடிலா தக்ஷிணம் தக்ஷம் வாமகக்ஷம் வயஸ்வினி வ÷க்ஷõ ஜ்வாலாமுகீ பாது ஹிருதயம் கிருஷ்ண பிங்களா நாராயணீ ஸ்தன த்வந்த்வம் ருத்ராணீ மத்ஸ்த நாக்ரகம் ஜடாம் பத்ர காளீமே சண்டிகா ராத்ரம் ததா தத்தக்ஷிண மனந்தாமே தத்வாமம் பிரஹ்மவாதினீ ஸாவித்ரீ பாது நாபிம்பே காயத்ரீமே கடித்வயம் த்வரிதா பாதுமே குஹ்யம் பிரஷ்யாகம் சதானனா யோகேஸ்வரி குதம் பாது ஜகனம் லோக மோகினீ ஊருயுக்மம் வசுமதி சண்டகண் பாது ஜானுனீ ஜங்கே காத்யாயினி பாது குல்பே மஹிஷ மர்த்தினி சாகம்பரீ பாத ப்ருஷ்டே கௌரீம் பாதாங்குளீ மம ஸூக்ஷ்மா பாததலம் பாது பாத பார்ஸ்வ மனஞ்ஜநா ஸர்வாங்கம் பாதுமே புஷ்டிஸ் ஸர்வசந்திம் மதத்ரவா ஜ்வாலினி ரோம கூபாணி வஸுதாரா த்வசம் மம வஸுதா சர்மமே பாது ருதிரம் மதனாவதி தீவ்ராமம் ஸத்வயம் பாது மேதாமே விக்ன நாஸினி மமாஸ்தி போகதா பாது சுக்லம்மே காம ரூபிணி மூலாதாரம் உமா பாது ஸ்வாதிஷ்டானம்ஞ்தம்பிகா அம்ருதா மணிபூரம்மே அநாகதம் கமலேக்ஷணா விசுத்தி பாதுமே நாதாள்து சாக்ஞாம் பராமம ஜாதவேதாக்னி ஹோமே பிரும்ம ரந்திரம் ஸதாவது சூலினி சகலம் பாது அனுக்தாங்கம் மஹாபலா ஜாகரூகா கிரியா வஸ்தாஸு பத்னீம் பத்மாஜினீ ததா சங்கரீ பாதுமே புத்ரான் புத்ரீஸ்ச கமலாஸனா ஸஹஜாந் சாம்பவீ பாது ஸுபகா ஸுமுகம் மம பத்மகேசீ குலத்வந்த்வம் துஷ்டான துஷ்டாப ஹாரிணீ பவனம் புவ நாகார நகரீம் நகரேஸ்வரீ த்ராவிணி பாது ராஜ்யம்மே ராஜ்யாஞ்ச ÷க்ஷõபதாயினி ராஷ்ட்ரஞ்ச மஹதீ பாது ப்ரஜாம் சர்வ வசங்கரீ ஸ்ரீதேவி தநதாந்யாந்மே ஸர்வத : ஸர்வ ஸம்பதா இதி குஹ்யம் மகா வீர்யம் தேவ்யா கவச மத்புதம் பாவநம் ஸர்வ விஷயம் பரமாயுஷ்ய வர்த்தனம் அபேத்யான் அதுலான் நான பூதப்ரேத நிபாஹணம் கிமத்ரபஹு நோக்தேன சதுர்வர்க்க பலப்ரதம் திரிஸந்தியம் யோஜபேந்நித்யம் ந்யாஸ பாவயுதர்ஸ்சி சரீவ தஸ்ய ஸர்வபயம் நாஸ்தி விஜயஸ்ச பதே பதே கவசே நாவ்ருதோ வித்வாந்ஸம் பூஜ்யஸகலை ரபி அநேநைவ சரீரேண ஜீவன் முக்தோ பவத் சிவே இதி சிவ ரகஸ்யே ஷட்த்ரீம் சோத்யாய : Posted by iyyappan selvam at 10:43 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Wednesday, July 25, 2012ஷீரடி சாயிபாபாவின் உறுதி மொழிகள் 1. ஷீர்டியில் காலடிபடும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும். 2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன். 3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடோடி வருவேன். 4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும். 5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியமென்றறிருந்து அனுபவம் பெறுவீர். 6. என்னை சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினான் என்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்குக் காண்பியுங்கள். 7. பக்தர் என்னை எப்படிப்பட்ட பக்தியுடன் உணருகிறானோ, அப்படிப்பட்ட அனுபவங்கள் அவனுக்குத் தருவேன். 8. எப்பொழுதும் உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன். என் வாக்குப் பொய்யாவதில்லை. 9. நீங்கள் கேட்பது எல்லாம் நான் கொடுப்பேன். என் உதவியையும், அருளையும் அள்ளித்தர நான் காத்திருக்கிறேன். 10. பக்தியுடன் என் மொழிகளை மனதில் ஏற்பவனுக்கு நான் கடன்பட்டவன் ஆவேன். 11. என் திருவடிகளை அடைந்த பக்தன் பெரும் பாக்கியவான் ஆவான். Posted by iyyappan selvam at 10:50 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா? கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன? மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள். Posted by iyyappan selvam at 4:54 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Monday, July 23, 2012ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் சிறப்பை அறிவோம்! ஆண்டாள் முகம் பார்த்த கண்ணாடி: ஆண்டாள், ரெங்கமன் னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள் வார். தான் அணிந்த மாலை எப்படியிருக்கிறது என இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார். அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலஸ் தானத்தின் முன்புறம் இக்கிணறு உள்ளது. இக்கிணற்றை கண்ணாடி கிணறு என அழைக்கின்றனர். -ஜானகிராமன், ஸ்ரீவில்லிபுத்தூர். மறுமையில் இன்பம் அடையும் வழியுண்டு: பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் தான் பெரியாழ்வார். பெரியதொரு நந்தவனம் அமைத்து வடபெருங்கோயில் உடையானுககு திருமாலை கட்டிச்சாற்றி வந்தார். அக்காலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண் டிய நாட்டை ஆண்டு வந்தான். ஒரு நாள் நகர சோதனைக்கு சென்ற போது ஒரு வீட்டுத்திண்ணையில் உறங்கும் ஒரு அந்தணரைக் கண்டார். அவர் மூலம் "மறுமையில் இன்பம் அடைய, இப்பிறப்பிலே முயற்சி செய்ய வேண்டும் என்ற விசயத்தைப்புரிந்து கொண் டார். அரசனும் தன் புரோகிதரான செல்வநம்பியிடம் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என்று கேட்க, அவரிடம் வித்வான்களைக் கூட்டி பரம் பொருளைப்பற்றி நிர்ணயம் செய்வித்து அவ்வழியாலே பேறு பெற வேண்டும் என்று சொல்ல, அரசனும் இசைந்து பெருந்தனத்தை ஒரு வஸ்திரத்தில் முடிந்து ஒரு தோரணத்திலே கட்டச் செய்தார். பரதத்வ நிர்ணயம் செய்பவர், இப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம் என்று வித்வான்களுக்கு அறிவித்தார். வடபெருங்கோயிலுடையான் விஷ்ணு சித்தருடைய கனவில் தோன்றினார். நாமேபரம தெய்வம் என்று நிர்ணயம் செய்து, நீர்போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வா என்றார். விஷ்ணு சித்தரின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். கனவு கலைந்தது. மறுநாள் அரசபை சென்றார் விஷ்ணு சித்தர். அங்கு ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் என்றார். பொற்கிழி இவர் முன்னே தான தாழ வளைந்து தந்தது. அப்பொற்கிழியை அறுத்து வசப்படுத்தினார். ஸ்ரீவல்லப தேவன், ஆழ்வாரை தனது பட்டத்து யானை மேலேற்றி வலம் வரச் செய்தார். இவருக்கு ஸ்ரீமத்நாரயாணன், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிகளுடன் காட்சி தந்தார். விஷ்ணு சித்தரை பெரியாழ்வார் என அழைத்தார். பொற்கிழியுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பணிகள் பல செய்தார். நந்தவனம் அமைத்து பூக்களைக் கொண்டு திருமாலை கட்டி கடவுளை வணங்கினார். ஆண்டாளை கண்டெடுத்து வளர்த்தார். திருப்பாவை, நாச்சியார் திருமொழியை உலகுய்யப்ப பாடுவதற் கும் காரணமாயிருந்தது. அவரை அரங்கனுக்கே அர்ப்பணித்த பெருமையுடையராவார். - ஏ.எம்.எம். ராதா சங்கர், பர்வீனு இண்டஸ்ட்ரீஸ், ராஜபாளையம். ஸ்ரீராமானுஜரை வரவேற்கும் ஆண்டாள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத் தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார். -எஸ்.என். பாலசுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் திருஷ்டிக்காக பாடிய பாடல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும். "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று துவங்கி "திருப்பல்லாண்டு பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார். அதுவரையில் "விட்டுசித்தன் (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது. திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்? ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான். ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது. 108 கம்பளி: கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபாலவிலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர். அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள். பாவை நோன்பு: பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை. கன்னிகாதானம்: பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பின் ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கிக்கொள்கிறார். திருமாளிகை: ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர் கொடுத்தாராம். எனவே, இக்கோயிலை "நாச்சியார் திருமாளிகை என்று சொல்கிறார்கள். முத்துப்பந்தல்: ஆண்டாள் சந்நிதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. மாப்பிள்ளை அலங்காரம்: திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர். இதுபோல இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் மட்டுமே இவர் வேஷ்டி அணிந்திருப்பார். தமிழக அரசு சின்னம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர், ""திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம் என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார். பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்: ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது. பெருமாள் பெயர் சூட்டிய பெரியாழ்வார்: பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார் என்று பெயர் சூட்டினார். பூமியைக் காட்டிய அம்பாள்: ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள். ராஜாங்க கோலம்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம். கருடாழ்வாரின் மூன்று பதவி: கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார். முப்புரிஊட்டிய தலம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் (சுயம்பு) ஆகிய மூன்று பேர் அவதரித்த பெருமையுடையது. எனவே, இத்தலத்தை "முப்புரிஊட்டியதலம் என்கின்றனர். திவ்யதேசங்களில் புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது. 108 திவ்யதேச சுவாமிகள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம். நீதியை நிலைநாட்டிய ஆண்டாள்: துவாபர யுகத்தின் முடிவில் பாரத யுத்தத்திற்கு பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அவதார காரியங்கள் முடிந்து பகவான் பரந்தாமன் வைகுண் டத்திற்கு புறப்பட்டார். அப்போது தன் பக்தர்களையும் உத்தமர்களையும், சாதுக்களையும் அழைத்து, "துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க, அதர்மத்தை அழித்து தர்மத்தை காத்து, அநீதியை அழித்து நீதியை நிலைநாட்ட நான் எடுத்த அவதாரக் காரியம் முடிந்தது. இனி முனிவர்களும் சான்றோர்களும் குருபரம்பரையினர்களும் தோன்றி நம் திருவருளைப் பெற்று மக்கள் கலியின் பிடியிலிருந்து நீங்கி சமுதாயம் விடுதலைப் பெற்று இன்புற்று வாழ வழிக்காட்டுவார்கள் என்ற அருளிச் செய்தார்.அதற்கு ஏற்பவே ஆழ்வார்கள் தோன்றி பக்தியில் ஆழ்ந்து பரந்தாமனின் கல்யாண குணங்களையும் அவன் திருநாமங்களையும் பாசுரங்களாக பாடி உலகம் உய்ய செய்தனர். அவர்களில் ஆண்டாள் அருள் செய்த அமுதமொழிகளை நாம் பாடியும், கேட்டும் மகிழலாம். அதற்காகவே ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. அந்த நாட்களில் அறிஞர்களும், பாகவதர்களும் ஆண்டாளின் அமுத மொழிகளை பாடியும், கேட்டும், மகிழும் வாய்ப்பாக ஆடிப்பூரத்திருவிழா அமைந்துள்ளது. - கே.சேகர், ஸ்ரீமாடன் ஏஜென்சி, ஸ்ரீவி., ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை: அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். மட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, "கோதை பிறந்த ஊர், "கோவிந்தன் வாழும் ஊர் என்றும் சிறப்பித்து சொல்வர். ஆகவே, 108 திவ்யதேசங்களில் இல்லாத பெருமை இத்தலத்திற்கு கிடைத்துள்ளது. ஆண்டாளுக்காக தனி விழாக்கள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார். ஸ்ரீ ரெங்க மன்னார் நீங்கலாக ஆண் டாளுக்கு மட்டும் தனித்து சில விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. - திருவேங்கட ராமானுஜதாஸ், ஸ்ரீவித்யா கல்லூரி சேர்மன், விருதுநகர் பச்சைப் பரத்தல்: வில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, "பச்சைப்பரத்தல் என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது. உன்னதமான பசியாற்றல்: அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதை அதிகமாக வெளிப்படுத்துவதும், புரிந்து கொள்வதும் மனிதர்களால் மட்டுமே முடியும். இப்படிப்பட்ட அன்பும், பரிவும் பல வழிகளில் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இதில் சரீர, ஒத்தாசை, தன, தான்ய உபகாரம் போன்றவை அடக்கம். இவற்றினால் மக்களுக்கு தற்காலிக சந்தோஷம், திருப்தி கிடைக்கும். நாம் செய்யும் பொருளுதவியால் அதை பெறுபவர்கள், வாழ்த்தும் வாழ்த்தானது முழுமனதுடன் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதே சமயம் ஒருவருக்கு வயிறார உணவு அளித்தால் அதன் பின் அவர்கள் வாழ்த்தும் வாழ்த்தை என்னவென்று சொல்வது. "வயிறார வாழ்த்தினார் என்பதை சற்று அலசிப் பார்க்கும் போது முழுவதுமாக நிறைவு பெற்ற வயிற்றில் வேறு எதுவும் செல்லாது. எனவே மனதும் முழு திருப்தி அடைகிறது. எனவே பசியாற்றுதல் என்பது ஒரு உன்னதமான காரியமாகும். - டி.கலசலிங்கம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் சேர்மன். 3 வாசலுடன் பெருமாள்: இத்தலத்திலுள்ள மூலவர் வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது. ஆனால், சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. உயிர் பெற்ற தேர் சிற்பங்கள்: ஆண்டவனையே தன் பால் காதல் கொள்ள வைத்து ,தன்னை ஆட் கொள்ள மண்ணுக்கு வரவழைத்த அற்புத பெண்ணான ஆண்டாள் ஆடி மாதத்தில் அவதரித்தாள். ஸ்ரீவி.,யில் 9 பெரிய கரங்கள் தேரின் ஓட்டத்திற்கு உறுதுணை யாக உள்ளன. இவற்றை எந்த வரிசையில் இருந்து பார்த்தாலும் 9 என்ற எண் வரும். இதேபோல் தேர் இழுக்க மாட்டப்படும் வடமும் ஒன்பது. ராமாயண மகாபாரத கதைகளோடு திருவிளையாடல் புராணக் காட்சிகளும் தேரில் இடம் பெற்றுள் ளன. வைணவ, சைவ ஒற்றுமைக்கு இந்த தேர் எடுத்துக்காட்டாகும். மகா விஷ்ணு தனக்குரிய பலவித மான வாகனங்களில் வருவது போலவும், மதுரை மீனாட் சியம்மனும், சொக்கரும், தங்களுடைய வாகனங்களில் வரு வது போலவும் காட்சிகள் சிற்பி யின் கைத்திறனால் உயிர் பெற்று காட்சியளிக்கின்றன. -பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா, ராம்கோ குரூப்சேர்மன், இராஜபாளையம். தவக்கோல வடிவில் அர்ச்சுனன்: ஆண்டாள் கோயிலின் திருக் கல்யாண மண்டபத்தில்ஏராளமான தொன்மையான ராமாயண ஓவியங்களை காணலாம். லட்சுமணன், ராமன், வீணை ஏந்திய கலைமகள், அகோர வீரபத்திரர், தி, வேணுகோபாலன், விஸ்வகர்மா, நடனமாது, சமுத்திர குமாரன் மகன் ஜலந்தரன், மோகினி சிலைகள் உண்டு. கண்ணாடி மாளிகை எதிரே உள்ள தூண்களில் அன் னத்தின் மீது ரதி, நீர்த்துவ முக வீரபத்திரர், கிருஷ்ணனின் தேரோட்டி, நாக பாணத்தை கையேலேந்திய கர்ணன், மன்மதன், ஊர்த்துவ வீரபத்திரர், தாரை தப்பட்டையுடன் குகன், தவக்கோல வடிவில் அர்சுனன் சிலைகளும் உள்ளன. - முத்து பட்டர் ஆண்டாள் அருள் பெறுவோம்: கண்ணனை நினைத்து மார்கழி மாதம் ஆண்டாள், 30 நாட்கள், 30 திருப்பாவை பாடல்களை பாடினாள். பின்பு இறைவனை நினைத்து நாச்சியார் திருமொழி என்ற பாசுரங்களையும் பாடினாள். ஆண்டாள் பிறந்த ஆடி பூரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை புரட்டாசி மாதம் ஐந்தாம் திருவிழா கருடசேவையன்று திருப்பதி எழுமலையான் அணிந்து கொள்கிறார். சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியன்று அழகர் மதுரையில் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார். தெய்வீக மணம் கமழும் ஸ்ரீவி., ஸ்ரீஆண்டாள் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டுஆண்டாள் அருள் பெற அழைக்கின்றோம். -செ.பாலகிருஷ்ணன், சுந்தரேஸ்வரி பி.எட்., கல்லூரி. விரும்பியவர் கணவராக பாவை நோன்பு: பெண்கள் விரும்பிய மாணாளனை அடைய பாவை நோன்பு இருக்க வேண்டும். பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஆண்டாள், பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். அதற்காக கண்ணனை மண முடிக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த பெருமாள், பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது பெரியாழ்வார் தன் வீட்டிற்க செல்லும் போது அவரது வம்சாவழியினர் சேர்ந்து இரண்டு கலசத்தில் தீர்த்தம் எடுத்து கொண்டு ரங்க மன்னாருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி கன்னிகா தானம் செய்து கொடுக்கிறார். பின் ரெங்க மன்னார் ஆண்டாளக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கி கொள்கிறார். ஆகவே பாவையர் தாங்கள் விரும்பிய கணவரை கைபிடிக்க பாவை நோன்பு இருத்தல் அவசியமாகும். வி.பி.எம்.சங்கர்,வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள்தலைவர், ஸ்ரீவி., திருப்பாவை விமானத்தின் சிறப்பு : கண் கவரும் விமான சிற்பங்கள்: மார்கழி மாதம் நோன்பிருந்த ஆண்டாள் திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினார். மார்கழி மாத 30 நாளுக்குமான 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். இதனை குறிக்கும் வகையில் ஆண்டாள் கோயில் விமானத்தின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் தோழியர்களை ஆண்டாள் எழுப்புவது, அவர்களை அழைப்பது என பல சிற்பங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. திருப்பாவை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதால் இதனை "திருப்பாவை விமானம் என்றே பெயர் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசிக்க வருபவர்கள் இம் விமானத்தை தரிசித்தால் திருப்பாவை பாடிய அருளை பெறுவர். ஆர்.சத்திய மணி,சக்தி டிராவல்ஸ், சக்தி குரூப்ஸ் நிறுவனங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர். ஏலே ஆண்டாளு: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே!. ஸ்ரீவி., திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக "ஏலே என்ற வார்த்தை ஸ்ரீவி.,யிலும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை "எல்லே என்று இருந்ததாம். இவ்வார்த்தையைக் குறிப்பிட்டு திருப்பாவையில் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். எல்லே என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து "ஏலே என ஆனது. இப்பகுதியில் குழந்தைகளை ஆணாயினும், பெண்ணாயினும் "ஏலே என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்துவிட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், "ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம். -எஸ்.கார்த்திக், மேனகா கார்ட்ஸ், ஸ்ரீவி., கோதை கண்ட தமிழ்ப்பாதை: அரங்கனை ஆட்கொண்டதால் கோதை, "ஆண்டாள் என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள். பூமாலை சூடிக் கொடுத்த ஆண்டாள் பாமாலை சூட்டவும் தவறவில்லை. வடமொழிச் சொல்லை கலவாமல் தூய தமிழில் திருப்பாவை, திருமொழி பாடல்களை தமிழுக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார் என்பது நாம் செய்த பாக்கியமே. திருப்பாவை பாசுரங்கள் அத்தனையும் தூய்மையான, ஆழமான பக்தி நிறைந்தவை. நாச்சியார் திருமொழியோ கவிதானுபவமும், கற்பனை வளமும் நிறைந்து காணப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களுக்கென்று ஒரு பக்தி நோன்பு இருக்குமானால் அது ஆண்டாள் தொடுத்த திருப்பாவை ஒன்று தான். தமிழ் பேசத் தெரியாத வடமொழி மாநிலங்களிலும், நேபாளம், கர்நாடகா, ஆந்திர மாநில வைணவ கோயில்களில், வழிபாட்டின் போது தமிழ் உச்சரிப்பு மாறாமல் இந்த திருப்பாவை சொல்லப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தியவர் "ஸ்ரீ ராமானுஜர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று தேர்த்திருநாள். பார் போற்றும் பாவை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரெங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருளி ஸ்ரீவி., ரத வீதிகளில் பவனி வரும் பொன்னாள். இந்நன்னாளில் நாம் ஆண்டாளை வணங்கி அவர் அருள் கிடைக்க பிரார்த்திப்பதோடு தினமும் திருப்பாவை பாடல்களில் ஒன்றையாவது பாடி, மகிழ கேட்டுக் கொள்கிறேன். - எஸ்.ராஜேஸ்கனி,வி.ஏ. டிரேடர்ஸ், ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கிளி ஏன்? கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. புத்திசாலியான பெண் குழந்தை வேண்டுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, "வர்ணகலாபேரர் என அழைக்கின்றனர். இவரது சந்நிதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது. பெருமாள் அருகில் கருடாழ்வார்: பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார். ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார். இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு நிற்பதாகவும் சொல்வர். கிளி செய்யும் முறை: இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது. கீர்த்தி தரும் ஆண்டாள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர். வளையல், மஞ்சள்கயிறு பிரசாதம்: திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக்கொள்கிறார்கள். துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்: ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர். சூடிக் கொடுத்த நாச்சியார்: ஆடி மாதம் ஸ்ரீவி., நகரம் தனி பெருமையை சூடிக் கொள்ளும். ஆண்டாள், ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார், நந்தவனத்தில் துளசி மாடத்தில் ஆண்டாளை குழந்தையாக எடுத்து வளர்த்து வந்தார். மங்கையான ஆண்டாள், கண்ணன் மீது பற்றுக் கொண்டு, அவர் மீது காதல் கொண்டு, அவனையே மணவாளனாக நினைத்தாள். இறைவனுக்கு அணிவிக்க பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையே ஆண்டாள் சூடி, கிணற்றில் தன் அழகை பார்த்தாள். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே இறைவனும் அணிந்து கொண்டார். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள். - முருகதாஸ், டால்பின் கம்ப்யூட்டர்ஸ், ஸ்ரீவி., அழகு பார்த்த ஆண்டாள்: திருமகளாய் சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஸ்ரீ ஆண்டாள் அவதாரம் செய்த புண்ணிய பூமியாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர்.பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு துளசிச் செடியின் அடியில் கலிபிறந்து 98 நிகழ்ந்த நள வருடத்தில் ஆடிமாதம் 8ம் தேதி செவ்வாய்க் கிழமை கூடிய பூரநட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள். கோதை தம் தந்தையாகிய பெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்குச் சாற்றுவதற்காக தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, தாம் கண்ணபிரானுக்கு ஏற்ற மணப் பெண் தானா? என்று அழகு பார்க்க, இதனை அறிந்த பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தியவராய் அம்மாலைகளை எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் இருந்தார்.அன்று ஆழ்வாரின் கனவில் எம்பெருமான் தோன்றி தமக்கு கோதை சூடிக்களைந்த மாலையே சிறப்பு என்று கூற அன்று முதல் கோதை "ஆண்டாள் என்றும் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டார். இன்று ஆண்டாள் - ரெங்கமன்னார் தேரில் அமர்ந்து வீதி உலா வருகின்றனர். - ஏ.ஆர்.லட்சுமணன் Posted by iyyappan selvam at 10:04 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Sunday, July 22, 2012சேவல் கொக்கரக்கோ என்று கூவுவதன் பொருள் என்ன? கஷ்யப முனிவரின் புத்திரனான சூரபத்மன் என்னும் அசுரன், விண்ணுலக தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளை உருவாக்கினார். அவை கங்கையில் தவழ்ந்து குழந்தைகளாக மாறின. ஆறுகுழந்தைகளும் இணைந்து "கந்தன் என்னும் மாபெரும் சக்தியாக வடிவெடுத்தது. அன்னை பராசக்தி, தன் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய வேல் ஒன்றை மகன் கந்தனிடம் வழங்கினாள். சக்திவேலை ஏந்திய கந்தன் அழகில் மன்மதனையும் மிஞ்சியதால் "முருகன் எனப்பட்டான். "முருகன் என்றால் அழகன். அவன் சூரனுடன் போருக்குப் புறப்பட்டான். சிறுவா! பால் மணம் மாறாத பாலகனான நீயா என்னுடன் போருக்கு வந்தாய்! போய் விடப்பா! என்று ஆணவத்துடன் கருணையை குழைத்துப் பேசுவது போல சூரபத்மன் சிரித்தான். ஆனால், முருகனின் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். முருகன் வேலாயுதத்தை ஏவிவிட்டார். அக்னிமழையைப் பொழிந்தபடி வேல், சூரனை அழிக்கப் பாய்ந்தது. பயந்து போன சூரபத்மன், ஒரு கடலின் நடுவே பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அம்மரத்தை முருகனின் வேல் இரண்டு கூறாக பிளந்தது. அதன் ஒருபாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும் மாற்றி அருள்புரிந்தார். முருகன். நீலமயிலை வாகனமாக்கிக் கொண்டார். சேவலை கொடியாக ஆக்கிக் கொண்டார். அதிகாலை விடியல் வேளையில் சேவல் "கொக்கரக்கோ என்று சொல்லி முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும்." கொக்கு அறு கோ என்பதைத் தான் சேவல் "கொக்கரக்கோ என்று கூவி அழைக்கிறது. கொக்கு என்றால் "மாமரம், கொக்கரக்கோ என்பதற்கு "மாமரத்தை இருகூறாக்கிய மன்னவனே என்பது பொருளாகும். சேவலைக் காலையில் தரிசித்தால் முருகனின் அருள் கிடைக்கும். Posted by iyyappan selvam at 9:16 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Friday, July 20, 2012ராம ஸ்தோத்திரம் (அமைதியான வாழ்வு பெற ) இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும். ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம் லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம் ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம் த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம் ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ ஆகர்ண பூர்ணதன்வானௌ ர÷க்ஷதாம் ராமலக்ஷ?மணௌ Posted by iyyappan selvam at 9:23 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Thursday, July 19, 2012மாங்காடு காமாட்சி அம்மன் துதி மாங்காடு திருக்கோயில் காமாட்சி மாட்சிமை நிறைந்தவளே காமாட்சி மகிமை மிகக் கொண்ட காமாட்சி பஞ்ச அக்நி உச்சியிலே காமாட்சி சிவனுக்கு தவமிருந்த காமாட்சி ஆதிசங்கரன் பூஜித்த காமாட்சி ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்தவளே காமாட்சி திருக்காஞ்சி அரசாளும் காமாட்சி திருமணக்கோலம் கொண்ட காமாட்சி அர்த்தமேரு அழகூட்டும் காமாட்சி அண்டினோரின் அடைக்கலமே காமாட்சி அணைத்தெம்மைக் காக்கின்ற காமாட்சி கண்ணின் கருமனியே காமாட்சி கண்கண்ட தெய்வமடி காமாட்சி ஈசனை அடைந்திடவே காமாட்சி இராப்பகலாய் தவமிருந்த காமாட்சி ஆடிப்பூரத் திருநாளில் காமாட்சி ஆனந்தக் கொலுவிருப்பான் காமாட்சி பங்குனியின் உத்திரம்தான் காமாட்சி மகேசனை நீ மணந்கநாள் காமாட்சி கரும்பொகை அபயமொரு கை காமாட்சி அரும்பிடும் ஆனந்தமுகம் கொள் காமாட்சி பச்சைக்கிளி கரமேந்திய காமாட்சி இச்சைக்கு இசைந்திடுவாய் காமாட்சி மச்சத்தின் வடிவான கண்ணழகே காமாட்சி அச்சமில்லா வாழ்வருளும் காமாட்சி சூதவனம் உன்கோயில் காமாட்சி சூதுகளை அழித்திடுவாய் காமாட்சி இடப்புறத்தை தனதாக்கிய காமாட்சி வலப்புறமும் உனக்கே சொந்தம் காமாட்சி ஓராறு வாரங்கள் உன் விரதம் காமாட்சி தீராத துயர் தீர்ப்பான் முடிவினிலே காமாட்சி மாறாத பாசமதை காமாட்சி மகனுக்கே பொலிந்திருவாள் காமாட்சி முதல் வாரம் வெள்ளியன்று முதல் பூஜை முன்வந்து எதுவேண்டும் என்றிடுவாள் காமாட்சி இரண்டாம் வார பூஜையிலே காமாட்சி குறை கேட்டு இரக்கம் கொள்வாள் காமாட்சி மூன்றாம் வார பூஜையிலே காமாட்சி முன்நின்று இடுக்கண் களைவாள் காமாட்சி நான்காம் வார பூஜையிலே காமாட்சி நானே தான் துணையென்பாள் காமாட்சி ஐந்தாம் வார பூஜையிலே காமாட்சி ஐங்கரினின் அருள் இணைப்பாள் காமாட்சி ஆறாம் வார பூஜையிலே காமாட்சி எண்ணமெல்லாம் ஈடேற்றும் காமாட்சி ஆறுமுகன் துணை தருவாள் காமாட்சி பேறு பல தந்திடுவாள் காமாட்சி மாவடியில் காப்பவளே காமாட்சி மாங்கல்யம் காப்பவளே காமாட்சி தாம்பூலம் தரி உதட்டில் காமாட்சி தளிர்நகை பூத்திடுவாள் காமாட்சி திருவிளக்கின் ஒளிச்சுடரில் காமாட்சி தீபதுர்க்கை ஆகி நிற்பாள் காமாட்சி கற்பூரம் ஏற்றுவித்தால் காமாட்சி பொற்பாதம் பரிமளிக்கும் காமாட்சி இளஞ் சூட்டில் பசும்பாலில் காமாட்சி கரைந்திட்ட கற்கண்டும் காமாட்சி ஏலக்காய் நறுந்தேனும் காமாட்சி நாலும் கலந்தெடுத்து காமாட்சி நான் தருவேன் நிவேதனம் காமாட்சி எழுமிச்சை கனி (விழைவாள்) ஏற்பாள் காமாட்சி ஏழு பிறவி துணை நிற்பாள் காமாட்சி மாதாவே என்றழைத்தால் காமாட்சி மடிதந்து ஆதரிப்பாள் காமாட்சி மாங்காடு சரணடைந்தால் காமாட்சி மங்காத வாழ்வளிப்பாள் காமாட்சி வெற்றி மேல் வெற்றி தரும் காமாட்சி வற்றாத ஜீவ நதி காமாட்சி தொழில் செய்ய வழி சொல்வாள் காமாட்சி தொல்லையில்லா வாழ்வருள்வாள் காமாட்சி உத்தியோகம் உடன் கோட்டாள் காமாட்சி உத்திரவு உடன் இடுவாள் காமாட்சி சந்நிதியை சரணடைந்தால் காமாட்சி சந்தோஷி யாகிடுவாள் காமாட்சி தூளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி தாலி பாக்கியம் தந்திடுவாள் காமாட்சி தாளினை தண்டனிட்டால் காமாட்சி தாலிக்கு வேலியவள் காமாட்சி தாயாரே தஞ்சமென்றடைந்தால் காமாட்சி தாயாகும் பாக்கியம் தருவாள் காமாட்சி மாங்கனியின் தீஞ்சுவையை காமாட்சி மாங்காட்டு மாருதமே காமாட்சி காணிக்கை ஏற்றிடுவாள் காமாட்சி கண்ணீரை துடைத்திடுவாள் காமாட்சி ஜெபமாலை கைக் கொண்டாள் காமாட்சி ஜெகம்புகழும் ஜெயம் தருவாள் காமாட்சி காமகோடி நாயகியே காமாட்சி காலமெல்லாம் காத்தருள் செய் காமாட்சி சிவபூஜை செய்கின்ற காமாட்சி சிவம்பாதி கொண்ட சக்தி காமாட்சி பிள்ளை நான் பின்வருவேன் காமாட்சி தள்ளாமல் வழிநடத்து காமாட்சி கன்னியர்கள் கைதொழுதால் காமாட்சி கல்யர்ணம் கைகூட்டும் காமாட்சி அம்மையப்பன் அவளோயாம் காமாட்சி ஐயப்பன் தாயவளே காமாட்சி கணபதியை பெற்றவளும் காமாட்சி கந்த முருகன் சொந்தத்தாய் காமாட்சி அகிலாண்ட ஈஸ்வரியே காமாட்சி அகில் மணக்கும் <உண் கோயில் காமாட்சி வண்ணமயில் விரித்தாடும் காமாட்சி வனதுர்க்கை வனத்தரசி காமாட்சி கீதங்கள் இயற்றிடவே காமாட்சி போதனைகள் புகட்டிடுவாய் காமாட்சி கல்லாத வேதங்கள் காமாட்சி கற்றறியும் திறம் தருவாய் காமாட்சி தாய்தந்தை உறவும் நீயே காமாட்சி சேயெனக்கு குருவும் நீயே காமாட்சி குழந்தை நான் மகிழ்ந்திடுவேன் காமாட்சி குமரனோடு நீ காட்சி தந்தால் காமாட்சி எல்லையிலே காவல் தெய்வம் காமாட்சி ஏழ்மையை வீழ்த்தும் விழியாள் காமாட்சி கெஞ்சிக்கதறி அழுதிட்டால் காமாட்சி நெஞ்சுருகி நெஞ்சணைப்பாள் காமாட்சி செய்யுமிந்த அர்ச்சனையில் காமாட்சி மெய்யுருகி மகிழ்ந்திடுவாய் காமாட்சி சீக்கிரமே வரம் தந்து காமாட்சி சிரித்தபடி வழியனுப்பு காமாட்சி Posted by iyyappan selvam at 10:21 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Wednesday, July 18, 201227 நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள் அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்தரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத் அஸ்தம் ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத் சித்திரை ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத் சுவாதி ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத் விசாகம் ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத் அனுஷம் ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத் கேட்டை ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் மூலம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் பூராடம் ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் உத்திராடம் ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் திருவோணம் ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத் அவிட்டம் ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத் சதயம் ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத் பூரட்டாதி ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத் உத்திரட்டாதி ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத் ரேவதி ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத் Posted by iyyappan selvam at 9:45 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Tuesday, July 17, 2012அன்பில்லாத வாழ்க்கை நிலையற்றது! அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிக இன்பம் கிட்டலாம். ஆனால், இவற்றால் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு இல்லாமல், வெறும் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. அன்பில்லாத வாழ்வில் ருசியே இல்லை. அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச் செலவானாலும் தெரிவதில்லை. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. ஆனால், அன்புக்குரிய ஒருவரை விட்டுப் பிரியும்போது துக்கம் உண்டாகிறது. அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். என்றும் மாறாத வஸ்துவாக இருப்பவர் பரமாத்மா மட்டுமே. அவர் மீது பூரணமான அன்பைச் செலுத்த வேண்டும். நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும் அவரை விட்டு நாம் பிரிவதில்லை. இதுவே சாஸ்வதமான அன்பாகும். ஈஸ்வரனிடம் இந்த அன்பை அப்பியாசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் (உலக உயிர்கள்) விஸ்தரிக்க வேண்டும். இதுவே ஜென்மம் எடுத்ததன் பயன். -எச்சரிக்கிறார் காஞ்சிபெரியவர் Posted by iyyappan selvam at 11:15 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Monday, July 16, 2012பேய்க்கு யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா? தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும், கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும், அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும் பேய் பிடிக்கும். பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும். எனவே தினமும் குளிக்க வேண்டும். மஞ்சள் பூசியும், மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும். மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை, நகங்களை வெட்டாமல் கூரிய நகங்களுடன், அழுக்குடன் இருப்பவர்களை பேய் பிடிக்கும். தூய ஆடைகளை அணியாமல் அழுக்குடன் இருப்பவர்களையெல்லாம் பேய் அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும் என சான்றோர் கூறுகின்றனர். Posted by iyyappan selvam at 7:16 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் கல்யாண்யை நம: ஓம் த்ரிபுராயை நம: ஓம் பாலாயை நம: ஓம் மாயாயை நம: ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம: ஓம் ஸுந்தர்யை நம: ஓம் ஸெளபாக்யவத்யை நம: ஓம் க்லீங்கார்யை நம: ஓம் ஸர்வ மங்களாயை நம: ஓம் ஏகாக்ஷர்யை நம: ஓம் ஸ்கந்த ஜநந்யை நம: ஓம் பராபஞ்சதசாக்ஷர்யை நம: ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசாயை நம: ஓம் ஸர்வாசாபூரவல்லபாயை நம: ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபணா தீசாயை நம: ஓம் ஸர்வ ஸெளபாக்யதேச்வர்யை நம: ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசாயை நம: ஓம் ஸர்வ ரக்ஷõகரா தீசாயை நம: ஓம் ஸர்வரோக ஹராதீசாயை நம: ஓம் ஸர்வஸித்திப்ரதாய காயை நம: ஓம் ஸர்வாநந்த மயாதீசாயை நம: ஓம் யோகிநீசக்ரநாயிகாயை நம: ஓம் பக்தானுக்ரக்தாயை நம: ஓம் ரக்தாங்க்யை நம: ஓம் சங்கரார்த்தசரீரிண்யை நம: ஓம் புஷ்பபாணேக்ஷúதநு: பாசாங்குசகரோஜ்வலாயை நம: ஓம் ஸச்சிதானந்தல ஹர்யை நம: ஓம் ஸ்ரீ வித்யாயை நம: ஓம் த்ரிபுரேச்வர்யை நம: ஓம் ஸர்வ ஸம்÷க்ஷõபிண்யை நம: ஓம் சிவாயை நம: ஓம் அநங்க குஸுமாயை நம: ஓம் புவனேச்வர்யை நம: ஓம் குப்தாயை நம: ஓம் குப்ததராயை நம: ஓம் நித்யாயை நம: ஓம் நித்யக்லின்னாயை நம: ஓம் மதத்ரவாயை நம: ஓம் மோஹின்யை நம: ஓம் பரமாநந்தாயை நம: ஓம் காமேச்வர்யை நம: ஓம் தருண்யை நம: ஓம் கலாயை நம: ஓம் கலாவத்யை நம: ஓம் பகவத்யை நம: ஓம் பத்மராக கிரீடின்யை நம: ஓம் ரக்த வஸ்த்ராயை நம: ஓம் ரக்த பூஷாயை நம: ஓம் ரக்த கந்தானு லேபனாயை நம: ஓம் ஸெளகந்திக மிலத்வேண்யை நம: ஓம் மந்த்ரிண்யை நம: ஓம் மந்த்ர ரூபிண்யை நம: ஓம் தத்வத்ரயாயை நம: ஓம் தத்வமய்யை நம: ஓம் ஸித்தாந்த புரவாஸிந்யை நம: ஓம் ஸ்ரீமத்யை நம: ஓம் மஹா தேவ்யை நம: ஓம் மஹாகாள்யை நம: ஓம் பரதேவதாயை நம: ஓம் கைவல்யரேகாவசின்யை நம: ஓம் ஸர்வேச்வர்யை நம: ஓம் ஸர்வமாத்ருகாயை நம: ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம: ஓம் வேதமய்யை நம: ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிகாயை நம: ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம: ஓம் ஸுதாபாநவிநோதின்யை நம: ஓம் ஆதாரவீதீ பதிகாயை நம: ஓம் ஸ்வாதிஷ்டான ஸமாச்ரயாயை நம: ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம: ஓம் அநாஹதநிவாஸின்யை நம: ஓம் ஆக்ஞாபத்ம ஸமாஸீனாயை நம: ஓம் வீசுத்தி ஸ்தல ஸம்ச்ரயாயை நம: ஓம் அஷ்டத்ரிம்சத் கலாமூர்த்யை நம: ஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம: ஓம் யோகீச்வர மநோத்யேயாயை நம: ஓம் பரப்ரஹ்ம வரூபிண்யை நம: ஓம் சதுர் புஜாயை நம: ஓம் சந்த்ர சூடாயை நம: ஓம் புராணாகமரூபிண்யை நம: ஓம் கார்யை நம: ஓம் விமலாயை நம: ஓம் வித்யாயை நம: ஓம் பஞ்சப்ரணவரூபிண்யை நம: ஓம் பூதேச்வர்யை நம: ஓம் பஞ்சாசத்வர்ண ரூபிண்யை நம: ஓம் ÷ஷாடாந்யாஸ மஹா பூஷாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் தசமாத்ருகாயை நம: ஓம் அருணாயை நம: ஓம் ஆதாரசக்த்யை நம: ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் த்ரிபுர பைரவ்யை நம: ஓம் மஹாபூஜா ஸமாலோலாயை நம: ஓம் ரஹோ யஜ்ஞ ஸ்வரூபிண்யை நம: ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம: ஓம் ஷட்கோணபுரவாஸின்யை நம: ஓம் வஸுகோணபுரவா ஸின்யை நம: ஓம் தசார த்வந்த்வ வாஸின்யை நம: ஓம் சதுர்தசாந்த கோணஸ்தாயை நம: ஓம் வஸுபத்ம நிவாஸின்யை நம: ஓம் ஸ்வராப்ஜ பத்ர நிலயாயை நம: ஓம் வ்ருத்தத்ரய நிவாஸிந்யை நம: ஓம் ஸ்ரீமத் பீஜகுசஸ்தந்யை நம: ஓம் அகிலாண்டேஸ்வரியே நம: ஓம் ஸ்ரீமஜே நம: ஓம் ஸ்ரீராஜராஜேச்வர்யை நம: ஓம் அகிலாண்டகோடிப்ரும் ஹாண்டஜனன்யை நம: Posted by iyyappan selvam at 1:52 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Friday, July 13, 2012கந்தர் அந்தாதி காப்பு வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே. உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர் உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள் உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில் உண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே. 1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய் திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 2. செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 3. சென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண் ணெய்ச் சென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச சென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச் சென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே. 4. தேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத் தேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத் தேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே. 5. தித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ தித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந்தேக்கியன்பு தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனலே. 6. செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற் செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார் செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றால திமிரமுமே. 7. திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல் திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந் திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. 8. சீதனங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ் சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே. 9. சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லு<ச்சிட்டவெச் சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான் சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச் சிலைமத னம்படு தாமரை வாவி திரள் சங்கமே. 10. திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால் திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே. 11. திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத் திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத் திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத் திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. 12. சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச் சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே. 13. தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர் தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல் தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந் தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. 14. செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க செந்தி லகத்தலர் ராசிதந் தானைச்சிறையிட்டவேற் செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே. 15. திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர் திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந் திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந் திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே. 16. சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச் சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச் சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச் சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. 17. சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச் சேரிக் குவடு விளைந்ததன் றேநன்றுதெண்டிரைநீர் சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்ற செவ்வேள் சேரிக் குவடு புடை சூழ் புனத்திற் றினைவிளைவே. 18. தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந் தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத் தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத் தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. 19. சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல் சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன் சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார் சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. 20. செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற் செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ் செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற் செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. 21. சிந்தா குலவ ரிசைப்பேரு மூருகஞ் சீருமென்றோர் சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச் சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. 22. செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற் செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச் செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. 23. தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந் தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந் தினகர ரக்கர சத்தியின் றாகிலத் தேவர்நண்ப தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. 24. செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்டு செகம்புர வாதிங்ஙன் செய்வதென் னோமயல் செய்யவன்பு செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே. 25. தெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ் தெளிதரு முத்தமி ழாநித்தர் சேவித்து நின்றதென்னாள் தெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத் தெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே. 26. செவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு செவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச் செவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட் செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே. 27. தேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன் தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத் தேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந் தேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே. 28. சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே சிக்குறத் தத்தை வடிவே லெனார்சில ரன்பர்செந்தாள் சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ் சிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே. 29. திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. 30. தெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த தெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார் தெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே தெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே. 31. தீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந் தீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத் தீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த தீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே. 32. சித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ் சித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச் சித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா சித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே. 33. சேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற் சேதனந் தந்துறை யல்லிமன் வாவிச்செந் தூர்கருத சேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே சேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே. 34. திரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத் திரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத் திரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால் திரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே. 35. திருத்துள வாரிகங் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை திருத்துள வாரன்னை செந்தூரையன்னள் செம்மேனியென்பு திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே. 36. செச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச் செச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ செச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச் செச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே. 37. சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர் சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ் சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற் சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே. 38. சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற் றிரி சிந்தையிடுஞ் சிற்றம் பலத்தை வரஞான தீபமிட்ட டார்க்குப்பரி சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ் சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே. 39. தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன் தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந் தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே. 40. சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற் சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச் சேமர விக்கந் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல் சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே. 41. தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத் தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய் தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத் தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே. 42. தீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர் தீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந் தீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர் தீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே. 43. செய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ் செய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ் செய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச் செய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே. 44. சேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன் சேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக சேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச் சேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே. 45. தேசம் புகல வயிலேயெ னச்சிறை புக்கொருகந் தேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப தேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந் தேசம் புகல கமுதவி மானைச் செருச்செய்வதே. 46. செருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ் செருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமத நூல் செருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு செருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே. 47. திடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ திடம்படு கத்துந் திரித்தம்பு வாலியு ரத்தும்பத்துத் திடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம திடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே. 48. சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற் சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற் சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே. 49. சேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார் சேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள் சேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச் சேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே. 50. சித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா சித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி சித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுக்தி சித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே. 51. சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ்சிலம்பம்புரா சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. 52. தித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத் தித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத் தித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க்குஞ் சிதைதோல் தித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீ விலங்கே! 53. தீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர் தீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற் றவான் தீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந் தீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே. 54. திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்தத் திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே. 55. தீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந் தீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந் தீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத் தீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே. 56. தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத் தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின் தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந் தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே. 57. தீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத் தீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே தீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல் தீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே. 58. சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு சீலங் கனமுற்ற வேதனை மேவித தியங்கினஞ்சீ சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே. 59. சேர்ப்பது மாலய நீலோற் பலகிரித் தெய்வவள்ளி சேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச் சேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன் சேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே. 60. செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச் செப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன் செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச் செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே. 61. திக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந் திக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ திக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத் திக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே. 62. திலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந் திலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித் திலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே திலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே. 63. தியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர் தியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத் தியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி தியங்காப் பொறியுண்டைபண்டுயப்போர் செய்த சேவகனே. 64. சேவக மன்ன மலர்க்கோமுன் நீசொலத் தெய்வவள்ளி சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச் சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச் சேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே. 65. திகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய திகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய திகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி திகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே. 66. சீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ சீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு சீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு சீகர சிந்துரமால் வினைக்குன்றைச் சிகண்டி கொண்டே. 67. சிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திரிபுத்ரரா சிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச் சிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ் சிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே. 68. சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத சேகர வாரண மேவும் புயாசல தீவினையின் சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார் சேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே. 69. சீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச் சீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ் சீவன சத்துருச் செய்யாண் மருகவெ னாதிடையே சீவன சத்துரு வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே. 70. சிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச் சிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ் சிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா சிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே. 71. திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு திங்களு மாசுண மாக்கும்ப தாம்புயன் செந்திலன்னாள் திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந் திங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே. 72. தீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில் தீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத் தீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள் தீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே. 73. திசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ திசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ திசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந் திசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே. 74. சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச் சேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன் சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான் சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே. 75. செய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ் செய்தவத் தாலஞ்சு கம்பெறச்சேயுரைக்கேற் றுருப்போய்ச் செய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே செய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே. 76. செம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற் செம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச் செம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய் செம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே. 77. தேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான் தேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால் தேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத் தேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே. 78. திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத் திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத் திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே. 79. செப்பா ரமுதலை மன்னோ திகனங்கு ரும்பைமுலை செப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண் செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான் மருகன் செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே. 80. சீராம ராம சிவசங்க ராநுந் திருமுடிக்குச் சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற் சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச் சீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே. 81. சிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ் சிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா சிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ் சிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே. 82. தென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த் தென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர் தென்றலை யம்பு சகபூ தரவெளி சிந்திமன்றல் தென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. 83. தீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந் தீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல் தீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண் தீரா கமல மரவே கருகச் சிவந்தவனே. 84. சிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ் சிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண் சிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா சிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே. 85. சேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண் சேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற் சேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன் சேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே. 86. சேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற் சேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற் சேறலைத் தாறலைத் தீர்க்குங் குமார திரியவினைச் சேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே. 87. திறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந் திறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல் திறம்பா டுவர்தழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந் திறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே. 88. செயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச் செயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர் பிரான் செயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ் செயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே. 89. சேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண் சேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச் சேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச் சேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே. 90. சித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச் சித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா சித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ் சித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே. 91. திகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன திகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந் திகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில் திகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே. 92. சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற் சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச் சேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே. 93. செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச் செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மாநிறம்போற் செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. 94. சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற் சேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால் சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற் சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. 95. திறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந் திறவா வனச முநியைவென் றோய்தென் றிசைத்திருச்செந் திறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத் திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. 96. திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால் திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத் திருக்கையம் போருகக்கைந் நீற்றின்மாற்றித் தென்னூல்சிவபத் திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே. 97. சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச் சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற் சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச் சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே. 98. சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட சீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற் சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற் சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. 99. தீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந் தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல் தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத் தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே. 100. செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர் செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச் செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. Posted by iyyappan selvam at 9:25 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook (குழந்தை பாக்யம் பெற)இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்! பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தரும் ஒன்று, அபிஷேகம், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம். முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும். தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில். கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும். நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும். பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும். குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும். பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும். செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம். பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும் Posted by iyyappan selvam at 9:22 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Thursday, July 12, 2012நவக்கிரக காயத்திரி மந்திரங்கள் (நல்ல மனைவி அமைய,(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய,வீடு, மனை வாங்க)) தடைபட்ட திருமணம் நடக்க ஆதித்யன் (சூரியன்) (கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற) ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாதேஜாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் ஆதித்யாய வித்மஹே மார்தாண்டாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் லீலாலாய வித்மஹே மஹா த்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத் ஓம் பிரபாகராய வித்மஹே மஹா த்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத் சந்திரன் (ஞானம் வளர) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் அமிர்தேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத் அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் புதன் (படிப்பும், அறிவும் பெற) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹி தன்னோ புதஹ் ப்ரசோதயாத் ஓம் சோமபுத்ராய வித்மஹே மஹாப்ரஜ்ஞாய தீமஹி தன்னோ புதஹ் ப்ரசோதயாத் ஓம் சந்திரசுதாய வித்மஹே சௌம்யக்ரஹாய தீமஹி தன்னோ புதஹ் ப்ரசோதயாத் ஓம் ஆத்ரேயாய வித்மஹே சோமபுத்ராய தீமஹி தன்னோ புதஹ் ப்ரசோதயாத் குரு (நல்ல மனைவி அமைய) ஓம் குருதேவாய வித்மஹே பரப்ரஹ்மாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் சுராசார்யாய வித்மஹே தேவபூஜ்யாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் குருதேவாய வித்மஹே பரம் குருப்யோம் தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் சுராசார்யாய வித்மஹே மஹாவித்யாய தீமஹி தன்னோ கருஹ் ப்ரசோதயாத் ஓம் அங்கிரஸாய வித்மஹே சுராசார்யாய தீமஹி தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத் சுக்கிரன் (தடைபட்ட திருமணம் நடக்க) ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனு ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் ஓம் தைத்யாசார்யாய வித்மஹே ஸ்வேதவர்ணாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பார்கவாய வித்மஹே தைத்யாசார்யாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே ப்ருகுப் புத்ராய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் சனி பகவான் (வீடு, மனை வாங்க) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் ஓம் வைவஸ்வதாய வித்மஹே பங்குபாதாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் ராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய) ஓம் சிரரூபாய வித்மஹே அமிருதேசாய தீமஹி தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் ஓம் நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் ஓம் நீலவர்ணாய வித்மஹே சிம்ஹிகேசாய தீமஹி தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் ஓம் பைடினசாய வித்மஹே சர்மதராய தீமஹி தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத் கேது (துஷ்ட சக்திகளை விரட்டிட) ஓம் அம்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரசோதயாத் ஓம் கேதுக்ரஹாய வித்மஹே மஹாவக்த்ராய தீமஹி தன்னோ கேது ப்ரசோதயாத் ஓம் விக்ருத்தானநாய வித்மஹே ஜேமிநிஜாய தீமஹி தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத் ஓம் தமோக்ரஹாய வித்மஹே த்வஜஸ்திதாய தீமஹி தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத் ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத் Posted by iyyappan selvam at 11:03 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Wednesday, July 11, 2012தினசரி பாராயண ஸ்லோகங்கள் காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை 1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம் 2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே 3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம் 4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர: புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன: 5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம் 6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண: க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின: 7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ: குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் 8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம: ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ: குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் 9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் 10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த பூராதிலோகா : புவனானி ஸப்த குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் 11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப: ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ: நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் 12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர: குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: குளியல் ஆரம்பிக்கும்போது சொல்ல வேண்டியது 13. அதிக்ரூர மஹாகாய கல்பாந்ததஹனோப பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி 14. கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு 15. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி சாப்பிடும்போது சொல்ல வேண்டியது 16. அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி 17. அஹம் வைச்வானரோ பூத்வா ப்ராணினாம் தேஹமாச்ரித: ப்ராணாபான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம் பிக்ஷõம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா ஸன்னபூர்ணேச்வரீ வீட்டிலிருந்து வெளியே போகும்போது சொல்ல வேண்டிய ஸ்துதி 18. வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவோ பிரக்ஷது படுக்கும் போது சொல்ல வேண்டியது 19. அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: 20. அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே 21. ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி பாராயண ஸ்லோகங்கள் (தினந்தோறும் பாராயணம் செய்யத் தக்கவை) சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸுத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே அகஜானந பத்மார்க்கம் கஜானநமஹர்நிசம் அநேகதம் தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா மயூராதிருடம் மஹாவாக்ய கூடம் மனோஹாரிதேகம் மகச்சித்தகேஹம் மஹீதேவதேவம் மஹாதேவபாவம் மஹாதேவபாலம் பஜேலோகபாலம் அபஸ்மாரகுஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ ஜ்வரோன்மாத குல்மாதி ரோகாமஹாந்த: பிசாசாச்ச ஸர்வே பவத்பத்ரபூதிம் விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் கரசரணக்ருதம் வாகர்மவாக்காயஜம் வா ச்ரவணநயனஜம்வா மானஸம் வாபாரதம் விஹிதம விஹிதம்வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ சிவசிவ கருணாப்தே ஸ்ரீமகாதேவ சம்போ நாகேந்தரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகராய நமச்சிவாய மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தார முக்யபஹு புஷ்ப ஸுபூஜிதாதய தஸ்மை மகாராய நமச்சிவாய சிவாய கௌரீவதனாரவிந்த ஸூர்யாய தக்ஷõத்வர நாசகாய ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நமச்சிவாய வஸிஷ்ட கும்போத்பவ கௌதமாதி முனீந்த்ர தேவார்ச்சித சேகராய சந்த்ரார்க்க வைச்வானர லோசனாய தஸ்மை வகாராய நமச்சிவாய யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பினாகஹஸ்தாய ஸனாதனாய திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நமச்சிவாய சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ?மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் மேகச்யாமம் பீத கேளசேயவாஸம் ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம் புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் ஸசங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீரு ஹேக்ஷணம் ஸஹாரக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம் லோகாபிராமம் ஸ்ரீரமம் பூயோ பூயோ நமாம் யஹம் ஆர்த்தாநாமார்த்திஹந்தாரம் பீதானாம் பீதிநாசனம் த்விஷதாம் காலதண்டலம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: அக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ ஆகர்ண பூர்ண தன்வானௌ ர÷க்ஷதாம் ராம லக்ஷ?மணௌ கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி வஸுதேவஸுதம் தேவம்கம்ஸசாணூரமர்தனம் தேவகீ பரமானந்தம் க்ருக்ஷணம் வந்தே ஜகத்குரும் நித்யானந்தகரீ வரா பயகரீ ஸெளந்தர் யரத்னாகரீ நிர்தூதாகில கோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாஹேச்வரீ ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ பிக்ஷõம் தேஹதி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே ஞானவைராக்கிய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வவிநோதினி நந்தனுதே கிரிவரவிந்த்ய சிரோதினி வாஸிநி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பிணி பூரி குடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே ஸித்தி புத்தி ப்ரதேதேவி புக்தி முக்திப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹா லக்ஷ?மி நமோஸ்துதே ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா சதுர் புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோணே புண்ட்ரேக்ஷú பாசாங்குச புஷ்பபாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: தூரீக்ருதஸீ தார்த்தி: ப்ரகடீக்ருத ராமவைபவ பூர்த்தி: தாரித தசமுககீர்த்தி : புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி: புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத் ஜபா குஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் தமோஸரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ ஸ்மி திவாகரம் ததிசங்க துஷாராபம் க்ஷ?ரோ தார்ணவ ஸம்பவம் நமாமி சசிநம் ஸோமம் சம்போர் முகடபூஷணம் தரணி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம் குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம் ப்ரியங்கு கலி காச்யாமம் ரூபேணாப்ர திமம் புதம் ஸெளம்யம் ஸெளம் யகுணோ பேதம் தம் பூதம் ப்ரண மாம்யஹம் தேவனாம் ச ரிஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம் புத்திபூதம் த்ரி லோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் ஹி குந்தம் ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம் ஸிம்ஹிகாகர் பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் பலாச புஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம் ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம தம் கேதும் ப்ரணமாம் யஹம் ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம் கருணாலயம் நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம் விதிதாகில சாஸ்த்ர ஸுதாஜலதே மஹிதோபநிஷத் கதிதார்த்த நதே ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவசங்கர தேசிக மே சரணம் கருணாவருணாலய பாலய மாம் பவஸாகர துக்க விதூநஹ்ருதம் ரசயாகில தர்சனதத்வ விதம் பவ சங்கர தேசிக மே சரணம் பவதா ஜனதா ஸுஹிதா பவிதா நிஜ போத விசாரண சாருமதே கலயேச்வர ஜீவ விவேகவிதம் பவ சங்கர தேசிக மே சரணம் பவ ஏவ பவாநிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா மம வராய மோஹ மஹாஜலதிம் பவ சங்கர தேசிக மே சரணம் ஆதௌதேவகி தேவிகர்ப ஜனனம் கோபீக்ருஹேவர்தனம் மாயாபூதன ஜீவிதாப ஹரணம் கோவர்தனோத் தாரணம் கம்ஸச்சேதன கௌரவாதி ஹனனம் குந்தீஸுதா பாலனம் ஹ்யேதத் பாகவதம் புராணகதிதம் ஸ்ரீக்ருஷ்ண லீலாமருதம் Posted by iyyappan selvam at 10:00 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Tuesday, July 10, 2012படிச்சவங்களுக்கும் சாஸ்திரம் உண்டு! சாஸ்திர நூல்களை ஸ்மிருதி என்பர். இதற்கு நினைவில் வைத்துக் கொள்ளுதல் எனப்பொருள். சாஸ்திரங்களை நினைவில் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும். இதனால் காலம் காலமாக சாஸ்திர அறிவு தொடரும்.மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும், பொறுப்புகளும் சாஸ்திரத்தில் அடங்கும். இன்ஜினியர், டாக்டர், கம்ப்யூட்டர் வல்லுநர் என என்ன தான் கல்விஞானம் இருந்தாலும், எல்லாருக்குமே சாஸ்திர அறிவு தேவைப்படுகிறது. இன்று என்ன கிழமை, என்ன திதி, என்ன நட்சத்திரம்... இதற்கேற்ப அன்றையக் கடமைகளை எப்படி செய்து முடிப்பது என்ற சாஸ்திர ஞானம் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. படித்தவர்களும் நல்லநாள் பார்த்து திருமணம் செய்வது,கிரகப்பிரவேசம் செய்வது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள். பகவத்கீதையில் நம் அன்றாடக்கடமைகள் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார் கிருஷ்ணர். Posted by iyyappan selvam at 9:02 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook ஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்தம்? அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்... தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார். இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். Posted by iyyappan selvam at 2:15 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Monday, July 9, 2012பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது? பூமியில் விழுந்து கடவுளையோ பெரியவர்களையோ பெண்கள் வணங்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும். வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும். பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள். Posted by iyyappan selvam at 12:09 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Thursday, July 5, 2012அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்? கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். Posted by iyyappan selvam at 9:49 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு திருத்தலம்! திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று அனைவருக்கும் தெரியும், தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இது அனைவரும் அறிந்தது. இதற்கு அறிவியல் பூர்வமான சிறப்பு என்ன தெரியுமா?.. பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது. 3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது. இது எப்படி என்பதை ஆராய்ந்த போது ஆய்வு முடிவு மிரள வைத்தது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் இந்தியாவின் புதுச்சேரியின் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதற்கு காரணம்? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் சனிபகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இதன்மூலம் உலகிலேயே அறிவுத்திறனும், அறிவியலில் ஞானமும் கொண்டவர்கள் அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் புலனாகிறது. சனி கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது. Posted by iyyappan selvam at 3:17 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Tuesday, July 3, 2012சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா? காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர். Posted by iyyappan selvam at 9:52 PM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Sunday, July 1, 2012எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா? ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம். அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை. இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம். கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சம் - சிவ ரகசியம் ஷீரடி சாயிபாபாவின் உறுதி மொழிகள் கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா? ஆடிப்பூரம்: சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் சிறப்பை ... சேவல் கொக்கரக்கோ என்று கூவுவதன் பொருள் என்ன? ராம ஸ்தோத்திரம் (அமைதியான வாழ்வு பெற ) மாங்காடு காமாட்சி அம்மன் துதி 27 நட்சத்திரங்கள் காயத்திரி மந்திரங்கள் அன்பில்லாத வாழ்க்கை நிலையற்றது! பேய்க்கு யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா? அகிலாண்டேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி கந்தர் அந்தாதி (குழந்தை பாக்யம் பெற)இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும... நவக்கிரக காயத்திரி மந்திரங்கள் (நல்ல மனைவி அமைய,(ச... தினசரி பாராயண ஸ்லோகங்கள் படிச்சவங்களுக்கும் சாஸ்திரம் உண்டு! ஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்... பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என தர்ம சாஸ்திரம் க... அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்? அறிவியல் அறிஞர்களுக்கே அதிர்ச்சி தந்த திருநள்ளாறு ... சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா? எது உண்மையான ஆன்மீக வாழ்கை தெரியுமா?
இறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Friday, August 10, 2012மூல மந்திரங்கள் மூல மந்திரங்கள் : 1. கணபதி : ஓம் கம் கணபதயே நம: 2. குரு : ஓம் கும் குருப்யோ நம: 3. சிவன் : ஓம் 4. தேவீ : ஓம் ஹ்ரீம் தேவ்யை நம: 5. கந்தன் : ஓம் ஹாம் ஸ்கந்தாய நம: 6. ஸூர்யன் : ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை நம: 3.8 சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்: ஆசன மந்திரம் : 1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா 2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா 3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா பஞ்சகலா மந்திரம் : 1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம: 2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம: 3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம: 4. ஓம் ஹ்யைம் ஸாந்தி கலாயை நம: 5. ஓம் ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம: ஸம்ஹிதா மந்திரம் : 1. பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களும் 2. ஷடங்க மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது. பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் : 1. ஈசானம் : ஓம் ஹோம் ஈஸாந மூர்த்தயே நம: 2. தத்புருஷம்: : ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம: 3. அகோரம் : ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய நம: 4. வாமதேவம் : ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம: 5. ஸத்யோஜாதம்: ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: ஷடங்க மந்திரங்கள் : 1. ஹ்ருதயம் : ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: 2. சிரஸ் : ஓம் ஹீம் ஸிரஸே நம: 3. சிகை : ஓம் ஹூம் ஸிகாயை நம: 4. கவசம் : ஓம் ஹைம் கவசாய நம: 5. நேத்ரம் : ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: 6. அஸ்த்ரம் : ஓம் ஹ: அஸ்த்ராய நம: காயத்ரீ : 1. அஸ்த்ர காயத்ரீ : ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத். 2. சிவ காயத்ரீ : ஓம் தன் மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி தந்ந: ஸிவ: ப்ரசோதயாத் ஸப்தகோடி மஹாமந்திரம் : 1. நம: 2. ஸ்வாஹா 3. ஸ்வதா 4. வஷட் 5. வெளஷட் 6. ஹும் 7. பட் 3.9 கர ந்யாஸம் : 3.9.1 ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால், இடது, வலது கைகளால், மேலும் கிழுமாக இடது வலது கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும். இடது கையை இரு முறையும், வலது கையை ஒரு முறையும் அவ்வாறு செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். 3.9.2 இரு கைகளும் சக்தி சிவ வடிவம் என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து (பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் கண்டு விரலுக்குக் கீழே, புதன் மேட்டில், கட்டை விரலால் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும். 3.9.3 பிறகு ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல் விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல் நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ) சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக் கொண்டே, நடு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (யோக முத்திரை (அ) மோக முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்ட, சுண்டு விரல் நுனிகள் கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின் விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும். 3.9.4 பிறகு உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு (அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என்ற மூன்று விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு (கடா முத்திரை), பின் கூப்பி, ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும். 3.9.5 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம; என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சீரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று உச்சரித்து, அஸ்த்ர முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக, கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக் கொண்டு த்யானிக்க வேண்டும். 3.9.6 பின்னர், அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம் செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும், மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும் முறை சுற்றுவதாகும். 3.9.7 நிறைவாக, ஓம் ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம் செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு எதிரே கொண்டு வந்து முடிப்பது. 3.9.8 இதுவே சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும். 3.10 அங்க ந்யாஸம் : 3.10.1 கர ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே அங்க ந்யாஸம் செய்ய வேண்டும். 3.10.2. ஓம் ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின் இடை வரை உயர்த்தி, அங்குள்ள சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். 3.10.3 திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து, சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும் திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவ மூர்த்தயே நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில் சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும். 3.10.4 பிறகு, ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத் புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக் கொண்டே சின் முத்திரையால் நெற்றியில் நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் ஹிம் வாம தேவ குஹ்யாய நம: என்று உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால் நாபியில் நியாஸம் செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: என்று உச்சரித்துக் கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக் கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும். 3.10.5 பிறகு திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம் வித்யா தேஹாய நம: என்று மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில் நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க வேண்டும். 3.10.6. பிறகு, ஓம் ஹாம் ஹெளம் சிவாய நம: என்ற மூல மந்திரத்தை உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும். 3.10.7 பின்னர், ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து, ஓம் சிரஸே ஸ்வாஹா என்று உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்) தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும். பிறகு, ஓம் சிகாயை வெளஷட் என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி) சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்று உச்சரித்து, கவச முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும். 3.10.8 உஷ: முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத் தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம் செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும். 3.10.9 தாளத்ரயம்: கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க முத்திரையால், ஓம் ஹூம் ஹ: அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ முதலிலும், பட்- ஐ ஈறாகவும் கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம் என்பது இடது உள்ளங்கையில் வலது கை கட்க முத்திரை விரல்களால் மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும் அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே தாளத்ரயம். 3.10.10. திக்பந்தனம் : விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும் சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்ற அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும் திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம் உண்டாக்கி அக்நி தேவரைக் காவல் வைப்பதாகப் பாவிக்க வேண்டும். 3.10.11 அவகுண்டனம் : ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய வெளஷட் என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும் அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும். 3.10.12 பரமீகரணம் : நிறைவாக, ஓம ஹாம் ஹெளம் சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம் முதல் சிகை வரை தடவ வேண்டும். பாதம் முதல் கேசம் வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம் என்று பெயர். 3.10.13 இந்த ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில் எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து, ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும் உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான் அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக) பாவித்தல் வேண்டும். 3.10.14. இதுவே சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும் முறையாகும் 3.11. ஆத்மபூஜா த்யாநம்: நாதம் லிங்கம் என்றும், அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும், ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது. சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி அன்னியில் சிவம் இல்லை; இவை, புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில் என்னை போலும் அபேதமாக இருப்பதாக அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம் செய்து, அதிலே சிவாஸநம் செய்து, சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது. 3.12 சகளீகரணம்: கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர். 3.13. விசேஷ அர்க்யம்: 3.13.1 சகளீகரணம் செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம். 3.13.2 பொன், தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம், பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம் போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு, அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும். 3.13.3 நீரீக்ஷணம்: நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று பொருள்படும். ஓம் ஹாம் சிவாய நம: என்று மூல மந்திரம் உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும். அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு, சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும் அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே நிரீக்ஷணம் செய்தல் எனப்படும். 3.13.4 ப்ரோக்ஷணம் : பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற அம்ருத தாரா மயமாக சுத்த ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும் கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர். 3.13.5 பிறகு, அந்த நீரிலே சந்தனம், புஷ்பம், அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம, வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய மந்திரங்களால் பூஜை செய் வேண்டும். ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும். 3.13.6 தாடனம்: அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர். தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின் அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி ஒரு முறை தட்டுதலே தாடனம். 3.13.7 அப்யுக்ஷணம் : கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த நீரை சூடி, கவச மந்திரத்தை உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம். 3.13.8 அடுத்து, அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட தாளத்ரயம் சாய்ய வேண்டும். 3.13.9 தொடர்ந்து, கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும் செய்தல் வேண்டும். 3.13.10 நிறைவாக, வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து, சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப் புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும். 3.13.11. மேற்சொன்ன கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில் சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது. 3.14 சாமான்யார்க்யம் : சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு சுத்த ஜலத்தை நிரப்பி, அதில் ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால் அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை கொடுத்து செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர் 3.15 ஐவகை சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார், பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும் கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர சுத்தி (5) லிங்க சுத்தி. 3.16 ஆத்ம சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல். 3.17 ஸ்தான சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில் விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று தடவை தாளம் செய்து, சிட்டிகை போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல் 3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும், மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி, தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி ரக்ஷõ பந்தனம் செய்தல். 3.18 த்ரவ்ய சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற பூஜைக்கான உதவியாளர்களையும், பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும். அதற்காக அவர் செய்யும் கிரியைகளும், பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல் 2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம் கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம் கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ) ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ) கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல் (உ தேனு முத்திரை கொடுத்து அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு, தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல். 3.19 மந்திர சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித் தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும். இது திரவிய சுத்தி செய்த பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம் சிவாஸநாய நம: என்று ஆஸனம் கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ மூர்த்தயே நச: என்று பூஜை செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால் திலகம் இட்டு, மூல மந்திரத்தால் சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும், மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக் கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும், மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி. 3.20 லிங்க சுத்தி : முதல் நாள் (அல்லது, முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து, நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும். இது செய்ய வேண்டிய முறை : முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை : பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப, தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள், பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய மந்திரம் கூறி அர்க்ய ஜலம், ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்; நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி. இதன் பிறகே அலங்காரம் 3.21 கலாகர்ஷணம் : பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம் முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது, முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும். 3.22 அபிஷேகத்துக்குப் பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி புஷ்பத்தை வைக்க வேண்டும். 3.23 சிவோகம்பாவனை செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம் பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்; பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால் தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம், காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில் மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே சிவோகம்பாவனை. 3.24 நெற்றியில் குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக் குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம் செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால் ஆணவம், கர்வம், மலம், மாயைகள் நீங்கி ஞானம் பிறக்க வழி கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை விநாயகர் முன்பு செய்வதால் அவருக்கு நம்மிது தனிப்ரீதி உண்டாகும். 3.25 பூஜை செய்யும் திசை : கிழக்கு அல்லது மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு முகமாக நின்று பூஜை செய்ய வேண்டும் 3.26 கட்டை விரலால் மட்டும் எடுத்து விபூதி அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு விரலால் விபூதி அளித்தால் மரணம் உண்டாகும்; நடு விரலால் விபூதி அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்; கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால் பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும். 3.27 அனைத்துக் கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும் தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள் கிரியைகளின் அங்கம்; அவை தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பன; அசுரர்களை விரட்டுவன. சிவாச்சாரியார் .1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை. 3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர். 3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது. 3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும் 3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும் 3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனேதான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். 3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார். ள் அஷ்டலட்சுமி வழிபாடு-சமஸ்கிருதம் பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன... கனவில் யானை வந்தால் என்ன பலன்? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் ... நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா? சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா? திருமணத்தில் தாலிகட்டும் போது கெட்டிமேளம் ஒலிக்கச்... ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா? மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா? வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?(ஸ்ரீ வாராஹி மூல மந... சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து... சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர... சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்! மூல மந்திரங்கள் ஆடி கிருத்திகை மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது? ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்... காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம்... செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்க... காமாட்சி ஸ்தோத்திரம்(மந்திரங்கள் சித்திக்க) பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!